Published:Updated:

நிதி முதலீடுகள் மற்றும் இன்ஷூரன்ஸ்... இனி ஒரே ஸ்டேட்மென்ட்தான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நிதி  முதலீடுகள்  மற்றும்  இன்ஷூரன்ஸ்... இனி ஒரே ஸ்டேட்மென்ட்தான்!
நிதி முதலீடுகள் மற்றும் இன்ஷூரன்ஸ்... இனி ஒரே ஸ்டேட்மென்ட்தான்!

மு.சா.கெளதமன்

பிரீமியம் ஸ்டோரி
நிதி  முதலீடுகள்  மற்றும்  இன்ஷூரன்ஸ்... இனி ஒரே ஸ்டேட்மென்ட்தான்!

ங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ் பாலிசி என நாம் செய்துள்ள முதலீடுகள் அனைத்தும் தனித்தனி ஸ்டேட் மென்ட்டாக இல்லாமல், அனைத்தும் ஒரே இடத்தில் பார்க்கிற மாதிரி கன்சாலிடேடட் அக்கவுன்ட்ஸ் ஸ்டேட்மென்ட்டாக (CAS - Consolidated Accounts Statement) கிடைக்கத் தொடங்கி உள்ளன. இதன் மூலம் ஒருவரின் மொத்த போர்ட்ஃபோலியோவையும் ஒரு ஸ்டேட்மென்ட்டிலேயே பார்த்துவிடலாம் என்பது சிறப்பான அம்சம்.

 எப்படிப் பெறுவது?

முதலில், nsdlcas.nsdl.com என்கிற லிங்க்கில் உள்ள NSDL E-CAS என்கிற ஆப்ஷனைச் சொடுக்கி, பதிவு செய்துகொள்ள வேண்டும். NSDLE-CAS ஆப்ஷனைச் சொடுக்கினால், நம்முடைய CAS ID மற்றும் பான் அட்டை எண்ணைக் கேட்கும். அதன்பின் ‘கேப்சா’ இமேஜில் தரப்பட்டிருக்கும் எண் அல்லது எழுத்துகளைச் சரியாக டைப் செய்தால், நம்முடைய மொபைல் எண் கேட்கும். கொடுக்கும் மொபைல் எண்ணுக்கு ஒரு ரகசிய ‘ஒடிபி’ (OTP) வழங்கப்படும். அதையும் டைப் செய்து உள்ளே சென்றபின் நம்முடைய மின்னஞ்சலைக் கேட்கும். இவற்றை எல்லாம் சரியாக தந்தபின், ‘Submit’ ஆப்ஷனை சொடுக்கினால், என்எஸ்டிஎல் நிறுவனத்தின் இ-கேஸ் சேவையைப் பெறலாம்.

 CAS ID பெறுவது எப்படி?

இதில் CAS ID பெற முதலில் Know your CAS ID என்கிற ஆப்ஷனைச் சொடுக்கி, அதில் பான் எண், டீமேட் கணக்குகள் வைத்திருக்கும் டெபாசிட்டரி பார்ட்டிசிபென்ட்களின் எண் மற்றும் க்ளையன்ட் ஐடி எண்களைத் தந்தால், CAS ID  கிடைத்துவிடும்.

 சிறப்பம்சம் என்ன?

இந்த கன்சாலிடேடட் அக்கவுன்ட்ஸ் ஸ்டேட்மென்ட்டினால், இனி நம் முதலீட்டு விவரங்களை காகிதத்தில் வாங்கிப் பார்க்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இ-கேஸ் சேவையில் பதிவு செய்துகொண்ட ஒருவர், தன்னுடைய அனைத்து முதலீடுகளையும் ஒரே ஸ்டேட்மென்டில் மின்னஞ்சலிலேயே பெறலாம்.

 காகிதத்தில் வேண்டும் எனில்...


ஒருவேளை, ஏதோ சில சட்ட விதிமுறைகள் மற்றும் ஆதாரங்களுக்காக அல்லது தனிப்பட்ட தேவைக்காக காகிதத்தில் கேஸ் ஸ்டேட்மென்ட்  வேண்டும் என்றால், உரிய டெபாசிட்டரி      பார்ட்டிசிபென்ட்களிடம் சொல்லி வாங்கிக் கொள்ளலாம்.

 என்ன விவரங்கள்?

என்எஸ்டிஎல் மற்றும் சிடிஎஸ்எல் நிறுவனங் களின் டீமேட் கணக்குகளில் வைத்திருக்கும் பங்குச் சந்தை முதலீட்டு விவரங்கள், மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோக்களில் இருக்கும் யூனிட்கள், கார்ப்பரேட் பாண்டுகள், மணி மார்க்கெட் முதலீடுகள், அரசுப் பத்திரங்கள் மற்றும் அஞ்சலகச் சேமிப்புகள் போன்றவை இந்த என்எஸ்டிஎல் இ-கேஸ் ஸ்டேட்மென்ட்டில் பெறலாம்.

 எப்போது இ-கேஸ் வரும்?

ஒரு முதலீட்டாளர், ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளும் முதலீட்டுப் பரிவர்த்தனைகள், அந்த மாதத்தின் கடைசி தேதி நிலவரப்படி, அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் முதலீட்டாள ரின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும். ஒருவேளை ஒரு மாதத்தில் முதலீட்டாளர் எந்தவொரு பரிவர்த் தனையையும் மேற்கொள்ளவில்லை என்றால், அடுத்த மாதத்தில் அவருக்கு இ-கேஸ் அனுப்பப் படாது. ஆனால், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதத்தில் அதற்கு முந்தைய மாத நிலவரப்படி இ-கேஸ் அனுப்பப்படும்.

 இரண்டு டீமேட் கணக்குகள் இருந்தால்..?

ஒருவருக்கு, என்எஸ்டிஎல் மற்றும் சிடிஎஸ்எல் ஆகிய இரண்டு டெபாசிட்டரிகளிடமும் தனித்தனியாக இரண்டு டீமேட் கணக்குகள் இருந்தால், எந்தக் கணக்கு முதலில் தொடங்கப் பட்டதோ, அந்தக் கணக்குதான் அடிப்படைக் கணக்காக எடுத்துக்கொள்ளப்படும். அந்த அடிப்படைக் கணக்கில் இருக்கும் விவரங்களைக் கொண்டுதான் இ-கேஸ் ஸ்டேட்மென்ட்கள் வழங்கப்படும்.

 என்ன மாதிரி பரிவர்த்தனைகள் கணக்கில் வரும்?

டீமேட் கணக்கில் செய்யப்படும் அனைத்துப் பரிமாற்றங்களும் இ-கேஸில் வரும். அதேபோல், மியூச்சுவல் ஃபண்ட் என்எஃப்ஓ,  புதிய யூனிட்களை வாங்குவது, மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை ரெடீம் செய்வது, டிவிடெண்டுகளை மறுமுதலீடு செய்வது, எஸ்.டி.பி முறையில் யூனிட்களை விற்பது, எஸ்டிபி முறையில் யூனிட்களை விற்று வேறு திட்டங்களில் முதலீடு செய்வது, எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வது என்று அனைத்துப் பரிவர்த்தனைகளும் இ-கேஸில் வரும். காகித வடிவில் ‘மெட்டீரியலைஸ்டு ஸ்டேட்மென்ட்’களை வைத்திருந்தால், இந்த இ-கேஸில் கொண்டுவர முடியாது.

 மின்னஞ்சலை மாற்ற...

எந்த டெபாசிட்டரி பார்ட்டிசிபென்ட்டிடம், டீமேட் கணக்குகளைப் பராமரித்து வருகிறோமோ, அவரிடமே விவரங்களைச் சொல்லி, மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்களை மாற்றிக் கொள்ளலாம்.
இதுவரை இந்த வசதியைப் பெறாதவர்கள் இனியாவது பெறலாமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு