Published:Updated:

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 10

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 10
பிரீமியம் ஸ்டோரி
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 10

ரகசியம் தந்த நஷ்டம்!சுரேஷ் பார்த்தசாரதி , Founder, Myassetsconsolidation.com Registered investment advisor, INA200000878ஓவியம்: கோ.ராமமூர்த்தி

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 10

ரகசியம் தந்த நஷ்டம்!சுரேஷ் பார்த்தசாரதி , Founder, Myassetsconsolidation.com Registered investment advisor, INA200000878ஓவியம்: கோ.ராமமூர்த்தி

Published:Updated:
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 10
பிரீமியம் ஸ்டோரி
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 10

திவாகருக்குப் பெண் பார்த்துக் கொண்டிருந்தனர் அவருடைய பெற்றோர். திவாகர் ஒரு விஷயத்தில் பிடிவாதமாக இருந்தார். வேலைக்குப் போகும் பெண் வீட்டைக் கவனிக்க முடியாது. அதனால் வேலை பார்க்கும் பெண் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். நல்ல வரன்கள் வந்தும், திவாகரின் பிடிவாதத்தால் திருமணம் கைகூடி வரவில்லை. கடைசியாகப் பார்த்த திவ்யாவை எல்லோருக்கும் பிடித்திருந்தது; திவாகருக்கும்தான். திவ்யா ஐ.டி கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 10

“திருமணத்துக்குப் பிறகு வேலையை விட்டுவிடு வதாக பெண் வீட்டார் சொல்லிவிட்டார்கள். அதனால் பிரச்னை எதுவும் இல்லை” என்று தரகர் சொன்னதும், வேகவேகமாகத் திருமணம் நடந்து முடிந்தது.

மூன்று மாதங்கள் மகிழ்ச்சியாகக் கழிந்தது. “நாளையோடு லீவு முடிகிறது. வேலைக்குப் போக வேண்டும்’’ என்றார் திவ்யா. அதிர்ந்து போனார் திவாகர். ‘‘திருமணத்துக்குப்பின் நீ வேலைக்குப் போகமாட்டாய் என்று தரகர் சொன்னரே!’’ என்றார் திவாகர். “அறுபதாயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கும் வேலையை விட்டுவிட்டு, வீட்டில் அடைந்துகிடப்பது முட்டாள்தனம் இல்லையா? இதற்கு நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்’’  என்றார் திவ்யா.

இந்தப் பிரச்னை பெரிதாக வெடிக்கவே, திவ்யா கோபித்துக்கொண்டு தன் அம்மா வீட்டுக்குப் போய்விட்டார்.

ஆறு மாதங்களுக்குப் பிறகும் இருவரும் பிடிவாதமாகவே இருக்க, ஒருவழியாக திவ்யாவை வேலையை விட்டுவிடச் சொல்லிக் கெஞ்சினார்கள் திவ்யாவின் பெற்றோர். வேலையை விட்டுவிட்டு கணவரின் வீட்டுக்கு வந்தார் திவ்யா.

திவாகர் வீட்டுக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்து கொடுத்தார். ஆனால், தன் சம்பளம் உள்ளிட்ட எந்த வரவு செலவுக் கணக்கையும் திவ்யாவிடம் சொல்லவில்லை. திவ்யாவும் கேட்டுக்கேட்டு அலுத்துப் போனார்.   ‘‘வாங்குகிற சம்பளப் பணத்தை என்னதான் செய்றீங்க?’’ என்று கடைசியில் திவ்யா கேட்டே விட்டார். “கவலைப்படாதே! ஊதாரித்தனமா எல்லாம் செலவு செய்யலை.   நல்லபடியா முதலீடு செஞ்சுக்கிட்டிருக்கேன். நீ இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ணப்போற?” என எரிந்து விழுந்தார் திவாகர்.

திவ்யாவுக்கு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டன. குழந்தைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தாயிற்று. பெரிய பள்ளிக்கூடம் என்பதால், வருடத்துக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவானது.  இந்த நிலையில்,  திடீரென எதையோ பறிகொடுத்ததைப் போல விரக்தியில் இருந்தார் திவாகர். யார் யாருக்கோ போன் போட்டுப் பேசிக் கொண்டிருந்தார். திவாகரின் நடவடிக்கைகளைக் கவனித்த திவ்யா, ‘‘என்னதான் நடந்துச்சு?’’ எனக் கேட்டார். திவாகர் சொன்ன விஷயம் திவ்யாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ஐந்து வருடங்களாக வட இந்தியாவைச் சேர்ந்த நிதி நிறுவனம் ஒன்றில், நண்பர் ஒருவரின் யோசனைப்படி மாதாமாதம் பணம் செலுத்தி வந்திருக்கிறார் திவாகர். மொத்தமாக 35 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை முதலீடு செய்துள்ளார். சமீபத்தில் அந்த நிறுவனம் மோசடி நிறுவனமாக அறிவிக்கப்பட்டு, இழுத்து மூடப்பட்டது. முதலீட்டாளர்கள் அந்த நிறுவனத்தின் கிளைகளில் குவிந்து போராட்டம் நடத்தியும் பலனில்லை. பணம் கிடைக்குமா என்ற கேள்விக்குறியுடன் திவாகர் நடைப்பிணமாக அலைந்துகொண்டிருந்த சூழலில்தான் திவ்யாவிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்.

இந்த இக்கட்டான நிலையில்தான் தன் தோழி மூலம் என்னைப்பற்றித் தெரிந்து திவாகரை அழைத்துக்கொண்டு வந்தார் திவ்யா. எல்லாவற்றையும் திவ்யாதான் என்னிடம் சொன்னார். திவாகர் மௌனமாக உட்கார்ந்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 10திவாகர் செய்துள்ள நான்கு முக்கியமான தவறுகளைச் சுட்டிக்காட்டினேன். மனைவியை வேலைக்கு அனுப்ப மறுத்தது, தான் செய்த முதலீடுகளை மனைவியிடம் மறைத்தது, கை நிறையச் சம்பாதித்தும் சரியான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யாமல்விட்டது, அதிகமாக ஆசைப்பட்டு பொன்ஸி திட்டத்தில் முதலீடு செய்தது என திவாகர் செய்த தவறுகளை அடுக்கினேன். நான்  சொன்னதை ஒப்புக் கொண்டார்  திவாகர். “இனி நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள், செய்கிறேன்” என்றார் அமைதியாக.

நான் திவாகரின் எதிர்காலத்துக்கான ஆலோசனைகளைப் பட்டியலிட்டுக் கொடுத்தேன். கடந்துபோனவற்றைப் பற்றி கவலைப்படுவதைவிட இனி எப்படி நடந்துகொள்வது என்று யோசிப்பதே  நல்லது என இருவருக்கும் உணர்த்தினேன்.

‘‘இனி அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டுத் திட்டங்களில் மட்டும் முதலீடு செய்யுங்கள். இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என பொன்ஸி நிறுவனங்கள் சொல்லும் ஆசை வார்த்தைகளை நம்பாதீர்கள். எல்லா முதலீடுகளையும் மனைவியிடம் தெரியப்படுத்துங்கள்’’ எனச் சில அறிவுரைகளை வழங்கிவிட்டு, திவாகரின் எதிர் காலத் தேவைகளுக்கு முதலீட்டு ஆலோசனைகளை கணக்கிட்டுத் தந்தேன்.

திவாகரிடம் எந்த இலக்கும் தயாராக இல்லை என்பதால், நானே அவருக்கானப் பொதுவான முதலீட்டு இலக்குகளை வகுத்துக்கொடுத்தேன். திவாகருக்குப் பிடித்தம்போக ரூ.68,000 சம்பளம் வருகிறது. அதில் வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கி இருப்பதால், மாதம் ரூ.18,000 இஎம்ஐ செலுத்துகிறார். குடும்பச் செலவுகள், படிப்புச் செலவுகளுக்கு மாதம் ரூ.25,000 வரை செலவு செய்கிறார்.

எனவே, மீதமுள்ள 25,000 ரூபாயை  மகள், மகன் படிப்புக்கு என ஆளுக்கு ரூ.5,000, திருமணத்துக்கு என ஆளுக்கு ரூ.4,000 என எஸ்ஐபி மூலம் முதலீடு செய்யச் சொன்னேன். ரூ.3,000-ஐ திவாகரின் ஓய்வுக் காலத்துக்காக முதலீடு செய்து வருமாறு சொன்னேன்.

முதல்கட்டமாக, ரூ.50 லட்சத்துக்கு டேர்ம் இன்ஷூரன்ஸும், ரூ.5 லட்சத்துக்கு ஃப்ளோட்டர் ஹெல்த் பாலிசியும் எடுத்துக்கொள்ளுமாறு சொன்னேன். ‘‘முதலில், முதலீட்டுப் பழக்கத்துக்கு உங்களை உட்படுத்திக்கொள்ளுங்கள். ஒரு வருடம் கழித்து சம்பளம் உயரும்போது உங்கள் தேவை, இலக்குகளுக்கு ஏற்ப முதலீட்டை மாற்றிக் கொள்ள லாம்’’ என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு திவ்யா எனக்கு போன் செய்து, “நீங்கள் சொன்னதுபோல முதலீடுகளைச் செய்துவருகிறோம். இப்போது குடும்பத்திலும், முதலீட்டிலும் பண நிர்வாகத்தை, நான்தான் செய்துவருகிறேன்” என்று சொன்னார். ‘மகிழ்ச்சி’ எனச் சொல்லி வாழ்த்தினேன்.    

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 10
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism