Published:Updated:

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 11

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 11
பிரீமியம் ஸ்டோரி
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 11

திருப்புமுனையை ஏற்படுத்திய அந்த ஒரு நிமிடம்!சுரேஷ் பார்த்தசாரதி Founder, Myassetsconsolidation.com Registered investment advisor, INA200000878ஓவியம்: கோ.ராமமூர்த்தி

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 11

திருப்புமுனையை ஏற்படுத்திய அந்த ஒரு நிமிடம்!சுரேஷ் பார்த்தசாரதி Founder, Myassetsconsolidation.com Registered investment advisor, INA200000878ஓவியம்: கோ.ராமமூர்த்தி

Published:Updated:
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 11
பிரீமியம் ஸ்டோரி
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 11
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 11

குருநாத் கேரளாவைச் சார்ந்தவர். சினிமா தியேட்டர் அதிபர். சிறிய அளவில் சினிமா விநியோகஸ்தராகவும் கொடிகட்டி பறந்தவர்.  குருநாத்தின் மகன் பிரமோத். 28 வயது இளைஞர். அப்பாவின் தொழிலைக் கவனித்துவந்தார்  பிரமோத்.

சென்னையைச் சேர்ந்த பெரிய தொழில் அதிபர் ஒருவரின் மகளை தன் மகனுக்குத் திருமணம் செய்துவைத்தார் குருநாத். திருமணத்துக்குப் பிறகு பிரமோத்தின் சிந்தனை வேறு மாதிரியாக இருந்தது. சொந்தமாக சினிமாத் தயாரிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். தன் எண்ணத்தை அப்பாவிடம் சொன்னார்.

அனுபவம் கொஞ்சமும் இல்லாத அந்தத் தொழிலில் இறங்குவதை குருநாத் விரும்பவில்லை. ஆனால், பிரமோத் பிடிவாதமாக இருந்ததுடன் தயாரிப்புக்காக அப்பாவிடம் பணம் கேட்டு அடம்பிடிக்க ஆரம்பித்தார். குருநாத், பணம் தர முடியாது எனக் கூறிவிட்டார். அதன்பிறகு அப்பா - மகனுக்கு சண்டை ஆரம்பமானது.

கடைசியில் வேறுவழியில்லாமல் பிரமோத்துக்கு சேரவேண்டிய சொத்தைப் பிரித்துத் தந்துவிட்டு,   “உன் பாகத்தைப் பிரித்துத் தந்துவிட்டேன். இதை வைத்து ஜெயிப்பது உன் சாமர்த்தியம்” என்று  சொல்லிவிட்டார். பிரமோத்துக்குக் கிடைத்த பணத்தை வைத்து, சின்ன பட்ஜெட் படம்தான் எடுக்க முடியும். என்றாலும், படத் தயாரிப்பில் இறங்கினார் பிரமோத். 75% படத்துக்கான வேலைகள் முடிந்தபின், பணம் தீர்ந்து போனது.
இடைப்பட்ட காலத்தில், பிரமோத்துக்கு ஒரு குழந்தை பிறந்து, அவன் பள்ளிக்கூடம் போக

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 11

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆரம்பித்துவிட்டான். பிரமோத்தின் மனைவி வைஷ்ணவிக்கு கணவரின் செயல்பாடுகள் எதுவும் பிடிக்கவில்லை. ஆனாலும் தடுக்க முடியவில்லை.

படம் பாதியில் நின்றுபோன விரக்தியில் பிரமோத் குடிக்க ஆரம்பிக்கவே, நிலைமை இன்னும் மோசமானது. மாமனார் சென்னையில் குடியிருப்பதற்காகக் கொடுத்த வீட்டில் வாழ்க்கை நடத்தியதால், பிரமோத்துக்கு வாடகைப் பிரச்னை இல்லை. ஆனால், குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திண்டாடினார்.

வைஷ்ணவி தன் அப்பா, அம்மாவிடம் சூழ்நிலையைச் சொல்லி அழுதுவிட்டார். மகளின் கஷ்டத்தைப் பார்த்து தாங்க முடியாமல், தங்களின் சூப்பர் மார்க்கெட்டில் இரண்டு கிளைகளை பிரமோத்திடம் ஒப்படைத்து அதில் கிடைக்கும் வருமானத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சொன்னார்.

ஓரளவு குடும்பச் செலவுகளைச் சமாளித்து, வாழ்க்கை மீண்டும் சுமுகமாக போய்க் கொண்டிருந்தபோது, பிரமோத்துக்கு மீண்டும் சினிமா ஆசை வந்தது. தன்னிடம் மாமனார் ஒப்படைத்த இரண்டு சூப்பர் மார்க்கெட்டையும் தன்னுடைய சொந்த நிறுவனங்களாகச் சொல்லி, நண்பர் ஒருவரிடம் கடன் கேட்டுள்ளார் பிரமோத். ஆனாலும், அடுத்தவரின் சொத்தை அடமானம் வைக்கப்போகிறோமே என்ற உறுத்தல் அவருக்கு இருக்கவே செய்தது. அந்தக் குழப்பமான நேரத்தில்தான் என்ன செய்வது என்ற கேள்வியுடன் பிரமோத் என்னைச் சந்தித்தார். அடுத்தவர் சொத்தைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என உறுத்திய அந்த ஒரு நிமிடம்தான் பிரமோத்துக்கு திருப்புமுனையாக அமைந்தது.

நான் அவரிடம் அரை மணி நேரம் பொதுப்படை யாகப் பேசினேன். அப்போதுதான் அவர் விளம்பரத் துறையில் ஆர்வமாக இருக்கிறார் என்பதை உணர்ந்துகொண்டேன். பிறகு, “அடுத்தவர் சொத்தை அடமானம்வைத்து சினிமா எடுப்பது தவறு. அது பெரிய ரிஸ்க் ஆக மாறிவிட வாய்ப்பு உண்டு. எனவே, உங்களுக்கு ஆர்வமுள்ள விளம்பரத் துறையில் இறங்குங்கள். உங்களின் சினிமா அனுபவம் இந்தத் தொழிலில் நீங்கள் வளர உதவியாக இருக்கும். இந்தத் தொழிலில் உங்கள் நண்பரை பார்ட்னராக இணைத்துக்கொள்ளுங்கள். அதற்கு அவரிடம் சம்மதமா எனக் கேளுங்கள்’’ எனச் சொல்லி அவரை அனுப்பினேன்.

நம்பிக்கையுடன் சென்றவர், மூன்றே நாட்களில் தன் நண்பர் மற்றும் தன் மனைவியுடன் வந்து நின்றார். நான் தந்த யோசனைக்கு பிரமோத்தின் நண்பர் ஒப்புக்கொண்டார். இதில் பாசிட்டிவான விஷயம், பிரமோத்தின் மனைவிக்கும் விளம்பரத்துறையில் ஆர்வம் இருந்ததே.

விளம்பர ஏஜென்சி மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்துதல் என இரண்டு நிறுவனங்களையும் உடனே ஆரம்பித்தார் பிரமோத். சென்னை எக்மோரில் அவருக்கு ஒதுக்கி தந்துள்ள சூப்பர் மார்க்கெட் மாடியில் அலுவலகத்தைத் திறந்தார்கள். இரண்டு பிசினஸும் பிக்அப் ஆகிவிட்டன. விளம்பர ஈவென்ட் நடத்துவதில் அவ்வப்போது பிரமோத்துக்கு மொத்தமாக 20,  25 லட்சம் ரூபாய் எனப் பணம் கிடைக்க ஆரம்பித்தது. விளம்பர ஏஜென்சியை வைஷ்ணவி கவனிக்க ஆரம்பித்தார். ஈவென்ட் நிறுவனத்தை பிரமோத் கவனிக்க ஆரம்பித்தார்.

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 11

இப்போது மகனை பெங்களூரில் சட்டக் கல்லூரியில் படிக்க வைக்கிறார்கள். மகனுக்கு வீடு வாங்கித் தர ஆசைப்பட்டு என்னிடம் ஆலோசனை கேட்டார் பிரமோத். ஆனால், பிரமோத்தின் மகனுக்கோ பெங்களூரிலேயே செட்டில் ஆக வேண்டும் என்று ஆசை.  எனவே, தேவைப்படும் போது வீடு வாங்கிக்கொள்ளலாம். இப்போது அந்தப் பணத்தை ரியல் எஸ்டேட் ஃபண்டுகளில் முதலீடு செய்யுங்கள் எனச் சொன்னேன். அதன்படியே செய்தார் பிரமோத்.

ஈவென்ட் மூலம் கிடைக்கும் பணத்தை மொத்தமாக முதலீடு செய்ய ஆரம்பித்தார் பிரமோத். இதுபோல, மொத்தமாகக் கிடைக்கும் தொகையை ஓய்வுக்காலத்துக்காக மியூச்சுவல் ஃபண்டுகளிலும், ஃபிக்ஸட் டெபாசிட்டிலும் பிரித்து முதலீடு செய்யச் சொல்லியுள்ளேன். விளம்பர ஏஜென்சி மூலம் வரும் வருமானத்தை குடும்பச் செலவுகளைச் செய்ததுபோக, மீதப்படுத்தி மாதம் ரூ.35,000 வரை முதலீடு செய்துவருகிறார் வைஷ்ணவி.

எப்படியோ...  தடுமாறிய அவர்களின் வாழ்க்கை சுமுகமான பாதைக்குத் திரும்பிவிட்டதில் எனக்கும் மகிழ்ச்சி. பிரமோத் செய்த தவறுகள் எனப் பார்த்தால், தெரியாத தொழிலில் கண்மூடித்தனமாக இறங்கியது, அவரிடம் இருந்த மொத்தப் பணத்தையும் தொழிலில் முதலீடு செய்தது, இந்த இக்கட்டான நிலையில் குடிப்பழக்கத்துக்கு உள்ளானது எனச் சொல்லலாம்.

பிரமோத் தவறு செய்யும்போதெல்லாம் சுட்டிக்காட்டியும், சகிப்புத்தன்மையுடனும்  பொறுமையோடு எதிர்கொண்டு, பாசிட்டிவ் பாதைக்கு வாழ்க்கையைத் திருப்பியதில் பிரமோத்தின் மனைவி வைஷ்ணவிக்குப் பெரும்பங்கு உண்டு.  நான் சொன்ன எல்லா ஆலோசனைகளையும் அப்படியே பின்பற்ற அவர்தான் காரணம். அவரைப்போன்று சமயோசிதமாகச் செயல்படும் குணத்தை வளர்த்துக்கொண்டால், எத்தகைய இக்கட்டான சூழலையையும் நாம் எதிர்கொண்டு மீண்டு வந்துவிடலாம். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism