Published:Updated:

வெற்றிகரமான பிசினஸுக்கு 7M மேனேஜ்மென்ட்! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 10

வெற்றிகரமான  பிசினஸுக்கு 7M மேனேஜ்மென்ட்! -  நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 10
பிரீமியம் ஸ்டோரி
வெற்றிகரமான பிசினஸுக்கு 7M மேனேஜ்மென்ட்! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 10

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

வெற்றிகரமான பிசினஸுக்கு 7M மேனேஜ்மென்ட்! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 10

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

Published:Updated:
வெற்றிகரமான  பிசினஸுக்கு 7M மேனேஜ்மென்ட்! -  நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 10
பிரீமியம் ஸ்டோரி
வெற்றிகரமான பிசினஸுக்கு 7M மேனேஜ்மென்ட்! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 10
வெற்றிகரமான  பிசினஸுக்கு 7M மேனேஜ்மென்ட்! -  நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 10

வெற்றிகரமான தொழில்முனைவோராக ஒருவர் திகழ வேண்டுமென்றால் அவர் முதலில் தன்னை ஒரு முழுமையான, அசல்  பிசினஸ்மேனாகவே நினைத்துக்கொள்ள வேண்டும். அந்த நினைப்பில் சிறு தயக்கமோ, பயமோ இருந்தால்கூட வெற்றிகரமான பிசினஸ்மேனாக நம்மால் இருக்க முடியாது.  உறுதியான எண்ணமும் நம்பிக்கையுமே நமக்கு நமக்கு சிறந்த மேலாண்மை அறிவைத் தரும்.

இது போட்டி நிறைந்த உலகம். இன்றைய சூழ்நிலையில் யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிலையும் தொடங்கி செய்ய முடியும். எனவே, போட்டிகளைச் சமாளித்து ஒரு பிசினஸை சாம்ராஜ்யமாக உருவாக்குவதற்கு மேலாண்மை செய்யும் திறமை மிகவும் அவசியம்.

தொழிலை நடத்துபவருக்கு எவ்வளவு திறமை இருந்தாலும் மேலாண்மை செய்யும் திறமை இல்லாவிட்டால், அனைத்தும் வீண்தான். பல தொழில்கள் வேகவேகமாகத் துவங்கப்பட்டு, வெகு சீக்கிரமே முடங்கிப் போவதற்கு முக்கிய காரணம் மேலாண்மை செய்யும் திறமை இல்லாததுதான். பிசினஸில் வெற்றி அடைய வேண்டுமென்றால், ஒருவர் மேலாண்மை செய்ய வேண்டிய ஏழு முக்கியமான விஷயங்கள் உள்ளன. அவற்றை ‘7M மேனேஜ்மென்ட்’ என்று சொல்வார்கள். அவை,

1. Man Power - ஊழியர்கள்

வெற்றிகரமான  பிசினஸுக்கு 7M மேனேஜ்மென்ட்! -  நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 10

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!



2. Material - மூலப்பொருட்கள்

3. Machine - இயந்திரங்கள்

4. Method - தொழில் செயல்முறை

5. Measurement - அளவுகோல்கள், இலக்குகள்

6. Marketing - சந்தைப்படுத்துதல்

7. Money - பணம்

இந்த ஏழு விஷயங்களைப் பற்றியும் இப்போது சுருக்கமாகச் சொல்கிறேன்.
 
     ஊழியர்கள்    

ஒரு பிசினஸின் ஆணிவேர் அதை உருவாக்கிச் செயல்படுத்தும் தொழில்முனைவோர் என்றால், அந்த ஆணிவேரைத் தாங்கிப்பிடிக்கும் கிளை வேர்கள் ஊழியர்கள்தான். ஊழியர்களை மனித வளம் என்றும் பிசினஸில் குறிப்பிடுவார்கள்.

ஊழியர்களைப் பொறுத்தவரை, அவர்களுக் கான தேர்வை நடத்துவது, தேர்ந்தெடுப்பது, பயிற்சி கொடுப்பது, அவர்களின் திறமையை ஊக்குவித்து, அதற்கேற்ப பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு வழங்குவது மற்றும் அவர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பது என பலவற்றைக் கவனத்தில்கொள்ள வேண்டும். திறமையான ஊழியர் ஒருவரைத் தக்கவைத்துக் கொள்வதும், திறமையற்ற ஊழியரை வளர்க்க முயற்சிப்பதும், அப்படி முடியாதபட்சத்தில் அவரைப் பாரபட்சமின்றி வெளியேற்று வதும்தான் சிறந்த ஊழியர் மேலாண்மை ஆகும்.

     மூலப்பொருட்கள்    

நம்முடைய பிசினஸுக்குத் தேவையான பொருட்களை மேலாண்மை செய்யத் தெரியா    விட்டால், மிகப் பெரிய நஷ்டத்தைச் சந்திக்க வேண்டிவரும். தொழில் செய்பவர்கள் பெரும்பாலும் நஷ்டமடைவது பொருட்களை மேலாண்மை செய்யத் தெரியாததனால்தான்.  நம்முடைய பிசினஸ் அளவு என்ன, இலக்கு என்ன, செயல்முறை என்ன என்பதைத் திட்டமிட்டு அதற்கேற்ப பொருட்களை கொள்முதல் செய்து, உற்பத்தியைத் திட்டமிட வேண்டும். பொருளை எங்கு வாங்குவது, எப்படி வாங்குவது, எவ்வளவுக்கு வாங்குவது, எவ்வளவு உற்பத்தி செய்வது, விற்காமல் திரும்ப வந்ததை என்ன செய்வது ஆகிய அனைத்துக் கேள்விகளுக்கும் தெளிவான பதில்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். டிமாண்ட் மற்றும் சப்ளை இரண்டையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதற்கேற்ப கொள்முதல் மற்றும் உற்பத்தியைத் திட்டமிட்டு, பொருட்கள் வீணாகாமல் பார்த்துக்கொண்டாலே பிசினஸில் ஜெயித்த மாதிரிதான். முடிந்தவரை மூலப் பொருட்கள் கிடைக்கும் இடத்துக்கு அருகிலேயே தொழில் செய்ய வேண்டும். 

வெற்றிகரமான  பிசினஸுக்கு 7M மேனேஜ்மென்ட்! -  நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 10

     இயந்திரங்கள்    

நம்முடைய உற்பத்தி முறைக்கேற்ற  இயந்திரங்களை வாங்க வேண்டும். அந்த இயந்திரங்கள் நீண்டகாலத்துக்கு நீடித்து உழைக்கும் வகையில் தரமானவையாக இருக்க வேண்டும். நவீன தொழில்நுட்பம் உள்ளவையாக இருக்க வேண்டும். நம்முடைய உற்பத்தி அளவுக்கேற்பவே இயந்திரங்களை வாங்க வேண்டும்.

ஆரம்பத்திலேயே இயந்திரத்துக்காக அதிகம் செலவு செய்து, முதலீட்டை வீணாக்கக்கூடாது. இயந்திரங்களைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். தேய்மானம் ஆகாமல், விபத்து நடக்காமல் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை களையும் செய்ய வேண்டும். இயந்திரங்களைக் கையாள்வதற்கு நல்ல அனுபவம் பெற்றவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். அவ்வப்போது இயந்திரங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், சோதனை செய்யவும் வேண்டும்.

     தொழில் செயல்முறை 
   

நம்முடைய பிசினஸை எப்படிச் செய்ய வேண்டும் என்பதில்தான் அதிக நேரத்தை நாம் செலவிட வேண்டும். ஏனெனில் ‘Doing Business is an Art’ என்பார்கள். திட்டங்கள், கொள்கைகள், செயல்முறைகள் ஆகியவற்றை உள்ளிடக்கியதே பிசினஸ் செயல்முறை. நம்முடைய பிசினஸ் உற்பத்தியா, சர்வீஸா, உள்நாட்டில் தொழில் செய்யப் போகிறோமா அல்லது ஏற்றுமதி செய்யப் போகிறோமா, யார் யாருக்கு என்ன வேலை, யார் யாரிடம் ரிப்போர்ட் செய்ய வேண்டும் என நம்முடைய தொழில் செயல்முறையைச் சரியாகத் திட்டமிட்டுக் கட்டமைத்துவிட்டால் போதும், நல்ல முடிவுகளை நம்மால் பெற முடியும். 

      அளவுகோல்கள், இலக்குகள்    


முதலீடு எவ்வளவு, எவ்வளவு பணியாளர்கள் தேவை, கொள்முதல் எவ்வளவு, உற்பத்தி எவ்வளவு, விற்பனை எவ்வளவு, எந்த இடத்தில் எவ்வளவு விற்பனை, விளம்பரத்துக்கு எவ்வளவு செலவு, இலக்கு என்ன என பிசினஸின் ஒவ்வொரு விஷயங்களையும் தரவுகளாக, அளவுகோல்களாகத் தயார் செய்தால்தான் நம்முடைய பிசினஸை நம்மால் புரிந்துகொள்ள முடியும். பின்னர் அவற்றிலிருந்து கிடைக்கும் முடிவுகளை வைத்து பிசினஸ் செயல்பாடுகளைத் திட்டமிட வேண்டும். தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும். 

     சந்தைப்படுத்துதல்    

ஒரு பிசினஸில் இருக்கும் ஆதாரங்களை வைத்து, பிசினஸை மேலும் வளர்க்கும் கலைதான் மார்க்கெட்டிங். விளம்பரம், விற்பனை, வாடிக்கையாளர் சேவை ஆகிய பல விஷயங்களை உள்ளடக்கியது மார்க்கெட்டிங் என்னும் சந்தைப் படுத்துதல். பிசினஸின் பட்ஜெட்டுக்கு ஏற்ப மார்க்கெட்டிங் செயல்பாடுகள் இருக்க வேண்டும். அவசியமான, சரியான மார்க்கெட்டிங் உத்திகளை மட்டுமே திட்டமிட்டுச் செயல்படுத்த வேண்டும். மார்க்கெட்டிங் செயல்பாடுகளைக் கண்காணித்து அவற்றின் முடிவுகளை ஆராய்ந்து, அதற்கேற்ப மாற்றங்களையும் செய்ய வேண்டும்.  அப்போதுதான் செலவுகள் பிசினஸ் செய்பவரின் கையைக் கடிக்காமல் இருக்கும். 

     பணம்    

பணம்தான் பிசினஸுக்கு மிக முக்கியமான வைட்டமின். பிசினஸை நடத்த தினம் தினம் பணம் தேவை. மேலே உள்ள ஆறு  விஷயங்களுக்கும் பணம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இயங்கு மூலதனம் (Working capital) இல்லாமல் பிசினஸை நடத்த முடியாது. செலவுகளைக் குறைத்து, வருமானத்தை அதிகரிக்கும் வகையில் பணத்தை மேலாண்மை செய்யத் தெரிந்திருக்க வேண்டும். அதற்காகத் தேவையானவற்றுக்கு பணம் செலவு செய்யாமலும் இருக்கக்கூடாது. அவசியமான செலவுகளைச் செய்ய வேண்டும், ஆனால், செலவு செய்த பணத்துக்கு மேல் நமக்கு வருமானம் கிடைக்க வேண்டும். பிசினஸில் ஒவ்வொரு ரூபாயும் முக்கியம் என்பதை மறந்துவிடக்கூடாது.   

இந்த ஏழு விஷயங்களிலும் திட்டமிடல், செயல்படுத்துதல், வழிநடத்துதல், இலக்கை அடைதல், இறுதியில் முடிவுகளை ஆராய்தல், அடுத்து மீண்டும் திட்டமிடல் என்ற சுழற்சி நடவடிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்படிக் கடைப்பிடித்தால் பிசினஸில் வெற்றி நிச்சயம்.

(ஜெயிப்போம்)