Published:Updated:

பணத்தைக் கொள்ளையடிக்கும் கால் சென்டர்கள்!

பணத்தைக்  கொள்ளையடிக்கும் கால் சென்டர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
பணத்தைக் கொள்ளையடிக்கும் கால் சென்டர்கள்!

சித்தார்த்தன் சுந்தரம் - ஓவியம்: ஷ்யாம்

பணத்தைக் கொள்ளையடிக்கும் கால் சென்டர்கள்!

சித்தார்த்தன் சுந்தரம் - ஓவியம்: ஷ்யாம்

Published:Updated:
பணத்தைக்  கொள்ளையடிக்கும் கால் சென்டர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
பணத்தைக் கொள்ளையடிக்கும் கால் சென்டர்கள்!
பணத்தைக்  கொள்ளையடிக்கும் கால் சென்டர்கள்!

பிபிஓ மூலம் நம் நாட்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இதில் கொள்ளை அடிக்கப்பட்ட பணம் உண்டு என்றால் அதிர்ச்சியாக இருக்கிறதா?  

இந்தியாவில் பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, குருக்ராம் (குர்ஹாவ்), மும்பை போன்ற பெருநகரங்களை மையமாகக் கொண்டு `கால் சென்டர்கள்’ என்கிற `அழைப்பு மையங்கள்’ இயங்கி வருகின்றன. நேரடியாக இந்தத் துறையில் வேலை செய்து வருபவர்களின் எண்ணிக்கை சுமார் 37 லட்சம். இந்தத் துறை ஈட்டும் வருமானம், ஆண்டுக்கு சுமார் 143 பில்லியன் டாலர்கள் (அதாவது, ரூ. 9.7 லட்சம் கோடி). 

 கால் சென்டர் என்றால் என்ன?

சிறிய, பெரிய நிறுவனங்களின் வாடிக்கை யாளர்களுக்கு தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் சேவை புரிவதும், அவர்களுடைய பொருட்களை அல்லது சேவைகளைப் பற்றி எடுத்துச் சொல்வதும் இந்த மையங்களின் பிரதான வேலை. இந்த நிறுவனங்களில் சேர்வதற்கு ப்ளஸ் டூ அல்லது பட்டப்படிப்பும், நன்கு ஆங்கிலம் பேசத் தெரிந்திருந்தால் போதும்.

 இவர்களின் வேலை என்ன?

இவர்களிடம் தரப்பட்ட டேட்டாபேஸிலிருந்து தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, அவர்களின் வாடிக்கையாளர் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களையோ அல்லது சேவைகளையோ அறிமுகம் செய்வது,  வாடிக்கையாளர்களின் குறைகளைத் தீர்ப்பது, அல்லது ஏதாவது ஒரு விஷயம் குறித்து நினைவூட்டுவது (உதாரணமாக, இன்ஷூரன்ஸ் பிரிமீயம் கட்டுவது அல்லது காரை சர்வீஸ் செய்வதற்கான தேதியை நினைவூட்டுவது போன்றவை) என பல வகைப்பட்டவை.

 கொள்ளை அடிக்கும் கால் சென்டர்கள்

இதுவரை நாம் பார்த்தது சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நல்லவிதமாகச் செயல்படும் கால் சென்டர்கள். ஆனால், சில கால் சென்டர்கள் இந்திய நகரங்களில் இருந்தபடியே, உலகம் முழுக்க உள்ள அப்பாவிகளை மிரட்டி, பல ஆயிரம் மில்லியன் டாலர்களைக் கொள்ளை அடிக்கவும் செய்திருக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம், மும்பை மீரா ரோடில் இயங்கி வந்த கால் சென்டர்.  இந்த நிறுவனமும் இந்தியா முழுக்க உள்ள இன்னும் சில மோசடி கால் சென்டர் நிறுவனங் களும் அமெரிக்காவைச் சேர்ந்த 15,000 பேரை ஏமாற்றி, சுமார் 300 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 210 கோடி ரூபாய்) `கற’ந்திருக்கின்றன.

 எப்படி இது சாத்தியம்?

இங்குள்ள கால் சென்டர்களில் வேலை செய்பவர்கள், தங்களுக்குத் தரப்பட்ட டேட்டாக் களில் இருந்து அமெரிக்காவில் வசித்து வருபவர் களை அழைத்து, தாங்கள் அமெரிக்காவில் உள்ள `இன்டர்னல் ரெவின்யூ சர்வீஸ்’ (ஐஆர்எஸ்) அலுவலகத்தில் இருந்து பேசுவதாகச் சொல்வார் கள். ‘கடந்த காலத்தில் நீங்கள் இந்தத் தவறைச் செய்திருக்கிறீர்கள்.  உங்கள் மீது கடுமை யான நடவடிக்கையை எடுக்கப் போகிறார்கள். அந்த நடவடிக்கையில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால், நான் சொல்கிறபடி செய்யுங்கள்’ என்று எடுத்த எடுப்பிலேயே நடுங்கிப் போகிற அளவுக்குப் பயமுறுத்திவிடுவார்கள். இந்த மிரட்டலுக்குப் பயந்துபோகிறவர்களை கொக்கி போட்டுத் தூக்கிவிடுவார்கள். 

சமீபத்தில் மேற்குறிப்பிடப்பட்ட கால்சென்டர் ஒன்றிலிருந்து பணியாளர் ஒருவர், அமெரிக்காவில் உள்ள இனாபென் தேசாய் என்கிற  பெண்மணிக்கு போன் செய்து, தான் ‘ஐஆர்எஸ்’ அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், இனாபென் தேசாய் 1995-ம் ஆண்டு அமெரிக்க பிரஜையாக குடியுரிமை பெற்றபோது அதற்கான கட்டணத்தைச் செலுத்தவில்லை என்றும், உடனடியாக கலிஃபோர்னியாவில் உள்ள ஜெனிஃபர் என்பவரின் வங்கிக் கணக்கில் 9,000 டாலர் கட்டவேண்டும் எனவும், அப்போதுதான் டிபார்ட்மென்ட்டின் நடவடிக்கையில் இருந்து தப்ப முடியும் எனவும் கூறினார். அதைக் கேட்டு நடுங்கிப் போனார் இனாபென் தேசாய். 9,000 டாலரை உடனே அந்தப் பெண்மணி  டெபாசிட் செய்தார். 

பொதுவாக, அமெரிக்கர்கள் சட்டத்துக்குப் பயப்படுகிறவர்கள். எனவே, கேட்ட தொகையை சிலர் தந்துவிடுவார்கள். இது மாதிரி பல ஆயிரம் பேர்களை மிரட்டி, பல மில்லியன் டாலர்களை மும்பை, அகமதாபாத், குருக்ராம் ஆகிய இடங்களில் உள்ள சில கால் சென்டர்கள் செய்திருப்பது தெரியவர, இப்போது அந்த நிறுவனங்கள் மூடப்பட்டு அதன் பணியாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். 

இந்தக் குற்றத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தில் கீழ்நிலை அல்லது மத்தியதர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நன்றாகப் பணம் சம்பாதித்து, ஆடம்பரமாக இருக்க நினைப்பவர்கள். இவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.10,000 முதல் 12,000 வரையிலும்,  ஊக்கத் தொகையாக கொள்ளை அடிக்கும் பணத்தில் போன்  செய்தவருக்கு ஒரு டாலருக்கு ஒரு ரூபாயும், அந்த `டீலை’ முடிப்பவருக்கு டாலருக்கு இரண்டு ரூபாயும் தரப்பட்டது. இந்தத் தொகை போதாது என்று பணியாளர்கள் நிறுவனங்களை விட்டு விலக ஆரம்பிக்கவும், சம்பளமும் ஊக்கத்தொகையும் உயர்த்தப்பட்டது.

இந்தக் குற்றத்தைச் செய்த ஒரு நிறுவனம் மும்பை, மீரா ரோடு என்கிற இடத்தில் ஏழு மாடிக் கட்டடத்தில் 700 பணியாளர்களைக் கொண்டு இயங்கி வந்திருக்கிறது. இதுதவிர, வேலை வாங்கித் தருகிறோம் எனச் சொல்லி குறிப்பிட்டத் தொகையை டெபாசிட் செய்யச் சொல்லிவிட்டு அதற்குப் பின் `கம்பி’ நீட்டும் ஆன்லைன் நிறுவனங்களும், இன்ஷூரன்ஸ் பாலிசி, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சார்ந்த வேலைகளுக்காக நியமிக்கப்பட்ட கால் சென்டர்கள் சிலவும் இந்த மாதிரியான ஏமாற்று வேலைகளைச் செய்து வருகின்றன.

நம்மூரில்கூட, ‘‘உங்கள் வங்கியிலிருந்து பேசுகிறோம். உங்கள் அக்கவுன்ட்டில் சில மாற்றங்களைச் செய்யப் போகிறோம். உங்கள் டெபிட் கார்டின் பின்நம்பரைச் சொல்லுங்கள்’’ என்று  கேட்பார்கள். இதை நம்பி, சில அப்பாவிகள் பின்நம்பரை தந்துவிட்டு, பிறகு புலம்பித் தவிப்பார்கள். நம்மிடமிருந்து சில ஆயிரங்களைக் கொள்ளை அடிக்கும் இந்த மோசடி கால் சென்டர்கள், அமெரிக்க மக்களிடம் பல ஆயிரம் டாலர்களைக் கொள்ளையடித்தபோது கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளன.

 இப்படிக் கொள்ளையடித்த நிறுவனங்களில் சில மட்டுமே பிடிபட்டிருக்கின்றன. இன்னும் எத்தனை மோசடி கால் சென்டர்கள் இந்தியா முழுக்க இயங்குகிறதோ?