Published:Updated:

கம்பெனி ஸ்கேன்

கம்பெனி ஸ்கேன்
பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி ஸ்கேன்

ஷைலி இன்ஜினீயரிங் பிளாஸ்டிக்ஸ் லிமிடெட்!(BSE SCRIP CODE: 501423)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

கம்பெனி ஸ்கேன்

ஷைலி இன்ஜினீயரிங் பிளாஸ்டிக்ஸ் லிமிடெட்!(BSE SCRIP CODE: 501423)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

Published:Updated:
கம்பெனி ஸ்கேன்
பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி ஸ்கேன்
கம்பெனி ஸ்கேன்

ரண்டு இன்ஜெக்‌ஷன் மோல்டிங் மெஷின்களுடன் 1987-ம் ஆண்டு குஜராத்தில் உள்ள ஹலால் என்னும் இடத்தில்    ஆரம்பிக்கப்பட்ட  நிறுவனம், ஷைலி  இன்ஜினீயரிங் பிளாஸ்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் (BSE SCRIP CODE: 501423 )  மும்பை பங்குச் சந்தையில் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனம் இது).

கம்பெனி ஸ்கேன்



 நிறுவனத்தின் வரலாறு

அந்த காலகட்டத்தில் பிரிசிஷன் இன்ஜினீயரிங் பிளாஸ்டிக் மோடல்டட் காம்பனென்ட்ஸ் (துல்லிய பொறியியல் பண்புகள் கொண்ட உதிரிப்பாகங்கள்) என்பதற்கான தேவை அதிகம் இருப்பதை உணர்ந்து, அதைத் தயாரிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது இந்த நிறுவனம்.

ஆரம்பகாலம் முதல் இன்று வரை  உயர்ந்த ரக    பாலிமர்களில் இருந்து பிளாஸ்டிக் காம்பனென்ட்களையே  தயாரித்து வருகிறது. 1994-ம் ஆண்டில் குஜராத்தில் ரானியா என்ற இடத்தில் இரண்டாவது உற்பத்தி வசதியைத் தொடங்கிய இந்த நிறுவனம், தற்போது இந்த இடத்தையே தன்னுடைய தலைமையகமாகக் கொண்டுள்ளது. படிப்படியான வளர்ச்சியைக் கண்ட இந்த நிறுவனம், தற்போது நூறு இன்ஜெக்‌ஷன் மோல்டிங் மெஷின்களுடன் ஐந்து இடங்களில் தொழிற்சாலைகளைக்கொண்டு செயல்பட்டு வருகிறது.

இடைப்பட்ட காலத்தில் வெறுமனே  பிளாஸ்டிக் இன்ஜெக்‌ஷன் மோல்டிங் மட்டுமே  செய்துவராமல் இன்ஜெக்‌ஷன் மோல்டிங் தவிர பேட் பிரின்டிங் (பிளாஸ்ட்டிக்குகள் மீது அச்சடித்தல்  - உதாரணம், கம்ப்யூட்டர் கீ போர்டுகளில் இருக்கும் எழுத்துகள் போன்றவை), வேக்குவம் மெட்டலைசிங் (பிளாஸ்டிக் பொருட்களின் மேல் மெட்டல் கோட்டிங்குகள் செய்வது),  ஹாட் பாயிலிங்,  அல்ட்ராசோனிக் வெல்டிங், வைரேஷன் வெல்டிங் மற்றும் அசெம்ப்ளி போன்றவற்றையும் செய்து தருகிறது இந்த நிறுவனம்.

கம்பெனி ஸ்கேன்

  நிறுவனம் எப்படி?

மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களுக்கான பேக்கேஜிங்குகள் (பிளாஸ்டிக் பாட்டில்கள்) தயாரிப்பதிலும் தற்சமயம் ஈடுபட்டுள்ளது இந்த நிறுவனம். விக்ஸ் (5 மற்றும் 10 கிராம்), பெப்சி அக்வாபினாவுக்கு (பயன்படுத்திய பின்னர் புதியது போன்று மோசடி செய்ய முடியாத மூடிகள்)  செய்த மூடிகள் (தற்சமயம் உலக அளவில் பயன்படுத்தப்படுகிறது), ஏபிபி ஸ்விட்ச் கியர்கள்,  சனோபி இன்சுலின் மருந்து செலுத்தும் பேனாக்கள் என பல்வேறு அன்றாட உபயோகப் பொருட்களிலும் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

தொடர் உற்பத்தி முறை முன்னேற்றம் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், தொடர்ந்து அதி நவீன டெக்னாலஜிகளைக் கண்டறிந்து உற்பத்தி செலவைக் குறைத்து சிறந்த தரத்துடன் உள்ள பொருட்களை தங்களுடைய வாடிக்கையாளர் களுக்கு வழங்குவதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. 

 தொழில் பிரிவுகள் சுவிட்ச் கியர்கள்

தெர்மோ பிளாஸ்டிக் மற்றும் தெர்மோசெட் பாலிமர்களினாலான இன்ஜினீயரிங் காம்பனென்ட்டுகளைத் தயாரிக்கும் இந்தியாவில் இருக்கும் மிகச் சில நிறுவனங்களில் ஒன்றாக இந்த நிறுவனம் திகழ்கிறது. 1990-களிலேயே தெர்மோசெட் இன்ஜெக்‌ஷன் மோல்டிங் டெக்னாலஜியை அறிமுகப்படுத்தியது இந்த நிறுவனம். தெர்மோசெட் இன்ஜெக்‌ஷன் முறையில் செய்யப்பட்ட உதிரிப்பாகங்கள் ஸ்விட்ச் கியர் உற்பத்தியில் பெரும் பங்களிப்பைத் தருகிறது. இந்தப் பிரிவில் ஏபிபி, சீமென்ஸ், ஷ்னைடர்,  எமர்சன் போன்ற நிறுவனங்கள் ஷைலியின்  வாடிக்கை யாளர்களாக இருக்கின்றன.

 வீட்டு உபயோகப் பொருட்கள்

கடந்த 18 வருடங்களாக அமெரிக்க நிறுவனமான ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்துக்கு க்னாப் அசெம்ப்ளிகள்  (knob – மின் சாதனங்களை இயக்க உதவும் குமிழ் வகை ஸ்விட்சுகள்) மற்றும்  மின்சார வீட்டு உபயோகச் சாதனங்களுக்கான உதிரிப் பாகங்கள் பலவற்றையும் உற்பத்தி செய்து சப்ளை செய்துவருகிறது இந்த நிறுவனம். 

கம்பெனி ஸ்கேன்

ஹெல்த் கேர்

ஹெல்த் கேர் நிறுவனங்களுக்குத் தேவையான  பிளாஸ்டிக் உதிரிபாகங்களையும் தயாரித்து வழங்கிவருகிறது. கடந்த பல ஆண்டுகளாக இந்தத் துறையில் சிறப்பாகச் செயல்பட்டுவரும் இந்த நிறுவனத்துக்கு  சனோபி,  சன்பார்மா,  வொக்ஹார்ட்,  ஜிஇ ஹெல்த்கேர், வெஸ்ட்ராக் (பழைய  எம்டபிள்யூவி), ஆகம்ஸ் ட்ரக்ஸ், க்ளியர் ஸ்பெக் – மெக்கீஸன் மற்றும் சைடஸ் கெடில்லா போன்ற முன்னணி மெடிக்கல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக இருப்பதே இதற்குச் சான்றாகும். மருந்துகளுக்கான ரவுண்ட்  பாட்டில்கள், கண் மருந்துகளுக்கான அழுத்தும் வகையிலான பாட்டில்கள் போன்றவற்றையும் செய்து சப்ளை வருகிறது இந்த நிறுவனம்.

 ஹோம், பெர்சனல் மற்றும் அழகு சாதனப் பொருட்கள்


1990-களின் ஆரம்பத்தில் இந்தத் துறையில் வாய்ப்புகள் அதிகரிக்கப்போகிறது என்பதை உணர்ந்த இந்த நிறுவனம், அதற்குத் தேவையான  க்ளீன் ரூம் இன்ஜெக்‌ஷன் மோல்டிங் வசதிகளையும், பேட் பிரின்ட்டிங், ஹாட் ஸ்டாம்ப்பிங், அல்ட்ரா சோனிக் வெல்டிங், பெயின்டிங் போன்ற வசதிகளை 1992-ம் ஆண்டில் நிறுவியது. இந்தத் துறை அடைந்த வேகமான வளர்ச்சியும் 2003-ம் ஆண்டில் உலக அளவிலான நிறுவனங்கள் இந்தியாவில் இந்த பேக்கேஜிங் பொருட்கள் மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதையும் கண்டறிந்ததால், இந்த வர்த்தகமும் நன்றாகவே நடக்க ஆரம்பித்தது. பி அண்ட் ஜி,  ஹெச்யுஎல், ஜி இ ஏ,  சன்பார்மா,  சைடஸ் கெடில்லா போன்ற நிறுவனங்கள் இந்தத் தொழில் பிரிவில் இந்த நிறு வனத்தின் வாடிக்கையாளர்களாக இருக்கின்றன. 

 ஆட்டோமேட்டிவ்

ஆட்டோமொபைல் துறையிலும் இந்த நிறுவனத்தின் உதிரிப்பாகங்கள் பயன்படுத்தப் படுகின்றன. பாலிமைட் இமைட் என்னும் மூலப்பொருளைக்கொண்டு உலோகங் களுக்குப் பதிலாக உபயோகப்படுத்தப்படும் வண்ணம் பல உதிரிப்பாகங்களை (TORLON & PEEK) உற்பத்தி செய்து சப்ளை செய்கிறது இந்த நிறுவனம்.  

கம்பெனி ஸ்கேன்

இண்டஸ்ட்ரியல் மற்றும் எலெக்ட்ரிகல் அப்ளிக்கேஷன்ஸ்

ஆரம்ப காலத்தில் தொழில்துறைக்கு தேவைப்படும் ப்ரிசிஷன் காம்பனென்ட் களைத் தயாரிப்பதற்காகவே இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இதில்  பவர் டூல்கள்,  இண்டஸ்ட்ரியல் மற்றும் ஆயில் பீல்டுகளில் உபயோகப்படுத்தப்படும் வால்வுகள், தொழிற்சாலை மற்றும் வீடுகளில் எல்இடி பல்புகள்  பொருத்தத் தேவையான ஃபிட்டிங்குகள், போட்டோ ஸ்டூடியோவுக்கான எக்யூப்மென்ட்கள், தொழிற்சாலைகளுக்கான ஃப்ளாஷ் லைட்டுகள், இண்டஸ்ட்ரீயல் எலெக்ட் ரானிக்ஸ் உபகரணங்கள் போன்றவற்றுக்குத் தேவையான ஹை ப்ரிசிஷன் உதிரிப்பாகங்களைத் தயாரித்து வழங்கிவருகிறது இந்த நிறுவனம்.

 ரிஸ்க்குகள் ஏதும் உண்டா?


மூலப்பொருட்களின் விலை ஏற்றம், அந்நிய செலாவணிகளின் மதிப்பு மாறுதல் போன்றவை இந்த நிறுவனத்தின் லாபத்தை ஓரளவு பாதிக்க வாய்ப்புள்ளது. மேலும், பொருளாதார மந்தநிலையும், அதிகரிக்கும் போட்டியும் சற்றே செயல்பாட்டைப் பாதிக்கலாம்.

ரிஸ்க்குகள் பல இருக்கிறபோதிலும் நீண்ட கால அனுபவமும் நல்ல  பல முன்னணி நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தின் பங்குகளை ஹைரிஸ்க் எடுக்கக்கூடிய  திறன்கொண்ட (Higher Risk Tolerance) வாசகர்கள் மட்டும் சந்தை ஏதாவது ஒரு காரணத்தினால்  நன்றாக இறங்கும்சமயத்தில் சரியானதொரு விலை இறக்கத்தை இந்தப் பங்கு சந்திக்கும்பட்சத்தில், மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாங்கி  (அன்றாடம் நடக்கும் சராசரி வியாபாரத்தின்  எண்ணிக்கை அளவு  மிகவும் குறைவு என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்) தங்களுடைய மூன்று முதல் ஐந்து ஆண்டு காலத்துக்கான  போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக்கொள்வதற்காக தொடர்ந்து ட்ராக் செய்துவரலாம். 

இந்தப் பங்கை  வாங்கியபின் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளைத் தொடர்ந்து ட்ராக் செய்ய முடியாத வாசகர்கள், இந்தப் பங்கைத் தவிர்ப்பது நல்லது.

This section is not a buy/sell recommendation at the current price levels, but only a compilation of information about the company and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analyst’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analysts) Regulations, 2014 with registration number INH200001384.

Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exist no conflict of interest that can bias his views in this report. The Analyst do not hold any share(s) in the company/ies discussed.

Disclosure of Interest Statement

1.Whether Research analyst’s or relatives’ have any financial interest in the subject company/ies and nature of such financial interest? – No; 2. Whether Research analyst or relatives have actual / beneficial ownership of 1% or more in securities of the subject company/ies at the end of the month immediately preceding the date of  the document? – No; 3. Whether the research analyst or his relatives has any other material conflict of interest? – No;  4. Whether research analyst has received any compensation from the subject company/ies in the past  12 months and nature of products / services for which such compensation is received? – No;  5. Whether the Research Analyst has received any compensation or any other benefits from the subject company/ies or third party in connection with the research report? – No; 6.Whether Research Analyst has served as an officer, director or employee of the subject company/ies? – No ;7. Whether the Research Analyst has been engaged in market making activity of the subject company/ies? – No.

General terms and conditions of the research report

For a detailed disclaimer and disclosure please visit http://nanayam.vikatan.com/index.php?aid=9985. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this report is available at (Select: Equity, Search: Scrip Code: 501423, Period: From – To ): http://www.bseindia.com/markets/equity/EQReports/StockPrcHistori.aspx?expandable=7&flag=0