Published:Updated:

வீட்டுக் கடனில் கொட்டிக்கிடக்கும் வரிச் சலுகைகள்!

வீட்டுக் கடனில் கொட்டிக்கிடக்கும்  வரிச் சலுகைகள்!
பிரீமியம் ஸ்டோரி
வீட்டுக் கடனில் கொட்டிக்கிடக்கும் வரிச் சலுகைகள்!

லதா ரகுநாதன் - ஆடிட்டர்

வீட்டுக் கடனில் கொட்டிக்கிடக்கும் வரிச் சலுகைகள்!

லதா ரகுநாதன் - ஆடிட்டர்

Published:Updated:
வீட்டுக் கடனில் கொட்டிக்கிடக்கும்  வரிச் சலுகைகள்!
பிரீமியம் ஸ்டோரி
வீட்டுக் கடனில் கொட்டிக்கிடக்கும் வரிச் சலுகைகள்!
வீட்டுக் கடனில் கொட்டிக்கிடக்கும்  வரிச் சலுகைகள்!

‘எனக்கென்று சொந்தமாக ஒரு வீடு...’ இது ஒவ்வொரு சராசரி இந்தியரின் கனவு. இந்தக் கனவை நமக்கு உண்மையாக்குவது வங்கி நமக்குத் தரும் வீட்டுக் கடன்களே. இப்போது வீடு மற்றும் மனைகளின் விலை மிகவும் குறைவாக உள்ளது. வீட்டுக் கடன் வட்டியும் கணிசமாகக் குறைந்திருக்கிறது. ஆகவே, வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்க இது மிகச் சரியான நேரம்.  

வங்கிகளிடமிருந்து கடன் வாங்குவதன் மூலம் உங்கள் சொந்த வீட்டுக்கான கனவு நிறைவேறுவதுடன், அந்தக் கடனில் ஒரு பகுதியை மத்திய அரசாங்கமே கட்டுகிறது என்றால் நம்புவீர்களா? ஆம், அரசு தரும் வரிச் சலுகைகள் மூலம் அரசாங்கமே நம் கடனில் ஒரு பகுதியை திரும்பக் கட்டிவிடுகிறது.

வீட்டுக் கடனில் மாதத் தவணையாகத் திரும்பக் கட்டும் அசல் தொகைக்கும் வட்டிக்கும் வரிச் சலுகை உண்டு என்பது மிகப் பெரிய விஷயம். நாம் திரும்பக் கட்டும் அசலில் 80சி பிரிவின்கீழ் ஒரு நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகை கிடைக்கும். இந்த வரிச் சலுகையில் திரும்பக் கட்டும் வட்டியில் 24 பிரிவின்கீழ் ஒரு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வரிச் சலுகை கிடைக்கும்.

வீட்டுக் கடனில் கொட்டிக்கிடக்கும்  வரிச் சலுகைகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!



இவை தவிர, வீட்டுக் கடன் வாங்குவதன் மூலம் வேறு என்னென்ன வரிச் சலுகைகள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

   80 இஇ பிரிவு

இந்தப் பிரிவின் கீழ் முதன்முறையாக வீடு வாங்குபவருக்குக் கூடுதலாக வட்டி வரிச் சலுகை ரூபாய் 50,000. இது மேற்கூறிய 24 பிரிவின் ரூ.2 லட்சம் தவிர்த்துக் கூடுதலாக சலுகை கிடைக்கும்.

   80சி பிரிவு

இந்தப் பிரிவின்கீழ் நிபந்தனைக்கு உட்பட்டு ரூபாய் 1.5 லட்சம் வரையில் திரும்பக்கட்டும் அசல் தொகையில் வரி விலக்கு இருக்கிறது. இந்த வரிச் சலுகை வீட்டில் குடியிருந்தாலும், வீட்டை வாடகைக்கு விட்டிருந்தாலும் கிடைக்கும்.

இந்த வரிச் சலுகை, புது வீடு வாங்கினால் அல்லது கட்டினால் மட்டுமே அனுமதிக்கப்படும். வீட்டைப் பழுது பார்த்தல் போன்றவற்றுக்கு கடன் வாங்கினால், இந்தப் பிரிவின் கீழ் வரி விலக்கு கிடைக்காது.

இந்த வரி விலக்கு, கட்டப்பட்ட மாதத் தவணைக்கு (இஎம்ஐ) குறிப்பாக, கட்டப்பட்ட அசலுக்கு  மட்டும்தான். கணக்கீட்டின் (அக்ரூட்) அடிப்படையில் காட்டப்பட்ட தொகை, வரி விலக்குக்குத் தகுதி பெறாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும், கட்டுமானம் முழுமையாக முடியும்முன் கட்டப்படும் வீட்டுக் கடன் அசல் தொகைக்கு வரி விலக்கு கிடையாது.  

   பரிசீலனைக் கட்டணத்துக்கும் வரிச் சலுகை

வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பரிசீலனைக் கட்டணம் (பிராசஸிங் சார்ஜ்) என்று கடன் தொகையில் 0.5 - 1% அல்லது ரூ.5,000 / ரூ.10,000 என்பதுபோல் ஒரு தொகை வசூலிக்கப்படும். இந்தத் தொகையும் நாம் வரி விலக்குக்காக 80சி பிரிவின் கீழ் சேர்த்துக் கொள்ளலாம். இதுவும் வீட்டுக் கடன் வாங்கிய பலருக்குத் தெரிவதில்லை.

   பத்திரப்பதிவுக்காக செலவிட்ட தொகை

80சி பிரிவின் கீழ், நாம் செலுத்திய பத்திரப் பதிவுக்காகச் செலவிட்ட முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்துக்கும் வரிச் சலுகை கிடைக்கும். அது மட்டுமல்ல, வீட்டுக் கடனுடன் எடுக்கப்படும் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிக்குக் கட்டும் பிரீமியத்துக்கும் வரி விலக்கு உண்டு. ஆனால், இவை எல்லாம் சேர்த்து, நிதி ஆண்டில் 80சி பிரிவின் கீழ் அதிகபட்சமாக ரூபாய் 1.50 லட்சத்துக்குதான் வரிச் சலுகை கிடைக்கும். 

வீட்டுக் கடனில் கொட்டிக்கிடக்கும்  வரிச் சலுகைகள்!

   வீட்டை விற்கும்போது...

வீட்டுக் கடனில் வாங்கப்பட்ட வீட்டை ஐந்து வருடங்களுக்குள் விற்க நேரிட்டால், எந்த வருடத்தில் வீடு விற்கப்படுகிறதோ, அந்த வருடத்தில் இதுவரை 80சி பிரிவின் கீழ் தரப்பட்ட வரிச் சலுகைத் தொகை, வருமானமாகக் கருதப்பட்டு, வீட்டுக் கடன் வாங்கியவரின் வருமானத்துடன் சேர்க்கப்படும். அதற்கும் சேர்த்து அந்த ஆண்டு வருமான வரி கட்ட வேண்டி வரும்.

இந்த ஐந்து வருடக் கணக்கின் ஆரம்ப வருடம் என்பது வீடு வாங்கிய வருடத்திலிருந்தோ அல்லது கடன் வாங்கிய தேதியிலிருந்தோ என்று சொல்லப் பட்டிருக்கிறது. இதற்கான விதிமுறைகள் தெளிவாக இல்லாததால், வருமான வரி விலக்கு கோரிக்கைகள் நிராகரிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. இதுவரையில் இதன் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்குகளில் சொல்லப்படும் தீர்ப்பின்வழி நாம் செயல்பட வேண்டும். இதற்கு தனியாக வருமான வரித் துறை நோட்டீஸ் கொடுக்க வாய்ப்பிருக்கிறது.

   இஎம்ஐ-யைக் கட்டத் தவறினால்..?

வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ-யைக் கட்டத் தவறினால், அந்தத் தொகைக்கு வரிச் சலுகை கிடையாது. காரணம், மேலே சொல்லப்பட்டது போல், இந்தப் பிரிவில் செலுத்தப்பட்ட அசல் கட்டணத்துக்கு மட்டும்தான் விலக்கு. ஆனால், அடுத்த வருடம் அல்லது ஏதோ ஒரு வருடம் விடுபட்ட தவணையும் சேர்த்துச் செலுத்தப்பட்டால், அதிகபட்ச உச்ச வரம்புக்கு (நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம்) உட்பட்டு, அந்த வருட இஎம்ஐ-யுடன், இந்தத் தவணைத் தொகையையும் சேர்த்துக்கொள்ளலாம்.

   24 பிரிவு

வீட்டுக் கடன் வாங்கியவர் வீட்டில் குடியிருந்தால், திரும்பக் கட்டும் வட்டியில் ஒரு நிதி ஆண்டில் ரூ.2 லட்சம் வரை இந்தப் பிரிவின் கீழ் வரிச் சலுகை பெறலாம். வீடு வாடகைக்கு விடப்பட்டிருந்தால், வட்டிக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைக்கு வரம்பு கிடையாது. வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனம் அளிக்கும் சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருக்கும் வட்டித் தொகை முழுவதுமாக வரி விலக்காகக் கழிக்கப் படும். 2017-18-ம் நிதி அறிக்கையில் இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வீட்டுக் கடன் வட்டிக்கான வரிச் சலுகை வருடத்துக்கு ரூ.2 லட்சம் வரைதான் அனுமதிக்கப்படும். இதற்கு மேல் உள்ள வாடகை அந்த வருடத்தில் வருமானத்தில் சேர்க்கப்பட்டு, அதன் மேல் வரி விதிக்கப்படும். ஆனால், ரூ.2 லட்சத்துக்கு மேலாக கட்டப்பட்ட வட்டி அடுத்த எட்டு வருடங்களுக்கு கொண்டுசெல்ல (கேரி ஃபார்வேர்ட்) அனுமதிக்கப்படும்.

   கட்டுமானக் காலத்தில்...

பெரும்பாலான பில்டர்கள் / புரமோட்டர்கள் வீடு கட்டி முடியும் வரை எந்த மாதத் தவணையும் கட்ட வேண்டாம். குறிப்பாக, வட்டி கட்ட வேண்டாம். வீட்டை ஒப்படைக்கும்போது, ஒட்டுமொத்தமாகக் கட்டிக்கொள்ளலாம் என வீடு வாங்குபவர்களிடம் சொல்கிறார்கள். இப்படிக் கட்டுமானக் காலத்தில் வீட்டுக் கடன் மாதத் தவணையைக் கட்டவில்லை என்றால், மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு உங்களுக்குக் கிடைத்திருக்கவேண்டிய வட்டியில் வரிச் சலுகைக்கான ரூபாய் 2 லட்சத்தை (ஆண்டுக்கு) இழந்திருப்பீர்கள்.

தவிர, இஎம்ஐ தொகையைச் சேர்த்து குறிப்பிட்ட ஒரே வருடத்தில் மொத்தமாகக் கட்டும்போது, அந்த ஆண்டில் அதற்கு அதிகபட்ச வட்டி விலக்காக ரூபாய் 2 லட்சம்தான் கிடைக்கும். வீடு கட்டி முடிந்ததும், இதுவரையில் ஆன வீட்டுக் கடன் வட்டியை ஐந்தாகப் பிரித்து, அடுத்த ஐந்து வருடங்களில் கட்டி, வரிச் சலுகை பெறலாம். இந்த வட்டிக்கான சலுகையும் சேர்த்து, ரூ.2 லட்சம்தான் அந்த ஆண்டில் வரி விலக்குப் பெற முடியும். ஆகவே, இங்கு வரிச் சலுகையைப் பெறுவதில் நஷ்டம் ஏற்படும். அதாவது, அந்த குறிப்பிட்ட ஆண்டில் இஎம்ஐ-யில் வட்டி மட்டுமே ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேல் கட்டி இருக்கும்பட்சத்தில் முந்தைய ஐந்தாண்டுகளுக்குக் கட்டிய தவணையில் உள்ள வட்டிக்கு வரிச் சலுகை பெற முடியாது. 

இந்த விதிமுறையின் கீழ் வீட்டுக் கடன் மீதான வட்டி அந்த வருடம் கட்டியிருக்கத் தேவையில்லை. அதாவது, ஏதோ ஒரு வருடத்தில் நீங்கள் மூன்று, நான்கு, ஏன் கணக்கில்லாத இஎம்ஐ கட்டத் தவறினால்கூட, அந்த இஎம்ஐ-யில் வட்டிக்கான வரிச் சலுகையை அந்த வருடமே வரி விலக்காக கோரிப்பெறலாம். அதே நேரத்தில், இஎம்ஐ-களில் உள்ள அசல் கட்டப்பட்டிருக்க வேண்டும். வருமான வரிச் சலுகைக்காக, வட்டித் தொகை  மட்டும் அக்ரூவல் அடிப்படையில் கணக்கிடலாம்.  

   வீட்டுக் கடன் கட்ட முடியாமல் போனால்...

வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கியவர், அந்த வீட்டில் குடியிருக்க முடியாமல் போனால், அவருக்கான வட்டி வரிச் சலுகை ரூ.2 லட்சம் மட்டுமே. வாடகைக்கு விடப்பட்ட காரணத்தால் கட்டிய முழு வட்டித் தொகைக்கும் முழுமையாக வரி விலக்கு கோர முடியாது.

   வீட்டைப் பழுது பார்க்க...

ஏற்கெனவே கட்டிய வீட்டைப் பழுது பார்க்க, புதுப்பிக்க, இடித்துக்கட்ட என வீட்டு மேம்பாட்டுக்கடன் வாங்கி இருந்தால், இந்த வேலைகள் முழுமை அடைவதற்குமுன் கட்டப்படும் இஎம்ஐ-யில் வட்டிக்கு வரி விலக்கு கிடையாது. வங்கிகளிடமோ, வீட்டுக் கடன் வசதி நிறுவனங்களிடமோ கடன் வாங்கி இருந்தால் மட்டும்தான் திரும்பக்கட்டும் வட்டியில் வரிச் சலுகை கிடைக்கும்

என்பதில்லை; தெரிந்தவர்கள், உறவினர்கள், தனிப்பட்ட நபர்களிடம் வீடு கட்ட கடன் வாங்கி, வட்டி கட்டிவந்தாலும், வட்டிக்கு வரிச் சலுகை பெறலாம். இப்படி வரிச் சலுகை பெற வங்கிக் காசோலை மூலம் கடன்  பெற்றிருப்பதோடு, கடனைக் காசோலை மூலம்தான் திரும்பச் செலுத்தியிருக்க வேண்டும். அப்போதுதான் வருமான வரி அதிகாரிகள் ஏற்றுக் கொள்வார்கள்.

   தண்ணீர் வரி, சொத்து வரி

குறிப்பிட்ட வருடத்தில் வாடகைக்கு விட முடியாமல் போயிருக்கும். இதனால் அந்த வருடம் கட்டிய தண்ணீர் வரி, சொத்து வரி ஆகிய கட்டணங்களைக் கணக்கில் காட்டி, மொத்த வருமானத்தில் கழிக்க முடியாது. இந்தக் கட்டணங்களை அடுத்த எட்டு வருடங் களுக்கு எடுத்துச் சென்று, வீட்டுச் சொத்து வருமானத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம். 

இனியாவது இவற்றையெல்லாம் மனதில்கொண்டு, வீட்டுக் கடன் மூலம் சொந்த வீடு வாங்குங்களேன்!

கூடுதலாக ரூ.50,000 கடன் பெற..!

80இஇ பிரிவு

இந்த சலுகை, 24 விதிமுறையின் கீழ் உள்ள வட்டிச் சலுகை உச்ச வரம்பான ரூ.2 லட்சத்துடன், கூடுதலாக ரூ.50,000ஆக மொத்தம் ரூ.2.5 லட்சம் வரிச் சலுகை கிடைக்கும். இந்த வட்டிக்கான வரிச் சலுகை முதன்முறையாக வீடு வாங்குவோருக்குத்தான். இதில் அடங்கி உள்ள சில நிபந்தனைகள்...

1. கடன் ரூ.35 லட்சத்துக்குக் கீழாகவும், வீட்டின் விலை ரூ.50 லட்சத்துக்குக் கீழாகவும் இருக்க வேண்டும்.

2. வீட்டுக் கடன் 2016-17-ம் நிதி ஆண்டில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

3. கடன் செலுத்தவேண்டிய காலம் வரை இந்த வட்டிச் சலுகை கிடைக்கும்.