புத்தகத்தின் பெயர் : சிம்ப்ளி பிரில்லியன்ட் (Simply Brilliant)

ஆசிரியர் : வில்லியம் சி டெய்லர்

பதிப்பாளர் : Penguin UK

தலைசிறந்த நிறுவனங்கள் மிகச் சாதாரண விஷயங்களைக்கூட மிகச் சிறப்பாக எப்படிச் செய்கின்றன என்பது நம் எல்லோருக்கும் எழும் பொதுவான கேள்வி. வில்லியம் சி டெய்லர் எழுதிய ‘சிம்ப்ளி பிரில்லியன்ட்’ என்னும் புத்தகம் அதற்கான பதிலை அருமையாகச் சொல்கிறது.

யாருக்குத்தான் மிகப் பெரிய வெற்றி அடையும் நிறுவனத்தில் வேலை பார்க்கவேண்டும் என்கிற ஆசை இருக்காது. புதியதாக ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க, வெற்றிகரமாக ஒரு நிறுவனத்தை நடத்த அல்லது ஒரு திறமையான தலைமையாகச் செயல்பட என எல்லாவற்றுக்கும் எல்லோருக் கும் ஆசைதான். நிறைய வேலைகளை உருவாக்கி, எக்கச்சக்கச் சொத்துபத்துகளைச் சேர்க்கும் வகையில் செயல்படும் ஒரு நிறுவனத்தை உருவாக்க அனைவருக்குமே ஆசை இருக்கிறது.

இன்றைக்கு வெற்றி என்றால் என்ன? டிஸ்ரப்டிவ் டெக்னாலஜி (Distruptive technology), வைரல் ஆப்ஸ் (Viral apps) என பல்வேறு புது தலைமுறைத் தொழில்களே வெற்றிக்கு அடையாளமாகக் காட்டப்படுகின்றன. புதிய பொருளாதாரத்தின் அடையாளங்களான இந்தத் தொழில்களே இன்றைக்கு வெற்றிக்கு அடையாளமாக எல்லோர் மனதிலும் நிலைத்திருக்கின்றன.

அதென்ன, வெற்றி என்றால் தொழில்நுட்ப நிறுவனத்தை மட்டுமே ஏன் குறிப்பிடுகிறோம், அல்லது ஒப்பீடு செய்கிறோம் என்கிற கேள்வி வரத்தான் செய்கிறது இல்லையா? தொழில்நுட்பம் அல்லாத பல பழம்பெரும் நிறுவனங்களில் இன்றைக்குச் செயல்பாடுகள் குறித்த கேள்விகள் கேட்கப்படும்போது, ‘‘சார், இது பழைய காலத்து கம்பெனி. நீங்க நினைக்கிற மாதிரி டெக்னாலஜி கம்பெனி இல்லை; பெர்ஃபாமென்ஸில் பொளந்து கட்டுவதற்கு!’’ என்று சட்டென சொல்லி விடுகின்றனர். அதாவது, ‘‘இதெல்லாம் ‘ஓல்டு ஜெனரேஷன்’ தொழில்கள். ரொம்பவும் எதிர்பார்ப்பை வைத்துக்கொண்டு எகிறக் கூடாது’’ என்பதை நாசூக்காகச் சொல்லி விடுகின்றனர். இது சரியா?

பிசினஸ் செய்வதில் (தொழிலில்) ‘ஓல்டு ஜெனரேஷன்’, ‘நியூ ஜெனரேஷன்’ என்றெல்லாம் பாகுபாடு இருக்கிறதா? பொருளோ, சேவையோ சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பது மட்டுமே எண்ணமாக இருக்கிறதே தவிர, இதெல்லாம் பழைய தொழில்கள்; இதில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற சட்டதிட்டமெல்லாம் இருக்கிறதா என்றால் அப்படி எதுவும் கிடையாது.

வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை, அவர்கள் ‘ஓல்டு ஜெனரேஷன்’ மற்றும் ‘நியூ ஜெனரேஷன்’ (டெக்னாலஜி) என்கிற இரண்டு தொழில்களையுமே ஒரே நேரத்தில் எதிர்கொள்கிறார்கள். புதிய தலைமுறைத் தொழில்கள் சிறப்பான மற்றும் முழுமையான சேவைகளையும், தயாரிப்புகளையும் வழங்கும் போது அதேமாதிரியான எதிர்பார்ப்பை அவர் ‘ஓல்டு ஜெனரேஷன்’ தொழில்களில் இருந்தும் எதிர்பார்க்க ஆரம்பிக்கிறார் என்பதே நிதர்சனமான விஷயம்.

இன்றைக்கும் பல நிறுவனங்கள் முதலாளி, ஷேர் ஹோல்டர், வாடிக்கையாளர் என யாருடைய எதிர்பார்ப்பையும் நிறைவேற்றாமல் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டே இருக்கின்றன. ஒன்றும் பெரிதாக சாதிக்காவிட்டாலும், கம்பெனியும் தொடர்ந்து தொழிலில் இருக்கிறது. அதில் இருக்கும் பணியாளர்களும் தொடர்ந்து ஒரு நிறைவான பணியைச் செய்யாமலேகூட வேலையை சூப்பராக தக்கவைத்துக்கொள்கின்றனர். அதாவது, ‘இந்தத் தொழில் இப்படித்தான். இதில் இவ்வளவுதான் செய்யமுடியும்’ என்பதை அந்த நிறுவனத்தில் உள்ள சில எக்ஸிகியூட்டிவ்களும் நம்பி, அதை ஆணித்தரமாக மற்றவர்களையும் நம்பவைத்து விடுகின்றனர்.

இது ஏன் நிகழ்கிறது? பழைய தொழிலை யாரும் பெரிய அளவில் கண்டுகொள்வதில்லை. அதில் புதிதாக யோசிப்பதற்கு ஒன்றும் இல்லை. சொல்லப் போனால், புதிதாக யோசிக்க வேண்டியதே இல்லை. புதிய சிந்தனையுடன் வேலைக்கு புதிதாக சேர்கிறவர்களையும் தம் திறமை அனைத்தையும் உபயோகித்து மழுங்கடித்துவிடுகிறார்கள் இந்த எக்ஸிகியூட்டிவ்கள். அப்படியும் யாராவது ஒருவரின் உந்துதலில் புதுமையான தொழில் நுட்பத்தைக் கொண்டுவர நினைத்தால், ‘இந்தத் தொழில் இருக்கும் நிலைக்கு அதெல்லாம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை’ என்று சொல்லி, அந்த நினைப்பே மறுபடியும் வராதபடிக்குப் பேசி, புதுமைச் சிந்தனைக்கு நிரந்தர முட்டுக்கட்டைப் போட்டுவிடுவார்கள்.

‘செய்யும் தொழிலில் / செயல்முறையில் முன்னேற்றம் இல்லாவிட்டால் எப்படி? என்று இதுமாதிரியானவர்களை முதலாளியோ அல்லது நிர்வாக உயர் அதிகாரியோ கேள்வி கேட்பார்களே என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயமாக கேட்பார்கள். எங்கே இருந்தோம், எங்கே வந்திருக்கிறோம் என்கிற வித்தியாசத்தைக் காண்பித்து, உயரதிகாரி களின் வாயை இந்த எக்ஸிக்யூட்டிவ்கள் சுலபமாக அடைத்துவிடுவார்கள். செயல்பாட்டில் இடைவெளி என்பது எங்கே இருந்தோம், எங்கே போயிருக்கவேண்டும் என்பதில்தான் இருக்கிறதே தவிர, எங்கே இருந்தோம், எங்கே வந்தடைந்திருக்கி றோம் என்பதில் இல்லை.

அதாவது, மொத்த நிறுவனமும் செயல்பாட்டில் இந்த இடத்தில் இருந்து, எந்த இடத்துக்கு நகர்ந்துள்ளது. இதில் இந்தந்த நபர்கள் நகரவே இல்லை என்பது ‘பெர்ஃபாமென்ஸ் கேப்’ இல்லை. மொத்த நிறுவனமும் எந்த இடத்தில் இருந்து, எந்த இடத்துக்குப் போயிருக்கவேண்டும். அது எந்த இடத்துக்கு வந்து சேர்ந்துள்ளது என்ற இரண்டுக்கும் இடையே இருப்பதே ‘ஃபெர்பாமென்ஸ் கேப்’ ஆகும்.

இதுபோன்ற அளவீட்டுக் குறைபாடுகளுடன் செயல்படும் நிறுவனங்கள் எப்படியோ திக்கித் திணறி தன்னை காப்பாற்றிக்கொள்ளுமே தவிர, பெரிய சாதனை எதுவும் செய்திடாது. இது போன்ற ஏனோதானோ என்று செயல்படும் நிறுவனங்கள் நஷ்டமடைந்து அழிந்து போய்விடுவ தில்லை. ஆனால், அந்த நிறுவனத்தில் இருக்கும் அனைவருக்குமே போரடிக்க ஆரம்பித்துவிடும் (சில சமயம் வாடிக்கையாளர்கள்கூட, ‘ஐயோ அந்த நிறுவனமா? இருந்தாலும் வேற வழியில்லை’ என்று புலம்புவதை நாம் பார்த்திருப்போம்). இப்படிப் போரடிக்க ஆரம்பித்த நிறுவனங்கள் பெரிய வெற்றியை அடைய வாய்ப்பே இல்லாது போகிறது.

இந்தப் புத்தகம் சொல்வதெல்லாம், இது போன்ற நிறுவனமாக மாறாமல் இருக்கவும், வெறுமனே பிழைத்திருக்கவேண்டும் என்கிற எண்ணத்தை மட்டும் கொண்டிருக்காமல் செழித்திருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் செயலாற்றுவதற்கான வழிமுறைகளைத்தான்.

தனிமனிதனோ, நிறுவனமோ எதிர்காலம் குறித்த நன்நம்பிக்கை இல்லை என்றால், தேவைக்கேற்ற எதிர்காலத்தை செதுக்கிக் கொள்ளவே முடியாது. நல்ல எதிர்காலம் எனக்கு வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களும் அப்படிப்பட்ட எதிர்காலம் இருக்கிறது என்று அடிப்படையில் நம்புபவர்களும் மட்டுமே அவ்வாறு செதுக்கிக்கொள்ள முடியும். இப்படிப்பட்ட நிலையை அடைய நிறுவனத்தில் இருக்கும் அனைவருமே ஒரு வாசகத்தினை மனதில் கொள்ளவேண்டும். ‘செய்ய முடிந்தது என்பது மிகக் குறைவானதே. செய்யக்கூடியது என்பது எக்கச்சக்கமானது’ என்ற இந்த வாசகமே நிதர்சனமான உண்மை என்பதைப் புரிந்துகொண்டு செயல்படவேண்டும்.

‘சிறந்த நிறுவனமாக இருக்கவேண்டும் என்பதே எங்களுடைய குறிக்கோள்’ என்று சொல்லித் திரியும் காலமெல்லாம் மலையேறிவிட்டது. சூப்பர் லாபம் பார்க்கவேண்டுமா? நாங்கள் செய்யும் தொழிலில் இருக்கும் ஒரே தலைசிறந்த நிறுவனம் நாங்களே என்று சொல்லும் அளவுக்குச் செயல்பட்டால் மட்டுமே அது சாத்தியமாகும். இன்றையச் சூழலில் சிறந்த ‘டீல்’களைத் தரும் நிறுவனமாக இருந்தால் மட்டுமே ஒரே தலைசிறந்த நிறுவனமாகத் திகழ முடிவதில்லை. யாராலும் நினைக்கமுடியாத, நிறைவேற்ற முடியாத யோசனைகளைக் கொண்டிருந்தால் மட்டுமே ஒரு நிறுவனம் இதுபோன்றதொரு நிலையைச் சென்றடைய முடியும்.

தலைசிறந்த என்பது ஒரு சாதாரண விஷயம் இல்லை. நிறுவனத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் செய்யும் காரியங்கள் அனைத்தும் அதில் பங்கெடுக்கிறது. ஒவ்வொருவரின் செயலும் நம்முடைய பிராண்டை வலுப்படுத்தவோ அல்லது வழுவிழக்கவோ செய்கிறது. பணியாளர் ஒருவர் சிரிக்க மறுத்தால் அல்லது மறந்தால், உற்சாகமின்றி இருந்தால், நிறுவனத்தில் இருக்கும் ஒரு பலகை கோணலாக இருந்தால் என பல சின்னச் சின்ன விஷயங்களும் நம்மைப் பற்றிய புரிதலை மற்றவர்களுக்கு வேறு மாதிரியாகக் காட்டிவிட வாய்ப்புள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்கிறார் ஆசிரியர்.

கஷ்ட காலத்தில்கூட கூலாக தப்பித்துக் கொள்ளும் நிறுவனங்கள் எவை என ஆராய்ந்து பார்த்தால், ஏனைய நிறுவனங்களைவிடச் சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள் அந்தப் பட்டியலில் இருப்பது இல்லை. நல்ல காலத்தில் போட்டியாளர்களை வீழ்த்தி, உச்சத்துக்குச் செல்லுமளவுக்கான தனித்துவம் கொண்டிருக்கும் நிறுவனங்களே அந்தப் பட்டியலில் இருக்கின்றன.

தனித்துவம் என்பது அவ்வளவு சுலபமாக அடைந்துவிட முடிகிற விஷயமா என்ன? போட்டியாளர்கள் செய்வது கண்முன்னே தெரியும். அதைவிட சற்றுச் சிறப்பாகச் செய்வது சுலபத்தில் சாத்தியமான விஷயம். ஆனால், தனித்துவம் என்பதைச் சென்றடைய, இல்லாத ஒரு விஷயத்தைக் கற்பனை செய்ய வேண்டும். கற்பனையை சாத்தியம் என்று நம்பவேண்டும். பின்னால் அதை சென்றடைவதற்கான திட்டங்களைத் தீட்டவேண்டும்.

கடைசியாக நீங்கள் புதியதாக ஒரு விஷயத்தை எப்போது செய்தீர்கள் என்ற கேள்விக்கு உங்கள் பதில் என்னவாக இருக்கும்? தனிநபரானாலும் சரி, நிறுவனமானாலும் சரி, புதுப்புது விஷயங்களை அடிக்கடி செய்தால் மட்டுமே நீங்கள் இளமையாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இளமையே வெற்றிக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. ‘எனக்கு தெரியவில்லை. இப்போதுதான் கற்றுக் கொண்டேன்’ என்ற இரண்டு வார்த்தைகள் தொடர்ந்து ஒலிக்கும் நிறுவனமே சாதனை புரியத் தயாரான நிறுவனமாக இருக்கிறது.

உங்கள் தயாரிப்புகளுக்கான மார்க்கெட்டில் நீங்கள் தலைசிறந்த நிறுவனமாக இருக்கவேண்டும் என்றால், நீங்கள் உங்கள் பணியிடத்தில் தலை சிறந்த விஷயங்களைச் செய்யவேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள் என்று முடிக்கிறார் ஆசிரியர்.அனைத்துப் பணியாளர்களும், தொழிலதிபர்களும் படிக்கவேண்டிய புத்தகம் இது!

- நாணயம் டீம்

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)