Published:Updated:

திருப்பூர் ஜவுளித் தொழில்... மாற்றாந்தாய் பிள்ளையைப் போலத்தான் பார்க்கிறார்கள்!

திருப்பூர் ஜவுளித் தொழில்... மாற்றாந்தாய் பிள்ளையைப் போலத்தான் பார்க்கிறார்கள்!
பிரீமியம் ஸ்டோரி
திருப்பூர் ஜவுளித் தொழில்... மாற்றாந்தாய் பிள்ளையைப் போலத்தான் பார்க்கிறார்கள்!

ஏற்றுமதியாளர் சங்கம் பளீர்தி.ஜெயப்பிரகாஷ்

திருப்பூர் ஜவுளித் தொழில்... மாற்றாந்தாய் பிள்ளையைப் போலத்தான் பார்க்கிறார்கள்!

ஏற்றுமதியாளர் சங்கம் பளீர்தி.ஜெயப்பிரகாஷ்

Published:Updated:
திருப்பூர் ஜவுளித் தொழில்... மாற்றாந்தாய் பிள்ளையைப் போலத்தான் பார்க்கிறார்கள்!
பிரீமியம் ஸ்டோரி
திருப்பூர் ஜவுளித் தொழில்... மாற்றாந்தாய் பிள்ளையைப் போலத்தான் பார்க்கிறார்கள்!
திருப்பூர் ஜவுளித் தொழில்... மாற்றாந்தாய் பிள்ளையைப் போலத்தான் பார்க்கிறார்கள்!

வ்வப்போது சில சிக்கல்கள் வந்தாலும், ஏற்றுமதித் தொழிலில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டுவருகிறது இந்தியாவின் ‘டாலர் சிட்டி’ என்ற பெருமையைப் பெற்ற திருப்பூர். தற்போது பின்னலாடைத் துறையின் வளர்ச்சி எப்படி இருக்கிறது..? என  திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் புதிய தலைவராக சில மாதங்களுக்கு முன் பதவியேற்ற ராஜா சண்முகத்திடம் கேட்டோம்.

திருப்பூர் தொழில் துறையின் தற்போதைய நிலை எப்படி இருக்கிறது?

‘‘மத்திய அரசின் சமீபத்திய பொருளாதார நடவடிக்கை திருப்பூர் பின்னலாடைத் துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமாளிக்கவே முடியாத அளவுக்கு கஷ்டப்படு கிறார்கள். அதிக அளவிலான தொழிலாளர்கள் இயங்கும் இந்தத் துறையில், தொழிலாளர்களுக்கு வாரச் சம்பளம் என்கிற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பணப் பற்றாக்குறை ஏற்பட்டு, தொழிலாளர்களுக்கு நான்கு வாரங்கள் வரை சம்பளம் கொடுக்க முடியாமல் போனது. ஏற்றுமதி நிறுவனங்களைவிட, உள்நாட்டுப் பின்னலாடை  உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டு, பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளானது. ஏற்றுமதியில் வர்த்தக பாதிப்புகள் பெரிய அளவில் ஏற்படவில்லை என்றாலும், தொழிலாளர்கள் நாள் முழுவதும் வங்கிகளுக்குச் சென்றுவிட்டதால், உற்பத்தி பாதிப்படைந்தது.’’

கடந்த காலத்தைக் காட்டிலும் இந்த ஆண்டில் தொழில் நெருக்கடிகள் அதிகரித்திருப்பதாகச் சொல்கிறார்களே?


‘‘வருடா வருடம் இந்தத் தொழில், நெருக்கடியை நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறது. உலக நாடுகளோடு நாம் தொடர்ந்து போட்டிபோட வேண்டியிருக்கிறது. வங்காளதேசம், இலங்கை, வியட்நாம், மியான்மர், கம்போடியா, சீனா ஆகிய நாடுகள் நமக்குக் கடுமையான போட்டியைத் தருகின்றன. இதில் நமக்கு இருக்கும் மிகப் பெரிய பலமே, மற்ற நாடுகளைக் காட்டிலும் இங்கு தொழில் வல்லமையும், தொழிலாளர்களின் எண்ணிக்கையும், பஞ்சு உற்பத்தியும் அதிகம். இந்த மூன்றையும் ஒருங்கிணைத்துச் சென்றாலே சீரான உற்பத்தியை நிலைநிறுத்தி, வர்த்தகத்தை சிறப்பாகச் செயல்படுத்தலாம். இதுவரையிலும் அரசின் எந்த உதவியும் கிடைக்கப் பெறாமலேயே, இந்தியாவின் பின்னலாடைத் துறையின் தலைநகரமாக திருப்பூர் உருவாகி இருக்கிறது. இதை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டுமானால், அரசின் உதவி கட்டாயம் வேண்டும்.’’

பின்னலாடை ஏற்றுமதித் துறையின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் என்னென்ன?

‘‘நாளுக்கு நாள் ஆடைகளுக்கான ட்ரெண்டும் மாறிக்கொண்டே இருக்கிறது. பின்னலாடைத் துறையின் உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு 3.5 சதவிகிதம்தான். அதில் திருப்பூரின் பங்கு 2% மட்டுமே. தற்போது திருப்பூர் பின்னலாடைத் துறை, ஏற்றுமதியில் ஆண்டுக்கு ரூ.24,000 கோடிக்கும், உள்நாட்டு வர்த்தகத்தில் ரூ.12,000 கோடிக்கும் வர்த்தகம் நடக்கிறது. வரும் 2020-ல் ஆண்டு வர்த்தகம் ரூ.1 லட்சம் கோடியை எட்டவேண்டும் என்கிற முனைப்புடன் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.  அந்த முன்னேற்றத்தை அடைய பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியாக வேண்டும். அதன்படி, தொழில்துறை சார்பாக அரசின் உதவியுடன் தொழிலாளர்கள் அனைவருக்கும் குடியிருப்பு, திருப்பூரில் பின்னலாடை துறைக்கென்று தனி ஆராய்ச்சிக்கூடம், ஆயத்த ஆடைகள் மட்டுமின்றி, தொழில் சார்ந்த ஆடைகள், துணிகளின் உற்பத்தியை உருவாக்குவது போன்றவை அதில் அடங்கும்.’’

திருப்பூர் ஜவுளித் தொழில்... மாற்றாந்தாய் பிள்ளையைப் போலத்தான் பார்க்கிறார்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரைவேட் லிமிடெட் ஆக இருக்கக்கூடிய பெரிய ஏற்றுமதி நிறுவனங்கள், பப்ளிக் லிமிடெட் ஆக மாறும்போது, இந்தத் துறைக்கான முதலீடுகள் இன்னும் அதிகரிக்குமல்லவா?

‘‘இப்போது, இங்கு இருக்கக்கூடிய பின்னலாடை நிறுவனத்தினர் அனைவரும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்களே. பெரும்பான்மையான நிறுவனங்கள், சிறிய அளவிலான முதலீட்டில் தொழிலைத் துவங்கி, சிறிது சிறிதாக தொழிலை உயர்த்தி, இன்று ஏற்றுமதியில் தனியொரு இடத்தைப் பிடித்திருக்கின்றன. முழுக்க முழுக்க அனுபவத்தால் மட்டுமே இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், பப்ளிக் லிமிடெடுக்கான வரைவுகளைப் பற்றியும், கண்காணிக்கும் திறனைப் பற்றியும் அறிந்து கொள்வதற்கு இன்னும் சில காலமாகும். இப்போது திருப்பூரில் இரண்டு பின்னலாடை நிறுவனங்கள் பப்ளிக் லிமிடெட் ஆகியிருக்கின்றன.  பெரும்பான்மையான நிறுவனங்களுக்கு இது பற்றிய விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது போன்றவற்றை பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பாக முன்னெடுத்து வருகிறோம். இருந்தாலும் நிறுவனங்கள் அதற்குத் தயாராவதற்குக் குறைந்தது 8 முதல் 10 ஆண்டுகள் வரை ஆகும்.’’

சீனா, வங்கதேசம் போன்ற நாடுகளின் பின்னலாடைத் துறையுடன் ஒப்பிடும்போது, இங்குள்ள இடர்பாடுகளும், நடைமுறைச் சிக்கல்களும் என்னென்ன?

‘‘சீனாவின் பின்னலாடைத் துறை முதலீட்டுக்கு அரசே பெரிய அளவில் உதவியிருக்கிறது; சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து தந்திருக்கிறது. அதன் மூலம், அந்த நாட்டின் பின்னலாடை உற்பத்தி, உலகச் சந்தையில் மிகப் பெரிய இடத்தைப் பிடித்திருக்கிறது. வளர்ச்சி அடையாத நாடுகளின் பட்டியலில் இருக்கும் வங்கதேசத்தில் இருந்து ஏற்றுமதியாகும் பின்னலாடைகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் முழுமையான வரிவிலக்கு தரப்படுகிறது. நம்மிடமிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடைகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் 9.7% வரியும், அமெரிக்காவில் 17% வரியும் விதிக்கப் படுகிறது. எனவே, பெரும்பான்மையான ஆர்டர்கள் வங்கதேசத்துக்கே செல்கின்றன. எனவே, அந்த நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் பின்னலாடைத் துறையின் பங்கு 85% இருக்கிறது. ஆனால், நம் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் பின்னலாடைத் துறையின் பங்கு 4% மட்டுமே.

மேலும், வங்கதேசத்தில் அரசே பின்னலாடைத் துறைக்கு முக்கியத்துவம் தந்துவருகிறது. ஆனால், திருப்பூரின் பின்னலாடைத் துறைக்கு அரசின் உதவிகள் கிடைத்ததற்கான எந்தவொரு அடையாளங்களும் இல்லை. மாற்றாந்தாய் பிள்ளையைப் போன்றுதான் அரசு இங்குள்ள பின்னலாடைத் துறையைப் பார்க்கிறது. இந்தக் குறைகள் நீக்கப்பட்டால், பின்னலாடை வர்த்தகத்தை மற்ற நாடுகளைவிட நாம் மிகப் பெரிய அளவில் கொண்டு செல்ல முடியும்’’. 

இவர் முன்வைக்கும் கோரிக்கைகளை மத்திய அரசாங்கம் கனிவோடு கவனித்தால் நல்லது!

படம்: ரமேஷ் கந்தசாமி