நாணயம் விகடன், இன்டகிரேட்டட், என்எஸ்டிஎல், என்எஸ்இ, சிட்டி யூனியன் பேங்க் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய ‘செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்’ முதலீட்டு விழிப்பு உணர்வுக் கூட்டங்கள் அண்மையில் சென்னை மறைமலை நகரிலும், புதுச்சேரியிலும் நடந்தன.

இந்தக் கூட்டங்களில், அஸெட் அலோகேஷன் குறித்து நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி சிறப்புரை ஆற்றினார். மியூச்சுவல் ஃபண்ட் பற்றி இன்டகிரேட்டட் உதவிப் பொது மேலாளர் ஆர்.ரவிச்சந்திரன், இன்ஷூரன்ஸ் பற்றி இன்டகிரேட்டட் இன்ஷூரன்ஸ் உதவிப் பொது மேலாளர் ஆர்.குருராஜன் பேசினர். டீமேட் கணக்குப் பற்றி என்எஸ்டிஎல் உதவி மேலாளர் பி.ஏ. சிவப்பழம் விளக்கினார்.

என்எஸ்இ நிறுவனத்தின் அசிஷ் ஸ்ரீவாஸ், “தரகர் வழியாகப் பங்குகளில் முதலீடு செய்யும் போது அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தை தரகரா என்று விசாரித்து, அவரின் உதவியை நாடலாம். முதலீடு செய்யும்போது உங்களுடைய மொபைல் எண் மற்றும் இ-மெயில் போன்றவற்றுக்கு உடனுக்குடன் தகவல் உங்களுக்குக் கிடைத்துவிடும்” என்றார்.

என்எஸ்டிஎல் நிறுவனத்தின் உதவி மேலாளர் சிவப்பழம், “ஒரு கோடிக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் எங்களது தளத்தின் வழியாக முதலீடு செய்து வருகிறார்கள். என்எஸ்டிஎல் நிறுவனம் நீங்கள் பேப்பர் வடிவில் வைத்திருக்கும் பங்கு முதலீட்டை டிஜிட்டலாக மாற்றிக்கொள்ள உதவி வருகிறது’’ என்றார்.

ரவிச்சந்திரன் பேசும்போது, “நாம் கோடீஸ்வரர் ஆகவேண்டும் என்றால், நீண்ட கால அடிப்படையில் சிறு தொகையை தொடர்ந்து முதலீடு செய்தால் போதும்; முப்பது வயதில் இருக்கும் ஒருவர் மாதம் 1,500 ரூபாய் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து, அது 15% வருமானத்தைத் தந்தால், 60 வயதில் உங்களுடைய கோடீஸ்வரர் கனவு நிறைவேறிவிடும். ஆகையால், இளவயதிலேயே சேமித்து முதலீடு செய்ய வேண்டும்” என்றார்.

குருராஜன் பேசும்போது, “இரு சக்கர வாகனத்துக்கு கண்ணும் கருத்துமாக இன்ஷூரன்ஸ் எடுக்கும் நாம், நம்மைச் சார்ந்துதான் நம் குடும்பமே இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதே இல்லை. நாம் இல்லாமல் போனாலும், நம் குடும்ப உறுப்பினர்கள் கஷ்டப்படாமல் இருக்கவேண்டும் எனில் நாம், இன்ஷூரன்ஸ் எடுத்தே ஆகவேண்டும். உங்கள் வாழ்க்கையில் உங்கள் மதிப்பு அதிகரிப்பதற்கேற்ப, உங்களுக்கான கவரேஜையும் அதிகரித்துக்கொள்ளுங்கள்’’ என்றார்.

நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி, “2000-ல் ஒரு புல்லட் நிறுவனத்தின் பங்கு விலை ரூ.17.50. பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்றைக்கு எட்டு கோடி ரூபாயாக மாறி இருக்கும். எந்த நிறுவனம் வளர்ச்சி பெறும், எந்த நிறுவனம் எங்கு முதலீடு செய்கிறது என்பதை எல்லாம் பார்க்கவேண்டும். டீ குடிக்கும் பழக்கம் உடையவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு டீ குடிக்கிற காசை சேமித்து வைத்தாலே, ஒருவருக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துவிடலாம். இனிவரும் காலங்களில் வீட்டிலும் பட்ஜெட் போட்டு வாழ்க்கை வாழ்ந்தால் உங்கள் குறிக்கோளை எளிதில் அடையலாம்” என்றார்.

புதுச்சேரியில் ஜெயராஜ் என்ற வாசகர், “ஆரம்பத்தில் என் வருமானம் குறைவாக இருக்கும்போது டேர்ம் பாலிசி ஒன்றை எடுத்திருந்தேன். இப்போது வருமானம் உயர்ந்து இருக்கிறது. இப்போது இன்னொரு நிறுவனத்தில் டேர்ம் பாலிசி எடுக்கலாமா?’ என்று கேட்டார்.

இதற்குப் பதிலளித்த குருராஜன், “இரண்டு நிறுவனத்திலும் டேர்ம் பாலிசி எடுத்துக் கொள்ளலாம். இரண்டுக்கும் க்ளெய்ம் கிடைக்கும். ஆனால், இரண்டாவது பாலிசி பெறும்போது முதல் பாலிசி குறித்த தகவலைக் கொடுத்துவிட்டால் எந்தவித பிரச்னையும் வராது” என்றார்.

இப்படிப்பட்ட விழிப்பு உணர்வுக் கூட்டங்களை ஆண்டுக்கு மூன்று முறையாவது நடத்துங்கள் எனக் கோரிக்கை விடுத்தபடி மகிழ்ச்சியோடு சென்றார்கள் வாசகர்கள்.

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்,

அ.குரூஸ்தனம்