Published:Updated:

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 12

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 12
பிரீமியம் ஸ்டோரி
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 12

கூண்டுக்குள் சிக்கிய ஷேர் மார்க்கெட் சிங்கம்!சுரேஷ் பார்த்தசாரதி, Founder, Myassetsconsolidation.com Registered investment advisor, INA200000878ஓவியம்: கோ.ராமமூர்த்தி

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 12

கூண்டுக்குள் சிக்கிய ஷேர் மார்க்கெட் சிங்கம்!சுரேஷ் பார்த்தசாரதி, Founder, Myassetsconsolidation.com Registered investment advisor, INA200000878ஓவியம்: கோ.ராமமூர்த்தி

Published:Updated:
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 12
பிரீமியம் ஸ்டோரி
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 12
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 12

ணேஷ், சேலத்தைச் சேர்ந்தவர். ராதிகா, விழுப்புரத்தைச் சேர்ந்தவர். சென்னையில் ஒரே கல்லூரியில் பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்தார்கள். இருவரும் நல்ல நண்பர்களாகப் பழகினார்கள். படித்து முடித்ததும் மும்பையில், தனியார் வங்கி ஒன்றில் இருவருக்கும் வேலை கிடைத்தது. ஒரே வங்கியில் பணியாற்றியதால்,  அவர்களின் நட்பு தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் அவர்களின் நட்பு காதலாகி, இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே பங்குச் சந்தையில் கில்லாடியாக இருந்தார் கணேஷ். ஷேர் மார்க்கெட் குறித்து நிறைய படித்தும், பயிற்சிகளைப் பெற்றும் அந்தத் துறையில் அதிபுத்திசாலியாக மிளிர்ந்தார்.

பங்குச் சந்தையில் டிரேடிங் செய்து நிறைய லாபம் சம்பாதித்தார். கணேஷின் நண்பர்கள் அவரை ‘ஷேர் மார்க்கெட் சிங்கம்’ என்றுதான் செல்லமாக அழைப்பார்கள். நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்த கணேஷின் வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த பதவி உயர்வு, அவரை பின்னோக்கி இழுத்துச் சென்றது.

‘பதவி உயர்வு கிடைத்தால் வாழ்க்கையில் ஏற்றம்தானே வரும்; கணேஷுக்கு எப்படி சரிவு ஏற்பட்டது?’ என்கிற கேள்வி உங்களுக்கு வரலாம். அவருடைய சரிவுக்குக் காரணம், பதவி உயர்வு என்று சொல்வதைவிட, பதவி உயர்வுக்குப் பிறகான அவரின் செயல்பாடுகள்தான்.

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 12

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!பதவி உயர்வுக்குப்பிறகு கணேஷுக்குக் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரவே, அவரால் டிரேடிங் செய்ய நேரம் ஒதுக்க முடியவில்லை. ஆனால், டிரேடிங்கை விட்டுவிடவும் மனது வரவில்லை. தனக்குப் பரிச்சயமான புரோக்கரேஜ் நிறுவனம் ஒன்றில் தன்னுடைய டிரேடிங் பொறுப்பை ஒப்படைத்தார். இது ஆபத்தான விளையாட்டாக மாறிவிடும் என கணேஷின் உள்மனம் எச்சரித்தும் கூட ரிஸ்க் எடுக்கத் தயாரானார்.

ஆரம்பத்தில் எல்லாமே நன்றாகத்தான் போனது. ஆனால், 2014-ல் மார்க்கெட் உச்சத்தில் இருந்த சமயத்தில், புரோக்கரேஜ் நிறுவனம் செய்த குளறுபடிகளால் ரூ.20 லட்சம் வரை நஷ்டத்தைச் சந்தித்தார் கணேஷ். அவ்வளவு பெரிய தொகையை புரோக்கரேஜ் நிறுவனத்துக்குத் தரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ஆனால், இவ்வளவு பெரிய தொகையை  எப்படி திடீரென்று ஏற்பாடு செய்வது? வேறு வழியில்லாத நிலையில், தான் பணியாற்றும் வங்கியைத் தவிர்த்து, வேறு ஒரு வங்கியில் பர்சனல் லோனுக்கு  விண்ணப்பித்தார் கணேஷ். லோன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் புரோக்கரேஜ் நிறுவனத்துக்கு காசோலையைத் தந்துவிட்டார். ஆனால், சில காரணங்களால் கடன்  கிடைக்க வில்லை. செக் பவுன்ஸ் ஆனது. கடுமையான எச்சரிக்கை விடுத்தது புரோக்கரேஜ் நிறுவனம்.

தன்னை ஷேர் மார்க்கெட் சிங்கம் என புகழ்ந்து பேசிய நண்பர்களே, இந்த தருணத்தில் ‘எல்லாம் தெரிஞ்சும் இப்படி பண்ணிட்டியே...’ எனச் சொல்ல ஆரம்பிக்கவே, அவமானப்பட்டுப் போனார் கணேஷ். ‘சிங்கம் கூண்டுல சிக்கிக்கிச்சு’ எனச் சிலர் அவர் காதுபடவே கேலி செய்தார்கள். 

பிறகு, தன்னிடம் இருந்த மொத்தப் பங்குகளையும் விற்று ரூ.10 லட்சம் திரட்டினார். மீதம் ரூ.10 லட்சத்தை வெளியில் கடனாக வாங்கினார். ஒருவழியாக புரோக்கரேஜ் நிறுவனத்துக்கு ரூ.20 லட்சத்தைக் கொடுத்துவிட்டார்.நடந்த இத்தனை விஷயங்களையும் கணேஷ் தன் மனைவியிடம் சொல்லவில்லை. இத்தகைய பணப் போராட்டங்களால் கணேஷ் தன் வேலையில் முழுக் கவனம் செலுத்த முடியவில்லை.

வேலையில் பிரச்னைகள் வரவே, நிர்வாகம் கண்டிக்க ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் பெரிதாக தவறு நிகழ, கணேஷ் மும்பையிலிருந்து பெங்களூருக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

பெங்களூருக்கு வந்த கணேஷ் தனி வீடு எடுத்து தங்கினார். தான் பயன்படுத்துவதற்காக லோன் மூலம் கார் வாங்கினார். செலவுகள் இரட்டிப்பாகியது. சமாளிக்க முடியவில்லை. மூன்று வயதிலும், இரண்டு வயதிலும் இரண்டு குழந்தைகள் வேறு. அவர்களைப் பள்ளியில் சேர்க்கவேண்டிய தருணம் நெருங்கவே, பணத்துக்கு என்ன செய்வது என பதறிப்போனார் கணேஷ். இந்த நெருக்கடியான சூழலில்தான் அவர் என்னைச் சந்தித்தார்.

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 12

முதலில் கணேஷ் செய்த தவறுகளை அவருக்கு சுட்டிக்காட்டினேன் நான். ‘‘டிரேடிங் செய்ய நேரம் இல்லாத சூழலில் தனக்காக இன்னொருவரை டிரேடிங் செய்ய அமர்த்தியது மிகப் பெரிய தவறு. பதவி உயர்வுக்குப்பிறகு பல்வேறு குழப்பங்களை வலிய வரவழைத்துக்கொண்டதால், வேலையில் உரிய கவனம் செலுத்தாமல்விட்டது பெரிய தவறு. நடந்த எல்லா தவறுகளையும் மனைவியிடம் சொல்லி, கலந்துபேசாமல் அவராகவே செயல் பட்டதும் தவறுதான். மனைவியுடன் பகிர்ந்து கொண்டிருந்தால் நல்ல தீர்வுகள் கிடைத்திருக்க வாய்ப்பு அதிகம்’’ என்று சொன்னேன். 

மும்பைக்கும் பெங்களூருக்கும் அலைந்து திரிந்து அவஸ்தைபட்ட கணேஷ், பெரும் போராட்டத்துக்குப்பிறகு மும்பைக்கே மாற்றல் வாங்கிவிட்டார். கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், தனக்கானத் தீர்வுகளை என்னிடம் கேட்டார்.

தன் இரண்டு மகன்களுக்கும் மேற்படிப்புக்காக இரண்டு கோடி ரூபாய் தேவைப்படும்; அதற்கு முதலீட்டைத் தொடங்க வேண்டும். தன் ஓய்வுக் காலத்துக்கு முதலீடு செய்ய வேண்டும் என தன் எதிர்கால இலக்குகளை அடுக்கினார்.

முதலில் நீங்கள் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். பணம் திரும்பக் கிடைக்காத டேர்ம் இன்ஷூரன்ஸ் வேண்டாம் என மறுத்தார். பிறகு அவருக்கு டேர்ம் இன்ஷூரன்ஸின் அவசியத்தைப் புரிய வைத்தேன். அதன்பிறகு தனக்கும், தன் மனைவிக்கும் ஆளுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொண்டார்.

அவருடைய மூத்த மகனின் மேற்படிப்புக்கு மாதம் ரூ.17,000, இரண்டாவது மகனின் மேற்படிப்புக்கு மாதம் ரூ.20,000 எஸ்ஐபி முதலீட்டை ஆரம்பிக்குமாறு சொன்னேன்.

கணேஷுக்கு இப்போது வயது 35. அவர் 55 வயதில் ஓய்வு பெறவேண்டும் என்றார். அப்போது அவருக்கு கார்பஸ் தொகையாக 8 கோடி ரூபாய் வரை தேவை என்றார். அப்படியானால் மாதம் ரூ.80,000 முதலீடு செய்யவேண்டும். கணேஷுக்கும், அவர் மனைவி ராதிகாவுக்கும் சேர்த்து மாதம் ரூ.25,000 பி.எஃப் மூலம் முதலீடு செய்யப்படுகிறது. மீதம் 55,000 ரூபாயை ராதிகா சம்பளத்தில் இருந்து முதலீடு செய்யுமாறு ஆலோசனை சொன்னேன்.

டிரேடிங் செய்வதில் உங்களுக்கு நல்ல பரிச்சயம் இருப்பதால், வரம்பை நிர்ணயம் செய்துகொண்டு கிடைக்கும் நேரத்துக்கேற்ப தொடர்ந்து டிரேடிங் செய்துவருமாறு சொன்னேன்.

2017-ம் ஆண்டில் நிறைய முதலீடுகளைச் செய்ய திட்டமிட்டுள்ளார் கணேஷ். சரியான திட்டமிடல் இருந்தால், வெற்றி நிச்சயம் என்பதே பலரது அனுபவம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism