Published:Updated:

நஷ்டத்தைத் தவிர்க்க உதவும் பொருள்கள் மேலாண்மை! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 12

நஷ்டத்தைத் தவிர்க்க உதவும் பொருள்கள் மேலாண்மை! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 12
பிரீமியம் ஸ்டோரி
நஷ்டத்தைத் தவிர்க்க உதவும் பொருள்கள் மேலாண்மை! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 12

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

நஷ்டத்தைத் தவிர்க்க உதவும் பொருள்கள் மேலாண்மை! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 12

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

Published:Updated:
நஷ்டத்தைத் தவிர்க்க உதவும் பொருள்கள் மேலாண்மை! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 12
பிரீமியம் ஸ்டோரி
நஷ்டத்தைத் தவிர்க்க உதவும் பொருள்கள் மேலாண்மை! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 12
நஷ்டத்தைத் தவிர்க்க உதவும் பொருள்கள் மேலாண்மை! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 12

ரு பிசினஸ் வெற்றிகரமாக நடக்க வேண்டும் எனில், அதற்கு ஏழு முக்கியமான மேலாண்மைத் திறமைகள் அவசியம் என்று கூறியிருந்தேன். கடந்த இதழில் ஊழியர்கள் மேலாண்மை பற்றி விரிவாகப் பார்த்தோம். அதற்கு அடுத்தபடியாக, மூலப்பொருள்களை மேலாண்மை செய்வது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.

பொருள்கள் மேலாண்மை என்பது ஒரு பிசினஸுக்கு மிக முக்கியமானது. ஏனெனில், பொருள்கள் விஷயத்தில் நாம் காட்டும் அசட்டுத்தனம் நம்முடைய பிசினஸில் மிகப் பெரிய நஷ்டத்தைக் கொண்டு வந்துவிடும். பெரும்பாலான தொழில்முனைவோர்கள் நஷ்டமடைவது பொருள்களை மேலாண்மை செய்யத் தெரியாத காரணத்தினால்தான்.

நஷ்டத்தைத் தவிர்க்க உதவும் பொருள்கள் மேலாண்மை! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 12

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!



மூலப்பொருள்கள் மேலாண்மையில் திட்டமிடல், கொள்முதல் செய்தல், கட்டுப் படுத்துதல், விரைவுபடுத்துதல், போக்குவரத்து, பொருள்களைக் கையாளுதல் ஆகிய ஆறு நிலைகள் உள்ளன. இந்த ஆறு நிலைகளையும் திறம்படச் செய்வதன் மூலம் ஒரு பிசினஸுக்கு உள்ளே வரும் பொருள்களிலிருந்து, வெளியே செல்லும் பொருள்கள் வரையிலான மேலாண்மையை வெற்றிகரமாகவும் லாபகரமாகவும் செய்ய முடியும்.

    எவையெல்லாம் மூலப்பொருள்கள்?

மூலப்பொருள்கள் மேலாண்மையைச் செய்வதற்குமுன் எவையெல்லாம் மூலப்பொருள்கள் என்பதில் தெளிவு தேவை. பிளாஸ்டிக் பொம்மை தயாரிக்கும் தொழிலை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். அதில் பொம்மையைத் தயார் செய்யப் பயன்படுத்தப் படும் பிளாஸ்டிக், பெயின்ட் மற்றும் பிற அலங்காரப் பொருள்கள் ஆகியவை மட்டுமே மூலப்பொருள்கள் அல்ல. மாறாக, உற்பத்தியின் போது ஊழியர்கள் தங்கள் கைகளில், கால்களில் மாட்டிக்கொள்ளும் கையுறை, காலுறைகள்கூட மூலப்பொருள்கள்தான். அதாவது, நம்முடைய பிசினஸில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களுமே மூலப்பொருள்கள்தான்.

மேலும், பொருள்களில் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் வெளியிலிருந்து வாங்கப்பட்ட மூலப்பொருட்கள், உற்பத்தி செய்வதற்கு துணைபுரியும் உபகரணங்கள், உதிரிபாகங்கள்,  நிறைவு செய்யப்படாத உற்பத்திப் பொருள்கள், நிறைவடைந்த, விற்பனைக்குத் தயார் நிலையில் உள்ள பொருள்கள், விற்பனை ஆகாமல் திரும்ப வரும் பொருள்கள், விற்பனை ஆகி சில காரணங்களால் வாடிக்கையாளர்களால் திருப்பித் தரப்படும் பொருள்கள் எனப் பல வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. பொருள்கள் எந்த வகையாக இருந்தாலும், அதற்குத் தேவையான மேலாண்மையைச் செய்தே ஆகவேண்டும். இனி பொருள்கள் மேலாண்மையைப் பற்றி விளக்கமாக தெரிந்துகொள்ளலாம்.

    கொள்முதல் திட்டமிடல்


ஒரு பிசினஸின் மொத்த முதலீட்டில் பொருள்கள் மட்டுமே 60 சதவிகித முதலீட்டைக் கொண்டவையாக உள்ளன. எனவே, அவற்றை சரியாக மேலாண்மை செய்ய வேண்டியது அவசியம். அதற்கு முதலில் என்ன பொருள், எங்கிருந்து கொள்முதல் செய்யப்போகிறோம், என்ன அளவில் கொள்முதல் செய்யப்போகிறோம், என்ன தரத்தில் அந்தப் பொருள் இருக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் முக்கியமானவை. நம்முடைய பிசினஸ் அளவு என்ன, நம்முடைய இலக்கு என்ன, சந்தையில் உள்ள வாடிக்கை யாளர்களின் சதவிகிதம் எவ்வளவு, நம்முடைய பொருளை எவ்வளவு பேர் வாங்குவார்கள் எனப் பல விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்கேற்ப பொருள்களை கொள்முதல் செய்து, உற்பத்தியைத் திட்டமிட வேண்டும்.

கொள்முதல் செய்வதற்கு முன் பொருளின் தரம் மற்றும் விலை உள்ளிட்ட விஷயங்களை நான்கைந்து இடங்களில் விசாரித்த பின்னர் முடிவு செய்யவேண்டும். கொள்முதல் செய்பவரிடம் விலை குறித்து தெளிவாகப் பேசவேண்டும். உங்களுடைய பிசினஸைப் பற்றி அவருக்கு எடுத்துச் சொல்லி இந்த விலையில் கொடுத்தால் கட்டுப்படி ஆகாது என்று பேசி, விலையைக் குறைக்க பார்க்கலாம். ஆனால், உங்கள் விலைக் குறைப்பு, தரத்தில் எந்த சமரசத்தையும் ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது. முடிந்தவரை உற்பத்தி செய்யும் இடத்துக்குப் பக்கத்திலேயே பொருள்களைக் கொள்முதல் செய்யும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இது போக்குவரத்துச் செலவுகளைக் குறைக்கும். சரியான நேரத்தில், சரியான அளவில் தரமான பொருள்களாகக் கொள்முதல் செய்யவேண்டும்.கொள்முதல் செய்யும்போது நாம் செய்யும் இது போன்ற சிறு விஷயங்கள் மூலம் நாம் சேமிக்கும் ஒரு சதவிகிதம், நமக்கு ஐந்து சதவிகித லாபத்தைத் தரும்.

நஷ்டத்தைத் தவிர்க்க உதவும் பொருள்கள் மேலாண்மை! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 12

    இன்வென்ட்ரி மேனேஜ்மென்ட்

இன்வென்ட்ரி மேனேஜ்மென்ட் என்பதுதான் பொருள்கள் மேலாண்மையில் முக்கியமான இடம். பொருள்களின் இருப்பைத் தொடர்ந்து கணக்கில் வைத்துக்கொள்ள வேண்டும். எவ்வளவு பொருள்கள் இருக்கின்றன, எவ்வளவு பொருள்கள் விற்பனைக்குப் போயிருக்கின்றன, எவ்வளவு திரும்பி வந்திருக்கின்றன என்கிற விவரங்கள் அத்தனையும் பதிவுப் புத்தகத்தில் அல்லது மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் ஷீட்டில் குறிக்கப்படவேண்டும். மேலும், பொருட்கள் வாங்கிய மற்றும் விற்பனை ஆன பில் ரசீதுகளும், இன்வாய்ஸ்களும் சேர்த்து வைக்கப்பட வேண்டும்.

இந்தக் கணக்குப் பதிவுகள்தான் நமது பிசினஸை பிரதிபலிக்கும். பிசினஸில் முன்னேற்றத்தைத் திட்டமிட இந்த விவரங்கள் உதவியாக இருக்கும். இவற்றைக் கணக்கு வைக்காமல் போனால், எந்தப் பொருள் எங்கே போகிறது, எவ்வளவு பொருள் வீணாகிறது என்பது போன்ற எந்த விவரமும் நமக்குத் தெரியாது. அதேபோல், இப்படிக் கணக்கு வைப்பதன் மூலம் சந்தையில் எவ்வளவு பொருள்கள் தேவையாக இருக்கின்றன என்பதையும், பொருள்கள் திரும்பி வந்தால்  அதற்கான  காரணங்களையும் நம்மால் அறிந்துகொள்ள முடியும். மேலும், பொருள்களைக் கையாளும்போது பொருளின் தன்மைக்கு ஏற்ப கையாளவேண்டும். பொருள்கள் கையாளப்படும் போது சூப்பர்வைஸிங் செய்யப்படவேண்டும். இதன் மூலம் பொருள்கள் உடைவது, கிழிவது போன்றவற்றைத் தடுக்கலாம்.

மேலும், பொருள்கள் குறித்த கணக்குகளைப் பதிவு செய்வதன் மூலம் தடை இல்லாமல் உற்பத்தி செய்யவும், சந்தைத் தேவையைப் பூர்த்தி செய்யவும் முடியும். புதிய வாய்ப்புகளைக் கண்டறியவும், செயல்பாடுகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தத் தேவையான புதிய திட்டங்களைத் திட்டமிடவும் முடியும். மிக முக்கியமாக, இன்ஷூரன்ஸ், வரிச் சலுகை போன்ற விஷயங்களுக்கு இன்வென்ட்ரி கணக்கு வழக்குகள் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

மாறாக, பொருள்களின் வரவு செலவு கணக்குகளைப் பதிவு செய்யாமல் இருந்தாலோ, ஊழியர்கள் பொருள்களைக் கையாளும்போது கண்காணிக்காமல் இருந்தாலோ பொருள்கள் சேதமடைவதற்கும், சில ஊழியர்கள் எளிதில் தங்கள் கைவரிசையைக் காட்டவும் அதிக வாய்ப்புள்ளது. அத்துடன், கடிவாளம் போட்ட குதிரையைப்போல, வாய்ப்புகளைக் கண்டறிந்து செயல்படுத்த முடியாமல் ஒரே பாதையில் போய்க் கொண்டிருப்போம். இதனால், கொஞ்சம் கொஞ்சமாக நம் முதலீடு நஷ்டமடைய ஆரம்பிக்கும். பின்னர் நம்முடைய முதல் மொத்தத்துக்கும் மோசம் வந்து, பெரும் நிதி நெருக்கடியில் சிக்க வேண்டியிருக்கும்.

விற்பனை ஆகாமல் திரும்பவரும் பொருள் களையும், ஏதோ சில காரணங்களால் வாடிக்கையாளர்களால் திரும்பத் தரப்படும் பொருள்களையும் அலட்சியப்படுத்தாமல் அவற்றை எப்படி மீண்டும் பிசினஸுக்குப் பயன்படுத்தலாம் என்பதை யோசிக்க வேண்டும். வாடிக்கையாளர்  திரும்பத் தருவதற்கான காரணங்களைத் தெரிந்துகொண்டு அவற்றைச் சரிசெய்ய முயற்சிக்கலாம்.

    பேக்கிங் மற்றும் டெலிவரி


பொருள்களை பேக்கிங் செய்வது, டெலிவரிக்கு கொண்டுசெல்வது போன்றவற்றிலும் கவனம் அவசியம். பொருள்களின் தன்மைக்கு ஏற்ப பேக்கிங் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் பொருள்கள் வாடிக்கையாளரைச் சென்று சேரும் வரை எந்தச் சேதாரமும் ஆகாமல் இருக்கும். மேலும், வண்டியில் பொருள்களை ஏற்றும்போதும் இறக்கும்போதும் சூப்பர்வைஸிங் அவசியம். அதேபோல், பொருள்களைக் கொண்டு செல்லும் வாகனம், பொருளின் தன்மை மற்றும் அளவுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். செலவைக் குறைக்கிறேன் என்று அதிக அளவில் ஏற்றி அனுப்பவோ அல்லது ஏதோ ஒரு வாகனத்தில் ஏற்றி அனுப்பவோ கூடாது.

பொருள்கள் மேலாண்மையில் இதுபோன்ற நடவடிக்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்தும் போது பொருள்கள் டெலிவரி செய்யப்படுவதில் தாமதம் ஏற்படும். இதனால் வாடிக்கையாளர்கள், விநியோகஸ்தர்கள் சற்று சங்கடப்படுவார்கள். ஆனால், அதற்காக சமரசம் செய்துகொள்ளாதீர்கள். அப்போது அது சங்கடத்தை ஏற்படுத்தினாலும் இரு தரப்பினருக்குமே லாபம் தரக்கூடியதாகவே இந்த மேலாண்மை நடவடிக்கை இருக்கும்.

இப்படி நம்முடைய பிசினஸில் உள்ள பொருள்கள் அனைத்தையும் டிமாண்ட் மற்றும் சப்ளை ஆகிய இரண்டையும் பொறுத்து தொடர்ந்து திட்டமிட்டு மேலாண்மை செய்யும் போது பொருள்கள் வீணாகாமலும், நஷ்டம் ஏற்படாமலும் பார்த்துக்கொள்ள முடியும். இதில் ஒரு தொழில்முனைவோர் சாதித்துவிட்டாலே பிசினஸில் ஜெயம்தான்.

(ஜெயிப்போம்)