Published:Updated:

தடையில்லா பிசினஸீக்கு இயந்திரங்கள் மேலாண்மை! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 13

தடையில்லா பிசினஸீக்கு இயந்திரங்கள் மேலாண்மை! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 13
பிரீமியம் ஸ்டோரி
தடையில்லா பிசினஸீக்கு இயந்திரங்கள் மேலாண்மை! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 13

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

தடையில்லா பிசினஸீக்கு இயந்திரங்கள் மேலாண்மை! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 13

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

Published:Updated:
தடையில்லா பிசினஸீக்கு இயந்திரங்கள் மேலாண்மை! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 13
பிரீமியம் ஸ்டோரி
தடையில்லா பிசினஸீக்கு இயந்திரங்கள் மேலாண்மை! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 13
தடையில்லா பிசினஸீக்கு இயந்திரங்கள் மேலாண்மை! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 13

ல்லா பிசினஸிலும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்றாலும் பெரும்பாலான பிசினஸ்களில் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. முக்கியமாக, பொருள்களை உற்பத்தி செய்யும்போது இயந்திரங்கள் மிகவும் அவசியமாகின்றன. வருடம் முழுவதும் இயந்திரங்களைப் பயன்படுத்தினாலும் வருடத்தில் ஒருநாள் கொண்டாடப்படும் ஆயுத பூஜையின்போதுதான் ஒவ்வொருவருக்கும் இயந்திரங்களின் முக்கியத்துவம் தெரியவரும்.

தடையில்லா பிசினஸீக்கு இயந்திரங்கள் மேலாண்மை! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 13

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!



நம் பிசினஸில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன இயந்திரங்களின் தொழில்நுட்பங்கள் தற்போது மிகவும் நவீனமடைந்துவிட்டன. இந்த நிலையில், நாம் நமது பிசினஸில் பயன்படுத்தும் இயந்திரங்களை எப்படி சரியாகப் பராமரித்துப் பேணிக் காப்பது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.

   இயந்திரங்களின் வகைகள்

இயந்திரங்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் என்பவை ஒருவகை; உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் என்பவை மற்றொரு வகை. அலுவலகத்தில் பயன்படுத்தும் இயந்திரங்கள் பெரும்பாலும் எலெக்ட்ரானிக் தொழில்நுட்பம் சார்ந்தவை. உற்பத்திக்குப் பயன்படுத்தும் இயந்திரங்கள் பெரும்பாலும் இன்ஜினீயரிங் தொழில்நுட்பம் சார்ந்தவை. 

அலுவலகங்களில் பயன்படுத்துவதில் முக்கியமானவை கணினி, பிரின்டர், ஸ்கேனர் போன்றவை. இவை அனைத்து பிசினஸிலும் தற்போது பயன்படுத்தப்பட்டாலும், பெருமளவில் அவசியமாக இருப்பது தொழில்நுட்பம் சார்ந்த பிசினஸ்களுக்குதான். நம்முடைய தேவைக்கு ஏற்றாற்போல் இவற்றை வாங்கிக்கொள்ளலாம்.

சிறு பிசினஸுக்கு ஒன்று அல்லது இரண்டு கணினி இருந்தால் போதுமானது. லேப்டாப்பாக இருந்தால் மிகவும் நல்லது. ஏனெனில் நம்மால் எங்கு வேண்டுமானாலும் அதை எடுத்துச் செல்ல முடியும். கணினி வாங்கும்போது நம் தேவைக்கு ஏற்றபடி பார்த்து வாங்கவேண்டும். கணினிக்கு எந்தப் பங்கமும் வராமல் தடுக்க, ஒரிஜினல் ஆன்ட்டி வைரஸ் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்.  ஆன்ட்டி வைரஸ் ஒரிஜினலுக்குச் செலவு செய்ய யோசித்து, பைரேட்டட் ஆன்ட்டி வைரஸினை வாங்கிப்போட்டால், அடிக்கடி பிரச்னை வந்து, செலவு செய்ய வேண்டியிருக்கும். இதனால் நேரம் விரயமாகி, நம்முடைய பிசினஸுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

பிரின்டர் வாங்கும்போது அது லேசர் பிரின்டராக இருப்பது நல்லது. பிரின்டரை டோனரின் விலையை அடிப்படையாக வைத்து வாங்கவேண்டும். பிரின்டர் ரூ5,000, டோனர் ரூ.1000 என்றால் அதைத் தவிர்த்து விட்டு, தரமான பிரின்டர் 7,000  ரூபாய், டோனர் 250 ரூபாய் என்கிற விலையில்  வாங்கலாம். ஏனெனில் அடிக்கடி டோனரை மாற்றலாம். ஆனால், பிரின்டரை மாற்ற முடியாது. அப்படி மாற்றினால் செலவு அதிகமாகும்.

ஆவணங்களை அனுப்பவும், அரசு இணையதளங்களில் பதிவு செய்யவும் ஸ்கேனர்தான்  அதிகமாகப் பயன்படுத்தப் படுகிறது. யாரும் இப்போது தொலைநகலை அதிகம் பயன்படுத்துவதில்லை. எனவே, ஸ்கேனர் மிகவும் அவசியம். ஸ்கேனரை தனியாகவும் வாங்கிக் கொள்ளலாம்; பிரின்டரோடு ஸ்கேனரும் சேர்ந்தே இருக்கிற மாதிரியும்  வாங்கிக்கொள்ளலாம். 

தடையில்லா பிசினஸீக்கு இயந்திரங்கள் மேலாண்மை! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 13

   உற்பத்தி இயந்திரங்கள்

உற்பத்தி இயந்திரங்களை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று, உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் இயந்திரங்கள். இரண்டு, உணவு அல்லாத பொருள்களைத் தயாரிக்கும் இயந்திரங்கள். உணவுப் பொருள் தயாரிக்கும் பிசினஸில் உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் இயந்திரங்கள், தயாரித்த பொருள்களை பேக்கிங் செய்ய இயந்திரங்கள் என அடுத்தகட்டங்களில் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உணவுப் பொருள் உற்பத்திக்குத் தேவைப்படும் இயந்திரங்கள், பொருளுக்கு ஏற்றவாறு மாறுபடும்.

நம்முடைய பிசினஸுக்கு ஏற்ப இயந்திரங்களை வாங்க வேண்டும். திரவப் பொருள்களுக்கு தனியான இயந்திரங்களையும், திடப் பொருள் களுக்கு தனியான இயந்திரங்களையும் வைத்துக் கொள்ள வேண்டும். ஒருபோதும் மாற்றி பயன் படுத்தக்கூடாது. சில சமயங்களில் சந்தையில் ஏற்கெனவே உள்ள மெஷின்களுக்குப் பதிலாக நம்முடைய பொருளுக்கு ஏற்ற மாதிரி நமக்கென பிரத்யேகமாகவும் மெஷின்களைத் தயார் செய்யலாம். இப்போதெல்லாம் தோசை, கூட்டு- பொரியல் செய்வதற்குகூட மெஷின்கள் வந்துவிட்டன.

 உற்பத்திக்குப் பிறகான இயந்திரங்கள்

ஸ்கேலிங் மெஷின்: இது பெரும்பாலான சிறு குறு தொழில்களுக்கு கட்டாயம் தேவைப்படும். ஒரு கிலோ முதல் 100 கிலோ வரையிலான ஸ்கேலிங் மெஷின்கள் உள்ளன. எந்தமாதிரியான ஸ்கேலிங் மெஷின் என்பதை பிசினஸுக்கு ஏற்றவாறு வாங்கிக் கொள்ளலாம். ஆனால், அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திடமிருந்துதான் வாங்கவேண்டும். தனியாரிடம் வாங்கினாலும் அதற்கு அரசுத் தரப்பில் இருந்து சோதனை செய்து சீல் வாங்கவேண்டும்.

ஹேண்ட் சீலிங் மெஷின்: பேக்கிங் அளவைப் பொறுத்து அதற்கேற்ப சீலிங் மெஷின் வாங்க வேண்டும். சீலிங் மெஷினை வாங்கும்போது அதோடு சேர்த்து அதில் பயன்படுத்தப்படும் இரும்புக் கம்பி ஒன்றையும், அதன் மேல் ஒட்டும் டேப் ஒன்றையும், கூடுதலாக வாங்கிக்கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த இயந்திரம் அடிக்கடி பழுதடைய வாய்ப்புள்ளதால், உடனே மாற்றிக்கொள்ள உதவியாக இருக்கும்.இது ரூ.1,500-லிருந்து ரூ.5,000 வரையில் கிடைக்கும்.

ஒரு கிலோ வரைக்கும்தான் இந்த ஹேண்ட் சீலிங் மெஷின் உதவியாக இருக்கும். ஒரு கிலோவுக்கு மேல் பொருள்களை பேக்கிங் செய்வதாக இருந்தால், அதற்கு நிறைய இயந்திரங்கள் சந்தையில் உள்ளன. அவற்றில் பொருளின் அளவை நிர்ணயம் செய்து, பேக்கில் அடைத்து சீல் செய்யும் வரை அனைத்து வேலையையும் செய்துவிடும் வகையிலான மெஷின்கள் உள்ளன. இதுமாதிரி செயல்படும் இயந்திரங்களை ‘ஃபுல்லி ஆட்டோமெட்டிக் மெஷின்’ என்று சொல்வார்கள். இந்த மெஷின் களின் அளவும் விலையும் பேக்கிங் அளவைப் பொறுத்து வேறுபடும். எனவே, தேவைக்கு ஏற்ப மெஷின்களைத் தேர்வு செய்யவேண்டும். இதற்கு ரூ.8 முதல் 12 லட்சம் வரை செலவாகும். மற்றொன்று, ‘செமி ஆட்டோமெட்டிக் மெஷின்’. இதற்கு ரூ.4 முதல் ரூ.5 லட்சம் வரை செலவாகும். இன்னொன்று, பேக்கில் அடைத்து அனுப்ப, சீல் செய்யும் இயந்திரம். இதன் விலை ரூ.1.5 லட்சம் ஆகும். 

   உணவு அல்லாத பொருள்களுக்கான இயந்திரங்கள்

உணவு அல்லாத பொருள்களை உற்பத்தி செய்யும் பிசினஸ்கள், பெரும்பாலும் மிகப் பெரிய  முதலீட்டுடன் செய்யப்படக் கூடியவை. ஆட்டோ மொபைல், பிளாஸ்டிக், கெமிக்கல், உலோகங்கள் போன்றவற்றுக்குப் பெரிய அளவில் மெஷின்கள் தேவைப் படும். இதிலும் சிறிய அளவில் செய்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களிடம் உள்ள ஒன்று, இரண்டு லேத் மெஷின், மோல்டிங் மெஷின், வெல்டிங் மெஷின் போன்றவற்றை வைத்துக்கொண்டு பிசினஸ் செய்கிறார்கள்.

   முதலீடும் பாதுகாப்பும்

பிசினஸ் மதிப்பில் இவ்வளவு சதவிகிதம் இயந்திரங்களுக்கு முதலீடு செய்யலாம் என்று எந்த வரைமுறையும் இல்லை. ஆனால், நம்முடைய உற்பத்தி இலக்கைப் பொறுத்தே இயந்திரங்கள் மீதான முதலீட்டை நிர்ணயிக்கவேண்டும். நம்முடைய பிசினஸுக்குத் தேவையான இயந்திரங்களை மட்டுமே வாங்கவேண்டும். தேவையற்ற இயந்திரங்களை வாங்குவதால், முதலீடு வீணாவதுடன், அந்த இயந்திரம் பயன்படுத்தாமலேயே பழுதாகும் நிலை ஏற்படும். அதேபோல், வாங்கும் இயந்திரம் நவீன தொழில் நுட்பம் கொண்டதாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டும். இல்லை என்றால் விபத்துகளையோ, நஷ்டத்தையோ சந்திக்க நேரிடும். 

இயந்திரங்களை, தொடர்ந்து பராமரிப்பது அவசியம். ஒவ்வொரு இயந்திரத்துக்கும் தரப்பட்டுள்ள செயல்முறையின்படி மட்டுமே கையாளவேண்டும். அந்தந்த இயந்திரங்களைக் கையாளும் நிபுணத்துவம் கொண்டவர்களை வைத்து மட்டுமே இயக்கவேண்டும். மேலும், இயந்திரத்தின் தேய்மானம், விபத்து நடக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றை சரியான நேரத்தில் செய்யவேண்டும். இயந்திரங்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும், சோதனைச் செய்யவும் வேண்டும். மூன்று நாள்களுக்கு மேல் இயந்திரங்களை இயக்காமல் இருக்கக்கூடாது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, இயந்திரங்களைக் கட்டாயமாக சுத்தம் செய்யவேண்டும். இயந்திரங்கள் அதிகம் தேவைப்படவில்லை என்றால், பிறரிடம் உள்ள இயந்திரத்தை வைத்தே நமக்கான தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளலாம். அதேபோல், நம்முடைய இயந்திரத்தையும் நம்முடையத் தேவைபோக, பிற நேரங்களில் பிறருக்காக இயக்கி அதன் மூலம் லாபம் ஈட்டலாம்.

தடையில்லாமல் தொடர்ந்து பிசினஸ் நடைபெற, இயந்திரங்கள் பேணிக் காக்கப்படுவது அவசியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்

(ஜெயிப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism