Published:Updated:

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 13

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 13
பிரீமியம் ஸ்டோரி
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 13

சிக்கலை உருவாக்கிய பிசினஸ்!சுரேஷ் பார்த்தசாரதி, Founder, Myassetsconsolidation.com Registered investment advisor, INA200000878ஓவியம்: கோ.ராமமூர்த்தி

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 13

சிக்கலை உருவாக்கிய பிசினஸ்!சுரேஷ் பார்த்தசாரதி, Founder, Myassetsconsolidation.com Registered investment advisor, INA200000878ஓவியம்: கோ.ராமமூர்த்தி

Published:Updated:
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 13
பிரீமியம் ஸ்டோரி
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 13
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 13

ல்மான், சென்னையில் ஒரு சிறந்த பிசினஸ்மேனாக திகழ்பவர். நாற்பது வயதைத் தொட்டிருக்கும் அவர், பிசினஸுக்கு வந்தது அவரே விரும்பாத ஒரு சூழலில்தான்.

இன்ஜினீயரிங் படித்துவிட்டுக் கட்டுமான கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்தார் சல்மான். ஃப்ளைவுட், க்ளாஸ், ஹார்டுவேர் எனக் கட்டுமானப் பொருள்கள் விற்பனை செய்யும் பிரமாண்டமான கடைகளை சல்மானின் அப்பா அமானுல்லா சென்னையில் நடத்தி வந்தார்.

தனக்குப் பிறகு தன் பிசினஸைக் கட்டுக்கோப்புடன் நடத்திச் செல்ல சல்மானை பிசினஸுக்கு அழைத்தார். பிசினஸின் பிக்கல் பிடுங்கல் நெருக்கடிகளை விரும்பாத சல்மான், தந்தையின் அழைப்பை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். அதன் பிறகும் வற்புறுத்தல் தொடரவே, சல்மான் தன் தம்பி இம்ரானைக் கைகாட்டியுள்ளார். இம்ரானோ வெளிநாட்டுக்குப் போவதே தன்  விருப்பம் என்று சொல்லிவிட்டு, அடுத்த ஆறு மாதங்களில் துபாய்க்குச் சென்றுவிட்டார்.

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 13

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!மீண்டும் சல்மானைக் கெஞ்சிக் கூத்தாடி பிசினஸுக்கு அழைத்து வந்தார் அமானுல்லா. அப்பாவின் மனதைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்பதற்காக பிசினஸை ஏற்றுக்கொண்டார்  சல்மான்.

தன் 26 வயதில் பிசினஸில் அடியெடுத்து வைத்த சல்மானுக்கு ஆரம்பக் காலத்தில் பிசினஸில் ஆர்வம் இல்லாமல்தான் இருந்தது. ஆனால், ஒன்றிரண்டு வருடங்களில் தன் பிசினஸ் மீதான ஈர்ப்பை உருவாக்கிக் கொண்டார் சல்மான். பல புதிய உத்திகளைக் கையாண்டு காலத்துக்கு ஏற்றவாறு பிசினஸில் மாற்றங்களைக் கொண்டு வந்தார். அவருடைய உத்திகள் வெற்றியைக் கொடுத்தது. பிசினஸ் பலமடங்கு லாபத்தை வாரிக்கொடுக்க ஆரம்பித்தது. வெற்றியின் உச்சத்தில் பறந்தார் சல்மான். ஆனால், அந்த  வெற்றியே அவரைச் சிக்கலுக்குள் கொண்டுபோய்த் தள்ளியது.

பிசினஸ் பட்டையைக் கிளப்புகிறதே என்று மகிழ்ந்தவர், லாபமாகக் கிடைத்த ஒட்டுமொத்தப் பணத்தையும் பிசினஸிலேயே போட்டார். நிறைய பொருள்களை வாங்கி குடோனில் அடுக்கினார். சில கிளைகளையும் திறந்து ஆட்களை நியமித்தார்.

கையில் இருந்த அத்தனைப் பணத்தையும் பிசினஸில் கொட்டிக் கரைத்த சமயத்தில்தான் உச்சத்தில் இருந்த ரியல் எஸ்டேட் துறை தலைகீழாகக் கவிழ்ந்தது. கட்டுமானப் பணிகள் பாதியிலேயே முடங்கிப் போயின. கட்டுமானத் துறையை முழுக்க நம்பி இருக்கும் சல்மானின் பிசினஸ் டல்லடிக்க ஆரம்பித்தது. எதிர்பார்த்த வருமானம் வராத நெருக்கடியான சூழலில்தான் சல்மான் என்னைத் தேடி வந்து சந்தித்தார். ‘நிதி ஆலோசனை, ஒருவருக்கு ஏன் அவசியம்?’ என்ற கட்டுரையை வார இதழ் ஒன்றில் படித்துவிட்டு, அதன் உந்துதலால் வந்ததாகச் சொன்னார்.

சல்மானுக்கு ஐந்து மற்றும் நான்கு வயதில் இரண்டு மகன்கள். மனைவி பட்டப்படிப்பு படித்திருந்தாலும், பிசினஸில்  ஈடுபாடு இல்லாதவர். குடும்பச் சூழலைக் கவனித்தாகவேண்டிய கட்டாயம் சல்மானுக்கு இருக்கவே, கொஞ்சம் படபடப்புடன் பேசினார்.

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 13

“பிசினஸ் நன்றாகத்தான் போனது.அதனால்தான் மொத்தப் பணத்தையும் அதில் முதலீடு செய்தேன். அது நான் செய்த பெரிய தவறுதான்” என தான் செய்த தவறைத் தெளிவாக உணர்ந்தவராகவே பேசினார் சல்மான்.

சல்மான் தன் நிறுவனத்துக்கு மட்டும் காப்பீடு எடுத்திருந்தார். தனக்கும், தன் குடும்பத்தாருக்கும் எந்தக் காப்பீடும் எடுக்கவில்லை. இரண்டு மகன் களின் படிப்புக்கும் திட்டமிடவில்லை என்கிற கவலை அவரை வாட்டியது. மகன்களின் மேற்படிப்புக்கு ஆளுக்கு ஒரு கோடி ரூபாய் சேர்த்தாக வேண்டும் என்றார். ஓய்வு பெற்று வீட்டிலிருக்கும் தன் அப்பாவுக்கு ஆண்டுக்கு 5 முதல் 10 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்றார். ஆனால், தனது ஓய்வு காலத்துக்கு திட்டம் எதுவும் தேவையில்லை என்றார்.

பிசினஸ் மூலம் கிடைத்த வருமானம் குறைந்த நிலை யிலும், வருகிற வருமானத்தில் எல்லாச் செலவுகளும் போக மீதம் ரூ.2 லட்சம் வரை இருப்பதைக் கணக்குப் போட்டு, சல்மானுக்கு காண்பித்தேன். எவ்வளவு லாபம், எவ்வளவு மீதம் என்கிற தெளிவு கிடைத்த பின் சல்மானுக்கு நம்பிக்கை வரத் தொடங்கியது.

இதன்பிறகு சல்மானுக்கு இலக்குகளுக்கு ஏற்ப முதலீடுகளைத் திட்டமிட்டுக் கொடுத்தேன். மூன்று கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளும்படியும், குறைந்தபட்சமாக ரூ.10 லட்சத்துக்காவது ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளும்படியும் சொன்னேன்.

இன்னொரு முக்கியமான விஷயம், பிசினஸ் செய்கிறவர்கள் அதன் மூலம் கிடைக்கும்  லாபத்திலிருந்து குறிப்பிட்ட ஒருபகுதியை பிசினஸை வளர்த்தெடுக்க ஒதுக்கவேண்டும். இதனை பிசினஸ் டெவலப்மென்ட் ஃபண்ட் என்பார்கள். பிசினஸ் டெவலப்மென்டுக்காக மாதம் ரூ.50,000 ஒதுக்கி முதலீடு செய்யும்படி சல்மானிடம் அறிவுறுத்தினேன்.  ஓய்வு காலத்துக்குக் குறைந்தபட்சம் ரூ.5 கோடியாவது இருப்பதுதான் பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்லி, அதற்காக மாதம் ரூ.50,000 முதலீட்டை ஆரம்பிக்கச் சொன்னேன்.

பிசினஸிலிருந்து எவ்வளவு லாபம் கிடைத்தாலும் அதை அப்படியே பிசினஸிலேயே முதலீடு செய்வது கூடாது. அதில் ஒருபகுதியை, எதிர்காலத் தேவைகளை நிறைவேற்று வதற்காக வேறு இடங்களில் முதலீடு செய்வது அவசியம். 

பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடுகளைச் செய்வதும் ஒருவகையில் பிசினஸ்தான் என்பதை சல்மானுக்குப் புரிய வைத்தேன்.

பொதுவாகவே, வெவ்வேறு முதலீடுகளில் பணத்தை முதலீடு செய்யவேண்டும்; அப்போதுதான் ஒன்று இறங்கினாலும், ஒன்று ஏற்றத்தில் இருந்து பெரிய நஷ்டத்திலிருந்து காப்பதாக இருக்கும் என முதலீட்டாளர்களுக்கு அறிவுறுத்துவது உண்டு. இது பிசினஸ் மேன்களுக்கும் பொருந்தும் என சல்மானுக்கு உணர்த்தினேன்.

பிசினஸில் எவ்வளவு முதலீடு செய்வது, மற்ற முதலீட்டுத் திட்டங்களில் எவ்வளவு முதலீடு செய்வது என்ற தெளிவுடன் சல்மான் முதலீடுகளைத் தொடங்கினார். ஒருசில மாதங்கள் கழிந்தபின் எனக்கு போன் செய்தார். அவர் குரலில் புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும், உற்சாகமும் நிரம்பி வழிந்ததை என்னால் நன்றாகவே உணர முடிந்தது!      

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism