Published:Updated:

டிசம்பர் காலாண்டு முடிவுகள்! ஒரு கண்ணோட்டம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டிசம்பர் காலாண்டு முடிவுகள்! ஒரு கண்ணோட்டம்
டிசம்பர் காலாண்டு முடிவுகள்! ஒரு கண்ணோட்டம்

ரெஜி தாமஸ், முதலீட்டு ஆலோசகர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
டிசம்பர் காலாண்டு முடிவுகள்! ஒரு கண்ணோட்டம்

டப்பு நிதி ஆண்டின் (2016-17) மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கைகளை 4,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அவற்றில் சில முக்கியமான போக்குகளைப் பார்க்கலாம்.

டிசம்பர் காலாண்டு முடிவுகள்! ஒரு கண்ணோட்டம்


கடந்த மூன்றாம் காலாண்டில், யாருமே எதிர்பாராத வண்ணம், பண மதிப்பு நீக்க நடவடிக்கை அனைவரையும் திக்குமுக்காட வைத்தது. மத்திய அரசின் இந்த  திடீர் அறிவிப்பினால், இந்தியப் பொருளாதாரம் பாதிப்படைந்தது. இந்தியாவில் 80 சதவிகிதத்துக்கு மேலான பரிவர்த்தனைகள் ரொக்கமாக  நடைபெறுகின்றன. இந்த நிலையில், திடீரென்று நடந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை பணத் தட்டுப்பாடுப் பிரச்னையை உருவாக்கியது. இது  கார்ப்பரேட் நிறுவனங்களின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டது. நிறுவனங்களின் வருவாய் கடுமையாக பாதிப்படைந்தது.

மூன்றாம் காலாண்டில், 4,172 நிறுவனங்கள் தற்போது வரை காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளன. ஆனால், இந்த முடிவுகள் முதலீட்டாளர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இல்லை.

இதற்கு முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது மூன்றாம் காலாண்டு முடிவில், விற்பனை 2.75% அதிகரித்திருக்கிறது. செயல்பாட்டு லாபம் 2.58% உயர்ந்திருக்கிறது. ஆனால், நிகர லாபம் 10% சரிந்துள்ளது. 

டிசம்பர் காலாண்டு முடிவுகள்! ஒரு கண்ணோட்டம்

நிறுவனங்களின் வரலாற்றில், கடந்த மூன்றாம் காலாண்டு நிதிநிலை முடிவுகள் ஒரு மோசமான காலாண்டு முடிவுகளாக இருக்கின்றன. எனவே, துறைவாரியான செயல்பாடு், மத்திய அரசின் பட்ஜெட் ஆகியவற்றின் அடிப்படையில் முதலீட்டு முடிவுகளை எடுக்கவும். 

 ஆட்டோ

இந்தத் துறையில் மாருதி, டி.வி.எஸ் மோட்டார்ஸ், எஸ்கார்ட்ஸ், எம் அண்ட் எம் ஆகிய நிறுவனங்கள் வளர்ச்சியைச் சந்தித்தன. அசோக் லேலாண்ட், டாடா மோட்டார்ஸ், ஹீரோ ஆகிய நிறுவனங்களின் வளர்ச்சி மந்த நிலையிலேயே இருந்தன. இந்த பட்ஜெட்டில் கிராமப்புறப் பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இதனால் டிவிஎஸ் மோட்டார்ஸ், எஸ்கார்ட்ஸ், எம் அண்ட் எம் போன்ற நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்புண்டு.  

 வங்கி

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளில் கோடிக்கணக்கான பணம் உபரியாக இருக்கிறது. இது, வங்கிகள் வழங்கும் கடன் வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க உதவும். 2017-18-ம் நிதி ஆண்டில் இந்திய வங்கித் துறைகளில் கடன் வளர்ச்சி விகிதம், 11-13% அதிகரிக்கும் என்று ஸ்டாண்டர்ட் அண்ட் பூவர்ஸ் மதிப்பிட்டுள்ளது. எஸ்பிஐ, யெஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, ஃபெடரல் வங்கி மற்றும் டிசிபி வங்கி குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளன. இந்த வங்கிகளின் வளர்ச்சி தொடரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

 ஐ.டி

அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வு, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான கொள்கை முடிவுகளில் மாற்றம் போன்றவற்றினால் ஐ.டி துறையின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்படலாம். இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ போன்ற அமெரிக்காவைச் சார்ந்துள்ள ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி, குறைய வாய்ப்பு இருக்கிறது. எனினும், இந்தக் காலாண்டில் வக்ராங்கி, டேக் சொல்யூஷன்ஸ், பெர்சிஸ்டண்ட் சொல்யூஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வளர்ச்சி காண வாய்ப்புண்டு. 

டிசம்பர் காலாண்டு முடிவுகள்! ஒரு கண்ணோட்டம்

பார்மா

இந்திய பார்மா துறை, அளவின் அடிப்படையில் 30% மற்றும் மதிப்பின் அடிப்படையில் 10% அமெரிக்க ஜெனரிக் சந்தையைச் சார்ந்தே இருக்கிறது. இதன் மதிப்பு 70 முதல் 80 பில்லியன் டாலர். உலகில் ஜெனரிக் மருந்து ஏற்றுமதியில், அளவின் அடிப்படையில் 20 சதவிகிதத்துக்கு மேல் இந்தியாவின் பங்களிப்பாக இருக்கிறது. இது மேலும் அதிகரிக்கும். உள்நாட்டில் சவால்களுக்கு மத்தியிலும் பயோகான், நாட்கோ பார்மா, அஜந்தா, ஆரோபிந்தோ, லூபின், கிளென்மார்க், பிரமல் போன்ற நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன.

 சிமென்ட்

இந்தியா, உலகின் இரண்டாவது பெரிய சிமென்ட் உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோராக உள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வீட்டு வசதியில் மத்திய அரசு, அதிக கவனம் செலுத்தி வருகிறது. சுவாச் பாரத், சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் ஸ்மார்ட் நகரங்கள் ஆகிய திட்டங்களுக்கு சிமென்ட், அதிக அளவில் தேவைப்படும். இந்தியா சிமென்ட்ஸ், அல்ட்ராடெக், ராம்கோ, ஜே.கே. சிமென்ட் மற்றும் டால்மியா பாரத் போன்ற நிறுவனங்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. இந்தக் காலாண்டிலும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் ஸ்திரமாகவே இருக்கின்றன.

 ரீடெய்ல் அண்ட் லாஜிஸ்டிக்


இந்தத் துறை, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 10% பங்களிக்கிறது. தற்போதைய சூழ்நிலையில், இந்தத் துறையின் வளர்ச்சி 12% என்ற விகிதத்தில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கை சில்லறை வணிகத்தை பாதித்தது. எனினும், ட்ரெண்ட், டைட்டன், ஐடிசி, ஏஜிஸ் லாஜிஸ்டிக்ஸ், வீமார்ட் ரீடெய்ல், காட்ஃப்ரே ஃபிலிப்ஸ், ஃப்யூச்சர் ரீடெய்ல், செஸ்க் போன்ற நிறுவனங்களின் வளர்ச்சி சிறப்பாகவே இருந்தது. இந்த நிறுவனங்களின் வளர்ச்சி, எதிர்காலத்தில் நன்றாக இருக்கும் எனலாம். 

 கெமிக்கல்ஸ் & ஃபெர்டிலைசர்ஸ்


விவசாய ஜிடிபி 4.1% உயர்ந்து, ரூ.1.11 டிரில்லியன் கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில், நிச்சயமற்ற பருவமழை மற்றும் வறட்சி போன்ற காரணங்களால் விவசாயத்தின் வளர்ச்சி பாதிப்படைந்துள்ளது. இருப்பினும், விவசாயத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. யூபிஎல், குஜராத் அல்காலிஸ், ராலிஸ், எக்செல் கிராப்கேர், ஜிஹெச்சிஎல், நவீன் புளோரின் போன்ற நிறுவனங்கள் நன்கு செயல்பட்டு வருகின்றன.

இந்தக் காலாண்டில் தாக்கத்தை உண்டாக்க வாய்ப்புள்ள சில காரணிகள்:

    1. அமெரிக்க ஃபெட்டின் வட்டி விகிதம் உயர்வு, 2. ஆர்.பி.ஐ.யின் வட்டி விகித உயர்வு. 3. கச்சா எண்ணெய் விலை உயர்வு - இது இந்தியாவில் பணவீக்கத்தை உயர்த்தும், 4 ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள், 5. அமெரிக்காவின் குடிபெயர்ந்தவர்கள் குறித்த கொள்கை முடிவு - இது ஐடி வர்த்தகத்தைப் பாதிக்கும், 6. வரி வசூல், 7. ஜிடிபி/ ஐஐபி வளர்ச்சி. இந்தக் காரணிகளை மனதில் கொண்டு உங்கள் முதலீட்டு முடிவுகளை எடுப்பது நல்லது!

- சோ.கார்த்திகேயன்

கலைச் சொற்கள்!

டிசம்பர் காலாண்டு முடிவுகள்! ஒரு கண்ணோட்டம்

நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளை சரியாகப் புரிந்துகொள்ள, இங்கே முக்கிய கலைச் சொற்களுக்கான பொருளைத் தந்திருக்கிறோம்.

புத்தக மதிப்பு (Book Value)

 ஒரு நிறுவனத்தின் மொத்தச் சொத்து மதிப்பிலிருந்து அதன் கடன்களைக் கழித்தால் கிடைக்கும் மதிப்புதான் புத்தக மதிப்பு. சுருக்கமாக, ஒரு நிறுவனத்தை விற்றால் என்ன தொகைக் கிடைக்குமோ, அதுதான் அந்த கம்பெனியின் புத்தக மதிப்பு.

 முக மதிப்பு (Face Value)

 ஒரு பங்கின் முக மதிப்பு என்பது, பங்கின் மூலம் பங்கு மூலதனத்துக்குப் போய்ச் சேரும் தொகையைக் குறிப்பதாகும். இந்த மதிப்புக்குதான் டிவிடெண்ட் வழங்கப்படுகிறது. இந்த முக மதிப்பு 1, 2, 5, 10 ரூபாய் என்பதுபோல் இருக்கும்.

 இ.பி.எஸ் (Earnings Per Share)

 ஒரு பங்கு சம்பாதித்து தரும் லாபமே இ.பி.எஸ். எனப்படுகிறது. குறிப்பிட்ட காலத்தில் (காலாண்டு, அரையாண்டு, ஓராண்டு என்பதுபோல்) ஒரு பங்கின் மூலம் எவ்வளவு வருமானம் கிடைத்திருக்கிறது என்பதைக் குறிப்பது இது. நிறுவனத்தின் நிகர லாபத்தை, அதன் மொத்தப் பங்குகளின் எண்ணிக்கையால் வகுத்தால் இது கிடைக்கும். இ.பி.எஸ். அதிகமாக இருக்கும் பங்குகளை வாங்கினால் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

 செயல்பாட்டு லாப வரம்பு (Operating Profit Margin)

 நிறுவனம் வழக்கமாகச் செய்யும் செலவுகளான மூலப்பொருட்கள் விலை, பணியாளர் சம்பளம், வரிகள் மற்றும் தேய்மானத்துக்கு முந்தையச் செலவு போன்றவற்றை, அதன் விற்பனை வருமானத்திலிருந்து கழித்தபின் கிடைக்கும் லாபம், செயல்பாட்டு லாபம். இந்த லாபம், விற்பனை வருமானத்தில் எத்தனை சதவிகிதம் என்பதுதான் செயல்பாட்டு லாப வரம்பு.

 பி/பி.வி (Price to Book Value)

 நிறுவனப் பங்கின் விலைக்கும் புத்தக மதிப்புக்கும் உள்ள விகிதம் இது. அதாவது, பங்கின் சந்தை விலையை, பங்கின் புத்தக மதிப்பால் வகுக்கக் கிடைப்பது. இந்த விகிதம் குறைவாக இருந்தால் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்  (Market Capitalization)

 ஒரு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட மற்றும் முதலீட்டாளர்கள் வசம் உள்ள மொத்தப் பங்குகளின் சந்தை மதிப்புதான் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன். ஒரு கம்பெனி, எந்த அளவுக்குப் பெரியது என்பதை இது சுட்டிக்காட்டும்.

 பி/இ விகிதம் (Price to Earnings Ratio)

 ஒரு நிறுவனப் பங்கின் சந்தை விலைக்கும், அந்தப் பங்கின் இ.பி.எஸ்-க்கும் உள்ள விகிதம்தான் பி/இ விகிதம். இந்த விகிதம் குறைவாக இருக்கும் பங்குகளை வாங்கினால் கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

- சி.சரவணன்.

டிசம்பர் காலாண்டு முடிவுகள்! ஒரு கண்ணோட்டம்
டிசம்பர் காலாண்டு முடிவுகள்! ஒரு கண்ணோட்டம்
டிசம்பர் காலாண்டு முடிவுகள்! ஒரு கண்ணோட்டம்
டிசம்பர் காலாண்டு முடிவுகள்! ஒரு கண்ணோட்டம்
டிசம்பர் காலாண்டு முடிவுகள்! ஒரு கண்ணோட்டம்
டிசம்பர் காலாண்டு முடிவுகள்! ஒரு கண்ணோட்டம்
டிசம்பர் காலாண்டு முடிவுகள்! ஒரு கண்ணோட்டம்
டிசம்பர் காலாண்டு முடிவுகள்! ஒரு கண்ணோட்டம்
டிசம்பர் காலாண்டு முடிவுகள்! ஒரு கண்ணோட்டம்
டிசம்பர் காலாண்டு முடிவுகள்! ஒரு கண்ணோட்டம்
டிசம்பர் காலாண்டு முடிவுகள்! ஒரு கண்ணோட்டம்
டிசம்பர் காலாண்டு முடிவுகள்! ஒரு கண்ணோட்டம்
டிசம்பர் காலாண்டு முடிவுகள்! ஒரு கண்ணோட்டம்
டிசம்பர் காலாண்டு முடிவுகள்! ஒரு கண்ணோட்டம்
டிசம்பர் காலாண்டு முடிவுகள்! ஒரு கண்ணோட்டம்
டிசம்பர் காலாண்டு முடிவுகள்! ஒரு கண்ணோட்டம்
டிசம்பர் காலாண்டு முடிவுகள்! ஒரு கண்ணோட்டம்
டிசம்பர் காலாண்டு முடிவுகள்! ஒரு கண்ணோட்டம்
டிசம்பர் காலாண்டு முடிவுகள்! ஒரு கண்ணோட்டம்
டிசம்பர் காலாண்டு முடிவுகள்! ஒரு கண்ணோட்டம்
டிசம்பர் காலாண்டு முடிவுகள்! ஒரு கண்ணோட்டம்
டிசம்பர் காலாண்டு முடிவுகள்! ஒரு கண்ணோட்டம்
டிசம்பர் காலாண்டு முடிவுகள்! ஒரு கண்ணோட்டம்
டிசம்பர் காலாண்டு முடிவுகள்! ஒரு கண்ணோட்டம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு