நம் சமுதாயத்தில் முதலீடு என்றாலே அது ஆண்களுக்கு மட்டுமான விஷயம் என்றாகி விட்டது. பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற முதலீடுகள் ஆண்களின் தேர்வாக இருக்க, வங்கி எஃப்டி, சிட் ஃபண்ட், மாதாந்திர நகைச் சீட்டு போன்ற திட்டங்கள் பெண்களின் தேர்வாக இருக்கின்றன. ஆனால், புத்திசாலித்தனமாக யோசிக்கும் சில பெண்கள், விலைவாசி உயர்வை விட அதிக வருமானம் தரும் முதலீடுகளைத் தேர்வுசெய்து, அதில் நல்ல லாபமும் சம்பாதித்து வருகின்றனர். இது மாதிரியான முதலீடுகளைத் தொடங்க விரும்பும் பெண்கள், அவசியம் மனதில் கொள்ளவேண்டிய 5 விஷயங்கள் இனி...

1. ஆரோக்கியமே செல்வம்!

ஆரோக்கியமே செல்வம் என்பது அனைவருக்கும் பொருந்தும். இந்த விஷயத்தில் பெண்கள் சற்றுக் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும். காரணம், பெண்களின் உடல்நிலையைப் பொறுத்தவரை, இயற்கையாகவே பல ஹார்மோன் மாறுதல்கள் ஏற்படும். அதனால் பெண்கள், தங்களின் முதல் முதலீடாக மருத்துவக் காப்பீடு (ஹெல்த் இன்ஷூரன்ஸ்) பாலிசிகளை எடுக்கவேண்டும்.

பிரசவம், பெண்களுக்கு ஏற்படும் குறிப்பிட்ட நோய் பாதிப்புகளுக்கு இழப்பீடு அளிக்கும் ஒரு காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுங்கள். டாடா ஏஐஜி, ஹெச்டிஎஃப்சி, ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஆகிய நிறுவனங்கள், பெண்களுக்கு என்றே இதுபோன்ற சிறப்புக் காப்பீட்டுத் திட்டங்களை வைத்திருக்கின்றன. உங்களின் வயது, வருமானம், திருமண நிலை, பொறுப்புகள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, உங்களுக்கு ஏற்ற திட்டத்தைத் தேர்வுசெய்யுங்கள். இந்த இன்ஷூரன்ஸ் பாலிசிக்குக் கட்டும் பிரீமியத்துக்கு வரிச் சலுகையும் இருக்கிறது.

2. வரிச் சேமிப்புக்கான முதலீடுகள்

உங்கள் எதிர்கால பணத் தேவைகளை உணர்ந்து, அதனைப் பூர்த்திசெய்யும் வருமான வரிச் சேமிப்புத் திட்டங்களைச் தேர்வு செய்யுங்கள். வருமான வரிச் சலுகை அளிக்கும் முதலீடுகள் பிற்காலத்தில் நல்ல வருமானத்தைத் தரக் கூடியதாகவும் இருப்பது அவசியம். மாத வருமானம் ஈட்டும் ஒரு பெண்ணைச் சார்ந்து அவரது குடும்பம் இருக்கும்பட்சத்தில், அவர் தனக்கென ஆயுள் காப்பீட்டு (லைஃப் இன்ஷூரன்ஸ்) பாலிசியை எடுப்பது அவசியம். இந்த பாலிசிக்கு கட்டும் பிரீமியத்துக்கும் வரிச் சலுகை இருக்கிறது.

3.பெண்களுக்கான சிறப்புத் திட்டங்களில் முதலீடு

இன்ஷூரன்ஸ் அல்லது முதலீடு ( மியூச்சுவல் ஃபண்ட், டெபாசிட்) என எதுவாக இருந்தாலும், பெண்களுக்கு என இருக்கும் சிறப்புத் திட்டங்களை முதலில் கவனியுங்கள். முன்னணி இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் இரண்டு முறையேனும் பெண்களுக்கான சிறப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன. இது போன்ற திட்டங்களில் உள்ள விதிமுறைகளையும் பலன்களையும் நன்கு ஆராய்ந்து, அதில் உங்களுக்கு ஏற்ற ஒரு திட்டத்தைத் தேர்ந்தேடுங்கள்.

4.திட்டமிடத் தவறுவதும் தோல்விக்குத் திட்டமிடுவதே

முதலீடு செய்வது என்பது அறிவியல் மற்றும் கலையாகும். அறிவியல் முறையில் அதனை அணுக திட்டங்கள், இலக்குகள் தேவையாக இருக்கும். எனவே, முதலீட்டை ஆரம்பிக்கும்முன் திட்டமிடுங்கள். முதலீட்டின் மூலம் குறைந்தபட்சம் எவ்வளவு வருமானம் கிடைக்கும், எத்தனை ஆண்டுகள் இந்த முதலீட்டைத் தொடர இருக்கிறீர்கள், முதலீட்டின் மூலமான வருமானத்தில் எந்தச் செலவுகளை, தேவைகளை நிறைவேற்றப்போகிறீர்கள், இந்த முதலீடு எதிர்பார்த்த அளவுக்கு நல்ல லாபம் தராமல் போனால், அதற்கு மாற்று வழி என்ன என்பன போன்ற கேள்விகளைக் கேட்டு, பதிலைக் கண்டறி யுங்கள். இதன் மூலம், நீங்கள் கண்மூடித்தனமாக முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம்.

5. முதலீடுகள் ஆண்களின் கோட்டை மட்டும் அல்ல

இதனை பெண்கள் உணரவேண்டும். நமக்குத் தேவையான முதலீட்டுத் தகவல்களைப் படித்துத் தெரிந்துகொண்டால், முதலீடு செய்வது மிகவும் சுலபமான ஒன்றாகிவிடும். நீங்கள் ஏதேனும் ஒரு தவறு செய்யும்போது, உடனே நம்மால் இது முடியாத காரியம் என நினைத்துவிடாதீர்கள். முதலீட்டு விஷயத்தில் ஆண்களும் தவறு செய்வதுண்டு என்ற யதார்த்ததைப் புரிந்துகொண்டு, நீங்கள் என்ன தவறு செய்திருக்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடித்துத் தெளிவடையுங்கள். நீங்கள் உங்கள் மீது வைக்கும் நம்பிக்கையே, உங்களின் சுயமுன்னேற்றத்துக்கான முதல்படி.

இத்தகைய விஷயங்களை மனதில்கொண்டு முதலீடு செய்தாலே, நீங்கள் அதற்கான பலனை அனுபவிக்கலாம். முதலீடுகளில் ஆண்-பெண் என்ற வேறுபாடு இல்லை என்பதை இன்றைய பெண்கள் நிச்சயம் உணரவேண்டும்!

தொகுப்பு: எம்.ஆர்.சோபனா