Published:Updated:

கந்துவட்டி கொடுமை: மதுரை பட்டதாரிப் பெண் தற்கொலை

Vikatan Correspondent

மதுரை: கந்துவட்டி தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும்கூட, மதுரை மாவட்டத்தில் கந்துவட்டிக் கொடுமைகள் குறைந்தபாடில்லை. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன.

நேற்று இரவு பட்டதாரிப் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை அருகே உள்ள பெருங்குடியைச் சேர்ந்தவர் முருகதாஸ். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக உள்ளார். இவரது மனைவி உஷா, பி.ஏ. பட்டதாரி. கணவரின் வருமானம் போதாததால், குடும்பச் செலவுக்காக அதே பகுதியில் வசிக்கும் லட்சுமி என்ற பெண்ணிடம், கந்துவட்டிக்குப் பணம் வாங்கினாராம் உஷா. இதேபோல செண்பகவள்ளி, ராஜி,

##~~##

மாரியம்மாள் போன்றவர்களிடமும் அவர் கடன் வாங்கியிருக்கிறார். வட்டிக்கு மேல் வட்டி போட்டு சுமார் 25 ஆயிரத்தை உடனே கொடுக்கும்படி அவர்கள் உஷாவை வற்புறுத்தி இருக்கிறார்

கடும் நெருக்கடிக்கு ஆளான உஷா நேற்று இரவு வீட்டில் துக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதைத் தொடர்ந்து பெருங்குடி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்தனர். தற்கொலை செய்யும் முன், உஷா எழுதிய கடிதத்தில் மேற்கண்ட நான்கு\ பெண்களின் பெயரையும் எழுதி, கந்து வட்டிக் கொடுமையால்தான் தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதியிருந்தார்.

அந்தக் கடிதம் கிடைத்ததும், போலீஸார் கந்துவட்டிச் சட்டம் மற்றும் தற்கொலைக்குத் தூண்டியதாக நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விரைவில் அந்தப் பெண்கல் கைதுசெய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-கே.கே.மகேஷ்