Published:Updated:

சைரஸ் பூனவல்லா: குழந்தைகளின் காவலர்!

சைரஸ் பூனவல்லா: குழந்தைகளின் காவலர்!
பிரீமியம் ஸ்டோரி
சைரஸ் பூனவல்லா: குழந்தைகளின் காவலர்!

பிசினஸ் சூப்பர் ஸ்டார்கள்!ஜெ.சரவணன் - ஓவியம்: கோ.ராமமூர்த்தி

சைரஸ் பூனவல்லா: குழந்தைகளின் காவலர்!

பிசினஸ் சூப்பர் ஸ்டார்கள்!ஜெ.சரவணன் - ஓவியம்: கோ.ராமமூர்த்தி

Published:Updated:
சைரஸ் பூனவல்லா: குழந்தைகளின் காவலர்!
பிரீமியம் ஸ்டோரி
சைரஸ் பூனவல்லா: குழந்தைகளின் காவலர்!

ந்தயக் குதிரைகளைத் தயார் செய்யும் குடும்பத்தில் பிறந்து, உயிர் காக்கும் மருந்துகளைத் தயார் செய்யும் நிறுவனத்துக்குச் சொந்தக்காரர் ஆகியிருப்பவர்தான் இந்த சைரஸ் பூனவல்லா. வெறும் 12 ஆயிரம் டாலரில் தொடங்கிய அவரது பயணம், இன்று 12 பில்லியன் டாலர் மதிப்புடன் வளர்ந்து நிற்கிறது. அதைவிடவும் முக்கியமான ஒரு விஷயம், இன்று உலகில் உள்ள குழந்தைகளில் பாதிப்பேரின் உயிரைப் பாதுகாக்கும் மிக முக்கியமான நோய்தடுப்பு மருந்துகளை இவருடைய நிறுவனம்தான் தயார் செய்கிறது.  

சைரஸ் பூனவல்லா: குழந்தைகளின் காவலர்!

பந்தயக் குதிரையும், தொலைநோக்குப் பார்வையும்

குதிரைப் பந்தயத்துக்கு குதிரைகளைத் தயார் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர் சைரஸ் பூனவல்லா. பிரிஹான் மகாராஷ்ட்ரா காமர்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தவர். குதிரை வளர்ப்பு என்பது அவருடைய அப்பாவால் ஆரம்பிக்கப்பட்ட தொழில். அப்பாவுக்குப் பின்னர் இவரும், தம்பி சவாரேவும் அதனைக் கவனித்து வந்தார்கள்.

சைரஸுக்கு 20 வயதானபோது, இந்தியாவில் பரவலாக இருந்த சோஷலிசக் கொள்கைகளால், குதிரைப் பந்தையத்துக்கான எதிர்காலம் என்பது குறைய ஆரம்பித்தது. குதிரை வளர்ப்பு மட்டுமே போதாது, மேலும் என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தார். குதிரை வளர்ப்பிலேயே பணத்தை முதலீடு செய்யாமல், முதலீட்டை வேறு வகைகளில் செய்ய விரும்பினார்.

தன்னுடைய பள்ளி நண்பர் ஒருவருடன் சேர்ந்து  கார் வாங்கி, ரீமாடல் செய்து விற்கும் தொழிலைச் செய்ய ஆரம்பித்தார். முதலில் ஜாகுவாரின் டி-டைப் ஸ்போர்ட்ஸ் கார் மாடலை 120 டாலருக்கு உருவாக்கினார். ஆனால், வணிக ரீதியாக வளர்ச்சி அடைய, கார் தொழிலில் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டியிருந்தது. அந்த அளவுக்கு அவரிடம் பணம் இல்லை. மேலும், குறிப்பிட்டசாரார் மட்டுமே வாங்கும் கார்களை உற்பத்தி செய்வதற்குப் பதிலாக, இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தரப்பு மக்களுக்கும் பயன்படக்கூடிய பொருளை உற்பத்தி செய்வதுதான் வளர்ச்சிக்கு வழிசெய்யும் என்று நினைத்தார். அதனால் கார் உற்பத்தி செய்யும் யோசனையை விட்டுவிட்டு, வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தார். 

 வாக்சின் எனும் வரப்பிரசாதம்!

அவர்களுடைய குதிரைப் பண்ணையில் ஒருநாள், கால்நடை மருத்துவருடன் பேசிக்கொண்டிருந்த போதுதான் அவருக்கு தடுப்பு மருந்து தயாரிப்புப் பற்றி யோசனை வந்தது. மும்பையிலுள்ள அரசு நிறுவனம் ஒன்று அவர்களிடமிருந்து வயதான குதிரைகளை வாங்கிச்செல்லும். அந்தக் குதிரைகளின் சீரத்திலிருந்து தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டு வருவதைத் தெரிந்துகொண்டார். அந்த தடுப்பு மருந்துகள் டெட்டனஸ், டிப்தீரியா போன்ற நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருவதையும், இந்தியாவில் தடுப்பு மருந்துகள் பற்றாக்குறையால் எவ்வளவோ குழந்தைகள் இறந்துபோவது வாடிக்கையாக இருப்பதையும் தெரிந்துகொண்டார்.

நாட்டுக்குத் தேவையாக உள்ள இந்த மருந்துக்களை,  நாம் ஏன் உற்பத்தி செய்யக்கூடாது என்று முடிவு செய்து, அதில் உறுதியாக இறங்கினார். குதிரையின் சீரத்திலிருந்து இந்த மருந்துக்களைக் குறைந்த விலையில் அவரே தயார் செய்ய முடிவு செய்தார். அதற்காக 12 ஆயிரம் டாலரில், அவருடைய குதிரைப் பண்ணையிலேயே சிறிய அளவில் ஒரு சோதனைக் கூடத்தை உருவாக்கினார். 1966-ல் பூனவல்லா தொடங்கிய இந்திய சீரம் தயாரிப்பு நிறுவனம், ஏழை மக்களின் உயிர் காக்க பெரிதும் உதவியாக இருந்ததோடு, அவரது வளர்ச்சிக்கும் வரப்பிரசாதமாக மாறியது.

 இரண்டு கொள்கைகள்

பூனவல்லா ஆரம்பித்த இந்த நிறுவனம், கடந்த ஐம்பது ஆண்டுகளில் எவ்வளவோ சாதனைகளைப் படைத்திருக்கிறது. அவர் தனது முதல் தெராபட்டிக் ஆன்டி-டெட்டனஸ் சீரத்தை உருவாக்கி சந்தைக்குக் கொண்டுவர இரண்டு வருடங்கள் ஆனது. அதன் பிறகு 1974-ல் டிப்தீரியா, டெட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ் போன்றவற்றிலிருந்து குழந்தைகளைக் காக்கும் வாக்சின்களைத் தயாரித்தார். அதைத் தொடர்ந்து பாம்புக் கடிக்கான ஆன்டி-வெனோம் சீரத்தை உருவாக்கினார். 1989-ல் அவரது நிறுவனம் மீசல்ஸ் வாக்சினை உருவாக்கியது. போலியோவுக்கான தடுப்பு மருந்துக்களையும் இந்த நிறுவனம் மலிவாகத் தயார் செய்தது. 1990-களில் இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனமாக மாறியது.

1.3 மில்லியன் தடுப்பு மருந்துகளை தற்போது, உற்பத்தி செய்யும் உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனமாக பூனவல்லாவின் நிறுவனம் வளர்ந்துள்ளது.

இதற்குக் காரணம் அவருடைய இரண்டு கொள்கைகள்தான். ஒன்று இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குழந்தையும் நோய்களிலிருந்து காக்கப்பட வேண்டும். அதற்கேற்ப அனைவருக்கும் மருந்துகள் மலிவாகக் கிடைக்க வேண்டும். இரண்டாவது, தரத்தில் ஒருபோதும் சமரசம் இல்லை. உயிர் காக்கும் மருந்துகள் ஒருபோதும் உயிரைப் பறித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். தரமும், மலிவான விலையும்தான் உலகம் முழுவதும் சீரம் நிறுவனத்தின் வாக்சின்கள் அதிகம் விற்பனை ஆவதற்கும், குழந்தைகளின் இறப்புகள் வெகுவாகக் குறைந்ததற்கும் முக்கியக் காரணங்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சைரஸ் பூனவல்லா: குழந்தைகளின் காவலர்!

சர்வதேச அங்கீகாரம்

பூனவல்லா நிறுவனத்தின் மருந்துகள் தரமாகவும், மலிவாகவும் இருந்ததால் சர்வதேச அளவில் அதற்கு மவுசு அதிகரித்தது. 1980-களில் ஐக்கிய நாடுகள் அமைப்புகள், வாக்சின்களுக்கு இந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டதன் மூலம் பூனவல்லாவின் சீரம் நிறுவனத்துக்கு, பெரிய அளவில் திருப்புமுனை ஏற்பட்டது. உலக சுகாதார மையத்துடன் சேர்ந்து, உயர்தரமான வாக்சின்களை இந்திய மண்ணிலிருந்து, ஐக்கிய நாடுகளின் மக்கள் நலன் அமைப்புகளான, யுனிசெஃப், பாஹோ  (PAHO -Pan American Health Organization) ஆகியவற்றின் மூலம் உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தார். 2000-ல் ‘அனைவருக்கும் ஆரோக்கியம்’ என்ற திட்டத்தை அரசு முன்னெடுத்தபோது, அதற்குத் தேவையான வாக்சின்களை பெரும்பாலும் பூனவல்லாவின் நிறுவனம்தான் கொடுத்தது.

உலக அளவில் வேறு எந்த நிறுவனத்தை விடவும் அதிகமாக வாக்சின்களை உற்பத்தி செய்து உலகுக்கு வழங்கிக்கொண்டிருந்தார் பூனவல்லா. 141 நாடுகளில் இவருடைய நிறுவனத்தின் வாக்சின்கள் விற்பனை ஆகின்றன. கடந்த நிதி ஆண்டில் ரூ. 3,636 கோடி வருவாயை ஈட்டிய சீரம், ரூ. 1,741 கோடியை லாபமாக ஈட்டியிருக்கிறது.

சர்வதேசப் பொருளாதாரம் மந்தநிலையில் இருந்த சமயங்களில்கூட, தொடர்ந்து தன் நிறுவனத்தை விரிவுபடுத்துவதில் தீவிரமாக இருந்தார். தொடர்ந்து விரிவாக்கப் பணிகளுக்கும், விநியோகத்துக்கும் முதலீடு செய்தார்.

2012-ல் நெதர்லாந்து அரசு நடத்தி வந்த பில்லோவன் (Bilhoven) பயலாஜிக்கல்ஸ் என்ற டட்சு வாக்சின் உற்பத்தி நிறு வனத்தை வாங்கினார். நஷ் டத்தில் இயங்கிக் கொண்டி ருந்த அந்த நிறுவனத்தில், மூன்று வருடங்களில் 78 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்தி ருக்கிறார். பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களை வாங்கியிருக்கிறார். இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறார். 2014-ல் சிப்லாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, பீடியாட்ரிக் வாக்சின்களை சர்வதேச அளவில் கொண்டுசெல்ல முடிவுசெய்தார். மேலும், சீரமும் சிப்லாவும் இணை வதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டி ருக்கின்றன.

 சாதனைகள் பல

சைரஸ் பூனவல்லா, தனது 25 வயதில் தொடங்கிய இந்த நிறுவனம், வரலாற்றில் பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது. வாக்சின்களை மிக மலிவாக எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் செய்ததால் தன்னுடைய கொள்கையிலும் வென்று, பிசினஸிலும் வென்று காட்டியிருக்கிறார். அதுவும் பெரிய  அளவில்  விளம்பரங்களோ புரமோஷன் களோ இல்லாமலேயே இந்த வளர்ச்சியைக் கண்டிருக்கிறார். விரைவில் பங்குச் சந்தையிலும் கால்பதிக்க இருக்கிறது சீரம். ப்ளூம்பர்க் நிறுவனத்தின் கணிப்புப்படி விரைவில் பூனவல்லாவின் சீரம் தயாரிப்பு நிறுவனம்,  இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பங்கு நிறுவனமாக விளங்க இருக்கிறது. 12 பில்லியன் டாலர் மதிப்புக்கொண்ட இந்த நிறுவனத்தின் 10 சதவிகிதப் பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளார்கள். கடந்த 50 ஆண்டுகளாக இல்லாமல் இப்போது பங்குச் சந்தைக்கு வர வேண்டிய காரணம், பணத் தேவைக்காக அல்ல. மாறாக, இதன் மூலம் கிடைக்கும் பணத்தை கல்வி, மருத்துவம் போன்ற மக்கள் நலக் காரியங்களுக்காகப் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். 

 குதிரையும் கார்களும்

இவ்வளவு பெரிய நிறுவனத்தை நிர்வகித்து வந்தா லும், தனது வாழ்க்கையைத் தொடங்கி வைத்த குதிரைகள் மீது இப்போதும் அதீத காதல் கொண்டிருக்கிறார். இப்போ தும் குதிரைப் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். சர்வதேச குதிரைப் பந்தய ஆணையத்தின் பிரதிநிதியாக இருக்கிறார். ஆசிய குதிரைப் பந்தயத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இருந்திருக்கிறார். அவருடைய குதிரைகள், 342 கிளாசிக்குகளை வென்று உலக சாதனை படைத்துள்ளன. இப்போதும் தினமும் தன்னு டைய குதிரை லாயத்தைப் பார்த்துவிட்டுத்தான், பிற காரியங்களைப் பார்க்கச் செல்கிறார். கார்களின் மீது அவருக்கு அலாதி ஆர்வம் உண்டு. அதுவும் ஸ்போர்ட்ஸ் கார்கள் மற்றும் ஆர்டரின் பேரில் தயாரிக்கப்படும் லிமோசைன் கார்கள் என்றால் அவ்வளவு பிரியம்.

கடந்த 50 வருடங்களாக, உலக அளவில் உள்ள ஏழை மக்களின் உயிரைக் காக்கும் மருந்துகளைத் தயார் செய்து வந்த பூனவல்லாவுக்கு, 1988-ல் புனே பல்கலைக்கழகம், ஆன்டி வாக்சின்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியதற்காக  வும், சமூகத்தில் அவர் ஏற்படுத்திய சமூக பொருளாதாரத் தாக்கத்திற்காகவும் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது.