Published:Updated:

‘சம்பளத் தேதி’ கடன்... ஈஸியா ஒரு கைமாத்துக் கடன்!

‘சம்பளத் தேதி’ கடன்... ஈஸியா ஒரு கைமாத்துக் கடன்!
பிரீமியம் ஸ்டோரி
‘சம்பளத் தேதி’ கடன்... ஈஸியா ஒரு கைமாத்துக் கடன்!

லதா ரகுநாதன்

‘சம்பளத் தேதி’ கடன்... ஈஸியா ஒரு கைமாத்துக் கடன்!

லதா ரகுநாதன்

Published:Updated:
‘சம்பளத் தேதி’ கடன்... ஈஸியா ஒரு கைமாத்துக் கடன்!
பிரீமியம் ஸ்டோரி
‘சம்பளத் தேதி’ கடன்... ஈஸியா ஒரு கைமாத்துக் கடன்!

நீங்கள் பர்சனல் லோன் வாங்க முடிவுசெய்து, பொதுத் துறை வங்கிகளின் வாசல்கதவைத் தட்டி, உங்களுக்குக் கடன் கிடைத்துவிட்டால், நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான். காரணம், பர்சனல் லோன் கேட்டு வருபவர்களுக்கு பொதுத் துறை வங்கி அதிகாரிகள் பெரும்பாலும் கடன் தருவதில்லை என்பதே உண்மை.  

நிலைமை இப்படி இருக்க, இந்தியாவில் தற்போது வேகமாக பிரபலமாகி வருகிறது சம்பளத் தேதிக் கடன் (Payday Loans) என்னும் புதிய வகைக் கடன். இந்தக் கடனை பொதுத் துறை வங்கிகளோ அல்லது தனியார் வங்கிகளோ தருவதில்லை. ரிஸ்க் எல்லாம் எங்களுக்கு ரஸ்க் மாதிரி என்று நினைத்து செயல்படும்  ஸ்டார்ட் அப் (Startup) நிறுவனங்கள்தான் அதனைத் தருகின்றன.

‘சம்பளத் தேதி’ கடன்... ஈஸியா ஒரு கைமாத்துக் கடன்!

இன்றைக்குப் பெரும்பாலான மாதச் சம்பளக்காரர்களின் சிக்கல், மாதக் கடைசியில் ஏற்படும் திடீர் செலவுகள்தான். கல்யாணம், விடுமுறைப் பயணம், மருத்துவத் தேவை என மாதக் கடைசியில் வரும் செலவுகளுக்கான பணத்தைக் கடன் வாங்கிச் சமாளிக்க முடியாதவர்கள், கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுத்து (கடன் வாங்கி) சமாளிக்கிறார்கள். கிரெடிட் கார்டின் மூலம் ஒரு நிமிடத்தில்  பணத்தை  எடுத்துவிடலாம். ஆனால், அதற்கான வட்டி மிக மிக அதிகம் என்பது அவசரத்தில் இருக்கும் இந்த மனிதர்களுக்குத் தெரிவதே இல்லை. தவிர, வாங்கிய கடனை சரியான தேதியில் திரும்பச் செலுத்தாவிட்டால்  கடும் அபராதம் விதிப்பார்கள் என்பதையும் புரிந்துகொள்வதில்லை.  இப்படி உருவாகும் நிதித் தேவைகள் குறுகிய காலத்துக்கானது என்பது முக்கியமான விஷயம்.  இப்படிப்பட்டக் கடன் தேவைப்படுவர்களின் மாதச் சம்பளம் ரூ.10,000-லிருந்து ரூ.50,000 வரை  இருக்கலாம். பணம் தேவைப்படும்போது கிடைக்காமல், இவர்கள் படும் அவஸ்தையானது அதிகம்தான். இதுமாதிரியான கடன்களுக்கு வங்கிகளில் மிகக் குறுகிய காலக் கடன் எதுவும் கிடைப்பதில்லை.  

ஆனால், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தரும் இந்த கடன்களைப் பெற கால்கடுக்கக் காத்துக் கிடக்கவேண்டியதில்லை. ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பத்தைச் சமர்பித்து, சம்பளப் பட்டியல், பான் கார்டு, வீட்டு முகவரிக்கான ஆதாரம் ஆகியவற்றை ஆன்லைனில் கொடுத்தாலே போதும், சில நிமிடங்களில் இந்தக் கடன் கிடைத்து விடும். டிஜிட்டல் சிக்னேச்சர் வசதி இருந்தால், இந்தக் கடன் கிடைப்பது இன்னும் எளிது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘சம்பளத் தேதி’ கடன்... ஈஸியா ஒரு கைமாத்துக் கடன்!இந்தக் கடன் பெறத் தேவையான ஆவணங்களை, ‘பேடே’ கடன் கொடுக்கும் நிறுவனங்களின் பணியாளர்களே நேரில் வந்தும் வாங்கிக் கொள்கிறார்கள் என்பதெல்லாம் இந்தக் கடனில் இருக்கும் கவர்ச்சிகரமான அம்சங்கள்.

இந்த வகைக் கடன்களுக்கு சில வரைமுறைகள் உள்ளன. வங்கிகளில் செய்யப்படுவதுபோல், இந்தக் கடனை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல்  புதுப்பிக்க முடியாது. கடனை முழுவதும் கட்டிய பின்புதான், புதுக் கடன் பெற முடியும். இப்படி வாங்கப்படும் கடன்களின் எண்ணிக்கையைக் கொண்டு, அடுத்தமுறை கொடுக்கப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தை சில நிறுவனங்கள் குறைக்கின்றன.

இந்தக் கடனுக்கான வட்டி, சாதாரணமாக  நாள் கணக்கில் கணக்கிடப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 1% என்கிற விகிதத்தில் வட்டி வசூலிக்கப் படுகிறது. உதாரணமாக, ஒருவர் ஒரு லட்சம் ரூபாயைக் கடனாக வாங்குகிறார் எனில், நாள் ஒன்றுக்கு 1,000 ரூபாய் வட்டியாகச் செலுத்தவேண்டி இருக்கும். எவ்வளவு நாள்களில் கடனைத் திரும்பக் கட்டுகிறோமோ, அத்தனை நாள்களுக்கு மட்டும் வட்டி வசூலிக்கப்படும்.

கொடுக்கப்பட்ட நாள்களுக்குள் பணத்தைத் திரும்பக் கட்டாவிட்டால், நாள் ஒன்றுக்கு ரூ.750 வீதம் அபராதம் விதிக்கப்படும் என்பது முக்கியமான நிபந்தனை. இந்த அபராதத் தொகை நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும்.

தற்போது இந்தியாவில் சுமார் 85 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், இந்த வகையான கடனை அளித்து வருகின்றன. 2017-ம் ஆண்டில் மிக லாபகரமான தொழிலாக இது இருக்கக்கூடும் என்கிறார்கள் பலர். காரணம், மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு அதிக வட்டிக்குக் கடன் தரும் தொழிலானது முடங்கிப் போயிருக்கிறது. கந்து வட்டித் தொழில் செய்பவர்கள் ரொக்கமாகவே பணத்தைப் புரட்டி எடுப்பவர்கள். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின் பணத்தை ரொக்கமாகப் புரட்டி எடுக்க முடியாத நிலை உருவாகி இருப்பதால், அவர்கள் அந்தத் தொழிலையே விட்டு விலகி நிற்கிறார்கள். ஆனால், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் இயங்குவதால், அரசுக்கு உரிய கணக்கைக் காட்டி, வரி செலுத்தத் தயாராக இருக்கின்றன. இதனால் இந்தத் தொழில் லாபகரமாகச் செயல்படும் நிலை உருவாகி இருக்கிறது.  

இந்த நிறுவனங்கள், நாம் தரும் விவரங்களை மட்டும் நம்பி நமக்குக் கடன் தந்துவிடுவதில்லை.  இவர்களிடம் உள்ள அல்காரிதம்கள், சமூக ஊடகங்களில் நாம் தந்திருக்கும் விலாசம், நம் பதிவுகள், நம்மைத் தொடருபவர்கள், அவர்களின் கருத்துகள் (நம் பதிவுக்கு), மொபைல் போனின் பயன்பாட்டு முறைகள் போன்றவற்றை ஆராய்ந்து நம் கிரெடிட் ரேட்டிங் ஸ்கோரை முடிவு செய்கின்றன.

இந்த நிறுவனங்களிடம் நாம் கேட்டவுடன் கடன் கிடைத்தாலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் இந்த வகைக் கடன் முறை பல வருடங்களாக நடைமுறையில்  உள்ளன. இந்த நாடுகளில் 45% முதல் 50% வரை வட்டி வசூலிக்கப் படுவதால், இந்த வகைக் கடன்களை ‘லோன் ஷார்க்ஸ்’, அதாவது கடன் திமிங்கலம் என்று அழைக்கின்றன. நம் நாட்டில்கூட இந்த வகைக் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி மிக அதிகமே. 

இந்த வகைக் கடன்களில், திரும்பச் செலுத்த வேண்டிய காலம் மிக முக்கியம். ஓரிரு தினங்களில் கடனைக் கட்டி வெளியே வராவிட்டால், அசல் அளவுக்கு வட்டியும் கட்டவேண்டும் என்பதால், இந்தக் கடனை முடிந்தவரை வாங்காமல் இருப்பதே நல்லது!