Published:Updated:

பி.எஃப் எனும் அட்சய பாத்திரம்!

பி.எஃப் எனும் அட்சய பாத்திரம்!
பிரீமியம் ஸ்டோரி
பி.எஃப் எனும் அட்சய பாத்திரம்!

ப.முகைதீன் சேக்தாவூது

பி.எஃப் எனும் அட்சய பாத்திரம்!

ப.முகைதீன் சேக்தாவூது

Published:Updated:
பி.எஃப் எனும் அட்சய பாத்திரம்!
பிரீமியம் ஸ்டோரி
பி.எஃப் எனும் அட்சய பாத்திரம்!

நாட்டின் நிதிநிலைக்குப் பாதுகாப்பு அரணாக நிற்பது சேமிப்பு. இந்த வகையில், நமது இந்திய சொந்தங்களின் சராசரி சேமிப்பு, வருவாயில் 30% என்கின்றன ஆய்வுக் குறிப்புகள். வீட்டின் பாதுகாப்பான ஓரிடத்தில், களிமண் உண்டியலில் சில்லறைக் காசுகளைப் போட்டு துவக்கி வைக்கப்பட்ட சேமிப்பு, இன்றைக்கு பல்வேறு வடிவங்களில் பல்கிப் பெருகி நிற்கிறது.

இப்படிப்பட்ட சேமிப்பு, அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு அவசியம் என உணர்ந்து அமைக்கப்பட்டதுதான் ஜெனரல் பிராவிடண்ட் ஃபண்ட் (General Provident Fund) என்னும் வருங்கால பொது வைப்பு நிதி.

இயன்ற தொகையை இதில் சேமிக்கவும், சேமித்த பணத்தைத் தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளவும் வகை செய்யும் சேமிப்புக் கணக்கு (Savings Bank Account) போன்றதுதான் இந்த வருங்கால பொது வைப்பு நிதி. என்றாலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அட்சய பாத்திரம் என இதைக் குறிப்பிடும் அளவுக்கு இதன் சிறப்பம்சங்கள் அநேகம்.

பி.எஃப் எனும் அட்சய பாத்திரம்!

பணியில் உள்ளோரின் அடிப்படை ஊதியம் + தர ஊதியம் + தனி ஊதியம் + சிறப்பு ஊதியம் + அகவிலைப்படி ஆகியவற்றின் கூட்டுத்தொகையில் 12% குறைந்தபட்சத் தொகையை மாத சந்தாவாக இதில் கட்டவேண்டும். ஆனால், ஒட்டுமொத்த சம்பளத்தையேகூட மாத சந்தாவாக கட்டினாலும் வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள்.

வங்கி, அஞ்சலகம் போன்றவற்றின் சேமிப்புக் கணக்கில் செலுத்தப்படும் தொகைக்கு, தொகை செலுத்தப்பட்ட தேதியில் இருந்துதான் வட்டியைக் கணக்கிடுவார்கள். ஆனால், பொது வருங்கால வைப்பு நிதியில், ஊழியர்களுக்கு அனுகூலமான வட்டிக் கணக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது, நிர்வாக காரணங்களினால் ஓர் ஊழியரின் ஜனவரி மாத ஊதியம் பிப்ரவரியில்தான்  வழங்கப்படுகிறது என்றால், ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட சந்தாத் தொகைக்கு ஜனவரி மாதத்தி லிருந்தே வட்டி கணக்கிடப் படும்.

அரைச் சம்பள விடுப்பு, ஊதியமில்லா விடுப்பு, தற்காலிகப் பணிநீக்கம் போன்ற தருணங்களில் சந்தா செலுத்த தேவையில்லை. தற்காலிகப் பணி நீக்கம் முடிந்து பணிக்கு வந்தபின், ஒட்டுமொத்த சந்தா வையும் ஒரே தவணையில்கூட செலுத்திக் கொள்ளலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பி.எஃப் எனும் அட்சய பாத்திரம்!


 பணம் பெறுதல்

இந்த வைப்பு நிதியில் சேர்ந்துள்ள பணத்தை, தேவையானபோது எடுத்துக்கொள்ள மூன்று விதமான நடைமுறைகள் உள்ளன.

1. தற்காலிக முன்பணம்

இதன்படி, இருப்பில் உள்ள தொகையில் அதிகபட்சம் 75% வரை முன்பணமாகப் பெற்று, 36 தவணைகளுக்குள் திரும்பச் செலுத்தலாம். மதச் சடங்கு, கல்விச் செலவு, நிச்சயதார்த்தம், மருத்துவச் செலவு போன்றவை முன்பணம் பெறத் தகுதியான காரணங்கள். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பெறலாம்.

2. பகுதி இறுதி வரைவு

பார்ட் ஃபைனல் வித்டிரால் (Part Final Withdrawal) வகையில் பெறுகிற பணத்தைத் திரும்ப செலுத்த வேண்டியதில்லை. ஆனால், 15 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களும், பணி ஓய்வுக்கு (Superannuation)  பத்தாண்டு காலமே பாக்கி உள்ளவர்களும் மட்டுமே பகுதி வரைவு பெற முடியும். ஓராண்டுக்கு ஒருமுறை பணம் பெற அனுமதிக்கப்படுகிறது.

* உயர்கல்வி, திருமணம், நிச்சயதார்த்தம், மருத்துவச் செலவு மற்றும் ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் போன்ற வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்க,  அதிகபட்சம் ரூ.5,00,000.

* வீட்டு மனை மற்றும் வீடு வாங்குதல், வீடு கட்டுதல், ஓய்வு பெற்றபின் விவசாயம் செய்ய விளைநிலம் வாங்குதல், வணிக வளாகம் அமைத்துக் கொள்ளுதல் போன்றவற்றுக்கு அதிகபட்சம் ரூ.9,00,000.

3. 90% திரும்பப் பெறுதல் (90% Withdrawal)

இது ஓய்வு பெறுவதற்கு ஓராண்டுக்குள் உள்ளவர் களுக்குத் தரப்படுவது. எந்தக் காரணமும் சொல்லாமல், கால இடைவெளி கருதாமல் பெற்றுக் கொள்ளத்தக்கது.

இவை அனைத்தும் போக, மீதியுள்ள தொகையை ஓய்வு பெற்ற மறுநாள் பெற்றுக் கொள்ளலாம்.

 வட்டி விகிதம்


மத்திய அரசின் நிதியமைச்சகம்தான், பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்கிறது. முன்பெல்லாம் ஆண்டுக்கு ஒருமுறை நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதம், தற்போது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்படுகிறது.

நாற்பது ஆண்டுகளுக்குமுன் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8%. இது சிறுகச்சிறுக வளர்ந்து 1996-ல் 12 சதவிகிதமாக உயர்ந்தது. அது மட்டுமல்ல, தொடர்ந்து இரு ஆண்டுகள் வைப்புநிதியில் பணம் எடுக்காதவர்களுக்கு 1% கூடுதல் வட்டி வழங்கப் பட்டது. ஆக மொத்தத்தில், அதிகபட்ச வட்டி 13% பின்னர், வட்டி விகிதம் ஏறியது போலவே, இறக்கம் கண்டு 2003-ல் 8 சதவிகிதமாக நிலை கொண்டது. மீண்டும் 2012-ல் 8.8 சதவிகிதமாக உயர்ந்து, இன்றைய தேதியில் 8 சதவிகிதமாக நிற்கிறது. 

பி.எஃப் எனும் அட்சய பாத்திரம்!

அட்சய பாத்திரம்

வருங்கால பொது வைப்பு நிதி, அரசு ஊழியர் - ஆசிரியர்களுக்கு மட்டும் அல்லாமல் அரசுக்கும் ஒரு வகையில் உபயோகமாக இருக்கிறது. இதில் இருக்கும் மிகச் சிறப்பான அம்சங்களாக பின்வரும் விஷயங்களைச் சொல்லலாம்.

* சேமிப்புப் பணம் அரசின் (Public Account) கணக்கில் உள்ளதால், கூடுதல் பாதுகாப்பாக இருக்கும். மேலும், இந்தப் பணம் எப்படி வந்தது என்கிற கேள்வியும் எழாது.

* பணம் செலுத்தவும், எடுக்கவும் நிலையான விதிமுறைகள் உண்டு

*  ஊர் விட்டு ஊர் சென்றாலும் கணக்கை மாற்றத் தேவையில்லை.

* பணம் செலுத்தவோ, எடுக்கவோ வங்கிக்குச் செல்லவேண்டியதில்லை.

*  வருடம் தவறாமல் தரப்படும் மாநிலக் கணக்காயரின் (Accountant General) கணக்குச் சீட்டு.

இந்த முறையில் நிதி சேமிக்கப்படுவதன் மூலம் அரசுக்கு எப்படி அனுகூலம் கிடைக்கிறது தெரியுமா? பொது வருங்கால வைப்பு நிதியில் செலுத்தப்படும் சந்தா தொகை, அரசின் அன்றாட வரவு செலவு நடவடிக்கைக்கு (For Ways and Means Position) பயனுள்ளதாக உள்ளது. அது எப்படி?

அரசின் ஓர் ஆண்டுக்கான வரவு செலவு, ஒரு லட்சம் கோடி ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். இந்த ஒரு லட்சம் கோடிக்கான வரவு செலவு, ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக நடக்கிறது. அவ்வாறு நடக்கும்போது, இன்றைக்கு அரசின் செலவு ரூ.1,000 எனில், வரவு ரூ.900 என்றால் நிகரத் தொகை ரூ100. இந்திய சேம வங்கியின் பணம் (Reserve Bank Deosit) வைப்பு நிதி போன்ற வரவுகள், வரவு செலவு நடவடிக்கைகளை சமன் செய்ய ஏதுவாக அமைகின்றன.

 பொது வருங்கால வைப்பு நிதியின் எதிர்காலம்


31.3.2003-க்கு முன்பு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே, பொது வருங்கால வைப்பு நிதி பயன்பாட்டில் உள்ளது. 1.4.2003-க்குப் பின்பு பணிக்கு வந்தவர்களுக்குப் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (Contributory Pension Scheme) அமலில் உள்ளது. ஊதியம் + அகவிலைப் படியில்  செலுத்தப்படும் பங்களிப்புத் தொகையில் 10 சதவிகிதத்தைப் பணியில் இருக்கும்போது பெறமுடியாது.

ஆனால், 31.3.2003-க்கு முன்னர் பணியில் சேர்ந்தவர்களில் பெரும்பாலோர் ஓய்வு பெற்றுவிட்டனர். மீதி இருப்பவர்களும் 15 - 20 ஆண்டுகளில் ஓய்வு பெற்றுவிடுவர். அதன் பிறகு..?

பொது வருங்கால வைப்பு நிதி தொடருமா எனில், தொடரும். ஏனெனில், 1950-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ‘Tamilnadu  Contributory  Provident  Fund Pension Insurance Rules 1950’ என்ற சட்டத்தை ரத்து செய்துவிட்டுத்தான் பொது வருங்கால வைப்பு நிதி அமலாக்கம் பெற்றது. இதேபோல், ஒரு காலகட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, 1.4.2003-க்குப் பின் பணிக்கு வந்தவர்களுக்கும் பொது வருங்கால வைப்பு நிதி வசதி கிடைக்கலாம். ஓய்வூதியப் பலன்கள்கூட தரப்படலாம். எனவே, நம் எதிர்காலத்தை வளமாக்கிக்கொள்ள நம்பிக்கையோடு சேமிப்போம்!