Published:Updated:

கம்பெனி ஸ்கேன்

கம்பெனி ஸ்கேன்
பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி ஸ்கேன்

டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா லிமிடெட்!(NSE SYMBOL: TUBEINVEST)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

கம்பெனி ஸ்கேன்

டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா லிமிடெட்!(NSE SYMBOL: TUBEINVEST)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

Published:Updated:
கம்பெனி ஸ்கேன்
பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி ஸ்கேன்

சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா லிமிடெட். 1900-ல் ஆரம்பிக்கப்பட்டு, தற்சமயம் 28 வகையான தொழில்களில் ஈடுபட்டு வரும் (இவற்றில் ஒன்பது நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டவை) முருகப்பா குழுமத்தின் ஓர்  அங்கம்தான்  இந்த நிறுவனம்.

கம்பெனி ஸ்கேன்

நிறுவனத்தின் வரலாறு

சாதாரண மனிதனுக்கு உதவும் வகையிலான பொருள்களைத் தயாரித்து, அவற்றை அதிக எண்ணிக்கையில் வியாபாரம் செய்து பிரசித்திபெற வேண்டும் என்ற எண்ணத்துடன், இங்கிலாந்தைச் சார்ந்த டிஐ  நிறுவனத்துடன் இணைந்து 1949-ல்  ஆரம்பிக்கப்பட்டதுதான் டிஐ சைக்கிள்ஸ் நிறுவனம். ஹெர்குலிஸ் மற்றும் பிஎஸ்ஏ எனும் இரண்டு பிராண்டுகளில் சைக்கிள்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

1955-ல் பிரிஷிசன் ட்யூப்களை தயாரிப்பதற்காக  ‘டியூப் புராடக்ட்ஸ் ஆஃப் இந்தியா’ என்னும் நிறுவனம் தொடங்கப்பட்டது. 1959-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட டியூப் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஆஃப் இந்தியா லிமிடெட் (டிஐஐ) நிறுவனம், டிஐ சைக்கிள்ஸ் இந்தியா மற்றும் டியூப் புராடக்ட்ஸ் ஆஃப் இந்தியா என்ற இரண்டு நிறுவனங்களை இணைத்ததன் மூலம் உதயமான நிறுவனம் இந்த நிறுவனம் ஆகும்.

இங்கிலாந்தைச் சார்ந்த டிஐ நிறுவனம், படிப் படியாக (1978 மற்றும் 1985-ல்) பங்குகளை குறைத்துக் கொண்டதன் மூலம் கணிசமான அளவில் முதலீட்டைக் குறைத்துக்கொண்டது. 1990-களில் தன்னுடைய அடிப்படை தொழிலில்  ஸ்திரமான இடத்தை தக்கவைத்துக்கொள்ள மூன்று நிறுவனங்களை வாங்கியது டிஐஐ நிறுவனம். சதவாகனா செயின்ஸ் என்னும் நஷ்டத்தில் இயங்கிவந்த ஒரு நிறுவனத்தை வாங்கி, அதை லாபகரமாக இயக்க ஆரம்பித்தது டிஐஐ நிறுவனம்.
மேலும், ஜப்பானிய டியூப் தொழிற்சாலை ஒன்றையும், ஜெர்மானிய செயின் தயாரிப்பு நிலையம் ஒன்றையும் வாங்கி, அந்த இயந்திரங்களை வெற்றிகரமாக சென்னையில் நிறுவி (Re-Erection) ஏற்றுமதிக்கான உற்பத்தி வசதிகளைச் செய்து கொண்டது டிஐஐ நிறுவனம்.

1994-ல் இந்த நிறுவனம் ஜிடிஆர் (Global Depositary Receipt) வெளியிட்டதால், நிதி நிலைமைக்குத் தேவையான விரிவாக்கங்களை செய்துகொள்ளவும், நிறுவனங்களை வாங்கவும் தேவையான அளவுக்கு செளகரியமாக இருந்து வந்தது ஒரு குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கம்பெனி ஸ்கேன்

தொழில்துறைகள்

பொருள்களை உற்பத்தி செய்யும்  இன்ஜினீயரிங் பிரிவில் டியூப்கள், மதிப்புக் கூட்டப்பட்ட கோல்டு ரோல்டு ஸ்டீல் ஸ்ட்ரிப்புகள் மற்றும் டியூப்புலார் காம்போனென்ட்களை உற்பத்தி செய்கிறது இந்த நிறுவனம்.

சைக்கிள்கள் மற்றும் சைக்கிளுக்குத் தேவைப் படும் இதர உபகரணங்கள்,  ஆட்டோ மொபைல்கள் மற்றும் தொழில்துறையினர் உபயோகப்படுத்தும் செயின்கள், ஆட்டோ மொபைல்களுக்கான டோர் பிரேம்கள் மற்றும் சேனல்கள், கியர்கள் மற்றும் கியர் சம்பந்தப்பட்ட பொருள்கள் (சாந்தி கியர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் முதலீடு செய்ததன் மூலம் இண்டஸ்ட்ரியல் கியர்கள்), மெட்டல் ஃபார்ம்டு புராடக்ட்கள்,  டைகளை டிசைன் மற்றும் உற்பத்தி செய்தல் (டிஐ சுபமெக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் முதலீடுகள் செய்ததன் மூலம்) போன்ற துறைகளில் செயல்பட்டு வருகிறது டிஐஐ நிறுவனம்.

25 இடங்களில் இதற்கான உற்பத்தி வசதிகளைக் கொண்டிருக்கும் டிஐஐ நிறுவனம், அனைத்து முக்கிய ஆட்டோமொபைல் வாகன உற்பத்தி யாளர்கள் மற்றும் டயர் 2/3 சப்ளையர்கள் போன்றவர்களின் நம்பிக்கைக்குரிய உற்பத்தியாளராகத் திகழ்கிறது.
நிதி சார்ந்த துறைகளில் சோழ மண்டலம் ஃபைனான்ஸ் (46.2% முதலீடு), சோழமண்டலம்  எம்எஸ் இன்ஷூரன்ஸ் (60%  முதலீடு),  சோழமண்டலம் எம்எஸ் ரிஸ்க் சர்வீசஸ் (49.5% முதலீடு) போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது டிஐஐ நிறுவனம்.

இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ள தொழில்களைப் பொறுத்தவரை, ப்ரிஷிசன் ஸ்டீல் டியூப்கள் சப்ளை செய்வதில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாகவும், செயின்கள் மற்றும் ஃபைன் ப்ளாங்க்டு காம்போனென்டுகள் சப்ளை செய்வதில்  பெரியதொரு நிறுவனமாகவும், சைக்கிள் உற்பத்தியில் அகில இந்திய ரீதியாக இரண்டாவது பெரிய நிறுவனமாகவும்,  ரோல் ஃபார்ம்டு டோர் ப்ரேம்கள் சப்ளை செய்வதில் விரும்பி வாங்கக் கூடிய ஒரு சப்ளையராகவும் உருவெடுத்துள்ளது.

கம்பெனி ஸ்கேன்

இன்ஜினீயரிங் துறையில் (டியூப்ஸ் மற்றும் ஸ்ட்ரிப்ஸ்), ஆட்டோமொபைல் துறைக்கு  சிடிடபிள்யூ (கோல்டு ட்ரான் வெல்டட் டியூப்ஸ்) டியூப்கள் சப்ளை செய்வதில் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது இந்த நிறுவனம். இந்த வகை டியூப்கள், மோட்டார் சைக்கிள்களில்  ஷாக் அப்சார்பர் அசெம்ளி, சீட் அசெம்ளி, ஹேண்டில் பார் டியூப்கள், ஸ்விங் ஆர்ம் மற்றும் மெயின் ஃப்ரேம் போன்றவற்றை தயார் செய்ய உதவுகின்றன.

கம்பெனி ஸ்கேன்



நான்கு சக்கர வாகனங்களைப் பொறுத்தவரை, இந்த வகை டியூப்கள்  ஷாக் அப்சார்பர், இன்ஜின்,  வைப்ரேஷன் டேம்ப்பர்,  பவர் ஸ்டீரிங் சிஸ்டம், இன்ஸ்ட்ருமென்ட் பேனல் ஃப்ரேம்,  ஸ்டீரிங் காலம், ஆக்சில் ஷிப்ட், ஆன்ட்டி ரோல் பார்,  கேஸ் பில்டு ஸ்ட்ரட்,  டிரைவ் ஷாஃப்ட், சைட் இம்ப்பாக்ட் புரட்டக்‌ஷன், காம்ஷாப்ட், பேலன்ஸிங் ஷாஃப்ட் உள்ளிட்ட பலவற்றில் பயன் படுத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் ஆவடி மற்றும் திருத்தணி, பஞ்சாபில் உள்ள மொஹாலி, மஹாராஷ்டிராவில் பூனாவுக்கு  அருகே  ஷிர்வால்  என்ற இடங்களில் இந்த வகை டியூப்களை உற்பத்தி செய்யும் வசதி களைக் கொண்டிருப்பதால், வாடிக்கையாளர் களுக்கு மிக அருகே இருந்துகொண்டு சப்ளை செய்யும் இசைவான சூழ்நிலையில் இயங்கிவருகிற ஒரே ஒரு சப்ளையராக இருந்துவருகிறது இந்த நிறுவனம். மேலும், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களான ஸ்டீரிங் காலம்கள், சைடு இம்ப்பாக்ட் பீம்கள் போன்றவற்றையும் உற்பத்தி செய்கிறது. 

மெட்டல் ஃபார்ம்டு தயாரிப்புகளில் டூவிலர்களுக்கான செயின்கள், டைமிங்  செயின்கள், ஸ்ப்ராக்கெட்டுகள் போன்றவற்றை புதிய வாகனத் தயாரிப்பாளர்களுக்கும் தேய்மானத்துக்குப் பிந்தைய மாறுதலுக்கான சந்தைக்கும் தயாரித்து விற்பனை செய்துவருகிறது இந்த நிறுவனம். இண்டஸ்ட்ரியல் செயின்களை உற்பத்தி செய்யும் இந்த நிறுவனம், உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் அவற்றை விற்பனை செய்கிறது. பயணிகள் பயணிக்கும் மற்றும் சரக்கு வாகனப் பெட்டிகள் தயாரிப்பில் பயன்படும்  செக்‌ஷன்களையும் தயாரித்து விற்பனை செய்கிறது இந்த நிறுவனம்.

தவிர, கியர் உற்பத்தியில் சாந்தி கியர்ஸ், ஃபைனாஷியல் சர்வீஸில் சோழமண்டலம் ஃபைனான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி லிமிடெட்,  சோழ மண்டலம் எம்எஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட் போன்ற டிஐஐ நேரடி முதலீடு செய்துள்ள நிறுவனங்களும், தத்தம் துறைகளில்  நடைமுறையில் இருக்கும் நிலைமைக்கு ஏற்றாற்போல் நன்கு இயங்கி வருகின்றன.

கம்பெனி ஸ்கேன்

ரிஸ்க்குகள் ஏதும் உண்டா?

பொருளாதார வளர்ச்சி சார்ந்த துறைகளிலேயே டிஐஐ நிறுவனத்தின் அனைத்துத் தொழில் பிரிவுகளும் இயங்குகின்றன. எனவே, பொருளாதார மந்தநிலை மற்றும் ஏதாவது ஒரு காரணத்தால் வியாபாரத்தின் வளர்ச்சி சற்று குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அந்நிய செலவாணி மதிப்பு மாறுதல் உள்ளிட்ட ஏனைய மெட்டல் சம்பந்தப்பட்ட துறைகளில் இருக்கும் ரிஸ்க்குகள் இந்த நிறுவனத்துக்கு இருக்கின்றன.

 துறை ரீதியான ரிஸ்க்குகள் பல இருக்கிற போதிலும் நீண்ட பாரம்பர்யமும், வாடிக்கை யாளர்கள் மத்தியில் நன்மதிப்பையும் பெற்றுள்ள இந்த நிறுவனத்தின் பங்குகளை, சிறிய எண்ணிக்கையில் ஏதாவது ஒரு அசாதாரண சூழலில், சந்தை வேகமான இறக்கத்தை சந்திக்கும் போது ஏற்படும் விலை வீழ்ச்சியில் வாங்கி, இரண்டு முதல் மூன்று ஆண்டு கால போர்ட் ஃபோலியோவில் சேர்த்துக்கொள்வதற்காக வாசகர்கள் தொடர்ந்து ட்ராக் செய்யலாம். வாங்கிய பின்னர், இந்தத் துறையின் செயல்பாட்டை தொடர்ந்து ட்ராக் செய்யமுடியாத வாசகர்களும், நிறுவனத்தில் தற்சமயம் நடைபெற்றுவரும் கார்ப்பரேட் நிகழ்வான டீ-மெர்ஜர் முயற்சிகள் பற்றி எளிதில் புரிந்துகொள்ள முடியாத மற்றும்  சரியானதொரு பரிச்சயம் இல்லாத வாசகர்களும் இந்தப் பங்கை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

This section is not a buy/sell recommendation at the current price levels, but only a compilation of information about the company and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analyst’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analysts) Regulations, 2014 with registration number INH200001384.

Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exist no conflict of interest that can bias his views in this report. The Analyst do not hold any share(s) in the company/ies discussed.
Disclosure of Interest Statement

1.Whether Research analyst’s or relatives’ have any financial interest in the subject company/ies and nature of such financial interest? – No; 2. Whether Research analyst or relatives have actual / beneficial ownership of 1% or more in securities of the subject company/ies at the end of the month immediately preceding the date of  the document? – No; 3. Whether the research analyst or his relatives has any other material conflict of interest? – No;  4. Whether research analyst has received any compensation from the subject company/ies in the past  12 months and nature of products / services for which such compensation is received? – No;  5. Whether the Research Analyst has received any compensation or any other benefits from the subject company/ies or third party in connection with the research report? – No; 6.Whether Research Analyst has served as an officer, director or employee of the subject company/ies? – No ;7. Whether the Research Analyst has been engaged in market making activity of the subject company/ies? – No.

General terms and conditions of the research report

For a detailed disclaimer and disclosure please visit http://nanayam.vikatan.com/index.php?aid=9985. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this report is available at http://www.nseindia.com/products/content/equities/equities/eq_security.htm (Choose symbol: TUBEINVEST)/name of company/time duration)