Published:Updated:

ஃபண்டமென்டல் அனலிஸ்ட் ஆவதற்கு என்ன படிக்க வேண்டும்?

ஃபண்டமென்டல் அனலிஸ்ட் ஆவதற்கு என்ன படிக்க வேண்டும்?
பிரீமியம் ஸ்டோரி
ஃபண்டமென்டல் அனலிஸ்ட் ஆவதற்கு என்ன படிக்க வேண்டும்?

கேள்வி - பதில்

ஃபண்டமென்டல் அனலிஸ்ட் ஆவதற்கு என்ன படிக்க வேண்டும்?

கேள்வி - பதில்

Published:Updated:
ஃபண்டமென்டல் அனலிஸ்ட் ஆவதற்கு என்ன படிக்க வேண்டும்?
பிரீமியம் ஸ்டோரி
ஃபண்டமென்டல் அனலிஸ்ட் ஆவதற்கு என்ன படிக்க வேண்டும்?
ஃபண்டமென்டல் அனலிஸ்ட் ஆவதற்கு என்ன படிக்க வேண்டும்?

? சான்றிதழ் பெற்ற ஃபண்டமென்டல் அனலிஸ்ட் ஆக விரும்புகிறேன். இதற்கான வழிமுறைகள் என்ன?

ஃபண்டமென்டல் அனலிஸ்ட் ஆவதற்கு என்ன படிக்க வேண்டும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!



மோகன் குமார், குடியாத்தம்
டி.ரமேஷ், நிதி ஆலோசகர்


“ஃபண்டமென்டல் அனலிஸ்ட் சான்றிதழ் பெற நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் செக்யூரிட்டிஸ் மார்க்கெட்ஸ் (National Institute of Securities     Markets - NISM) நடத்தும் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.

ஃபண்டமென்டல் அனலிஸ்ட் என்பது ஒரு நிறுவனத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்; ஒரு நிறுவனத்தின் இருப்பு நிலை; கடன், வளர்ச்சி, வருமானம் எப்படி இருக்கிறது; ஒரு நிறுவனம், இந்த ஆண்டு இவ்வளவு உற்பத்தி செய்தது; அடுத்த ஆண்டு எவ்வளவு உற்பத்தி செய்யும்; நிறுவனத்தின் தேவை மற்றும் விநியோகம் எப்படி இருக்கிறது; ஒரு நிறுவனம் எவ்வளவு சதவிகிதம் வளர்ச்சியடையும்; 100% வளர்ச்சியடைந்தாலும், அந்த நிறுவனத்தின் கடன் எவ்வளவு இருக்கிறது என்பது உள்பட ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தைப் பற்றி முழுக்க முழுக்கத் தெரிந்துகொள்வதற்கான படிப்பதாகும்.

ஃபண்டமென்டல் அனலிஸ்ட் தேர்வுக் கட்டணம் 1,726 ரூபாய். தேர்வு நேரம் 2 மணி நேரம். 100 கேள்விகள் இந்த இரண்டு மணி நேரத்துக்குள் கேட்கப்படும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60 மதிப்பெண்களைப் பெறவேண்டும். தவறான பதில்களுக்கு `நெகட்டிவ்’ மார்க் உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இந்தச் சான்றிதழ் ஐந்து ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். ஐந்து ஆண்டுகள் கழித்த பிறகு, மீண்டும் ஒருமுறை தேர்வு எழுதி புதுப்பித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.”

? மியூச்சுவல் ஃபண்டில்  எஸ்ஐபி முறையில் முதன்முதலாக நான் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளேன். எந்தெந்த ஃபண்டுகளில் முதலீடு செய்தால் நன்றாக இருக்கும் என அறிந்துகொள்ள விரும்புகிறேன்.  டிஎஸ்பி பிளாக்ராக் மைக்ரோ கேப் ஃபண்ட், எஸ்பிஐ மேக்னம் மல்டிபிளைர் ஃபண்ட் மற்றும் எஸ்பிஐ மேக்னம் மிட் கேப் போன்ற ஃபண்டுகளில் ஐந்தாண்டுக்கு முதலீடு செய்யலாமா?

ஃபண்டமென்டல் அனலிஸ்ட் ஆவதற்கு என்ன படிக்க வேண்டும்?



பிரேம், சத்தியமங்கலம்
எஸ்.பாரதிதாசன், நிதி ஆலோசகர்


“முதல்முறை முதலீட்டாளர்கள் லார்ஜ் கேப் அல்லது பேலன்ஸ்டு ஃபண்டுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. ஆனால், நீங்கள் மிட் கேப், மல்டி கேப் போன்ற அதிக ரிஸ்க்கான ஃபண்டுகளையே தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். அதிக வருமானம்  கிடைக்கும் என்பதற்காக இந்த ஃபண்டுகளை நீங்கள் தேர்வு செய்திருக்கலாம்.

இந்த ஃபண்ட் திட்டங்கள் சிறந்தவை என்பதில் சந்தேகம் இல்லை. ஐந்து ஆண்டுகளில் சிறப்பாகச் செயல்படக்கூடிய ஃபண்டுகள்தான். ஆனாலும், இந்த ஃபண்டுகளில் ரிஸ்க் அதிகம் என்பதால், ஐந்து ஆண்டுகளுக்கு, பத்து ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்துவந்தால், ஆண்டுக்கு சராசரியாக 15 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.”

? நிலக்கரி ஏற்றுமதி, இறக்குமதி செய்துகொண்டிருக்கிறேன். என்னிடம் டின்(TIN) நம்பர் இருக்கிறது. வேறு சான்றிதழ்களை அரசாங்கத்திடமிருந்து வாங்க வேண்டுமா?

ஃபண்டமென்டல் அனலிஸ்ட் ஆவதற்கு என்ன படிக்க வேண்டும்?



வெங்கடேஷ், சென்னை
கே.உன்னிகிருஷ்ணன், இணை துணை பொது இயக்குநர், FIEO, தென் மண்டலம்


“நிலக்கரி ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கு டின் நம்பர் மட்டும் போதுமானது இல்லை. இதனுடன் இறக்குமதி, ஏற்றுமதி எண் (Importer Exporter Code - IEC) வாங்க வேண்டும். அதன் பிறகு, இந்திய வேதியியல் மற்றும் அது சார்ந்த ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (Chemical and Allied Export Promotion Council of India - CAPEXIL) அல்லது இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பில் (Federation Of Indian Export Organisations - FIEO) பதிவு செய்தால் போதும்.”

? மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ரிஸ்க் மற்றும் வருமானம் எப்படி வேறுபடுத்திக் காட்டப்படுகிறது? 

ஃபண்டமென்டல் அனலிஸ்ட் ஆவதற்கு என்ன படிக்க வேண்டும்?



கே.விவேக், சென்னை
அபுபக்கர் சித்திக், நிதி ஆலோசகர்


“கடந்த 2013, ஜூலையில் மூன்றுவிதமான நிறங்கள் மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளின் ரிஸ்க் வித்தியாசப்படுத்திக் காட்டப்பட்டது. முதலீட்டாளர்கள் இந்த கலரைப் பார்த்தாலே, எவ்வளவு ரிஸ்க் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

 முதலீட்டில் குறைந்த ரிஸ்க் இருந்தால் நீல நிறத்திலும், நடுத்தர ரிஸ்க் இருந்தால் மஞ்சள் நிறத்திலும், அதிக ரிஸ்க் இருந்தால் பழுப்பு நிறத்திலும் குறிப்பிடப்பட்டது. ஆனால், இந்த நடைமுறை இரண்டு வருடம் மட்டுமே  நடைமுறையில் இருந்தது.

அதன்பின் இரு சக்கர வாகனத்தில் இருக்கும் ஸ்பீடோ மீட்டரைப் போல, `ரிஸ்கோ மீட்டர்’ என்னும் பிரிவைக் கொண்டு வந்தது செபி.  இதில் முள் எங்கு உள்ளதோ, அந்த அளவுக்கு அந்த ஃபண்டில் ரிஸ்க் இருக்கும். குறைந்த ரிஸ்க், மிதமான குறைந்த ரிஸ்க், நடுத்தர அளவு ரிஸ்க், மிதமான அதிக ரிஸ்க் மற்றும் அதிக ரிஸ்க் என ஐந்து நிலைகள் உள்ளன. 

ஆன்லைன்  முதலீட்டு ஆலோசனை நிறுவனங்கள், அவர்களின் வசதிக்கேற்ப ஃபண்டுகளை வரிசைப்படுத்த வருமானம்  அடிப்படையில் ஃபண்டுகளைக் குறிப்பிட்ட நிறத்தில் குறிக்கிறார்கள். குறைந்த வருமானம் அடர் சிவப்பு நிறத்திலும், மிதமான வருமானம் வெளிர் சிவப்பு நிறத்திலும், அதிக வருமானம் பச்சை நிறத்திலும் குறிப்பிடப்படுகிறது.”

? தமிழக அரசு ஊழியர்கள் 80 சிசிடி 1பி-ன்படி, புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (New Contributory Pension Scheme) வருமான வரியைக் கழித்துக் கொள்ளலாமா, அப்படி  முடியாவிட்டால் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில்      (National Pension System) சேர்ந்து கொள்ளலாமா?

ஃபண்டமென்டல் அனலிஸ்ட் ஆவதற்கு என்ன படிக்க வேண்டும்?



செந்தில்குமார், விருதுநகர்
ஜி.கார்த்திகேயன், ஆடிட்டர், கோவை


‘‘தமிழக அரசு ஊழியர்களின் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் செலுத்தப்படும் தொகையை வருமானத்திலிருந்து கழித்துக்கொள்ளலாம். இது சம்பளம் மூலம் பெறப்படும் ஓய்வூதியத் திட்டம் தவிர, விருப்பமாகச் செலுத்தப்படுவது. அதாவது,  ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும். அனைத்து வகை ஊழியர்களும் வரிதாரரும் இந்தத் திட்டத்தில் பங்கு பெறலாம்.

செலுத்தப்படும் தொகையை மொத்த சம்பளத்திலோ அல்லது ஆண்டு மொத்த வருமானத்திலிருந்து 10%  வரை, வருமான வரிச் சலுகைக்காக கழித்துக்கொள்ளலாம் என்று சென்ற ஆண்டு வரை இருந்தது.

ஆனால், இந்த ஆண்டு பட்ஜெட்டில் 20% வரை கழித்துக்கொள்ளலாம் என மாற்றப்பட்டுள்ளது. அதிகபட்சம் 50,000 ரூபாய் வரை ஒரு நிதி ஆண்டில் வருமான வரிச் சலுகை பெற முதலீடு செய்யலாம்.”

தொகுப்பு : சோ.கார்த்திகேயன்

உங்கள் எண்ணங்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்!

ஃபண்டமென்டல் அனலிஸ்ட் ஆவதற்கு என்ன படிக்க வேண்டும்?



facebook.com/naanayamvikatan

twitter.com/nanayamvikatan

எவ்வித கட்டணமும் இல்லாமல் ஏராளமான தகவல்களைப் படித்து பயன்பெறுங்கள்!

nanayam.vikatan.com

போன் மூலமாகவும்  கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளைப் பதிவு செய்யலாம். அதற்கு 044- 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளைப் பதிவு செய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism