Published:Updated:

எஸ்ஐபி முதலீடு... - லாபத்தை அதிகரிக்கும் 6 வழிமுறைகள்!

எஸ்ஐபி முதலீடு... - லாபத்தை அதிகரிக்கும்  6 வழிமுறைகள்!
பிரீமியம் ஸ்டோரி
எஸ்ஐபி முதலீடு... - லாபத்தை அதிகரிக்கும் 6 வழிமுறைகள்!

மீ.கண்ணன், மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகர்

எஸ்ஐபி முதலீடு... - லாபத்தை அதிகரிக்கும் 6 வழிமுறைகள்!

மீ.கண்ணன், மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகர்

Published:Updated:
எஸ்ஐபி முதலீடு... - லாபத்தை அதிகரிக்கும்  6 வழிமுறைகள்!
பிரீமியம் ஸ்டோரி
எஸ்ஐபி முதலீடு... - லாபத்தை அதிகரிக்கும் 6 வழிமுறைகள்!
எஸ்ஐபி முதலீடு... - லாபத்தை அதிகரிக்கும்  6 வழிமுறைகள்!

ஸ்ஐபி - தற்போது முதலீட்டாளர்களிடம் அடிக்கடி புழங்குகிற வார்த்தை.  நிதி ஆலோசகர்கள், வல்லுநர்கள், முதலீட்டாளர்கள், ஊடக ஆய்வாளர்கள் எனப் பல தரப்பினரும் உச்சரிக்கிற வார்த்தை.

 எஸ்ஐபி பற்றி எல்லோரும் இவ்வளவு தூரம் பேசினாலும், அதன் தாத்பரியத்தை முதலீட் டாளர்கள் முழுமையாகப் புரிந்துகொண்டார்களா என்று கேட்டால், அதுதான் இல்லை. எஸ்ஐபி என்றாலே எல்லோரும் ஒன்றே ஒன்றுதான் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், எஸ்ஐபி பலவிதம். ஒவ்வொரு வகையான எஸ்ஐபி குறித்தும் சுருக்கமாகப் பார்ப்போம். 

 * எஸ்ஐபி 

 முதலில், எஸ்ஐபி என்றாலே என்னவென்று தெரியாதவர்களுக்காக சுருக்கமாக ஓர் அறிமுகம்.

எஸ்ஐபி என்பது முதலீட்டுத்  திட்டம் அல்ல.  அது ஒரு முதலீட்டு முறை. அதாவது, எஸ்ஐபி  என்பது

எஸ்ஐபி முதலீடு... - லாபத்தை அதிகரிக்கும்  6 வழிமுறைகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குறிப்பிட்ட இடைவெளியில், குறிப்பிட்ட காலத்துக்கு, குறிப்பிட்ட தொகையை, குறிப்பிட்ட திட்டத்தில் முதலீடு செய்வதாகும். இந்த இடைவெளி என்பது மாதத்துக்கு ஒருமுறை, காலாண்டுக்கு ஒருமுறை, அரையாண்டுக்கு ஒருமுறை, வருடத்துக்கு ஒரு முறை என நமது விருப்பத்துக்கு ஏற்றவாறு முடிவு செய்யலாம். காலம் என்பதை ஒன்று, இரண்டு, ஐந்து வருடங்கள் என நமது பொருளாதாரத்துக்கேற்ப முடிவு  செய்து கொள்ளலாம். 
 
இந்த முதலீட்டில் முடிவு தேதியை குறிப்பிட்டு இருந்தாலும் எப்போது நம்மால் பணம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறதோ, அப்போது நம் முதலீட்டை நிறுத்திக்கொண்டு விடலாம். இந்த முறையின் மூலம் குறைந்தபட்சம் ரூ.500 முதல் எவ்வளவு தொகை வேண்டுமானலும் முதலீடு செய்யலாம். 

*  முதல் வழிமுறை: ஃபிக்ஸட் எஸ்ஐபி (Fixed SIP)

ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட ஒரு தொகையை முதலீடு செய்துவருவதுதான் இது. உதாரணமாக, மாதமொன்றுக்கு 2,000 ரூபாயை எஸ்ஐபி மூலம் தொடர்ந்து முதலீடு செய்வது. மாதச் சம்பளம் வாங்குகிற பலரும் ஒரே தொகையை ஒவ்வொரு மாதமும் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்துவருகின்றனர். இந்த எஸ்ஐபி-யை அடிப்படை எஸ்ஐபி, சாதாரண எஸ்ஐபி, குறிப்பிட்ட தொகை எஸ்ஐபி என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்.

குறிப்பிட்ட தொகையை எஸ்ஐபி மூலம் முதலீடு செய்வது சரியான விஷயம் என்றாலும், நம் வருமானம் உயர்வதற்கேற்பவும், நம் எதிர்காலத் தேவைகளுக்கேற்பவும் நம் முதலீட்டுத் தொகையை உயர்த்திக்கொள்வது அவசியம். 

* 2-வது வழிமுறை: டாப்அப் எஸ்ஐபி (Top up SIP) 

மியூச்சுவல் ஃபண்டில் புதிதாக முதலீடு செய்யத் தொடங்கி இருப்பவர்களும், தற்போது வேலைக்குச் சேர்ந்து சம்பாதிக்கத் தொடங்கி இருப்பவர்களும் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்ய நினைக்கும்போது, முதலில் சிறிய தொகையைத்தான் முதலீடு செய்யத் தொடங்குவார்கள். சில ஆண்டுகள் தொடர்ந்து வேலைசெய்து, பதவி உயர்வு கிடைத்தபின் அவர்களின் சம்பளம் உயரும். அப்படி உயரும் போது, எஸ்ஐபி மூலம் முதலீடு செய்யும் தொகை அன்றைய சம்பளத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாக இருக்கும்.

குறைந்த தொகையை முதலீடு செய்வதால், அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் தொகையானது நம் தேவைகளை நிறைவேற்றுகிற அளவில் இல்லாமல் போய்விடும். இதைத் தவிர்க்க,  டாப் அப் எஸ்ஐபி மிகவும் பயன்படும். இந்த டாப் அப் எஸ்ஐபி-யில் இரண்டு வகை உள்ளன. ஒன்று, ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையைக் கூடுதலாக முதலீடுசெய்வது. இரண்டாவது வகை, ஆண்டு தோறும் குறிப்பிட்ட சதவிகிதத்தைக் கூடுதலாக முதலீடு செய்வது. (பார்க்க 12-ம் பக்கத்தில் உள்ள அட்டவணை 3)

எஸ்ஐபி முதலீடு... - லாபத்தை அதிகரிக்கும்  6 வழிமுறைகள்!

அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு குறைந்தது 10 முதல் 15% சம்பள உயர்வு கிடைக்க லாம். இப்படி தொடர்ந்து மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் ஒருவருக்கு சம்பள உயர்வு கிடைக்கும் போது, அவர் பெறும் சம்பளம் கணிசமாக உயர்ந்திருக்கும். அப்படி உயரும்போது சிலர் புதிதாக இன்னொரு எஸ்ஐபி-யைத் தொடங்கு வார்கள். இது தேவையில்லாத ஒன்று. ஏற்கெனவே இருக்கும் எஸ்ஐபி கணக்கிலேயே கூடுதல் தொகையை முதலீடு செய்வதை விட்டு விட்டு, புதிதாக ஒரு கணக்கு தொடங்கத் தேவையில்லை. 

எஸ்ஐபி-யில் கூடுதலான தொகையை முதலீடு செய்ய முடிவெடுத்து, பிற்பாடு வருமானம் குறைந்துவிட்டால் என்னசெய்வது என்று கவலைப்பட வேண்டியதில்லை. காரணம், எஸ்ஐபி-யில் முதலீட்டுத் தொகையை உயர்த்திக் கொள்கிற மாதிரி குறைத்துக்கொள்ளவும் முடியும் என்பதால், அதை நினைத்து அதிகம் கவலைப் படத் தேவையில்லை.

* 3-வது வழிமுறை: ஃப்ளெக்ஸி எஸ்ஐபி (Flexi SIP)

இந்த எஸ்ஐபி முறையில் முதலீட்டுத் தொகை ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால், பங்குச் சந்தை கரடியின் பிடியில்  இருக்கும்போது நிறையப் பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்யவும், பங்குச் சந்தை காளையின் பிடியில் இருக்கும்போது குறைந்த முதலீட்டுத் தொகையை மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்கிற மாதிரியும் இருக்கும். (பார்க்க 11-ம் பக்கத்தில் உள்ள அட்டவணை 2)

எஸ்ஐபி முதலீடு... - லாபத்தை அதிகரிக்கும்  6 வழிமுறைகள்!

பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கும்போது, அதில் குறைவான தொகையை முதலீடு செய்து விட்டு, மீதமுள்ள தொகையை அசலுக்குப் பங்கம் வராத கடன் சார்ந்த சந்தையில் அதிகம் முதலீடு செய்வதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படி மேம்படுத்தப்பட்ட ஒரு திட்டம்தான் இந்த ஃப்ளெக்ஸி எஸ்ஐபி. இது மிகச்சிறந்த முதலீட்டு முறை என்பதால், சந்தையின் ஏற்றத் தாழ்வுக்கேற்ப முதலீடு செய்ய நினைக்கிறவர்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்துகொள்ளலாம்.

* நான்காவது வழிமுறை: வேரியபிள் இன்வெஸ்ட்மென்ட் ப்ளான் (Variable Investment Plan - VIP)

இந்த வகையான எஸ்ஐபி-யானது எஸ்ஐபி என்பதற்குப் பதிலாக விஐபி என்று அழைக்கப்படுகிறது. இது ஃப்ளெக்ஸி எஸ்ஐபியை  ஒட்டியே உள்ளது. இந்த இரண்டுக்கும் உள்ள ஒரே வித்தியாசம், ஃப்ளெக்ஸி  எஸ்ஐபி-யில் நாம் முதலீடு செய்யும் மாதாந்திர முதலீட்டுத் தொகை, ஒரே அளவு அல்லது அதற்கு அதிகமாக இருக்கும். ஆனால், விஐபி-யில் முதலீடு செய்யும் தொகையானது, மாத முதலீட்டுத் தொகை
அல்லது அதனைவிட  கொஞ்சம் குறைவாகவோ அல்லது கொஞ்சம் அதிகமாகவோ இருக்கலாம். (பார்க்க 10-ம் பக்கத்தில் உள்ள அட்டவணை 1)

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், ஏறுகிற சந்தையில்,  முழுத் தொகையையும்  ஒரே தவணையில் மொத்தமாக முதலீடு செய்வது, எஸ்ஐபி-யை விட, நல்ல லாபம் தரும். இறங்குகிற சந்தையில், முழுத் தொகையையும் ஒரே தவணையில் மொத்தமாக முதலீடு செய்வது, நஷ்டத்தைத் தரக்கூடும். ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் சந்தையில் எஸ்ஐபி அதிக லாபமாக இருக்கும்.   

எஸ்ஐபி முதலீடு... - லாபத்தை அதிகரிக்கும்  6 வழிமுறைகள்!

* 5-வது வழிமுறை: எஸ்டிபி டு எஸ்ஐபி

பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கும் போது ஒருவர் பெரிய தொகையை முதலீடு செய்ய நினைத்தால், அதை அப்படியே பங்குச் சந்தை சார்ந்த திட்டத்தில் முதலீடு செய்யாமல், முதலில் கடன் சார்ந்த திட்டத்தில் முதலீடு செய்துவிட்டு, மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை பங்கு சார்ந்த திட்டத்துக்கு மாற்றிக் கொள்வதுதான் இந்த சிஸ்டமேட்டிக் ட்ரான்ஸ்ஃபர் ப்ளான் (STP). அதாவது, ஒரு குறிப்பிட்ட தொகையை முதலில் கடன் பத்திரத்தில் முதலீடு செய்து விட்டு, எப்போதெல்லாம் சந்தை ஒரு சதவிகிதத்துக்குக் குறைவாக இறங்குகிறதோ, அப்போதெல்லாம் கடன் சார்ந்த திட்டத்தில் இருக்கும் முதலீட்டை எடுத்து, பங்குச் சந்தை சார்ந்த திட்டத்துக்கு மாற்றப்படும். எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் எஸ்ஐபி என்கிற திட்டம் இதற்கு உதாரணம். இதில், நாம் குறிப்பிட்ட பணத்தை கடன் பத்திரத்தில் முதலீடு செய்தபின், எப்போதெல்லாம் பங்குச் சந்தை ஒரு சவிகிதத்துக்கும் குறைவாக இறங்குகிறதோ அப்போதெல்லாம் கடன் பத்திரத்திலிருந்து, பங்கு பத்திரத் திட்டத்துக்கு தொகை மாற்றப்படும்.

எஸ்ஐபி முதலீடு... - லாபத்தை அதிகரிக்கும்  6 வழிமுறைகள்!

* 6-வது வழிமுறை : பிஇ எஸ்டிபி

பங்குச் சந்தையின் பிஇ (Price Earning) விகிதம் அதிகமாக இருக்கும்போது, அதில் முழுத் தொகையையும் முதலீடு செய்யாமல், ஒரு குறிப்பிட்ட தொகையை கடன் சார்ந்த முதலீட்டுத் திட்டத்தில் முதலில் முதலீடு செய்துவிட்டு, பிஇ விகிதம் இறங்க இறங்க, கடன் சார்ந்த திட்டத்தில் இருக்கும் பணத்தை எடுத்து பங்குச் சார்ந்த திட்டத்தில் முதலீடு செய்வதுதான் இது. ஐடிஎஃப்சி பிஇ எஸ்டிபி இதற்கொரு உதாரணம்.

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் அல்லது  பிசினஸ் செய்பவர்கள்  குறைந்த பட்சம் ஒரு எஸ்ஐபி கணக்கையாவது தொடங்குவது அவசியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism