Published:Updated:

மோடி வெற்றி... - இது முதலீடு செய்யும் நேரமா?

மோடி வெற்றி... - இது முதலீடு  செய்யும் நேரமா?
பிரீமியம் ஸ்டோரி
மோடி வெற்றி... - இது முதலீடு செய்யும் நேரமா?

ஜெ.சரவணன்

மோடி வெற்றி... - இது முதலீடு செய்யும் நேரமா?

ஜெ.சரவணன்

Published:Updated:
மோடி வெற்றி... - இது முதலீடு  செய்யும் நேரமா?
பிரீமியம் ஸ்டோரி
மோடி வெற்றி... - இது முதலீடு செய்யும் நேரமா?

ண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் பஞ்சாப் தவிர, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் என நான்கு மாநிலங்களில் ஆட்சி அமைத்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. பா.ஜ.க-வின் இந்த வெற்றியைத் தொடர்ந்து, கடந்த செவ்வாய் (14.3.17) முதல் இன்று வரை நிஃப்டி சுமார் 225  புள்ளிகளும், சென்செக்ஸ் சுமார் 700 புள்ளிகளும் உயர்ந்திருக்கிறது.

மோடி வெற்றி... - இது முதலீடு  செய்யும் நேரமா?

இந்த திடீர் ஏற்றத்தின் விளைவாக நிஃப்டி 9150 புள்ளிகளைக் கடந்து வரலாற்றில் இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அமெரிக்காவில் வட்டி விகிதம் 0.25% உயர்த்தப் பட்டதும் பங்குச் சந்தை திடீர் ஏற்றத்துக்கு ஒரு காரணம். 

பா.ஜ.க-வின் இந்த வெற்றி, பங்குச் சந்தைக்குத் தொடர்ந்து சாதகமாக இருக்குமா, இந்த ஏற்றம் இனியும் தொடருமா, இனியும் முதலீடு செய்யலாமா, இனி சந்தையின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது குறித்து ஐடிபிஐ கேபிட்டல் மார்க்கெட்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

“இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக பா.ஜ.க-வை எதிர்த்தபோதிலும், மக்களைப் பொறுத்தவரை, சீர்திருத்தங்களும், வளர்ச்சியும்தான் முக்கியம்; இலவசங்கள் அல்ல என்று உணர்ந்து வாக்களித்திருக்கிறார் கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் மக்கள் வைக்கும் கோரிக்கைகள் தெளிவாக இருக்கின்றன. அவர்கள் பொருளாதார நிலைத்தன்மையையும், வளர்ச்சியை யும்தான் விரும்புகிறார்கள். கோவா, மணிப்பூர் போன்றவை மிகச் சிறிய மாநிலங்கள் என்பதால், அங்குள்ள மக்களிடம் பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் இல்லை.

இந்திய ஜிடிபி-யில் 10%  உத்தரப்பிரதேசத்தில் இருந்துதான் கிடைக்கிறது. ஆனால், அங்கு பெரும்பாலான திட்டங்கள் நடக்காமல் இருக்கின்றன. இப்போது மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி என்பதால், அங்கு திட்டங்கள் அனைத்தும் விரைந்து முடிக்கப்படும் என்பதோடு, மேலும் பல புதிய வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படவும் வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், உத்தரப்பிரதேசத்தைக் கைப்பற்ற கிடைத்த இந்த வாய்ப்பை பா.ஜ.க நழுவவிடாது. மேலும், மாநிலங்களவையில் பா.ஜ.க-வின் பலம் இனி பெரும்பான்மையை அடையவும்   வாய்ப்புள்ளது.

எனவே, ஜிஎஸ்டி உள்ளிட்ட சீர்திருத்த மசோதாக்களை நிறைவேற்ற தடை எதுவும் இருக்காது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோடி வெற்றி... - இது முதலீடு  செய்யும் நேரமா?

இப்படிப்பட்ட எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் எல்லோருக்கும் இருப்பதுதான் சந்தையிலும் பிரதிபலிக்கிறது. இனிவரும் நாள்களில் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு களின்படி, பா.ஜ.க அரசு செயல்பட்டால் சந்தைக்கும் சாதகம்தான். 

உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதன் மூலம் இனி சீர்திருத்தங்களையும் முடிவுகளையும் எடுப்பது மத்திய அரசுக்கு எளிதாகிவிடும் என்று தெரிவித்துள்ள மூடிஸ் நிறுவனம், இந்த நிகழ்வு விரைவில் நடந்துவிடாது என்றும் எச்சரிக்கை செய்திருக்கிறது.

மாநிலங்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்களைப் பெறுவதற்கு இந்தத் தேர்தல் வெற்றிகள் சாதகமாக அமைந்தாலும், அதற்கு சில காலம் ஆகும் என்பதே நிஜம். எனினும், மாநில அளவில் பெற்ற வெற்றிகள் மூலம் மாநிலங்களவையில் அழுத்தம் தரமுடியும். சொல்லப்போனால், எல்லோரும் கடுமையாக விமர்சித்த  பணமதிப்பு நீக்க நடவடிக்கை மத்திய அரசுக்கு மாபெரும் வெற்றியைத் தேடி தந்துள்ளது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க-வினருக்கு உற்சாகத்தைத் தந்திருக்கிறதோ இல்லையோ, முதலீட்டாளர்களுக்கும், முதலீட்டு நிறுவனங்களுக்கும் பாசிட்டிவான உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.

இப்போதைக்கு சந்தையின் போக்கு பாசிட்டிவான சென்டிமென்டில்தான் இருக்கிறது. இந்தத் தேர்தல் வெற்றியால் மத்திய அரசு, ஜிஎஸ்டி மசோதாவை சொன்னதுபோலவே அமல்படுத்த அதிக வாய்ப்புள்ளதால், சந்தை மேலும் ஏற்றமடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே உள்ளன.
 
இந்த வருடத்துக்குள் நிஃப்டி 12000 புள்ளிகளையும், சென்செக்ஸ் 37000 புள்ளிகளையும் எட்டுவதற்கு வாய்ப்புள்ளது.

நீல்கமல், சென்சுரிபிளை, பினோலெக்ஸ், ட்ரைடென்ட், அர்விந்த், பிரசிஸ்டன்ட் மற்றும் ஹெச்சிஎல் டெக் போன்ற பங்குகளைத் தற்போது கவனிக்கலாம்’’ என்று முடித்தார்.

முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism