ரிஸ்க் எடுக்க விரும்பாத, அதேநேரத்தில் வருமான வரி கட்டுவதைத் தவிர்க்க நினைப்பவர் களுக்கான முதலீடாக வரி இல்லாத பாண்டுகள் (Tax free bonds) இருக்கின்றன.

இந்த வரி இல்லா பாண்டுகள் மத்திய அரசினால் கடந்த 2011-12-ம் நிதி ஆண்டில், உள்கட்டமைப்புத் துறையில் (Infrastructure) முதலீட்டை அதிகரிப் பதற்காகக் கொண்டு வரப்பட்டன.

வரி இல்லா பாண்டுகள்

வரி இல்லா பாண்டுகள் என்பது நிலையான வருமானம் தரக்கூடிய, ரிஸ்க் ஏதும் இல்லாத கடன் சார்ந்த முதலீடுகளாகும். இதை அரசு சார்ந்த நிறுவனங்கள் வெளியிடுவதால், இதில் ரிஸ்க் என்பது அறவே இல்லை என்று சொல்லலாம்.

வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், கம்பெனி டெபாசிட், தபால் அலுவலக சேமிப்புத் திட்டம் போன்றவற்றில் கிடைக்கும் வருமானத்துக்கு, ஒருவர் எந்த வருமான வரி வரம்புக்குள் வருகிறாரோ அதற்கேற்ப வருமான வரி செலுத்த வேண்டும். ஆனால், வரி இல்லா பாண்டுகள் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி ஏதும் செலுத்த வேண்டியதில்லை. அதாவது, இது வரியில்லா வருமானமாகும்.

இந்த பாண்டு மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் குறைவாக இருந்தாலும், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு முதலீட்டாளர்கள் வருமான வரி கட்டத் தேவையில்லை என்பது கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதேநேரத்தில், முதலீடு செய்யும் தொகைக்கு வருமான வரி விலக்கு ஏதும் கிடையாது என்பது பெரிய மைனஸ்.

என்டிபிசி, ஹட்கோ, ஆர்இசி, என்ஹெச்பிசி, ஐஐஎஃப்சிஎல், பிஎஃப்சி போன்ற நிறுவனங்கள் வரி இல்லா பாண்டுகளை வெளியிட மத்திய அரசு அனுமதித்துள்ளது.

எப்படி முதலீடு செய்வது?

இந்த பாண்டுகளை வெளியிடும் நிறுவனங்கள், வங்கிகள், இதற்கென இருக்கும் புரோக்கர்கள் மூலம் இந்த பாண்டுகளில் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்ய பான் எண் தேவைப்படும். முதலீடு செய்யும்போது பான் அட்டையின் அசலைக் காண்பிக்க வேண்டியிருக்கும். இது தவிர, முகவரி ஆதாரத்துக்கு ஆதார், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், டெலிபோன் ரசீது போன்றவற்றில் ஏதாவது ஒன்றை ஆவணத்தின் நகலாகக் கொடுக்க வேண்டும். மேலும், மார்பளவு உள்ள புகைப்படங்கள் இரண்டு வேண்டும். இந்த பாண்டுகளுக்கு நேரிலும் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

இந்த பாண்டுகள் 10, 15, 20 ஆண்டு காலங்களுக்கு வெளியிடப்படுகின்றன. இந்த பாண்டுகளை ஒருவர் சான்றிதழ் வடிவத்திலோ அல்லது டீமேட் கணக்கிலோ வைத்துக்கொள்ளலாம்.

இந்த பாண்டுகளில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்களுக்குச் சற்று அதிக வட்டி தரப்படுகிறது. அந்தச் சலுகையை பெற ரூ.10 லட்சத்துக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

யார் முதலீடு செய்யலாம்?

1. தனிநபர்கள் (ஆண் / பெண்), 2. இந்துக் கூட்டுக் குடும்பத்தினர், 3. மைனர்கள்.

சாதக அம்சங்கள்

1. இந்த பாண்டுகள் மத்திய அரசு நிறுவனங்களால் வெளியிடப்படுகின்றன என்பதால், நல்ல பாதுகாப்பான முதலீடாக இருக்கிறது.

2. முதலீடு செய்யும் தொகைக்கு உச்சவரம்பு ஏதும் கிடையாது.

3. வரி இல்லா பாண்டுகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும். அதனால் நாம் எப்போது வேண்டுமானாலும் அவற்றை விற்கலாம். முதலீட்டுக் காலம் முடியும் வரை வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

பாதக அம்சங்கள்

1. இந்த பாண்டுகளில் முதலீட்டுக் காலம் ஐந்து ஆண்டுகள் தொடங்கி 20 ஆண்டுகள் என நீண்ட காலத்துக்கு லாக்-இன் பீரியட் இருக்கிறது.

2. முதலீடு செய்யும் பணத்துக்கு எந்தவித வருமான வரி சலுகையும் கிடையாது.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

1.  வரி இல்லா பாண்ட் மூலம் கிடைக்கும் வருமானம் எவ்வளவு, வங்கி டெபாசிட், கம்பெனி டெபாசிட் போன்ற முதலீட்டிலிருந்து கிடைக்கும் வட்டிக்குப் பிந்தைய வருமானம் எவ்வளவு என வட்டியோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். மற்ற முதலீட்டில் வரிக்குப் பிந்தைய வருமானத்தைவிட வரி இல்லா பாண்ட் வட்டி அதிகம் எனில், இதில் முதலீடு செய்யலாம்.

2. முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கும் வரி இல்லா பாண்டுக்கான தரக்குறியீடு என்ன என்பதைப் பார்க்க வேண்டும். ‘ஏஏஏ’ தரக்குறியீடு பெற்ற பாண்டு என்றால், முதலீட்டுக்கு அதிக பாதுகாப்புத் தருவதாகும். குறைவான தரக்குறியீடு அல்லது நெகட்டிவ் ரேட்டிங் உள்ள வெளியீடுகளில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

3. வரி இல்லா பாண்ட் வெளியீட்டில் புட் ஆப்ஷன், அதாவது, முதலீடு செய்த காலத்துக்கு முன்னதாக பாண்டை சரண்டர் செய்யும் வசதி அல்லது கால் ஆப்ஷன், அதாவது முதலீடு செய்த காலம் முடிவடையும் முன்பு நிறுவனம், முதலீட்டாளர்களிடமிருந்து பாண்டை திரும்பப் பெறும் வசதி உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

4. இதில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால், பங்குச் சந்தையில் விற்கும்போது டீமேட் கணக்கு அவசியம். காரணம், டீமேட் கணக்கு இருந்தால்தான், முதலீடு செய்த பாண்டினை டீமேட்டுக்கு மாற்றி விற்க முடியும். டீமேட் வடிவத்தில் பாண்டுக்கு விண்ணப்பிப்பது பல வகையில் லாபமாக அமையும்.

5.  வரி இல்லா பாண்ட் முதலீட்டில் உச்சவரம்பு கிடையாது. அதேசமயம், மொத்தப் பணத்தையும் ஒரே வெளியீட்டில் முதலீடு செய்யாமல், பல வெளியீடுகளில் பிரித்து முதலீடு செய்வது நல்லது. இதன் முதிர்வுக் காலமும் வெவ்வேறாக இருக்கும்பட்சத்தில், இடையில் பணம் தேவைப் பட்டால் பணத் தேவை எளிதாக நிறைவேறும்.

6. டிரிபிள் ஏ (AAA) தரக் குறியீடு பெற்ற வரி இல்லா பாண்டுக்கான வட்டி, இதனைவிட குறைந்த (AA - AA) தரக்குறியீடு பெற்ற பாண்டுக்கான வட்டியைவிடக் குறைவாக இருக்கும். இந்த வித்தியாசம் கிட்டத்தட்ட 0.10 - 0.20 சதவிகிதமாக இருக்கும். அதாவது, ரிஸ்க் குறைவான வரி இல்லா முதலீட்டில் வட்டி குறைவாக இருக்கும்.

7. அதிக தொகைக்கு வெளிவரும் வரி இல்லாபாண்டு வெளியீடுகளில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். அப்போதுதான் யூனிட்களை பங்குச் சந்தைகளில் விரைவாக விற்பனை செய்ய முடியும்.

8. வரி இல்லா பாண்டு வெளியிடும் நிறுவனத்தின் தரக்குறியீட்டை கவனித்து முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும்.

வருமானம் எப்படி?

எஸ்பிஐ வங்கியின் ஐந்தாண்டு ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு இப்போது 6.5% வட்டி தரப்படுகிறது. 30% வரி வரம்புக்குள் இருப்பவர்கள், இந்த வட்டிக்கு அதிகபட்சமாக 30.9% வருமான வரி கட்டினால், வரிக்குப் பிந்தைய வருமானம் 4.5 சதவிகிதமாக இருக்கும்.

தபால் அலுவலக ஐந்தாண்டு டேர்ம் டெபாசிட்டுக்கு தற்போது 7.8% வட்டி வழங்கப்படுகிறது. இதற்கும் 30% வரி வரம்புக்குள் இருப்பவர்கள், இந்த வட்டிக்கு 30.9% வருமான வரி கட்டினால், வரிக்குப் பிந்தைய வருமானம் 5.4 சதவிகிதமாக இருக்கும். அதேசமயம், இந்த பாண்டின் மூலம் வருமான வரி இல்லா வருமானம் 6 - 6.5% கிடைக்கும்.

மூலதன ஆதாய வரி

இந்த வரி இல்லாபாண்டுகள் பங்குச் சந்தைகளில் (என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ) வர்த்தகமாகின்றன. இந்த பாண்டுகளை ஒருவர் மற்றொருவருக்கு விற்பனை செய்யும்போது கிடைக்கும் லாபத்துக்கு விற்றவர் மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும். இந்த ஃபாண்டுகளை அதன் முதிர்வு காலத்துக்கு முன்னால் விற்றால், மூலதன ஆதாய வரி கட்ட வேண்டிவரும்.

வாங்கி அல்லது முதலீடு செய்து ஓராண்டுக்குள் விற்றால், அவரவரின் அடிப்படை வருமான வரம்புக்கேற்ப வருமான வரி (10.3%, 20.6%, 30.9%) கட்ட வேண்டும். இதுவே ஓராண்டுக்கு மேல் விற்றால் 10.3% வரி கட்ட வேண்டும். இந்த முதலீட்டுக்குப் பணவீக்க விகித சரி கட்டல் சலுகை (Indexation Benefit) இல்லை.

யாருக்கு ஏற்றது?

இந்த பாண்டில் வருமானத்துக்கு வரி கிடையாது. இது வருமான வரி உச்சவரம்பில் (30%) இருப்பவர்களுக்கு ஏற்றது. குறைந்த வருமான வரி வரம்பிலிருக்கும் முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம். ஏனெனில், மற்ற முதலீட்டிலிருந்து கிடைக்கும் வரிக்குப் பிந்தைய வருமானம் இந்த பாண்ட் முதலீட்டைவிட அதிகமாக இருக்கும்.

அண்மைக் காலத்தில், வரி இல்லா பாண்ட் வெளியீடு என்பது அதிகம் இல்லை. தற்போது, வங்கி வட்டி விகிதம் குறைந்துவருகிற நிலையில், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள வரி இல்லா பாண்டுகளை நீண்ட கால முதலீடாக பலரும் வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

வரி இல்லா பாண்டுகளைப் பொறுத்தவரையில், நீண்ட கால முதலீட்டைத் தேர்வுசெய்வது நல்லது. அப்படி செய்யும்போது மறு முதலீட்டு ரிஸ்க் (Re-Investment Risk) குறையும். நீண்ட காலத்தில் வட்டி குறையும் என்கிற நிலையில் வரி இல்லா பாண்டு முதலீடு லாபகரமாக இருக்கும். அந்த வகையில் இப்போது இந்த பாண்டுகளில் முதலீடு செய்யலாம்.

(முதலீடு தொடரும்)