Published:Updated:

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்ன செய்யவேண்டும்?

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு    என்ன செய்யவேண்டும்?
பிரீமியம் ஸ்டோரி
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்ன செய்யவேண்டும்?

நாணயம் லைப்ரரி!

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்ன செய்யவேண்டும்?

நாணயம் லைப்ரரி!

Published:Updated:
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு    என்ன செய்யவேண்டும்?
பிரீமியம் ஸ்டோரி
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்ன செய்யவேண்டும்?

நான் எப்படி சந்தோஷமாக வாழ்வது, நான் எப்படி நல்ல மனிதனாக வாழ்வது? இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை சொல்வதாக இருக்கிறது, ஷரான் லீபெல் என்பவர் தொகுத்து தந்துள்ள கிரேக்க தத்துவ ஞானியான எபிக்டெடஸ்-ன் ‘வாழ்வதற்கான கையேடு’ என்கிற புத்தகம். வெறும் 88 பக்கங்களைக்கொண்ட கைக்கு அடக்கமான அளவில் வெளியாகியுள்ளது இந்தப் புத்தகம்.  

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு    என்ன செய்யவேண்டும்?

புத்தகத்தின் பெயர்: எ மேனுவல் ஃபார் லிவ்விங் (A Manual for Living)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு    என்ன செய்யவேண்டும்?

ஆசிரியர்: எபிக்டெடஸ் (Epictetus)

பதிப்பாளர்: ஹார்பர்ஒன் (HarperOne) 

 என்ன சொல்கிறது இந்தப் புத்தகம்?

நாம் வாழும் சமூகம், ஒரு மனிதனை அவர் செய்யும் வேலை/தொழில்ரீதியான வெற்றி, அவரிடம் இருக்கும் சொத்து, பணம், அதிகாரம் மற்றும் புகழைக் கருத்தில்கொள்வதாக இருக்கிறது. ஆனால், எபிக்டெடஸோ, மனித மனதின் மகிழ்ச்சிக்கு இவற்றை ஒரு பொருட்டாக மதிக்கத் தேவையில்லை என்கிறார்.

 மகிழ்ச்சிக்கான மந்திரங்கள்

நீங்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டுமா? நீங்கள் எந்தவிதமான மனிதராக உங்கள் வாழ்வில் மாறுகிறீர்கள், என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்கிறீர்கள் என்பதை வைத்தே உங்கள் மகிழ்ச்சியின் அளவு இருக்கும் என்கிறார் எபிக்டெடஸ். அவரைப் பொறுத்தவரை,  உலகம் அளவிடும் ஏனைய எல்லா விஷயங்களையும் புறந்தள்ளிவிட்டு, ஒரு மனிதன் வாழும் அறம்சார்ந்த நல்ல குணமிக்க வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை என்கிறார்.

மகிழ்ச்சி மற்றும் தனிமனிதப் பரிபூரண நிலை (Personal Fulfillment) என்ற இரண்டும் சரியான விஷயங்களைச் செய்வதனாலேயே ஏற்படுகிறது. உலகத்தைப் புரிந்து கொள்கிறேன் என்று நினைக்காமல், என் பாதையை சரியானதாக மாற்றிக் கொள்வேன் என்று செயல்படுவதும், தார்மீக ரீதியான முன்னேற்றங்களைத் தொடர்ந்து மேற்கொள்வேன் என்று நினைக்கச்சொல்லும் சித்தாந்தத்தினை கொண்டவர் எபிக்டெடஸ். இவர் தன் கருத்துகளை, அவருடைய சீடர் களிடையே உரையாக நிகழ்த்தியுள்ளார். அவரது சீடர்களே அவற்றை எழுத்து வடிவில் எழுதிப் பாதுகாத்துள்ளனர். ராணுவ வீரர்கள் போருக்குப் போகும் போது ஒரு கையேட்டினை எடுத்துச் செல்வார்கள். அந்த வடிவமைப்பிலேயே எபிக்டெடஸின் கருத்துகளும் கையேடாகத் தரப்பட்டுள்ளது.

 முதல் மந்திரம்


மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு முதலாவதாக, நீங்கள் எதைக் கட்டுப்படுத்த முடியும், நீங்கள் எதைக் கட்டுப்படுத்த முடியாது என்பதைத் தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள் என்கிறது இந்தக் கையேடு.

‘‘வாழ்வில் சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் அடங்குவதாக இருக்கும். சில நம்முடைய கட்டுப்பாட்டில் அடங்காததாக இருக்கும்” என்ற ஒரு விஷயத்தை சர்வநிச்சயமாய் புரிந்துகொள்வது என்ற அஸ்திவாரத்தில் இருந்தே மகிழ்ச்சி உருவாகிறது. உதாரணமாக, நம் கருத்துகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் போன்றவையே நம் கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயங்கள். இவற்றை பற்றி நாம் கவலைப்பட்டே ஆகவேண்டும். இதில் எதை வைத்துக்கொள்வது, எதை விட்டுவிடுவது என்ப தெல்லாம் நம் கையிலேயே இருக்கிறது.

நம் கட்டுப்பாட்டில் இல்லாதவை எவை? பிறவி யிலேயே பணக்காரனாக பிறக்கிறோமா அல்லது வெற்றி கரமாகப் பணம் சம்பாதிக்கிறோமா,  மற்றவர்கள் நம்மை எப்படி மதிக்கிறார்கள், சமூகத்தில் நம்முடைய அந்தஸ்து என்ன என்பவை.  இவற்றை மாற்ற நினைத்தால் நிச்சயமாக வேதனையே மிஞ்சும். அப்புறம் எங்கே மகிழ்ச்சியுடன் இருப்பது என்கிறார் ஆசிரியர்.

  இரண்டாவது மந்திரம்

உங்கள் வேலையை மட்டுமே நீங்கள் பாருங்கள். அதில் மட்டுமே உங்கள் முழுக் கவனத்தையும் செலுத்துங்கள் என்று சொல்லும் ஆசிரியர், அப்படிச் செய்யும்போது அடுத்தவர்களுடைய வேலை மற்றும் காரியங்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள்; அதைச் செய்யவும் மாட்டீர்கள். இதை முழுமையாகக் கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டாலே பெரும்பாலான பிரச்னைகள் தீர்ந்துவிடும். அதேபோல், உங்களைப் பற்றி கவலைப்படாத விஷயங்களைப் பற்றி நீங்களும் கவலைப்படாதீர்கள். நாலுபேர் நம்மை நல்லவர் என்று சொல்லவேண்டுமே என்ற நினைப்பை விட்டொழியுங்கள். இதுவே உங்களுடைய மனோதிடத்தை அதிகப்படுத்திக் கொள்வதற்கான முதல் படி.

  மூன்றாவது மந்திரம்

அதேபோல், எதையாவது இழந்து (சொத்து, இறப்பு போன்றவை) கஷ்டப்படுபவர்களுக்கு அவர்கள் நிலைக்கேற்ற ஆறுதல்களை மட்டும் சொல்லுங்கள். ‘இதுமாதிரி நமக்கும் நடந்து விட்டால்..’ என்கிற எண்ணத்தை ஒருபோதும் கொண்டுவராதீர்கள். அது மகிழ்ச்சிக்கு எதிரான விஷயமாகும் என்கிறார் ஆசிரியர்.

  நான்காவது மந்திரம்

நம்முடைய ஆசைகளே நாம் அதை அடைய வேண்டும் என்கிற எண்ணத்தை நமக்குள் தூண்டுகிறது. நாம் நினைப்பது கிடைக்காதபோது வருத்தம் தோன்றுகிறது. அதேபோல், நாம் விரும்பாதது நமக்குக் கிடைக்கும்போதும் வருத்தமே தோன்றுகிறது.

  ஐந்தாவது மந்திரம்

மனிதனுக்கு ஏற்படும் ஆசையும் வெறுப்பும் மிகவும் சக்தி வாய்ந்த பழக்கவழக்கங்கள். இதைவிட சிறந்த பழக்க வழக்கங்களை நம்மால் பழகிக் கொள்ள முடியும். இயன்ற அளவுக்கு ஆசையைவிட்டு விலகி நிற்கப்பாருங்கள். இயன்ற வரை உங்கள் நடவடிக்கைகளை, நீங்கள் வாழ்கிற சூழலுக்கு ஏற்றாற்போலும் அவற்றுக்குப் பொருந்தும்படியும் இசைவா கவும் வைத்துக் கொள்ளுங்கள்.

  ஆறாவது மந்திரம்

நாம் வாழ்ந்துகொண் டிருக்கும் சூழலுக்கு ஏற்றாற்போல், நம்முடைய நடைமுறைகளை அமைத்துக்கொள்ளு தல் என்பது இருக்கும் இடம், உடனிருக்கும் மனிதர்கள், கிடைக்கிற வசதிகள்  போன்றவற்றைக்கொண்டு செயல்படுவதாகும். அதாவது, நீங்கள் எதைச் செய்கிறீர்கள் என்பதை விட, எப்படிச் செய்கிறீர்கள் என்பதே முக்கியமானது என்கிறார் ஆசிரியர்.

  ஏழாவது மந்திரம்

இழப்பதற்கென்று எதுவும் இல்லை என்ற மனநிலையில் வாழப் பழகிக்கொள்ளுங்கள். உங்களுக்கு நெருக்கமானவர்கள் இறந்து போகிறார்களா..? எங்கே இருந்து வந்தார்களோ, அங்கேயே சென்றுவிட்டார்கள் என நினைத்துக்கொள்ளுங்கள். உங்கள் காசு, பணம், சொத்து போன்றவை கொடூரமான முறையில் பறிபோயிருக்கிறதா? இந்த உலகம் அதை யாரிடம் இருந்து உங்களுக்குக் கொண்டு வந்து சேர்த்ததோ, அதை உங்களிடமிருந்து வேறொருவருக்கு கொண்டு போய் சேர்த்திருக்கிறது என்று நினைத்துக்கொள்ளுங்கள். கையில் இருப்பதைப் பற்றி மட்டுமே நினையுங்கள். உலகம், உங்களிடம் இப்போது அதையே வைத்திருக்கச் சொல்லி தந்திருக்கிறது. இந்த உலகத்தில் நீங்கள் ஒரு பயணி. அந்தப் பயணத்தில் கையில் வைத்திருக்கச் சொல்லி உலகமே உங்களுக்கு சில விஷயங்களை கையில் தந்து வைக்கிறது என்பதை உணர்ந்துகொண்டால் மகிழ்ச்சி நிச்சயமாக உங்களைத் தேடி வரும்.

  எட்டாவது மந்திரம்

நிலையான மகிழ்ச்சி என்பது மனதுக்குக் கிடைப்பது; உடலுக்குக் கிடைப்பதல்ல. எனவே, கஷ்டப்பட்டு உழைக்காவிட்டால், சம்பாதிக்க முடியாது. சம்பாதிக்கவில்லை என்றால் யாரும்  நம்மை மதிக்கமாட்டார்கள் என்றெல்லாம் நினைக்காதீர்கள். கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், காசு பணத்தை வைத்துக்கொண்டு, பயந்து, யாரையும் நம்பாமல், கவலையுடன், இன்னமும் சம்பாதிக்கவேண்டும் என்ற வெறியுடன் வாழ்ந்து சாவதைவிட காசு, பணம் இல்லாமல் பசி பட்டினியுடன் சாவது மேல்.

  ஒன்பதாவது மந்திரம்


உங்களுக்கென்று சில விஷயங்களை இந்த உலகம் தந்திருக்கிறது. உதாரணமாக, நீங்கள் நல்ல வாசகராக எதையும் படித்துப் புரிந்து, விவாதம் செய்பவராக இருக்கலாம். அதை மட்டுமே நீங்கள்  செய்யுங்கள். அதை விட்டுவிட்டு, இந்த ஆளெல்லாம் எழுதுகிறார்; நான் எழுதினால் என்ன என்று நினைத்து, நீங்களும் எழுத்தாளராக முயற்சி செய்யாதீர்கள்.

  பத்தாவது மந்திரம்

அடுத்தவர்கள் பார்வையில் புத்திசாலியாக நீங்கள் தெரிய வேண்டும் என்பது கட்டாயமில்லை. உங்கள் பார்வையில் நீங்கள் புத்திசாலியாகத் தெரிந்தாலே போதுமானது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். காரணம், அடுத்தவரின் மதிப்பீட்டின்படி, நீங்கள் புத்திசாலி என்று ஒருபோதும் சொல்லப்பட வாய்ப்பில்லை.

 பதினோராவது மந்திரம்

ஒரு சிலருக்கு மட்டும் வாய்ப்புகள் மிகச் சரியாக அமைகின்றனவே. அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கிறீர்களா? அதற்கெல்லாம் ஒரு விலை இருக்கவே செய்கிறது. சலுகையை அனுபவிக்க, நாம் அறவே மதிக்காத ஒருவரை மதிப்பதுபோல் அப்போது நடிக்க வேண்டி யிருக்கலாம். மகிழ்ச்சிப் பாதையில் செல்வது உங்களுக்குச் சரிப்பட்டு வருமா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

  பன்னிரண்டாவது மந்திரம்

நிகழ்காலத்தில் எது மிகவும் பிரபலமான பொழுதுபோக்காக இருக்கிறதோ, அதை ஒட்டு மொத்தமாகத் தவிர்த்துவிடுங்கள். இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் பொழுதுபோக்கு  உங்கள் பலவீனங்களைச் சுண்டி எழவைக்கும். அதற்கு ஒருபோதும் அடிமையாகி விடாதீர்கள். உங்கள் வாழ்க்கை என்பது மிகவும் குறைந்த கால அளவையேக் கொண்டது. அதில் பெரும்பாலான காலத்தை இந்தவிதமான பொழுதுபோக்குகள் எடுத்துக்கொள்ளும்.

உபயோகிப்பாளர் கையேடு இல்லாத, பொருள்களே தற்போது இல்லை.  நாம் பெரிதென நினைக்கும் வாழ்க்கைக்குக் கையேடு ஏதும் இல்லையே! அப்படி ஒன்று இருந்தால், எவ்வளவு உதவியாக இருக்கும் என்று நினைப்பவர்கள், சட்டைப்பையினுள் வைக்கும் அளவில் இருக்கும் இந்தக் கையேடு, வாழ்க்கைக்குத் தேவையான நல்ல பல விஷயங்களைச் சொல்வதால், அனைவரும் ஒருமுறை கட்டாயம் படிக்கலாம்.

- நாணயம் டீம்

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism