Published:Updated:

ஏற்றுமதித் தொழிலைத் தொடங்குவது எப்படி? - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்!-17

ஏற்றுமதித் தொழிலைத் தொடங்குவது எப்படி? - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்!-17
பிரீமியம் ஸ்டோரி
ஏற்றுமதித் தொழிலைத் தொடங்குவது எப்படி? - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்!-17

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

ஏற்றுமதித் தொழிலைத் தொடங்குவது எப்படி? - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்!-17

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

Published:Updated:
ஏற்றுமதித் தொழிலைத் தொடங்குவது எப்படி? - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்!-17
பிரீமியம் ஸ்டோரி
ஏற்றுமதித் தொழிலைத் தொடங்குவது எப்படி? - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்!-17

நிறைய பிசினஸ் வாய்ப்புகளும், பிசினஸில் அதிக லாபமும் கிடைக்க வேண்டுமெனில், கடல் தாண்டி வணிகம் செய்ய வேண்டியது அவசியம் என்பதைக் கடந்த இதழில் கூறியிருந்தேன். கடல் கடந்து வணிகம் செய்வதை நாம் இன்று, நேற்றல்ல, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செய்துவருகிறோம். விமானச் சேவைகள், நாடுகளுக்கிடையே ஆரம்பிப்பதற்குமுன், கப்பல்தான் பிற நாடுகளுடனான வர்த்தகத்துக்குப் பெரும் உதவியாக இருந்தது. இன்றும் விமானத்தைக் காட்டிலும், கடல் அல்லது கப்பல் மூலமான வர்த்தகம்தான் முன்னிலையில் இருக்கிறது.

இந்தியாவின் மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டிருப்பதுதான் ஏற்றுமதி பிசினஸ் செய்பவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். முக்கியமாக, தமிழகத்தில் ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து வசதிகளும், உள்கட்டமைப்பு அம்சங்களும் சிறப்பாக உள்ளன. புதிய தொழில் வாய்ப்புகளுக்கு இங்கு பஞ்சமே இல்லை. இதனைத் தமிழர்கள் பயன்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

இனி ஏற்றுமதித் தொழிலை எப்படித் தொடங்குவது என்று பார்ப்போம். ஏற்றுமதித் தொழில் செய்ய, உங்களிடம் அரசு தரும் உரிமமான ‘ஐஇ கோட்’ (IE Code) இருப்பது அவசியம் என்றும், அதனை ஒரு நிறுவனத்தின் பெயரில்தான் வாங்க முடியும் என்றும் கூறியிருந்தேன். 

ஏற்றுமதித் தொழிலைத் தொடங்குவது எப்படி? - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்!-17

பெயர் முக்கியம்

ஏற்றுமதித் தொழில் மட்டும்தான் செய்யப் போகிறேன் என்று நினைப்பவர்களுக்கு இந்த உரிமம் கிடைக்கும். இந்த எண்ணை வாங்குவதற்கு முன், பிற நாட்டின் இறக்குமதியாளர்களுக்கு எளிதில் புரியும் வகையில் ஒரு பெயரைத் தேர்தெடுத்து,  நிறுவனத்தைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

நீங்கள் பதிவு செய்யும் நிறுவனத்தின் பெயரில் ‘ஐஇ கோட்’ எடுத்துக் கொள்ளலாம். டிஜிஎஃப்டி  (DGFT - Director General Of Foreign Trade) இணைய தளத்திலோ, அலுவலகத்திலோ ‘ஐஇ கோட்’ பெற நீங்கள்   விண்ணப்பிக்கலாம். (கடந்த இதழில் DGFT என்பது TGFD என்று தவறுதலாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. DGFT என்பதே சரி. தவறுக்கு வருந்துகிறோம். - ஆர்)

‘ஐஇ கோட்’ விண்ணப்பிப் பதற்குமுன், உங்கள் நிறுவனத் துக்கென்று இமெயில் ஐடி, விசிட்டிங் கார்டு, லெட்டர் பேடு, ரப்பர் ஸ்டாம்புகள் மற்றும் டிஜிட்டல் சிக்னேச்சர் ஆகியவற்றைத் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். உங்களுடைய பிசினஸ் பற்றி நீங்கள் மற்றவர்களுக்கு எடுத்துரைக்க இவை உதவுவதுடன், அரசு நடைமுறைகளைச் சரியாகச் செயல்படுத்தவும் இவை தேவைப்படுகின்றன.

‘ஐஇ கோட்’ உரிமத்துக்கு விண்ணப்பிக்கும்போது பான் கார்டு, புகைப்படங்கள் ஆகியவற்றையும் வைத்துக்கொள்ள வேண்டும். தனிநபராக இருந்தால் உங்களுடைய பான் கார்டு போதுமானது. பார்ட்னர்ஷிப்பாக இருந்தால், நிறுவனத்தின் பெயரில் பான் கார்டு எடுக்க வேண்டும்.

பான் கார்டு உரிமத்தோடு சேர்த்து ‘டின்’ (TIN) நம்பர் வாங்கவேண்டும். ‘டின்’ நம்பர் என்பது விற்பனை செய்வதற்கான வரி அடையாள எண் ஆகும். இது மாநில அரசினால் வழங்கப்படுகிறது. ‘டின்’ நம்பர் இல்லாமல் பெரும்பாலான பொருள்களை வாங்கவோ, விற்கவோ முடியாது. முறைகேடாக விற்கவும் கூடாது. டின் மற்றும் சென்ட்ரல் சர்வீஸ் டாக்ஸ்க்கு (CST) விண்ணப்பிக்க https://ctd.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். சேவை வரி பதிவுக்கு  aces.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதையெல்லாம் செய்த பிறகு வங்கியில் ஒரு நடப்புக் கணக்கையும் ஆரம்பித்து விடுங்கள். பின்னரே ‘ஐஇ கோட்’ விண்ணப்பிக்க வேண்டும். ‘ஐஇ கோட்’ கிடைத்ததும் நீங்கள் ஏற்றுமதித் தொழில் செய்ய ஆரம்பிக்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏற்றுமதித் தொழிலைத் தொடங்குவது எப்படி? - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்!-17



 நீங்களும் ஜெயிக்கலாம்

‘ஐஇ கோட்’ எண்ணை வாங்கிவிட்டால் மட்டும் போதாது. ஏற்றுமதியில் ஜெயிப்பதற்கான விஷயங்களை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். என்னால் முடியுமா என்கிற சந்தேகம் உங்களுக்கு வேண்டும். உதாரணமாக, நான் சாஃப்ட்வேர் துறையைச் சேர்ந்தவன். ஏற்றுமதித் தொழிலைச்  செய்ய ஆரம்பித்து, கடந்த 20 வருடங்களாக வெற்றிகர மாகச் செய்து வருகிறேன். அரசின் ‘ஸ்டார் எக்ஸ் போர்ட்டர்’ என்ற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளேன். என்னைப் போல, நீங்கள் ஏற்றுமதித் தொழிலில்  வெற்றியடைய முடியும்.

இதற்குத் தேவை, முன் அனுபவமும் ஏற்றுமதி குறித்த அடிப்படை அறிவும்தான். இவற்றைப் பெறவேண்டுமென்றால் பின்வரும் நான்கு  விஷயங்களைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அவை, கற்றல் அவசியம், பயிற்சி வகுப்புகள், முதல் முயற்சி, உள்ளூரில் ஒரு வெற்றி. இந்த நான்கு விஷயங்களைப் பற்றி சுருக்கமாகச் சொல்கிறேன்.

 கற்றல் அவசியம்

ஏற்றுமதித் தொழில் குறித்த அடிப்படை விஷயங்களைப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏற்றுமதித் தொழில் என்றால் என்ன, அதில் உள்ள சாதக, பாதகங்கள் என்ன, என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது, பொருளை எப்படித் தேர்ந்தெடுப்பது, நாடுகளை எப்படித் தேர்ந்தெடுப்பது, இறக்குமதியாளரை எப்படி அணுகுவது, பொருளை எப்படிப் பாதுகாப்பாக அனுப்புவது, அனுப்பிய பொருளுக்கு எப்படிப் பணத்தை வாங்குவது என்று பல விஷயங்கள் குறித்தும் தெரிந்திருக்க வேண்டும்.

 பயிற்சி வகுப்புகள்

பயிற்சி வகுப்புகள் மூலமாகவும், மேலே சொன்ன அடிப்படை விஷயங்களைப் பற்றி ஏற்றுமதித் துறையில் அனுபவம் பெற்றவர்கள் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம். ஆனால், அனைத்து விஷயங்களையும் எல்லோரும் சொல்லித் தந்துவிட  மாட்டார்கள். மேலும், ஏற்றுமதி செய்பவர்கள் எல்லோருமே அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கவும் மாட்டார்கள். ஏற்றுமதி குறித்த நுணுக்கங்களைக் கற்றுக் கொடுக்க அரசு ஏற்றுமதி அமைப்புகள், பயிற்சி வகுப்புகள் எடுக்கின்றன. இந்தப் பயிற்சி வகுப்புகள் முழுக்க முழுக்க நடைமுறை சார்ந்து மிக வெளிப்படையாக, அனைத்துச் சாதக, பாதகங் களையும், தவிர்க்கவேண்டிய விஷயங்களையும் சொல்லித் தருகின்றன.

 (நாணயம் விகடனும் ஏற்றுமதியாளர்களுக்கான பயிற்சியை நடத்தி வருகிறது. இந்தப் பயிற்சி வகுப்புகள், ஏற்றுமதி செய்ய விரும்புபவர்களுக்கு தெளிவான பார்வையைக் கொடுப்பதோடு, தன்னம்பிக்கையைத் தருவதாகவும் உள்ளன. இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்வதன் மூலம், ஏற்றுமதித் தொழிலைக் கற்றுக்கொள்ளலாம். இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் http://bit.ly/2nuKkIM என்கிற லிங்கினை சொடுக்கி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.)

 முதல் முயற்சி

ஏற்றுமதித் தொழிலைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வதால் மட்டுமே ஒருவர் ஏற்றுமதி யாளராகிவிட முடியாது. முயற்சி மிகவும் முக்கியம். தனியாக நாமே களத்தில் இறங்கி, நம்முடைய முதல் ஆர்டரைப் பிடிக்க வேண்டும். பிறருடைய உதவியை நாடுவதில் தவறில்லை. ஆனால், அதையே நம்பி இருக்கக் கூடாது. நம்முடைய பொருள் யாருக்குத் தேவைப்படுகிறது என்பதை பிறரின் மூலம் தெரிந்துகொள்ள முடியும். பிசினஸ் ஆர்டரைப் பொருத்தவரை, பிறரையே நாம் சார்ந்திருந்தால் அது நமக்கு தோல்வியைத்தான் தரும். நம்முடைய சொந்த முயற்சிதான் நம்முடைய வெற்றியைத் தீர்மானிக்கும்.

 உள்ளூரில் ஒரு வெற்றி

ஏற்றுமதித் தொழிலில், தரம் என்பது தவிர்க்க முடியாத ஒரு விஷயம். அதற்காகத்தான் ‘ஏற்றுமதித் தரம்’ என்றே தனியாகப் பொருள்களின் தரம் பிரிக்கப்படுகின்றன.

அதேபோல், நம்முடைய தரமான பொருளை இறக்குமதியாளரிடம் விற்கத் தெரிய வேண்டும். அதற்காக முதலில் நம்முடைய பொருளை உள்ளூரில் விற்பனை செய்து பார்க்க வேண்டும். அப்போதுதான் அங்கு அது எந்தளவுக்கு வரவேற்பு பெறுகிறது, மக்களைச் சென்றடைய என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதையும், நாம் விற்க நினைக்கும் பொருளின் ப்ளஸ், மைனஸ் என்ன என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.

உள்ளூரில் செய்யும் விற்பனை மூலம் நீங்கள் அடையும் வெற்றி, உங்களுக்கு ஏற்றுமதி பிசினஸில் கைகொடுக்கும். ஏற்கெனவே உள்ளூரில் பிசினஸ் செய்பவர்களுக்குப் பிரச்னை இல்லை. புதிதாக நேரடியாக ஏற்றுமதி பிசினஸில் இறங்குபவர்கள் இதைக் கட்டாயம் செய்ய வேண்டும்.

  (ஜெயிப்போம்)

உச்சத்தில் வெங்காய ஏற்றுமதி

வெங்காய ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. 2016-17-ம் நிதி ஆண்டின் முதன் ஒன்பது மாதங்களில் மொத்தம் 27 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிதி ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் செய்யப்பட்ட வெங்காய ஏற்றுமதியையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், இது இன்னும் அதிகரிக்கும். 2009-10 நிதி ஆண்டில் செய்யப்பட்ட  18.7 லட்சம் டன் ஏற்றுமதிதான் இதற்குமுன் செய்யப்பட்ட அதிகபட்ச ஏற்றுமதி அளவாகும். ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக்கொள்வது அவசியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism