இந்தத் தொடரில் இதுவரை பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் பற்றி தனித்தனியாகப் பார்த்தோம். இனி, நவீன முதலீட்டு உத்திகளான மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச் சந்தை முதலீடு பற்றி பார்ப்போம். பொதுவாக, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்றாலே அது ரிஸ்க்கானது என நம்மில் பெரும்பாலானோர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மியூச்சுவல் ஃபண்டில் பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றின் முதலீட்டுத் தன்மைக்கேற்ப ரிஸ்க் இருக்கின்றன. ரிஸ்க் இல்லாத திட்டங்களும் உள்ளன. முதலீட்டுக் காலத்துக்கேற்ற திட்டங்களும் உள்ளன.

லிக்விட் ஃபண்ட்

ரிஸ்க் இல்லாத முதலீடான லிக்விட் ஃபண்ட் பற்றி இந்த இதழில் விரிவாகப் பார்ப்போம்.

இந்த ஃபண்டில் செய்யப்படும் முதலீடு, வங்கிச் சேமிப்புக் கணக்குக்குச் சிறந்த மாற்றாகப் பார்க்கப்படுகிறது. இந்த லிக்விட் ஃபண்டை உடனடித் திட்டம் என்றுகூட சொல்லலாம். காரணம், இதில் செய்யப்படும் முதலீட்டுத் தொகையை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். இதில் உள்ள யூனிட்களை இன்றைக்கு விற்றால் நாளைக்கு உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வந்து சேர்ந்துவிடும் வசதி இருக்கிறது. இன்னும் ஒருபடி மேலே சென்று, சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், முன்னணி வங்கிகளுடன் சேர்ந்து லிக்விட் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு ஏடிஎம் கார்டுகளைக் கொடுத்துவருகின்றன. இந்த கார்டு மூலம் ஏடிஎம்-லிருந்து எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஷாப்பிங்கூட செய்யலாம். நீங்கள் எடுக்கும் பணம் அல்லது செய்யும் செலவு, உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் கணக்கிலிருந்து கழிக்கப்படும்.

யாரெல்லாம் முதலீடு செய்யலாம்?

18 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இதில் முதலீடு செய்யலாம். மைனர்கள், பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மூலம் முதலீடு செய்யலாம்.

என்ன ஆவணங்கள் தேவை?

புகைப்பட அடையாள ஆதாரமாக பான் கார்டு அவசியம் தேவைப்படும். முகவரி ஆதாரமாக ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றைக் கொடுக்க வேண்டிவரும். ஆதார் இருந்தால், அதனைக் கொடுப்பது பல வகைகளில் நல்லது. இவை தவிர, வங்கி காசோலை ஒன்றும் தேவை.

எப்படி முதலீடு செய்வது?

இந்த லிக்விட் ஃபண்ட் திட்டத்தை அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும் கொண்டுள்ளன. அவற்றின் கிளை அலுவலகங்களில், விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்திசெய்து கொடுத்து முதலீட்டை ஆரம்பிக்கலாம். நிதி ஆலோசகர், மியூச்சுவல் ஃபண்ட் முகவர்கள் மூலமும் முதலீட்டை செய்யலாம்.

இந்த லிக்விட் ஃபண்டில் ஆரம்ப முதலீடு ரூ.5,000-ஆக இருக்கிறது. அதன்பிறகு மாதம் ரூ.1,000 தொடங்கி எவ்வளவு வேண்டுமானலும் முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு முதலீடு செய்யவேண்டியிருக்கும். அதற்கு மேல் எத்தனை ஆண்டுகளுக்கு வேண்டுமானாலும் முதலீட்டைத் தொடரலாம்.

நீங்கள் ஏற்கெனவே மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்துவருகிறீர்கள் எனில், உங்கள் பான் எண்ணைக் குறிப்பிட்டு உடனடியாக முதலீட்டை ஆரம்பித்துவிட முடியும். மேலும், ஆன்லைன் மூலமும் முதலீட்டைச் செய்யலாம். இந்தத் திட்டங்களில் திரட்டப்படும் நிதி அதிகம் ரிஸ்க் இல்லாத, ஃபிக்ஸட் இன்கம் தரக்கூடிய,

91 நாள்களுக்குள் முதிர்வுக் காலம் கொண்ட நிதி மற்றும் கடன் சார்ந்த பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். இதன் மூலம் கிடைக்கும் வருமானம், வங்கி சேமிப்புக் கணக்கு மற்றும் எஃப்டி-யைவிடக் கூடுதலாக இருக்கும்.

சிறப்பு அம்சங்கள்

லிக்விட் ஃபண்ட் திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். எப்போது வேண்டு மானாலும் அதைத் திரும்ப எடுக்க முடியும். இந்தத் திட்டத்துக்காகத் திரட்டப்படும் நிதி, நிதிச் சந்தையில் (மணி மார்க்கெட்) முதலீடு செய்யப்படுவதால், முதலீடு மீதான ரிஸ்க் இல்லை. இந்த ஃபண்டுகளில் நுழைவு மற்றும் வெளியேறும் கட்டணம் கிடையாது.

வருமானம் எப்படி?

இதில் முதலீடு செய்யும் தொகையை எவ்வளவு நாள்களுக்கு வைத்திருக்கிறீர்களோ, அதற்கேற்ப வருமானம் கிடைக்கும். பொதுவாக, ஆண்டுக்கு சுமார் 8% கிடைக்கும். (விரிவாக அட்டவணையில்)

வருமான வரி

‘‘வங்கி சேமிப்புக் கணக்கு லாபத்துக்கு அவரவரின் அடிப்படை வருமான வரம்புக்கேற்ப வரி கட்ட வேண்டியிருக்கும். லிக்விட் ஃபண்டில் முதலீட்டை மூன்றாண்டுகளுக்குள் எடுத்தால், குறுகிய கால மூலதன ஆதாய வரி 30% கட்ட வேண்டி வரும். அதற்கு மேற்பட்ட காலம் வைத்திருந்து பிறகு எடுத்தால், நீண்ட கால மூலதன ஆதாய வரி 20% கட்ட வேண்டி வரும். அப்படி வரி கட்டிய பிறகும் வங்கி சேமிப்புக் கணக்கை விட லிக்விட் ஃபண்ட் முதலீடு லாபகரமாக இருக்கும்’’ என்கிறார் ஆடிட்டர்
கே.ஆர்.சத்தியநாராயணன். அவர் மேலும் விளக்கிச் சொன்னார்.

‘‘வங்கி சேமிப்புக் கணக்குக்கு ஆண்டுக்கு 4% வட்டி தரப்படுகிறது. வங்கி சேமிப்புக் கணக்கு மூலம் கிடைக்கும் வட்டியில் ரூ.10,000 வரைக்கும் நிதியாண்டில் ஒருவர் வருமான வரி கட்ட வேண்டியதில்லை. இந்த ரூ.10,000 வட்டி கிடைக்க வேண்டுமென்றால், வங்கிக் கணக்கில் நிதியாண்டு முழுக்க ரூ.2.5 லட்சம் இருக்க வேண்டும். இந்தத் தொகையை லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்து, அதற்கு 8% வருமானம் கிடைத்தால், ரூ.20,000 கிடைக்கும். இந்த வருமானத்துக்கு 30% வருமான வரி ரூ.6,000. வங்கி சேமிப்புக் கணக்கு மூலம் கிடைக்கும் வரிச் சலுகை வருமானம் ரூ.10,000, ஆகமொத்தம் ரூ.16,000 கழித்தால்கூட ரூ.4,000 கூடுதல் லாபமாக இருக்கும்” என்றார்.

குறுகிய காலத்துக்குத் தேவைப்படும் பணத்தை, இந்த லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்து கூடுதல் வருமானம் பெறுங்களேன்.

(முதலீடு பெருகும்)