புத்தகத்தின் பெயர் : த மிரர் டெஸ்ட் (The Mirror Test)

ஆசிரியர் : ஜெப்ரி டபிள்யூ ஹேசெல்ட் (Jeffrey W. Hayzlett)

பதிப்பாளர் : Hachette Book Group USA

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்துவது ஜெப்ரி டபிள்யூ, ஹேசெல்ட் என்பவர் எழுதிய ‘த மிரர் டெஸ்ட் என்கிற புத்தகத்தை. இது, சிறு தொழில்களை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளைச் சொல்லும் புத்தகமாகும்.

சிறு வயதில் சுவாசக்காற்றை உணர, ஒரு கண்ணாடித்துண்டை மூக்கின் அருகில் கொண்டு சென்று அதன் மீது அதன்மீது மூச்சுக் காற்றை வெளியேற்றி, அதனால் தோன்றும் புகைபோன்ற படலத்தைக்கொண்டு, ‘அட, நாம் சுவாசிக்கிறோம்’ என்று உறுதிசெய்துகொண்ட நாள்களை நினைவுபடுத்திப் பாருங்கள். மனிதர்கள் உயிருடன் இருந்து சுவாசிக்கிறார்கள் என்பதைக் கண்டறிய இந்த சோதனை உதவுகிறது. நாம் செய்யும் தொழில்களுக்கு இது போன்ற சோதனை ஏதும் இருக்கிறதா என்று கேட்டால், இருக்கவே இருக்கிறது என்கிறார் இப்புத்தக ஆசிரியர். மூன்று விதமான சோதனைகள் இருக்கிறது என்று அவர் இனம் பிரித்து சொல்கிறார்.

பிசினஸ் என்றால் அது சம்பாத்தியம் மற்றும் வளர்ச்சி என்ற இரண்டையும் கொண்டிருக்க வேண்டும். அதுதானே பிசினஸின் மூச்சுக்காற்று! சம்பாத்தியமும் வளர்ச்சியும் இல்லை என்றால், அந்த பிசினஸ் உயிருடன் இல்லை என்பதுதான் அர்த்தமாகும். சொல்வதற்கும் கேட்பதற்கும் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், நடப்பில் இன்றைக்கு எக்கச்சக்கமான பிசினஸ்கள் சம்பாதிக்கிறபோதிலும் வளர்ச்சியடையாத காரணத்தால் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டுதான் இருக்கின்றன.

‘சும்மா பயங்காட்டாதீங்க சார். நாங்க சூப்பராக சம்பாதிக்கிறோம். புதுப்புது இயந்திரங்கள், டெக்னாலஜி, ஏசி, கண்ணாடின்னு சூப்பராக இருக்கிறது எங்களுடைய சூழல்’ என்கிறீர்களா?

இதெல்லாமா ஒரு தொழிலுக்கு முக்கியம்? வளர்ச்சி இல்லையென்றால் அது பிரச்னையாகிவிடாதா? வளர்ச்சி இல்லாத பிசினஸில் ஏன் ஒரு நிறுவனம் இயங்க வேண்டும்? ‘உணர்வுப் பூர்வ மான ஆர்வத்தினால் (Passion) மட்டுமே நாங்கள் இந்தத் துறையில் இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லி’ உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். ஆர்வம் என்பது திட்டமிடு தலுக்கு மாற்றாக ஒருபோதும் இருக்காது!

பணம் காய்க்கும் மரம் போன்ற அதிர்ஷ்டமுள்ள செயல்பாடு உங்களுக்கு எது, எதற்காக அது போன்ற ஒன்று உங்களுக்குக் கட்டாயம் வேண்டும் என்பதிலேயே நீங்கள் எப்போதும் கவனமாக இருக்கவேண்டும். அடுத்த மாத சம்பளத்தை எப்படித் தரப்போகிறோம் என்று நடுராத்திரியில் முழித்துக்கொண்டுக் மல்லாந்து படுத்துக் கொண்டிருப்பத் தவிர்க்கவேண்டும் எனில், மேற்சொன்ன விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்தியே ஆகவேண்டும். தொழிலில் வெற்றி என்பது ஒரே ஒருமுறை பெறுவதில்லை. தொடர் வெற்றிகள் தேவை. தொடர் வெற்றிகளைக் காண முடியாத நிறுவனங்கள், செல்லும் திசையறியாது சென்றுகொண்டிருக்கும் நிறுவனங்களே ஆகும்.

ஒரு தொழில் தொடர்ந்து வெற்றி மூச்சு விட்டுக் கொண்டிருக்க மூன்று சோதனைகளைச் சொல்கிறார் ஆசிரியர். அந்தச் சோதனைகள் இனி...

உங்கள் எதிர்கால இலக்கு என்ன?

இதுதான் முதல் சோதனை. நீங்கள் ஏன் இந்தத் துறையில் இருக்கிறீர்கள், ஏன் இதைச் செய்கிறீர்கள், என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்? பணம் சம்பாதிக்க வேண்டுமென்றா, பணம் சம்பாதித்த பின் என்ன செய்ய இருக்கி றீர்கள், இந்தத் தொழில் மூலம் என்ன எதிர்பார்க்கிறீர் கள், எங்கே போகிறது உங்கள் பிசினஸ், அது தேவையான அளவு வளர்ந்த பின் நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்கள்? உங்கள் தொழில் எப்படி நடந்தால் உங்களுக்கு மகிழ்ச்சி என்பதற்கான கேள்விகளே இவை.

நிறுவனத்தை நடத்தும் திறமை உங்களுக்கு உண்டா?

இது இரண்டாவது சோதனை. நீங்கள் தலைமை யேற்று நடத்தும் இந்த நிறுவனத்தினை நீங்கள் தலைமையேற்கத் தகுந்த ஆள்தானா என்ற கேள்வி வருகிறது. நீங்கள் எப்படி வழிநடத்துகிறீர்கள் என்ற கேள்வியைவிட உங்களால் வழிநடத்த முடியுமா என்ற கேள்வியே மிக அவசியமாகிறது. நீங்கள் நீங்களாக நடந்துகொள்கிறீர் களா அல்லது வேறு ஒருவரைப் போல் நடக்க முற்படுகிறீர்களா? நீங்கள் உங்கள் வியாபாரம் தரும் சிக்னல்களை மனதில் கொண்டு அதற்கேற்றாற்போல் வெற்றி பெறக்கூடிய முடிவுகளை எடுக்கக்கூடிய திறனைக் கொண்ட தலைவன்தானா? நீங்கள் செய்யும் தொழிலுக்கு உகந்த குணாதிசயங்களைக் கொண்டவரா, உங்கள் பணியாளர்களிடம் நீங்கள் நியாயமாகவும் அவர்களை உங்கள் பிசினஸில் தகுந்த பங்களிப்பை செய்யுமாறு அனுமதியளித்தும் நடக்கக்கூடிய தலைவரா? உங்களால் உங்கள் தொழிலுக்கு வெளியே இருந்துவரும் பிரச்னைகள் மற்றும் நிறுவனத்துக்கு உள்ளே வரக்கூடிய பிரச்னைகள் இரண்டையும் சாமர்த்தியமாகக் கையாள முடியுமா?

இந்தக் கேள்விகளுக்கு நியாயமான பதிலை வழங்க முடிந்து, அதுவும் பாசிட்டிவ்வாக இருந்தால் மட்டுமே உங்கள் பிசினஸ் மூச்சுவிடுகிறது என்று அர்த்தம்.

உங்கள் பிசினஸை கூறுபோட்டு விற்காதீர்கள்!

மூன்றாவது சோதனை இது. ஒரு ராணுவ வீரானாக நீங்கள் இல்லாவிட்டால் ராணுவ வீரன் போல் நடிக்க முயலாதீர்கள். பெரும்பாலான சிறு தொழில்கள், தங்கள் துறையில் போராடுவதற்கான எல்லா ஆயுதங்களையும் தங்களிடத்தே கொண்டிருப்பதற்கான வாய்ப்புடன் திகழ்வதில்லை. அதனால் கையில் இருக்கும் ஆயுதங்களில் எது நல்லதோ, அதை மட்டும் வைத்தே தொழிலில் போராடுங்கள். ஒருபோதும் (நீங்கள் விற்கும் பொருள்களின்) விலையை அடிப்படையாக வைத்து தொழில் போராட்டத்தை நடத்தாதீர்கள். அப்படிச் செய்ய ஆரம்பித்தால், நீங்கள் விற்பது பொருளை அல்ல. உங்களுடைய நிறுவனத்தினை (கொஞ்சம் கொஞ்சமாக கூறுபோட்டு) என்கிறார் ஆசிரியர்.

வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை, ஒரு போதும் ‘நமக்கு வாய்த்த அடிமை இவர்’ என்ற எண்ணம் கொண்டு திரியாதீர்கள். அதே போல், என் வாடிக்கையாளரை எனக்கு நன்றாகத்தெரியும் என்று இறுமாப்பும் கொள்ளாதீர்கள். வாடிக்கையாளருக்கு கம்பெனியைக் கூறு போட்டு ஒரு காலத்திலும் விற்க ஆரம்பிக்காதீர்கள். விலையை இறக்கி வியாபாரம் செய்ய ஆரம்பித்தால், சிக்கல்கள் பலவும் வரும். தொழில்களைப் பொறுத்த வரை, நாளைக்கு என்ன செய்யப்போகிறீர்கள் என்பதுதான் விஷயமே தவிர, நேற்றைக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதல்ல. நாளைக்கு அதிரடி விலைக் குறைப்பு இருக்கும் என்று எதிர்பார்க்க ஆரம்பிக்கும் தருணத்தில், இன்றைக்கு உங்கள் வாடிக்கையாளர் உங்களிடம் பொருள்களை வாங்கப்பயப்படுவார் என்பதே சந்தையின் விதியாகும்.

வாடிக்கையாளரிடம் 10% பேசுங்கள். 90% அவர்கள் சொல்வதைக் கேட்டுப் பழகுங்கள். உங்களுக்கு வியாபாரத்தைக் கொண்டுவந்து சேர்க்கும் முதல் 20% வாடிக்கையாளரைக் கண்டுபிடிக்க முழுமையான கவனத்துடன் செயல்படுங்கள். அந்த 20% சதவிகித நபர்களே உங்களுக்கு 80% சதவிகித வியாபாரத்தைக் கொண்டு வருவார்கள். இவர்களைக் கண்டறிய நீங்கள் தவறினால், உங்கள் தொழிலின் மூச்சு நின்றுவிடும்.

உங்கள் தொழில் குறித்து உங்களுக்கு எது தெரியாது என்பதை மனதில் கொன்டு செயல்படுங்கள். இந்தக் கருத்து உங்கள் மனதில் இல்லாவிட்டால் நீங்கள் யூகிக்க ஆரம்பிப்பீர்கள். யூகத்தில் ஆரம்பிக்கப்படும் பல விஷயங்களுமே ஆரம்பிப்பதற்கு முன்னரே தோற்றுவிடுகின்றன. தெரியாத விஷயங்களை எப்படித் தெரிந்து கொள்வது என்று கேட்டால், எப்போதுமே புதியதாக பிசினஸ் ஆரம்பித்தவர் போன்ற (beginner) மனநிலையிலேயே இருங்கள். இதுபோன்ற சூழலே உங்களுக்கு உங்களுடைய தொழிலை சுலபத்தில் புரியவைப்பதாக இருக்கும்.

சிறிய தொழில் நிறுவனங்கள், பெரு நிறுவனங்களுடன் போட்டி போடவே முடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். பல சமயங்களில் புத்திசாலித்தனத்தைவிட ஆழ்ந்த சிந்தனையே தொழிலில் பலனளிக்கக்கூடியதாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று சொல்லி முடிக்கிறார் ஆசிரியர்.

தொழிலை உயிர்ப்புடன் செய்ய நினைப்பவர்கள் இந்த புத்தகத்தினை ஒருமுறையாவது அவசியம் படிக்கலாம்.

- நாணயம் டீம்

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)