கிரெடிட் கார்டு தொடங்கி, வீட்டுக் கடன் வரை எந்தக் கடனைக் கேட்டு தற்போது வங்கிகள் மற்றும் நிதிச் சேவை நிறுவனங்களை அணுகினாலும், அந்த நிறுவனங்கள் முதலில் ஆராய்ச்சி செய்வது நம்முடைய கிரெடிட் ரிப்போர்ட் என்கிற கடன் அறிக்கை விவரத்தைதான்.

முன்பு, இந்த அறிக்கையைப் பணம் கட்டித்தான் வாங்க வேண்டியிருந்தது. இப்போது இந்த அறிக்கைகள் இலவசமாகவே கிடைக்க வழிசெய்து தந்திருக்கிறது நம்முடைய மத்திய ரிசர்வ் வங்கி. எனவே, வீட்டுக் கடன், கார் கடன் உள்ளிட்ட கடன்களைப் பெற விண்ணப்பிப்பவர்கள் முதலில் தங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பற்றி அறிந்து கொள்வது நல்லது.

இந்த கிரெடிட் அறிக்கையை கிரெடிட் அமைப்புகளிடம் இருந்து அனைவரும் பெறமுடியும். இந்த அறிக்கையை முன்னர் கட்டணம் செலுத்திப் பெறவேண்டும். இதற்கு சுமார் ரூ.400 முதல் ரூ.550 வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இனி இவ்வளவு செய்யாமலே இந்த ரிப்போர்ட்டை பெற முடியும்.

கிரெடிட் அமைப்புகள்

இந்தியாவில் தற்போது நான்கு ஏஜென்சிகள் தனித்தனியே இந்தக் கடன் அறிக்கையை இலவசமாக வழங்கி வருகின்றன. இந்த கிரெடிட் இன்ஃபர்மேஷன் ரிப்போர்ட் என்பது, தனிநபர்கள் கடன் வாங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒருவரது கடன்பெறும் தகுதியைத் தீர்மானிக்க உதவும் கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்ட விவரங்கள் இந்த அறிக்கையில் பதிவாகி இருக்கும். இதில் 300 முதல் 900 வரை கிரெடிட் ஸ்கோர் இருக்கிறது. கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருந்தால், கடன் எளிதாகக் கிடைக்கும். மேலும், வட்டி விகிதமும் குறைவாக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

வழக்கமாக, 750-க்கும் அதிக ஸ்கோர் பெற்றிருப்பவர்கள் சுலபமாக எந்தக் கடனையும் பெற முடியும். எனவே, இந்த அறிக்கையில் 750-க்கும் அதிக ஸ்கோர் கிடைக்கிற மாதிரி ஒருவரது நிதிப் பழக்கவழக்கங்கள் இருக்கவேண்டும்.

இந்த அறிக்கையின்படி, கடன் வரலாறு சரியாக இல்லாதவர்களுக்குக் கடன் மறுக்கப்படுகிறது. ஆனால், இந்த விவரத்தையும் மற்றும் இதற்குமுன் வாங்கிய கடன் அல்லது நிதி சார்ந்த பரிவர்த்தனையில் எதில் பிரச்னை என்பதை நிறுவனங்கள் பெரும்பாலும் சொல்வதில்லை.

இலவச கிரெடிட் ரிப்போர்ட்

இந்த நிலையில், ஏற்கெனவே கிரெடிட் கார்டு மூலம் கடன் வாங்கியவர்கள், இதர தனிநபர் கடன், கார் கடன், வீட்டுக் கடன் வாங்கித் திரும்பச் செலுத்தியவர்கள், இப்போது பெற்றிருக்கும் கிரெடிட் ஸ்கோர் என்ன என்கிற அறிக்கையை இலவசமாகப் பெறும் வசதியை ரிசர்வ் வங்கி ஏற்பாடு செய்து தந்திருக்கிறது. இதன்படி, ஆண்டுக்கு ஒரு முறை கிரெடிட் அறிக்கையை, கிரெடிட் ஏஜென்ஸி நிறுவனங்கள் இலவசமாக வழங்கவேண்டும். இந்த நடைமுறையை 2017 ஜனவரி முதல் அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் இயங்கும் ஒவ்வொரு கிரெடிட் ஏஜென்ஸி நிறுவனமும் தனித்தனியே ஆண்டுக்கு ஒருமுறை இலவசமாக கிரெடிட் ரிப்போர்ட் தரவேண்டும் என்பதால், ஒருவர் ஒரு ஆண்டுக்கு மொத்தம் நான்கு ரிப்போர்டுகளை இலவசமாகப் பெற முடியும்.

இலவச கிரெடிட் அறிக்கையைப் பெறுவது எப்படி?

இலவச கிரெடிட் அறிக்கையைப் பெறும் நடைமுறை பற்றிய விரிவான குறிப்புகளை கிரெடிட் ஏஜென்ஸிகள், தங்கள் இணைய தளங்களில் குறிப்பிட வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி யுள்ளது.

ஒருவருடைய கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்ட தகவல்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கும். கடன் தகுதி தொடர்பான அண்மைக் கால தகவல்களைக் கொண்டதாக இது அமைந்திருக்கும். அதாவது, கிரெடிட் அறிக்கையில், குறைந்த பட்சம் கடந்த 36 மாதங்களுக்கான கடன் மாதத் தவணை விவரங்கள், கடன் பெற்ற வங்கிகள், கடன் வகை, மீதமுள்ள கடன் தொகை, கடனைத் திரும்பக் கட்டும் நடவடிக்கை உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.

மேலும், ஒருவரின் கிரெடிட் அறிக்கை யைக் கோரிக்கையின் பேரில் பார்வையிட்ட வங்கிகள், நிதிச் சேவை நிறுவனங்கள், வீட்டு வசதி நிறுவனங்கள் பற்றிய தகவல் களும் இடம்பெற்றிருக்கும்.

இந்த இலவச அறிக்கையைப் பெற, பெயர், பான் கார்டு, இ–மெயில் உள்ளிட்ட விவரங்களைக் கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும். உங்களிடம் பான் கார்டு இல்லையென்றால், உங்களைப் பற்றிய அடிப்படை விவரங்களைக் கேட்கும். மேலும், உங்கள் கிரெடிட் ஸ்கோரை நீங்கள்தான் கேட்கிறீர்கள் என்பதற்கான ஆதார ஆவணத்தை இணைக்கவேண்டும்.

இந்த இலவச கிரெடிட் அறிக்கையானது மின்னணு வடிவில் மட்டுமே தரப்படும். வேண்டுமெனில், நீங்கள்தான் அதைக் காகித வடிவில் பிரதி எடுத்துக்கொள்ள வேண்டும். இலவசக் கடன் அறிக்கையை அளிக்கும் கிரெடிட் நிறுவனங்கள் பற்றி இனி சுருக்கமாகப் பார்ப்போம்.

கிரிப் ஹை மார்க் கிரெடிட் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ்

இந்த கிரெடிட் ஏஜென்ஸியானது, இலவசக் கடன் அறிக்கையைக் கேட்டு விண்ணபித்த ஒரு வார காலத்துக்குள் தந்துவிடுகிறது. சிலருக்கு 48 மணி நேரத்தில்கூட கிடைக்கிறது. கடன் ஸ்கோரைக் கேட்டு விண்ணப்பம் செய்பவர் நீங்கள்தான் என்பதை ஆன்லைனில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கவேண்டியது அவசியம். இதற்கு பான் கார்டு, பாஸ்போர்ட், ஆதார், அண்மைக் கால மின் கட்டண ரசீது ஆகிய ஆவணங்களை ஸ்கேன் செய்து அனுப்பலாம். இதனைக் கொண்டு நீங்கள்தான் விண்ணப்பித்திருக்கிறீர்கள் என உறுதிசெய்யப்பட்ட பிறகே கிரெடிட் ரிப்போர்ட் உங்களின் இ-மெயிலுக்கு அனுப்பப்படும். இந்த நிறுவனத்திடமிருந்து இலவச கிரெடிட் ரிப்போர்ட்டுக்கானப் படிவம் மற்றும் கூடுதல் விவரங்களைப் பெற: https://cir.crifhighmark.com/Inquiry/B2C/B2CFFCRPortal.action

ஈக்யூபேக்ஸ் கிரெடிட் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ்

இந்த நிறுவனத்தின் கிரெடிட் அறிக்கையைப் பெற, அதன் மொபைல் அப்ளிகேஷனைப் பதிவிறக்கம் செய்யவேண்டும். ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மொபைல்களில் இந்த ஆப்பை டவுன்லோடு செய்துகொள்ளலாம். உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்துகொள்ளுங்கள் (KYC) விவரங்களைக் கொடுக்கவேண்டும். இதன் பிறகு உங்களின் ஆதார் எண்ணை அளித்தால், இலவசக் கடன் அறிக்கையைப் பெறலாம்.

ஸ்மார்ட் போன் அல்லது ஆதார் இல்லாதவர்கள், ஸ்கேன் செய்யப்பட்ட கேஒய்சி ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, மின்னஞ்சலில் அனுப்பவேண்டும். கூடுதல் விவரங்களைப் பெற: (http://www.equifax.com/international/ india/pdfs/CreditReport RequestForm.pdf)

எக்ஸ்பீரியன் கிரெடிட் இன்ஃபர்மேஷன் கம்பெனி

இந்த நிறுவனத்திடமிருந்து இலவச கிரெடிட் அறிக்கையைப் பெற, ‘வவுச்சர் கோட்’ ஒன்று அளிக்கப்படுகிறது. இந்த ‘கோட்’ பெற இரு தினங்கள் ஆகும். இதனைப் பெற்று, இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கவேண்டும். அப்போது உங்கள் கடன் வரலாறு குறித்து சில கேள்விகள் கேட்கப்படும். குறைந்தபட்சம் மூன்று நாள்களில் இதற்கான அறிக்கை கிடைக்கிறது. கூடுதல் விவரங்களுக்கு: www.experian.in/consumer/experian-free-credit-report.html

டிரான்ஸ்யூனியன் சிபில்

இந்தியாவின் முதல் கிரெடிட் ஏஜென்ஸியான இந்த நிறுவனம் இருந்து இலவசக் கடன் அறிக்கையை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியைக்கொண்டு வந்திருக்கிறது. ஆன்லைனில் நீங்கள்தான் விண்ணப்பம் செய்கிறீர்கள் என்பதை நிரூபிக்கத் தவறினால், கேஒய்சி ஆவணங்களின் நகல்களை இ-மெயில் மூலம் இணைத்து அனுப்ப வேண்டும். சுமார் ஏழு நாள்களுக்குள், சிபில்-ன் myCIBIL portal-ல் கிரெடிட் ரிப்போர்ட் கிடைக்கும். https://www.cibil.com/freecreditscore/

இந்த அறிக்கையில் ஏதேனும் தகவல் பிழை இருந்தால், அதை சரிசெய்யும் வாய்ப்பை கடன் வாங்கியவர்களுக்கு அளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இனி காலாண்டுக்கு ஒருமுறை நமது கடன் ஸ்கோரை நாமே கேட்டுத் தெரிந்துகொண்டு, நம் கிரெடிட் ஸ்கோரை உயர்த்திக் கொள்ளலாமே!

ஒவ்வோர் அறிக்கையிலும் ஒவ்வொரு ஸ்கோர்!

சென்னையைச் சேர்ந்த கணபதி கூறும்போது, “நான் சிபில் மற்றும் எக்ஸ்பீரியன்ஸ் நிறுவனங்களுக்கு இலவச கிரெட் ரிப்போர்ட்க்கு விண்ணப் பித்தேன். இரண்டு நிறுவனங் களும் உடனடியாக ரிப்போர்ட் அளித்தன.

சிபில் நிறுவன அறிக்கையில் என் ஸ்கோர் 768 ஆகவும் எக்ஸ்பீரியன்ஸ் அறிக்கையில் என் ஸ்கோர் 734 ஆகவும் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் புள்ளி விவரங்களைப் பெறுவது மற்றும் அளிப்பதில் வேறு வேறு முறைகளை பின்பற்றுவதால் ஸ்கோர் வேறுபடுவதாகச் சொல்கிறார்கள். இதனால், பொது மக்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். எந்த வங்கி, எந்த நிறுவன ஸ்கோரை எடுத்துக் கொள்ளும் என சொல்ல முடியாது. எனவே, அனைவரும் ஒரே முறையை பின்பற்றினால், ஒரே ஸ்கோர் அனைத்து நிறுவனங்களின் அறிக்கையிலும் இடம் பெற வாய்ப்பிருக்கிறது” என்றார்.