Published:Updated:

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 18

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 18
பிரீமியம் ஸ்டோரி
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 18

செல்லம் கொடுத்தார்... செலவாளி ஆக்கினார்!சுரேஷ் பார்த்தசாரதி, Founder, Myassetsconsolidation.com Registered Investment Advisor, INA200000878ஓவியம்: கோ.ராமமூர்த்தி

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 18

செல்லம் கொடுத்தார்... செலவாளி ஆக்கினார்!சுரேஷ் பார்த்தசாரதி, Founder, Myassetsconsolidation.com Registered Investment Advisor, INA200000878ஓவியம்: கோ.ராமமூர்த்தி

Published:Updated:
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 18
பிரீமியம் ஸ்டோரி
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 18

முரளிதரன், சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் முக்கியமான பொறுப்பில் பணியாற்றி வருகிறார். முரளியின் மனைவி தேவகி, பட்டப் படிப்புப் படித்தவர். வீட்டு நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்கிறார்.

முரளிதரன் ஆரம்பத்திலிருந்தே பல நிறுவனங்களில் பல துறைகளில் பணியாற்றியவர். இதனால் அவர், இந்தியாவில் வெவ்வேறு இடங்களுக்கு அடிக்கடி குடிபெயர்ந்து சென்றார்.

முரளியின் ஒரே மகன் ரகு. வெவ்வேறு கலாசாரச் சூழலில் வளர்ந்து வந்ததால், ரகுவின் பழக்கவழக்கங்களே வித்தியாசமாக மாறிப்போனது. அதுமட்டுமல்ல, ரகு ஒரே மகன் என்பதால், முரளியும் சரி, தேவகியும் சரி, என்ன விரும்பினாலும் ரகுவுக்கு வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். இந்தச் செல்லம்தான் ரகுவை ஊதாரித்தனமாக செலவு  செய்யத் தூண்டுகோலாக அமைந்தது.

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 18

கல்லூரிப் படிப்பை முடித்ததும் ரகுவுக்கு சரியான வேலை அமையவில்லை. எந்த வேலையில் சேர்ந்தாலும், ரகுவால் நிலைத்து நிற்க முடியவில்லை. தொடர்பே இல்லாத வெவ்வேறு வேலைகளுக்கு மாறிக்கொண்டே இருந்தார். முரளியும், தேவகியும் மகனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டால் பொறுப்பு வந்துவிடும் என நினைத்தார்கள். ஆனால், பெண் தேடும் அளவுக்கு கௌரவமான எந்த வேலையும் இல்லை என்பதால், ஏதாவது பிசினஸ் செய்ய வைக்கலாம் என நினைத்தார்கள். ஜிம் ஒன்றை நடத்த ரகு விரும்பியதால், சிலபல லட்சங்களை செலவுசெய்து, மாடர்னாக ஒரு ஜிம் வைத்துத் தந்தார்கள். அதன்பிறகு ‘ஜிம் உரிமையாளர்’ என்ற கௌரவத்துடன் பெண் பார்த்து, திருமணத்தையும் முடித்து வைத்தார்கள்.

ஆனால், ரகுவுக்கு ஒரு பிசினஸை நிர்வகிக்கக் கூடிய திறனோ, பணத்தை கையாளக் கூடிய பக்குவமோ கொஞ்சமும் இல்லை என்பதால், ஜிம் பிசினஸ் பிக்அப் ஆகவில்லை. பிசினஸை வளர்த் தெடுக்கும் மார்க்கெட்டிங் உத்திகளை சிறிதளவாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமோ முயற்சியோ ரகுவுக்கு இல்லை என்பதால் மாதாந்திரச் செலவுகளுக்கே தடுமாறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 18மகன் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக பையனுக்குச் சொத்து ஏதாவது எழுதி வைக்கலாமா என முரளிதரனும், தேவகியும் யோசித்தார்கள். இந்தச் சூழலில்தான் என்னிடம் ஆலோசனை கேட்டுவந்தார்கள்.

மகனைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் சமீபத்திய நிகழ்வுகள் வரை என்னிடம் சொன்னார்கள் முரளிதரனும், தேவகியும். ரகு பயோடெக்னாலஜி படித்தவர். ஆனால், அக்கவுன்ட்ஸ் வேலைக்குப் போயிருக்கிறார். பிறகு, பார்மா இண்டஸ்ட்ரிக்குத் தாவியுள்ளார். அதிலும் நிலைக்கவில்லை. ஏதாவது ஒரு துறையில் கவனத்தைச் செலுத்தி முன்னேற்றத்துக்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ளாமல், மூன்று மாதங்களுக்கு ஒரு வேலை என்று மாறிவந்திருக்கிறார். ரகு இப்படியெல் லாம் நடந்துகொள்ள முரளிதரன், தேவகி அனுமதித்தது தவறு. அதைச் சுட்டிக்காட்டினேன். ஆரம்பக் காலம் முதலே அவர்களின் வளர்ப்புமுறைதான் எல்லா தவறுகளுக்கும் காரணமாக இருந்துள்ளது எனலாம்.

பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு வரவு செலவு உள்ளிட்ட பண நிர்வாகத்தைக் கற்றுத் தருவதில்லை. முரளிதரன் இந்த விஷயத்தில் பூஜ்யமாக இருந்துள்ளார். சமீபத்தில் ரகுவுக்குத் திருமணம் செய்தபோதுகூட ரகு சொன்ன சில யோசனைகளையே கேட்டு நடந்துள்ளார்கள்.

‘‘திருமணத்தைச் சிக்கனமாக கோயிலில் நடத்துங்கள். அதற்கு ஆகும் செலவை வெளி நாட்டுக்கு ஹனிமூன் போக கொடுத்துவிடுங்கள்’’ என ரகு கூறியுள்ளார். கோயிலில் சிக்கனமாக திருமணம் முடித்ததால், பெண் வீட்டார் எந்தச் செலவுகளையும் ஏற்கவில்லை. மொத்தச் செலவுகளையும் முரளியே செய்தார். ஆனால், மகன் வெளிநாட்டுக்கு ஹனிமூன் செல்ல ரூ.10 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளார் என்பதுதான் அதிர்ச்சி தரும் தகவல்.

ரகு செலவு செய்தே பழக்கப்பட்டுவிட்டதால், சுலபமாக அவரால் தன்னை மாற்றிக்கொள்ள முடியவில்லை. மாதம் ரூ.40 முதல் 50 ஆயிரம் வரை தனக்காக மட்டும் செலவு செய்தார். ஜிம் நடத்துவதால் வரும் வருமானம் ரகுவின் செலவு களுக்கே போதவில்லை என்பதால், ஏதாவது ஒரு சொத்தினை எழுதித் தரலாமா என்று பலமாக யோசித்து வந்தார் முரளிதரன்.

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 18

அவரது யோசனையை நான் கொஞ்சம்கூட ஏற்கவில்லை. சொத்து எழுதி வைப்பதால், ரகுவின் பிரச்னை தீர்ந்துவிடாது என அவர்களுக்குப் புரிய வைத்தேன். இன்னும் ஒரு வருடத்தில் முரளிதரன் ஓய்வு பெறப்போகிறார். ஓய்வுக்குப்பிறகு ஜிம் பிசினஸை அவரே எடுத்து நடத்துவதுபடியும், ரகுவுக்கு தொழிலைக் கற்றுத் தரும்படியும் சொன்னேன். அதுவரை மாதாந்திரச் செலவுகளுக்கு வேண்டுமானால் பணம் கொடுத்து உதவுங்கள் என்று சொன்னேன். தற்போது முரளிதரன் ரூ.4 கோடி வரை வெவ்வேறு முதலீடுகளில் வைத்துள்ளார். கொஞ்சம் நிலமும் உள்ளது. சொந்தமாக வீடும் இருக்கிறது.

நிதி சார்ந்த சொத்துகளாக உள்ளவற்றைப் பற்றி ரகுவிடம் இப்போதைக்குத் தெரியப்படுத்த வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ரகுவின் செலவு செய்யும் பழக்கத்தைச் சீர்படுத்தி, நிதி ஒழுங்கை கற்றுக்கொடுக்க வேண்டியதுதான் உங்களின் முதல் பொறுப்பு என்பதை முரளிதரனிடம் எடுத்துச் சொன்னேன். இவ்வளவு பணம் உங்களிடம் இருப்பது ரகுவுக்கு தெரிந்தால், ‘அப்பாவிடம்தான் நிறைய பணம் இருக்கிறதே, நமக்கென்ன கவலை’ என்கிற ரீதியில் யோசிக்க ஆரம்பித்துவிடுவார். அது ரகுவின் வளர்ச்சியைப் பெரிதாகப் பாதிக்கும் என்று சொன்னேன்.

‘‘ரகுவின் எதிர்காலத்துக்காக இப்போதைக்கு மொத்தமாக ஒரு கோடி ரூபாய் வரை இன்வெஸ்ட் செய்யலாமா?’’ என்று கேட்டார் முரளிதரன். ‘‘இப்போதே உடனடியாக செய்ய வேண்டாம். உங்கள் மகனுக்குக் குழந்தை பிறந்ததும் குழந்தையின் பெயரில் முதலீடு செய்யுங்கள். ஒருவேளை உங்கள் மகனால் எதிர்காலத்துக்காகப் பெரிய அளவில் பணம் சேர்க்க முடியாமல் போனால், அது குழந்தையின் எதிர்காலத்துக்குப் பயன்படுவதாக இருக்கும்’’ என்றதும் முரளிதரனும், தேவகியும் ஒப்புக்கொண்டார்கள்.
மூன்று மாதங்கள் கழித்து முரளியும் தேவகியும் என்னைச் சந்தித்தார்கள். ரகு இப்போது தன் பொறுப்பை கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்துள்ளதாக மகிழ்ச்சியுடன் சொன்னார்கள்.  முரளி, தேவகி மாதிரியான பல பெற்றோர்களை நான் தினமும் பார்க்கிறேன். அவர்கள் தங்கள் பொறுப்பை உணர வேண்டும்!

என்னென்ன தவறுகள்..?

* நிதி நிர்வாகத்தைக் கற்றுக்கொடுக்காதது

* சரியான குறிக்கோளை வளர்க்காதது

* ஹனிமூன் செல்ல ரூ.10 லட்சம் கொடுத்தது

* கௌரவத்துக்காக பிசினஸ் அமைத்துத் தந்தது

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism