Published:Updated:

கோக், பெப்ஸி டல்... உள்ளூர் குளிர்பானம் விற்பனை ஜோர்! - தைப்புரட்சி தந்த பிசினஸ் மாற்றம்

கோக், பெப்ஸி டல்... உள்ளூர் குளிர்பானம் விற்பனை ஜோர்! - தைப்புரட்சி தந்த பிசினஸ் மாற்றம்
பிரீமியம் ஸ்டோரி
கோக், பெப்ஸி டல்... உள்ளூர் குளிர்பானம் விற்பனை ஜோர்! - தைப்புரட்சி தந்த பிசினஸ் மாற்றம்

துரை.வேம்பையன்

கோக், பெப்ஸி டல்... உள்ளூர் குளிர்பானம் விற்பனை ஜோர்! - தைப்புரட்சி தந்த பிசினஸ் மாற்றம்

துரை.வேம்பையன்

Published:Updated:
கோக், பெப்ஸி டல்... உள்ளூர் குளிர்பானம் விற்பனை ஜோர்! - தைப்புரட்சி தந்த பிசினஸ் மாற்றம்
பிரீமியம் ஸ்டோரி
கோக், பெப்ஸி டல்... உள்ளூர் குளிர்பானம் விற்பனை ஜோர்! - தைப்புரட்சி தந்த பிசினஸ் மாற்றம்

குளிர்பானச் சந்தையில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வந்தன கோக், பெப்சி போன்ற வெளிநாட்டுக் குளிர்பான பிராண்டுகள். மிகப் பெரிய முதலீடு, மிகப் பெரிய விளம்பரம், எந்தக் கடையில் கேட்டாலும் கிடைக்கும் வசதி, எல்லாவற்றுக்கும் மேலாக இந்த பிராண்டுகளை பயன்படுத்தும்போது இளையதலைமுறை உணரும் ஸ்டைல்... என எல்லா அம்சங்களும் சேர்ந்து வெளிநாட்டுக் குளிர்பானங்கள், நம் மக்களின் மனதைக் கொள்ளையடித்தன.

இந்த வெளிநாட்டுக் குளிர்பானங்களை மார்ச் 1-ம் தேதி முதல் கடைகளில் விற்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்தன தமிழகத்தில் உள்ள வணிகர் சங்கங்கள். ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிற மாதிரி, வணிகர் சங்கங்கள் இந்த அறிவிப்பை வெளியிட, வெளிநாட்டுக் குளிர்பானங்கள் விற்பனைக் கணிசமாகக் குறைந்து, உள்நாட்டில் தயாராகும் குளிர்பானங்கள் ஓஹோவென விற்பனையாகின்றன.

கோக், பெப்ஸி டல்... உள்ளூர் குளிர்பானம் விற்பனை ஜோர்! - தைப்புரட்சி தந்த பிசினஸ் மாற்றம்

குறிப்பாக, பவண்டோ, பன்னீர் சோடா, ஆரஞ்ச், 777, லவ்வோ உள்ளிட்ட உள்ளூர் நிறுவனத் தயாரிப்புகளின் விற்பனை, களைகட்டியிருப்பதாகச் சொல்கிறார்கள் வியாபாரிகள். அதேபோல், பழச்சாறுகள், மோர், தர்ப்பூசணி, கம்பங்கூழ், இளநீர் விற்பனையும் கடந்த ஆண்டைவிட பலமடங்கு உயர்ந்து சக்கைப் போடு போடுவதாகவும்  சொல்கிறார்கள் லோக்கல் விற்பனையாளர்கள். வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் குளிர்பானங்கள் இடையே நடக்கும் இந்த ‘கோல்டு வாரில்’ நிஜ  நிலவரத்தை அறிய களத்தில் குதித்தோம்.

கரூ, சீனிவாசபுரம் அருகே மளிகைக் கடை வைத்திருக்கும் அசோக்குமாருடன் பேசினோம். “வெளிநாட்டுக் குளிர்பானங்களைப் படிக்காத ஆள்கூட கேட்டு வாங்கிக் குடிக்கிற அளவுக்கு அந்த கம்பெனிங்க விளம்பரம் செஞ்சி மக்களை மயக்கி வெச்சிருந்துச்சு. ஆனா, வெளிநாட்டுக் குளிர்பானங்களை விற்கக் கூடாதுன்னு அறிவிச்சபிறகு, நானும் வேண்டா வெறுப்பாதான் லோக்கல் குளிர்பானங்களை விக்க ஆரம்பிச்சேன். ஆனா, அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சதைப் பார்த்துட்டு, நானே ஆடிப் போயிட்டேன். பெப்ஸியைக் குடிச்ச அதே ஆளுங்க இப்ப,  ‘பன்னீர் சோடா குடுங்க, கருப்புக் கலர் குடுங்க’ன்னு கேட்டு வாங்கிக் குடிக்கிறாங்க. வெளிநாட்டுக் குளிர்பானங்களின் விற்பனையைவிட 30% லோக்கல் குளிர்பானங்களை விற்பனை ஏறிடுச்சு’’ என்றார் சிரித்தபடி.

கோக், பெப்ஸி டல்... உள்ளூர் குளிர்பானம் விற்பனை ஜோர்! - தைப்புரட்சி தந்த பிசினஸ் மாற்றம்

அடுத்து, கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் இளநீர் விற்கும் பிரகாஷ் என்பவருடன் பேசினோம். “போன வருஷம் வரை இளநீர் வியாபாரம் மிதமாதான் இருந்துச்சு. ‘இளநீர்தானே, எங்க வீட்டுல நிறைய காய்க்குதே’ன்னு அதுக்கு முக்கியத்துவம் தராம இருந்தாங்க. கடந்த வருஷம் கரூர்ல 70 இளநீர் கடைங்க மட்டுமே இருந்துச்சு. இப்ப 140 இளநீர் கடைகளாக மாறியிருக்கு. இளநீர் குடிக்கிறவங் களோட எண்ணிக்கை கணிசமா அதிகரிச்சிருக்கு.

போன வருஷம் இளநீர் குடிச்ச ஒன்றிரண்டு பேரும், ‘‘சாதாரண இளநீர் இவ்வளவு விலையா?’ன்னு பேரம் பேசுவாங்க. ஆனா, இப்போ ‘‘இளநீர் நாற்பது ரூபாதானா?’’ன்னு வாங்கிக் குடிக்கிறாங்க. இதனால எல்லா இளநீர்களும் மிச்சமாகாம விற்பனை ஆயிடுது. போன வருஷம் வரை விற்பனை சரியா ஆகாம, வரவுக்கும், செலவுக்கும் சரியாக இருக்கும். இப்ப ஒருநாளைக்கு 500 ரூபாய்க்கு மேல லாபம் பார்க்கும் அளவுக்கு இளநீர் வியாபாரம் ஜாம்ஜாம் என்று நடக்குது” என்றார்.

கோக், பெப்ஸி டல்... உள்ளூர் குளிர்பானம் விற்பனை ஜோர்! - தைப்புரட்சி தந்த பிசினஸ் மாற்றம்

கரூர் பேருந்து நிலையம் அருகே ‘காக்காமுட்டை’ என்ற பெயரில் பீஸா கடை நடத்திவரும் பாக்கியராஜுடன் பேசினோம். “நாங்க இந்தக் கடையை ஆரம்பிச்சதே வெளிநாட்டுக் குளிர்பானங்களையும், பீஸாவையும் விரும்பும் இளைஞர்களைக் குறிவச்சுதான். ஆரம்பத்துல, எங்க கடையில வெளிநாட்டுக் குளிர்பானங்களை மட்டுமே விற்பனை செஞ்சோம். இங்கு வரும் இளைஞர்களும் அதையே விரும்பினாங்க. ஆனா, தைப்புரட்சி போராட்டம் நடந்ததும், இனி உள்ளூர் தயாரிப்புகளை மட்டும் விக்கிறதுன்னு முடிவு செஞ்சோம்.  இதனால எங்கக் கடை மீது இளைஞர்களுக்கு ஈர்ப்பு உண்டாகி, கூட்டம் கூட்டமா வர ஆரம்பிச்சுட்டாங்க. முன்னாடி வெளிநாட்டுக் குளிர்பானங்கள் மூலமா ஒரு நாளைக்கு 2,000 ரூபா லாபம் பார்த்தோம். இப்போ லோக்கல் குளிர்பானங்கள் விக்கிறது மூலமா ஒரு நாளைக்கு 4,000 ரூபாய் வரை லாபம் வருது. அதேபோல், பீஸாவையும் நம்மூர் டேஸ்டுக்கு ஏத்தமாதிரி மாத்தி விற்கிறோம். அதோட இளநீர், மோர், எலுமிச்சைச் சாறு, பழச்சாறுகள், தர்ப்பூசணி ஆகியவற்றின் விற்பனையையும் தொடங்கலாம்ன்னு இருக்கோம்” என்றார்கள் உற்சாகமாக.

கோக், பெப்ஸி டல்... உள்ளூர் குளிர்பானம் விற்பனை ஜோர்! - தைப்புரட்சி தந்த பிசினஸ் மாற்றம்

சேலம் பைபாஸில் மோர், கம்பங்கூழ் விற்கும் சரவணனிடம் பேசினோம். “பத்து வருஷமா இந்த மோர், கம்பங்கூழ் வியாபாரம் பண்ணிக்கிட்டு வர்றேன். ஆனா, இதுல பெருசா வருமானம் வராது. கூடவே பொட்டிக்கடையும், டீக்கடையும் இருக்கிறதால அந்த வருமானத்துல ஒப்பேத்தி வந்தேன். ஆனா, இந்த வருஷம் மோர், கம்பங்கூழ் குடிக்கிறவங்களோட எண்ணிக்கை கணிசமா  அதிகரிச்சிருக்கு. மதியத்துக்குள்ள அஞ்சு பானை கம்பங்கூழும், மோரும் விற்பனை ஆவுது. இதுல 200 ரூபா வரை லாபம் கிடைக்குது” என்றார்.

கரூர், வெங்கமேடு பகுதியில் தர்ப்பூசணி விற்கும் புஷ்பாவுடன் பேசினோம். “வருஷா வருஷம் இங்க தர்ப்பூசணி பழம் விற்பனை செய்வோம். கோடை முழுக்க விற்பனை செஞ்சாலும் அஞ்சு டன் பழம் விற்பனை ஆவதே அதிசயம். ஆனா, இப்போ இங்க வந்து பத்து நாள்தான் ஆவுது. அதுக்குள்ள இரண்டரை டன் பழம் வித்துட்டோம். ஒரு கிலோ 20 ரூபா வரை விலை போகுது. பேரம் பேசாம மக்கள் பழங்களை வாங்குறதுதான் எனக்கு அதிசயமா இருக்கு. உள்ளூர் பொருள்களுக்கு ஆதரவு தரணும் என்கிற உணர்வு மக்கள்கிட்ட அதிகமானதுதான் இதுக்குக் காரணம்னு நெனைக்கிறேன்” என்றார் தெளிவாக.

வெளிநாட்டுக் குளிர்பானங் களை எதிர்க்கிற சாக்கில்  உள்நாட்டுக் குளிர்பானங்கள் மற்றும் இயற்கை பானங்களுக்கு புதிய வரவேற்பு கிடைத்திருப்பது நல்ல விஷயம்தான்!

படங்கள்: நா.ராஜமுருகன், தே.தீட்ஷித்

கோக், பெப்ஸி டல்... உள்ளூர் குளிர்பானம் விற்பனை ஜோர்! - தைப்புரட்சி தந்த பிசினஸ் மாற்றம்

78% குறைந்த வெளிநாட்டுக் குளிர்பான விற்பனை!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா, ‘‘குளிர்பானம் மற்றும் இதர கடைகளைச் சேர்த்து 21 லட்சம் கடைகள் தமிழகத்தில் உள்ளன. இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து வெளிநாட்டுக் குளிர் பானங்கள் விற்பனை 78 சதவிகிதம் குறைந்துள்ளது. வரும் ஜனவரி மாதம் வரை சில கடைகளில் ஒப்பந்தம் போட்டுள்ள காரணத்தால் அந்தக் கடைகளில் மட்டும் பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டுக் குளிர்பானங்களை விற்கக்கூடாது என்பதுடன், அவை குறித்த விளம்பரங்களையும் அகற்றுமாறு அனைத்துக் கடைகளுக்கும் அறிவுறுத்தி இருக்கிறோம். உள்நாட்டுக் குளிர்பானங் களையும் இயற்கையாகக் கிடைக்கும் பதநீர், இளநீர் போன்றவற்றையும் விற்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்’’ என்றார்.

வணிகர் சங்கப் பேரவை மாநிலத் தலைவர் த.வெள்ளையன், ‘‘பெப்ஸி, கோக் குளிர்பானங்களை பொதுமக்களே வாங்குவதில்லை. இதனால் வியாபாரிகளுக்கு நஷ்டம் என்று சொல்ல முடியாது. ஒன்றிரண்டு என விற்கப்படும் பாட்டில்களையும் முழுவதுமாக நிறுத்த வதற்குத் தொடர்ந்து நடவடிக்கை  எடுக்கப்படும்’’ என்றார். 

- கே.பி.

‘‘விற்பனை  துளிர்க்கத் தொடங்கியுள்ளது!’’

கோக், பெப்ஸி டல்... உள்ளூர் குளிர்பானம் விற்பனை ஜோர்! - தைப்புரட்சி தந்த பிசினஸ் மாற்றம்


தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் பி.எம்.கணேஷ்ராம், ‘‘தடை அறிவிப்பு வந்த நாளிலிருந்து வெளிநாட்டுக் குளிர்பான விற்பனை மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்திருந்தது. ஆனால், அதே நிலை தொடர்ந்து நீடிக்கவில்லை. மீண்டும் அந்த விற்பனை வீழ்ச்சி குறைந்துள்ளது. அதாவது, விற்பனை மீண்டும் துளிர்க்கத் தொடங்கியுள்ளது. பெப்சி-கோக் குளிர்பான நிறுவனங்கள் தங்களுடைய வர்த்தகத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் நுகர்வோரை ஈர்ப்பதற்காக (மார்க்கெட்டிங் செய்வதற்கு) ஒரு மாதத்துக்கு ரூ.10 கோடி செலவு செய்ய உள்ளன.  பெப்ஸி, கோக் ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஒரு நாளைக்கு 2 லட்சம் கிரேட் (12 பாட்டில் கொண்டது ஒரு கிரேட்) விற்பனை செய்யும். கடந்த மாதம் ஒரு லட்சம் கிரேடாக விநியோகம் இருந்தது. இந்த நிலையில், கடந்த 10 நாட்களாக 1.5 லட்சம் கிரேடாக விநியோகம் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் பெப்ஸி, கோக் குளிர்பானத் தொழிலை மட்டும் நம்பி சுமார் 700 விநியோகஸ்தர்கள் உள்ளனர். அவர்களுக்குத் துணை விநியோகஸ்தர்களாக 7,500 பேரும் உள்ளனர். இவர்களுடைய விநியோகம் முடங்கியுள்ளன. மக்களே ‘இந்த குளிர்பானங்கள் எங்களுக்கு வேண்டாம்’ என்று சொன்னாலோ அல்லது  அரசாங்கம்  இதற்குத் தடை விதித்தாலோ அதனை ஏற்றுக்கொள்ளலாம்.  வெளிநாட்டுக் குளிர்பானங்களை விற்கக்கூடாது என்று வணிகர் சங்கங்களே முடிவெடுத்திருப்பதை ஏற்க முடியாது” என்றார்.

 - கே.புவனேஸ்வரி