Published:Updated:

ஏற்றுமதித் தொழிலின் வெற்றி ரகசியம்! - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்!-19

ஏற்றுமதித் தொழிலின் வெற்றி ரகசியம்! - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்!-19
பிரீமியம் ஸ்டோரி
ஏற்றுமதித் தொழிலின் வெற்றி ரகசியம்! - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்!-19

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன் மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

ஏற்றுமதித் தொழிலின் வெற்றி ரகசியம்! - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்!-19

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன் மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

Published:Updated:
ஏற்றுமதித் தொழிலின் வெற்றி ரகசியம்! - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்!-19
பிரீமியம் ஸ்டோரி
ஏற்றுமதித் தொழிலின் வெற்றி ரகசியம்! - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்!-19

ற்றுமதித் தொழிலுக்கான முக்கியமான ஆரம்பப் புள்ளியை இந்தப் பகுதியில் சொல்லப் போவதாகக் கடந்த இதழிலேயே கூறியிருந்தேன். அதைப்பற்றி இப்போது பார்ப்போம். 

ஏற்றுமதித் தொழில் பெரும்பாலானோருக்கு அறிமுகம் ஆகியிருந்தாலும், அதில் பல குழப்பங்கள் நீடிக்கவே செய்கின்றன. பலர் ஏதாவது ஒன்றை செய்து வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஏற்றுமதித் தொழிலைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இப்படி நினைப்பதில் தவறில்லை. ஆனால், ஏற்றுமதித் தொழிலைப் பற்றி தெளிவான பார்வையும், அதுகுறித்த போதுமான அறிவும் இருந்தால்தான், அதில் ஜெயிக்க முடியும். 

ஏற்றுமதித் தொழிலின் வெற்றி ரகசியம்! - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்!-19

ஏற்றுமதி/இறக்குமதித் தொழில் செய்வதற்கான ஆரம்பப் புள்ளி என்பது, ஐஇ கோட் வாங்குவதுதான் என்று நினைத்திருந்தால், அது தவறு. ஏற்றுமதி செய்வதற்கு ஐஇ கோட் அவசியம்தான். ஆனால், அதை வாங்கிவிட்டு ஏற்றுமதித் தொழிலைச் செய்வதற்கான எந்த முயற்சியையும் எடுக்காமல் ஆயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள்.  ஆகவே, ஐஇ  கோட் மட்டும் வைத்திருப்ப தல்ல, ஏற்றுமதித் தொழிலுக்கான ஆரம்பப் புள்ளி. ஏற்றுமதித் தொழிலின் தொடக்கப் புள்ளி என்பது தொழிலை முடிவுசெய்வது. அதாவது, என்னென்ன பொருள்களை ஏற்றுமதி செய்யப்போகிறீர்கள் என்று முடிவு செய்வதுதான்.

அட, இவ்வளவுதானா... எனக் கேட்பதற்குச் சாதாரணமாக இருந்தாலும், ஏற்றுமதித் தொழிலின் ரகசியமே எந்தப் பொருள் என்று முடிவு செய்வதில் தான் இருக்கிறது என்பது, ஏற்றுமதிச் சந்தையைப் புரிந்துகொண்டவர்களுக்கு மட்டுமே தெரியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏற்றுமதித் தொழிலைப்பற்றி தெரிந்துகொள்ள வரும் பலரும், ‘‘இறக்குமதியாளர் (Buyer) குறித்த விவரங்களைத் தருவீர்களா?’’ என்ற கேள்வியைத்தான் முதலில் கேட்கிறார்கள். ‘‘உங்களிடம் என்ன பொருள் இருக்கிறது என்று சொல்லுங்கள்?’’ என்று கேட்டால், ‘‘என்ன பொருள் கேட்டாலும் தருவேன்’’ என்பார்கள்.  ‘‘என்ன பொருள் கேட்டாலும் தருவீர்கள் என்றால்,  உங்களுக்கு ஏன் இறக்குமதியாளர்  கிடைக்க வில்லை?’’ என்று கேட்டால், அவர்களிடம் எந்தப் பதிலும் இருக்காது.

ஏற்றுமதித் தொழிலில் இருக்கும் எல்லோருக்கும் வரும் குழப்பம், முதலில் நாட்டைத் தேர்ந்தெடுப்பதா அல்லது பொருளைத் தேர்ந்தெடுப்பதா என்பதுதான். ஏற்றுமதித் தொழில் செய்ய வருபவர்கள் முதலில், தங்களிடம் என்ன பொருள் அல்லது சேவை இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அதாவது, ஒரு பொருளை வாங்கி ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளராக இருந்தால், எந்தப்  பொருளைத் தேர்ந்தெடுப்பது என்று பார்க்க வேண்டும். முதலில், பொருளைத் தேர்ந்தெடுப்பதைக் காட்டிலும், எந்த நாட்டுக்கு என்ன பொருள் தேவைப்படுகிறது என்று ஒரு பட்டியல் போட்டு வைத்துக்கொண்டு, அதில் நாம் எந்தப்

ஏற்றுமதித் தொழிலின் வெற்றி ரகசியம்! - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்!-19

பொருள்களையெல்லாம் ஏற்றுமதி செய்ய முடியும் என்று பார்க்க வேண்டும்.

ஒரு நாடு மூன்று காரணங்களுக்காகப் பொருள்களை இறக்குமதி செய்யும். ஒன்று, பொருள் உற்பத்தி ஆகாமல் இருக்கும். இரண்டு, உற்பத்திச் செலவு அதிகமாக இருக்கும். மூன்று, அதற்கான தொழில்நுட்பம், மனிதவளம் போன்றவை இல்லாமல் இருக்கும். ஒரு பொருளை உற்பத்தி செய்ய தொழில்நுட்பம், மனிதவளம், மூலப்பொருள்கள் என அனைத்தும் தேவை. இவற்றில் ஏதோவொரு  விஷயம்  இல்லாவிட்டாலும், அங்கு உற்பத்தி என்பது சாத்தியமில்லை. அதனால்தான் ஒரு நாடு, தனக்குத் தேவையான பொருள்களை இன்னொரு நாட்டிலிருந்து வாங்குகிறது.

இதேபோல், ஒரு பொருளை உற்பத்தி செய்யும் செலவு ஒவ்வொரு நாட்டுக்கும் வித்தியாசப்படுகிறது. எனவே, ஒரு பொருளை உற்பத்தி செய்வதைக் காட்டிலும் இன்னொரு நாட்டிலிருந்து வாங்கிவிடுவது மேல் என்றும் நினைக்கிறார்கள்.

அப்படி ஒவ்வொரு நாடும் பிற நாடுகளிலிருந்து வாங்க விரும்பும் பொருள்கள் என்னென்ன என்று பட்டியல் போட்டாலே நமக்கான பொருளை நாம் கண்டுபிடித்துவிட முடியும். பிறகு அந்தப் பொருள்களை எங்கு வாங்குவது என்று பார்க்க வேண்டும். எனவே, கையில் பொருள் எதுவும் இல்லாதவர்கள், முதலில் நாடுகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பொருள்களைத் தீர்மானிக்க வேண்டும்.

நம் நாட்டிலிருந்து பிற நாடுகளுக்கு அதிகமாகத்  துணி வகைகளும், தோல் பொருள்களும், இயந்திரப் பாகங்களும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ‘என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்...’ என்று நாம் பெருமிதப்பட்டுக்கொள்ளும் அதே நேரம், எண்ணெய் வளம் நம் நாட்டில் இல்லாததால் அதனைப் பெருமளவில் இறக்குமதி செய்கிறோம். எனவே, ஒரு நாட்டின் தேவை என்ன என்பதை அறிந்துவைத்திருந்தால் ஏற்றுமதியின் முதல்படியை வெற்றிகரமாகக் கடந்துவிடலாம்.

மேலும், நாம் தேர்ந்தெடுத்த ஒரு பொருள் பிற நாடுகளில் என்ன விலைக்கு விற்பனையாகிறது, அங்கு உற்பத்திச் செலவு என்ன, அதிலிருந்து நம்முடைய உற்பத்திச் செலவும், விலையும் எவ்வளவு வித்தியாசப்படுகிறது என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். எந்த அளவுக்கு நம்மால் குறைவான விலையில் பொருளைத் தரமுடிகிறதோ, அதற்கேற்ப இறக்குமதியாளர்களை எளிதில் பிடித்துவிடலாம்.

மற்றொரு முக்கியமான விஷயம், ஏற்றுமதி என்று வந்துவிட்டால் பொருளைத்தான் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதில்லை. மாறாக, முதலீடு, சேவை போன்றவற்றையும் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு ஏற்றுமதி/இறக்குமதி செய்யலாம். இங்கிருந்து பொருள்களை ஏற்றுமதி செய்பவர்கள், ஏற்றுமதி மட்டுமே செய்வதில்லை. அவர்களே அந்த நாட்டில் முதலீடு செய்து ஒரு உற்பத்தி மையத்தையோ, ரீடெய்ல் கடையையோ வைத்து பிசினஸ் செய்கிறார்கள். அதேபோல், நம் நாட்டில் பிற நாட்டவர் வந்து முதலீடு செய்து, அவர்களுடைய பொருள்களை உற்பத்தி செய்து இங்கே விற்பதும் ஏற்றுமதி/இறக்குமதி வர்த்தகத்தில் அடங்கும்.

அதேபோல், உலக அளவில் வர்த்தகமாகும் சேவைகள் என்று கிட்டத்தட்ட 161 சேவைகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. ஒரு கம்ப்யூட்டரும், கொஞ்சம் மூளையும் இருந்தாலே போதும்; வெப் டிசைன், புராடக்ட் டெவலப்மென்ட் டிசைன், லே அவுட் டிசைன் என்று பல விஷயங்களை ஏற்றுமதி செய்து அசத்தலாம். எனவே, பொருள் மட்டுமின்றி, மனிதவளம், சேவை, முதலீடு என எதுவும் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப் போனாலும் அதுவும் சர்வதேச வர்த்தகம்தான்.

ஏனெனில் உலக வர்த்தகம் முற்றிலும் மாறிவிட்டது. முன்பெல்லாம் பொருள்களை தேவையின்பேரில் மட்டுமே வாங்கி வந்ததன் மூலம் உலக வர்த்தகம் நடந்துகொண்டிருந்தது. ஆனால், வாங்குபவர்களே விற்பனையாளர்களாக இருக்கிறார்கள். அதேபோல், முன்பு ஆர்டர் கொடுத்து எத்தனை நாளில் பொருளைக் கொடுப்பீர்கள் என்று கேட்டார்கள். ஆனால், இப்போதெல்லாம் இன்று ஆர்டர் கொடுத்துவிட்டு, ‘நாளைக்கு பொருள்களை டெலிவரி தர முடியுமா’ என்று கேட்கிறார்கள்.

பெரும்பாலான இறக்குமதியாளர்கள், தங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் பொருள்களைத் தந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் பொருள்களை வாங்கி வைத்து காவல் காக்க விரும்புவதில்லை. குறித்த நேரத்தில் தர முடியுமா என்பதே அவர்களின் ஒரே கோரிக்கை. 

ஏற்றுமதியாளர்களும் புத்திசாலித்தனமாக அந்த நாட்டிலேயே குடோன் ஒன்றை நிறுவி, இங்கிருந்து பொருள்களை அனுப்பி அங்கே வைத்திருந்து, வாங்குபவர் கேட்கும்போது உடனடியாகப் பொருள்களை டெலிவரி தந்துவிடு கிறார்கள்.

இப்படி ஏற்றுமதி பிசினஸில் வாய்ப்புகள் பல கொட்டிக் கிடக்கின்றன. அதில் உங்களுக்கான பொருளை அல்லது சேவையை நீங்கள் தேர்வு செய்துவிட்டால் போதும், நிச்சயம் உங்களுக்கான இறக்குமதியாளர் உலகின் ஏதோ ஒரு நாட்டில் உங்களுக்காகவே காத்துக்கொண்டிருப்பார்.

(ஜெயிப்போம்)

ஆர்கானிக் பொருள்களுக்கு தடையில்லா ஏற்றுமதிக்கான அனுமதி!

இந்திய ஏற்றுமதி சந்தையின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் அரசு பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு தடையில்லா ஏற்றுமதி வர்த்தகத்துக்கான அனுமதியைத் தற்போது அரசு வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த பொருளாதார விவகாரத் துறை அமைச்சர்கள் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள், அதாவது ஆர்கானிக் பொருட்கள் என்று சான்றிதழ் அளிக்கப்பட்ட பொருட்களை எந்தத் தடையும் இல்லாமல் ஏற்றுமதி செய்யும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பருப்பு மற்றும் தானிய வகைகளுக்கு மட்டும் ஏற்றுமதிக்கான உச்சவரம்பு தொடரும். இந்த நடவடிக்கையினால் கணிசமாக ஏற்றுமதி தொழில் வளரும் என்பதோடு, இயற்கை முறையிலான விவசாயமும் வளரும்.