Published:Updated:

கம்பெனி ஸ்கேன்

கம்பெனி ஸ்கேன்
பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி ஸ்கேன்

டெக்கான் சிமென்ட்ஸ் லிமிடெட்!(NSE SYMBOL: DECCANCE)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

கம்பெனி ஸ்கேன்

டெக்கான் சிமென்ட்ஸ் லிமிடெட்!(NSE SYMBOL: DECCANCE)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

Published:Updated:
கம்பெனி ஸ்கேன்
பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி ஸ்கேன்

ஹைதராபாத்தைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் டெக்கான் சிமென்ட்ஸ் லிமிடெட். சிமென்ட் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலில் 30 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள நிறுவனம் இது.  இந்த நிறுவனத்தின் குறியீட்டு சின்னமான (Corporate Mascot) ‘தாமு’, வாடிக்கையாளர் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். 

கம்பெனி ஸ்கேன்

நிறுவனத்தின் வரலாறு

1979-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், தெலுங்கானாவில் உள்ள நலங்கொண்டா மாவட்டத்திலிருக்கும் பவானிபுரத்தில் வணிக ரீதியான உற்பத்தியை 1982-ம் வருடத்தில் துவங்கியது.

ஹைதராபாத்தில் இருந்து கிட்டத்தட்ட 165      கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த நிறுவனத்தின் சிமென்ட் ஆலையில் இந்தியத் தரச்சான்று, பிரிட்டிஷ் ஸ்டாண்டர்டு மற்றும் ஏஎஸ்டிஎம் போன்றவற்றை உள்ளடக்கிய பல்வேறு ரக/உபயோகத்துக்கான சிமென்டுகளை உற்பத்திசெய்து விற்பனை செய்துவருகிறது இந்த நிறுவனம்.

சிமென்ட் உற்பத்தியில் ஓபிசி 43 (ஆர்டினரி போர்ட்லண்ட் சிமென்ட்), ஓபிசி 53, பிபிசி (போர்ட்லேண்ட் போஸோலோனா சிமென்ட்) மற்றும் பிஎஸ்சி (போர்ட்லேண்ட் ஸ்லாக் சிமென்ட்) போன்ற வகை சிமென்ட்களை உற்பத்தி செய்யும் இந்த நிறுவனம், ரயில்வேயின் பயன்பாட்டுக்காக S53 ரக சிமென்ட், எஸ்ஆர்சியுடன் (சல்பேட் ரெசிஸ்டன்ஸ் சிமென்ட்)  இணையும்போது குறைந்த அளவிலான வெப்பத்தை வெளிப் படுத்தும் வகையிலான லோ ஹீட் சிமென்ட் (Low Heat Cement),  சோடியம் மற்றும்/அல்லது பொட்டாசியத்தைக் குறைந்த அளவில் கொண்டிருக்கும் லோ அல்கலி சிமென்ட் (Low Alkali Cement) போன்ற வகையிலான சிறப்புப் பயன்பாட்டுக்கான சிமென்ட்களையும் உற்பத்தி செய்துவருகிறது.

 ஓபிடி 53 ரக சிமென்ட்

இந்தியாவில் 1987-ல் அறிமுகப்படுத்தப்பட்டு 1991-ல் உற்பத்தி செய்யப்பட்டது இந்த வகை சிமென்ட். 28 நாட்களில் அதிகபட்சத் தாங்கும் திறனைப் பெறும் இந்த வகை சிமென்டினை, அதிகம் தாங்கும் சக்தியை பெரும் எண்ணத்தில் உபயோகிக்கும்போது தரக்கட்டுப்பாடும் தரத்தை உறுதி செய்வதற்குமான நடவடிக்கைகள் பெருமளவில் தேவைப்படும். டெக்கான் சிமென்ட் நிறுவனத்தின் ஓபிசி 53 சிமென்ட் தயாரிக்கும் நடைமுறைகள், இந்தியத் தர நிர்ணய மையத்தின்  கண்டிப்பான  உற்பத்தி முறை  வரைமுறைகளுக்கு உட்பட்டுத் தயாரிக்கப்படுகிறது.

 பிபிசி ரக சிமென்ட்


பிபிசி ரக சிமென்ட், சில குறிப்பிட்ட ரக தட்பவெப்ப சூழல்களில் பயன்படுத்துவதற்காக உற்பத்தி செய்யப்படும் ரகமாகும்.  இந்தியாவில் நிலக்கரியை உபயோகித்து மின் உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து சுலபமாகக் கிடைக்கும் மிருதுவான சாம்பலைக் (Fly ash) கலந்தும், களிமண்ணை நெருப்பிலிட்டுச்  சாம்பலாக்கிக் (calcined clay) கிடைக்கும் சாம்பலைக் கலந்தும் இந்த வகை சிமென்ட் தயாரிக்கப்படுகிறது.

கம்பெனி ஸ்கேன்

பிஏஸ்சி சிமென்ட்

போர்ட்லாண்ட் ஸ்லாக் சிமென்ட் எனப்படும்  இந்த வகை சிமென்ட், சல்பேட் மற்றும் குளோரைடு அதிகமாக இருக்கும் சூழல் கொண்ட கடற்கரைக்கு அருகே செய்யப்படும் கட்டுமானங்களில் பயன்படுத்தப்படும் வகையாகும். இன்றைக்கு அனைத்துவிதமான கட்டுமானங்களுக்கும் இந்த வகை சிமென்ட் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  இந்த வகை சிமென்ட்டினைக் கொண்டு செய்யப் படும் கட்டுமானங்கள், பல்வேறு வகையான கெமிக்கல்களால் ஏற்படும் சேதங்களிலிருந்து காக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால், அணைகள் போன்ற தண்ணீர் தேக்கிவைக்கும் பல்வேறு வகையான கட்டுமானங்களிலும் உபயோகப்படுத்தப்படுகிறது.

கம்பெனி ஸ்கேன்



 சிறப்புத்தன்மை கொண்ட சிமென்ட் வகைகள்

53-எஸ் கிரேடு ஓபிசி


இந்திய ரயில்வேயினால் அதனுடைய சிறப்புப் பயன்பாட்டுக்காகக் கண்டறியப்பட்டு, ரயில்வே இருப்புப்பாதையில் போடப்படும் சிமென்ட்டி னாலான ஸ்லீப்பர்கள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது இந்த வகை சிமென்ட். ஆர்டிஎஸ்ஓ (ரிசர்ச் டிசைன்  மற்றும் ஸ்டான்டர்ட்ஸ் ஆர்கனைசேஷன்) எனப்படும் இந்திய ரயில்வேயின்  ஆராய்ச்சி நிறுவனத்தினால் இந்த வகை சிமென்ட்டினை உற்பத்தி செய்வதற்காக, அங்கீகரிக்கப்பட்ட சிமென்ட் உற்பத்தி ஆலையாக திகழ்கிறது இந்த நிறுவனம்.

 விரைவில் கெட்டியாகக்கூடிய வகையிலான சிமென்ட்

விரைவில் கெட்டியாகக்கூடிய வகையிலான சிமென்ட் (Rapid Hardening Cement) எனப்படும் ப்ரீ-பேப்ரிக்கேஷன் துறையில் உபயோகப் படுத்தப்படும் சிமென்ட்டையும் உற்பத்தி செய்கிறது இந்த நிறுவனம். இந்த வகை சிமென்ட் உபயோகப்படுத்தப்படும் ப்ரீ-பேப்ரிக் கேஷன் துறையில், அச்சுகள் மூலம் வடிவங்கள் அமைக்கப்படுவதால் உடனுக்குடன் கான்க்ரீட்கள் கழட்டி எடுக்கப்படவேண்டும். அதிவேகமாக கெட்டியாகும் தன்மைகொண்ட இந்த சிமென்ட், இந்தத் துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது.

கம்பெனி ஸ்கேன்

ஹை அலுமினா சிமென்ட்

இந்த வகை சிமென்ட், உபயோகித்த 24  மணி நேரத்துக்்குள் மிக அதிக அளவிலான கெட்டித்தன்மையை அடையக்கூடியது. அதிக அளவிலான வெப்பத்திலும் தன்மை மாறாத வகையிலானது. அதேபோல், பெரும்பாலான கெமிக்கல்களினால் பாதிப்படையாதது. இந்த மூன்றுவகை குணாதிசயங்களும் தேவைப்படும் வகையிலான கட்டுமானங்களில் இந்த சிமென்ட் பயன்படுத்தப்படுகின்றன.

எண்ணெய்க் கிணறுகளில் எஃக்கினாலன காஸ்ட்டிங்குகளை நிலைநிறுத்தி பொருத்துவதற்கு இந்த வகை சிமென்ட் உபயோகிக்கப்படுகிறது. இந்த வகை சிமென்ட், கடுமையான அசைவுகள் மற்றும் வெப்பநிலைகள் போன்றவற்றைத் தாங்க வேண்டியிருக்கும். இவை நடைமுறை உபயோகத்தில் எண்ணெய் கிணறுகளுக்குள்  செலுத்தப்படுவதால் (தரைக்கு அடியில் ஆயிரக்கணக்கான மீட்டர்கள் வரையில்), அந்த அளவிலான தூரத்தை சென்றடையத் தேவையான இளகிய தன்மையைக் கொண்டதாகவும், அதே நேரத்தில் 300 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தையும் ஒரு சதுர அங்குலத்துக்கு 20,000 பவுண்ட் (PSI)  வரையிலான அழுத்தத்தையும் ஒரே நேரத்தில் தாங்கவேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு பண்பு அளவீடாகும். இந்த வகை சிமென்ட்டையும்  இந்த நிறுவனம் உற்பத்தி செய்துவருகிறது.

 மின் உற்பத்தி -அனல் மின் நிலையம்

சிமென்ட் உற்பத்தி என்பது அதிக அளவிலான மின்சாரத்தை உபயோகப்படுத்தும் ஒரு துறையாகும்.  எனவே, தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் வகையில்  15 மெகாவாட் அளவிலான தன்னுடைய உபயோகத்துக்கான (Captive) அனல் மின் நிலையத்தை அமைத்துக் கொண்டுள்ளது இந்த நிறுவனம். இந்த அனல் மின் நிலையத்தில் மின்சார உற்பத்தியின்போது கிடைக்கும் நிலக்கரி சாம்பலை (ஃப்ளை ஆஷ் – கிட்டத்தட்ட 150 மெட்ரிக் டன் அளவிலானது) தன் போர்ட்லேண்ட் போஸோலோனா சிமென்ட் உற்பத்திக்கு உபயோகப்படுத்திக்கொள்கிறது.

 நீர் மின் உற்பத்தி

மின்சார உற்பத்தியில் தனியார் பங்களிப்பு அனுமதிக்கப்பட்டவுடன், தொழில்ரீதியான பல்வகைத் தொழில் செயல்பாட்டுக்கான (Diversification) ஒரு முதலீடாக 3.75 மெகாவாட் அளவிலான நீர் மின் உற்பத்தித் திட்டத்தில் இந்த நிறுவனம் முதலீடு செய்தது.  இந்த உற்பத்தி வசதி, குண்டூர் மாவட்டம் நரசரபேட்டாவில், கிருஷ்ணா நதியின் குண்டூர் பிரிவு கால்வாயில் நாகார்ஜூன சாகர் வலது தலைமை நீர்பாசன வாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டொன்றுக்கு 21  மில்லியன் யூனிட்கள் மின்சார உற்பத்தி செய்யும் இந்த உற்பத்தி நிலையத்திலிருந்து தன்னுடைய சிமென்ட் ஆலைகளின் பயன்பாட்டுக்காக மின்சாரத்தை எடுத்துச்செல்லும் வண்ணம்,  ஆந்திரப்பிரதேசத்தின் ட்ரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் ஆஃப் ஆந்திரப்பிரதேசத்திடம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது இந்த நிறுவனம்.

கம்பெனி ஸ்கேன்

காற்றாலை மின் உற்பத்தி

1995-ம் ஆண்டில், அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள ராமகிரி எனும் இடத்தில் 2.025 மெகாவாட் அளவிலான காற்றாலை மின் உற்பத்தி வசதியை நிறுவியது இந்த நிறுவனம். இந்த மின் உற்பத்தி வசதி ஆண்டொன்றுக்கு கிட்டத்தட்ட மூன்று மில்லியன் யூனிட் அளவிலான மின்சாரத்தை இந்த நிறுவனத்துக்கு வழங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும்.

 ரிஸ்க்குகள் ஏதும் உண்டா?

சிமென்ட் துறை, பெரும்பாலானவகையில் பொருளாதாரச் சுழற்சியைச் சார்ந்து செயல்படும் துறையாகும். ஏதாவது ஒரு காரணத்தினால் பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை வந்தாலோ/தொடர்ந்தாலோ அதனுடைய பாதிப்பு இந்த நிறுவனத்தின் விற்பனை மற்றும் லாபத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

மேலும், மூலப்பொருள்கள், விற்பனை விலை மாறுதல் போன்றவையும் இந்த நிறுவனத்தின் லாபத்தை ஓரளவு பாதிப்படையச் செய்யலாம் என்பதையும் வாசகர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

ரிஸ்க்குகள் பல இருக்கிறபோதிலும்  தொழில் ரீதியாக நீண்ட அனுபவத்தையும் வாடிக்கை யாளர்கள் மத்தியில் நடுவே நன்மதிப்பையும் கொண்டுள்ளது இந்த நிறுவனம். இதன் பங்குகளை, சந்தை ஏதாவது ஒரு காரணத்தினால் வேகமான இறக்கத்தை சந்திக்கும் நிலையில் நல்லதொரு விலை வீழ்ச்சி வருவதாகக் கொள்வோம். அப்போது மிகவும் குறைந்த எண்ணிக்கையில், ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கான முதலீட்டுத் திட்டத்துக்கான போர்ட் ஃபோலியோ வில் சேர்த்துக்கொள்வதற்காக வாசகர்கள் தொடர்ந்து இதனை ட்ராக் செய்து வரலாம்.

பங்கை வாங்கியபின் சிமென்ட் துறையைத் தொடர்ந்து ட்ராக் செய்ய முடியாத வாசகர்களும், ஏற்கனவே சிமென்ட் நிறுவனங்களின் பங்குகளை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் போர்ட் ஃபோலியோவை கொண்டிருக்கும் வாசகர்களும் இந்தப் பங்கினை வாங்குவதைத் தவிர்ப்பதே நல்லது எனலாம்.

This section is not a buy/sell recommendation at the current price levels, but only a compilation of information about the company and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analyst’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analysts) Regulations, 2014 with registration number INH200001384.

Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exist no conflict of interest that can bias his views in this report. The Analyst do not hold any share(s) in the company/ies discussed.

Disclosure of Interest Statement

1.Whether Research analyst’s or relatives’ have any financial interest in the subject company/ies and nature of such financial interest? – No; 2. Whether Research analyst or relatives have actual / beneficial ownership of 1% or more in securities of the subject company/ies at the end of the month immediately preceding the date of  the document? – No; 3. Whether the research analyst or his relatives has any other material conflict of interest? – No;  4. Whether research analyst has received any compensation from the subject company/ies in the past  12 months and nature of products / services for which such compensation is received? – No;  5. Whether the Research Analyst has received any compensation or any other benefits from the subject company/ies or third party in connection with the research report? – No; 6.Whether Research Analyst has served as an officer, director or employee of the subject company/ies? – No ;7. Whether the Research Analyst has been engaged in market making activity of the subject company/ies? – No.

General terms and conditions of the research report

For a detailed disclaimer and disclosure please visit http://nanayam.vikatan.com/index.php?aid=9985. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this report is available at http://www.nseindia.com/products/content/equities/equities/eq_security.htm (Choose symbol: DECCANCE)/name of company/time duration)