Published:Updated:

ஆதார் எண்ணை பான் எண்ணோடு இணைப்பது எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆதார் எண்ணை பான் எண்ணோடு இணைப்பது எப்படி?
ஆதார் எண்ணை பான் எண்ணோடு இணைப்பது எப்படி?

கார்க்கிபவா

பிரீமியம் ஸ்டோரி

“ஆதார் அட்டை எல்லாம் கட்டாயம் இல்லை” என உச்ச நீதிமன்றம் ஒரு பக்கம் தொடர்ந்து சொல்லி வருகிறது. இன்னொரு பக்கம், எல்லா வற்றுக்கும் ஆதார் அவசியம் என அறிவிக்கிறது  மத்திய அரசு. பான் நம்பரோடு ஆதார் எண்ணை உடனே இணைக்காவிட்டால், பான் நம்பரே செல்லாமல் போய்விடும் என வருமான வரித் துறையும் எச்சரித்திருக்கிறது.

ஆதார் எண்ணை பான் எண்ணோடு இணைப்பது எப்படி?

இந்த நிலையில், ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பது எப்படி என்று தெரியாமல் பலரும் தவித்து வருகின்றனர். இதை ஆன்லைன் மூலமே செய்துவிட முடியும்.

ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான ஸ்டெப் பை ஸ்டெப் கைடு இதோ...

வருமான வரித்துறையின் லாக் இன் பக்கமான https://incometaxindiaefiling.gov.in/#innerlink-க்கு முதலில் வரவும்.

லாக் இன் ஐடி, பாஸ்வேர்டு நினைவில் இருப்பவர்கள் லாக் இன் செய்ய வேண்டும்.  மற்றவர்கள் ஃபர்காட் பாஸ்வேர்டு க்ளிக் செய்து, அடுத்தப் பக்கத்துக்குச் செல்லவும்.

ஆதார் எண்ணை பான் எண்ணோடு இணைப்பது எப்படி?

ரீசெட் பாஸ்வேர்டு

உங்கள் பான் நம்பர்தான் உங்கள் யூஸர் ஐடி. அதையும் கேப்சா கோட்(captcha code)-ஐயும் டைப் செய்து, அடுத்தப் பக்கத்துக்குச் செல்லவும்.

இங்கே டிராப்டவுன் பாக்ஸில் நான்கு ஆப்ஷன்கள் இருக்கும். இதில் மூன்றாவது ஆப்ஷனான  ஓடிபி (OTP) ஆப்ஷனைத் தேர்வு  செய்யவும்.

அடுத்தப் பக்கத்தில் உங்களது மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி தந்தால், அதற்கு அனுப்புவார்கள். அதை வைத்து உங்கள் பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளலாம்.

மொபைல் எண் பழைய எண்ணாக இருந்தால், புதிய எண்ணைக் கொடுத்து அதையும் இங்கே மாற்றிக் கொள்ளலாம். பாஸ்வேர்டு மாற்றியபின் 12 மணி நேரம் கழித்தே பான் நம்பரோடு ஆதார் எண்ணை இணைக்க முடியும். 

12 மணி நேரம் கழித்து மீண்டும் லாக் இன் செய்ததும், ஒரு ‘பாப் அப் விண்டோ’ வரும். அதில், ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமா எனக் கேட்கும். அந்த ‘பாப் அப்பை’ விட்டுவிட்டால், புரொஃபைல் செட்டிங்குக்குப் போய், அங்குகூட ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்கலாம்.

ஆதார் எண்ணை பான் எண்ணோடு இணைப்பது எப்படி?

புரொஃபைல் செட்டிங்

இங்கே உங்கள் பெயர், பிறந்த தேதி ஆகிய தகவல்களைக் கவனமாகப் பதிவு செய்யவும். அனைத்துத் தகவல்களும் முன்னர் கொடுத்த தகவல்களோடு பொருந்தினால், ஆதார் எண்ணைக் கேட்கும். அதையும் டைப் செய்து ‘லிங்க் நவ்’ (Link now)  என்பதை க்ளிக் செய்தால், உங்கள் பான் எண்ணுடன் உங்கள் ஆதார் எண் இணைக்கப்பட்டுவிடும்.

நீங்கள் தரும் பெயரோ, இனிஷியலோ சரியாகப் பொருந்தவில்லை என மெசெஜ் வந்தால், உடனடியாக ஆதார் உதவி எண்ணைத் (1947) தொடர்புகொண்டு என்ன செய்ய வேண்டும் எனக் கேளுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு