இந்திய ஏற்றுமதியாளர்கள் கவலையில் இருக்கிறார்கள். காரணம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சமீபத்தில் இல்லாத அளவுக்கு வெகுவாக உயர்ந்ததேயாகும். கடந்த மூன்று மாதங்களில் ரூபாயின் மதிப்பு சுமார் 6% அதிகரித்திருக்கிறது. கடந்த வியாழனன்று (13.4.17) ரூபாயின் மதிப்பு 64.45 ஆக இருந்தது. கடந்த மாதம் இதே நாளில் (13.3.17) அன்று 66.28 ஆக இருந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு உயர உயர, ஏற்றுமதியின் மூலம் கிடைக்கும் வருமானம் குறைகிறதே என்கிற கவலை ஜவுளி ஏற்றுமதியாளர்களை அதிகம் கவலைகொள்ள வைத்திருக்கிறது. ரூபாய் மதிப்பு உயர்வினால் ஐ.டி துறை மற்றும் ஏற்றுமதி சார்ந்த துறைகளின் வருமானமும் குறையும்.

கடந்த ஓராண்டு காலகட்டத்தில், வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகமாக உயர்ந்திருப்பது இந்தியா மீது, உலக நாடுகள் தற்போது காட்டுகிற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

ரூபாயின் மதிப்பு அதிகரிக்க என்ன காரணம், இனிவரும் நாட்களில் ரூபாய் மதிப்பு இன்னும் அதிகரிக்குமா அல்லது குறையுமா என கரன்சி நிபுணர் எம்.அரவிந்திடம் (Cygnus Consultancy Services) கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

என்ன காரணம்?

‘‘அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு, அமெரிக்க ஃபெட் வட்டி உயர்வு போன்ற காரணங்களால், அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. 2016 ஏப்ரல் 1 முதல் 2017 மார்ச் 31 வரையிலான காலத்தில் அமெரிக்க டாலர் இண்டெக்ஸ், 94.6-லிருந்து 100.6 புள்ளிகளுக்கு உயர்ந்தது.

இதற்கு மாறாக, இதே காலத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 66.36-லிருந்து 64.81-ஆக, அதாவது 2.3% அளவுக்கு உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் ரூபாயின் மதிப்பு வேகமாக அதிகரித்திருக்கிறது. கடந்த மார்ச் மாதத்தில், 15 நாட்களில் மட்டும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 2 ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

ரூபாய் மதிப்பு உயர்ந்ததற்கு பல காரணங்கள் உள்ளன. பொதுவாக, டாலர் மதிப்பு கூடும்போது நமது ரூபாயின் மதிப்பு குறைய வாய்ப்புள்ளது. அதுபோல், டாலர் மதிப்பு, குறையும்போது நமது ரூபாயின் மதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த மாதம் ரூபாயின் மதிப்பு உயர்வுக்குக் கீழ்காணும் நிகழ்வுகள், முக்கிய காரணங்களாக விளங்கின.

1. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகள் நமது கடன் சந்தையிலும், பங்குச் சந்தையிலும் அதிகரித்துள்ளன. உதாரணமாக, அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் (FII), இந்த ஆண்டு துவக்கம் முதல் இதுவரை கடன் சந்தையில் 7 பில்லியன் டாலரும், பங்குச் சந்தையில் 6 பில்லியன் டாலரும் முதலீடு செய்துள்ளனர்.

2. பங்கு சந்தையும், முன்னணி நிறுவனங்களின் பங்குகளும் ஏறுமுகமாகவே இருந்தன.

3. உ.பி உள்பட சில மாநில சட்டமன்றத் தேர்தல்களில், பி.ஜே.பி ஆட்சியைப் பிடித்தது ஒரு உந்துசக்தியாக இருந்தது.

இதே காலத்தில், அமெரிக்காவில் மருத்துவக் காப்பீட்டுக்கான மசோதா தோல்வி அடைந்ததன் மூலம், ட்ரம்ப் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை சற்று குறைந்துள்ளது, இதனால் டாலரின் மதிப்பு சற்று சரியத் துவங்கியது. அதனால் ரூபாயின் மதிப்பு உயர்ந்தது.

‘இந்த ஆண்டு அமெரிக்காவில் வட்டி விகிதம் படிப்படியாகவே உயர்த்தப்படும்’ என்ற அறிவிப்பு, இந்தியா போன்ற வளரும் சந்தைகளில் (Emerging Markets) இருந்து அந்நிய முதலீட்டாளர்கள், டாலர் முதலீட்டை விரைவாகத் திரும்பப் பெற மாட்டார்கள் என்ற ஒரு நம்பிக்கையைத் தந்தது. இதனாலும் டாலரின் மதிப்பு சற்று சரிந்தது.

ஆர்.பி.ஐ. நடவடிக்கை

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அபரிமிதமான அளவுக்கு இங்கு முதலீடு செய்யும்போது, நமது சந்தையில் டாலர் புழக்கம் அதிகரிக்கும். இதனால் நமது நாட்டில் டாலரின் மதிப்பு சரிந்து, ரூபாயின் மதிப்பு அதற்கேற்றாற்போல உயரும். இத்தகைய சூழலில் சந்தையில் அதிகமாக புழங்கும் டாலரை இந்திய ரிசர்வ் வங்கி வாங்கி, தனது டாலர் கையிருப்பினை உயர்த்திக் கொள்ளும். அதுபோல், அந்நிய முதலீடு இந்தியச் சந்தையிலிருந்து வெளியேறும்போது, டாலர் புழக்கம் வெகுவாகக் குறையும். அப்போது டாலர் மதிப்பு உயர்ந்து, ரூபாய் மதிப்பு சரியும்.

இந்தச் சூழலில், ரிசர்வ் வங்கி தன்வசம் உள்ள கையிருப்பிலிருந்து டாலரை சந்தைக்கு வழங்கும். இந்த முறையைப் பின்பற்றி ரூபாயின் மதிப்பை ரிசர்வ் வங்கி, ஒரு கட்டுக்கோப்பில் வைத்துக்கொள்வது வழக்கமான நடக்கும் நிகழ்வு.

ஆனால், இந்த முறை ரிசர்வ் வங்கியானது சற்று நிதானமான போக்கையே கையாள்கிறது. தற்போது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது மத்திய வங்கியின் முக்கிய செயல்பாடாக உள்ளது. டாலரைச் சந்தையிலிருந்து வாங்கும்போது இந்திய ரூபாய் அதிகம் சந்தையில் புழங்க துவங்கும். இதனாலும் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற காரணத்தால், இத்தகைய நிலைப்பாட்டினை நமது ரிசர்வ் வங்கி கொண்டிருக்கலாம்.

ரூபாய் இன்னும் அதிகரிக்குமா?

ரூபாய் மதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்பதற்கு பின்வரும் காரணங்களைச் சொல்லலாம்.

1. ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தபின் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 1% அளவுக்கு உயர வாய்ப்புள்ளது.

2. நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறைவது, நிதிப் பற்றாக்குறையில் முன்னேற்றம், பணவீக்கம் குறைவது, வாராக் கடன்களை இன்னும் திறமையாக நிர்வகிப்பது, இவைபோன்ற நடவடிக்கைகள் மூலம் உலக அளவில் இந்தியாவின் தரச்சான்று உயர்வது, அதனால் வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பது ஆகிய காரணங்களாலும் இந்திய ரூபாயின் மதிப்பு உயரும்.

3. ரூபாய் மதிப்பு ஏற்ற இறக்கத்தை இப்போது இருப்பதுபோல் ஆர்.பி.ஐ நேரடியாக அதிகம் தலையிடாமல், சந்தையின் போக்கிலே தீர்மானிக்க விடுவதுபோல் இருக்கும் ஒரு சூழல்.

4. இந்தியாவின் இந்த ஆண்டுக்கான ஜி.டி.பி வளர்ச்சி 7.1 சதவிகிதத்தி லிருந்து 7.4 சதவிகிதமாக உயரும் என்கிற கணிப்பு.

5. கச்சா எண்ணெயின் விலை, தொடர்ந்து 50 டாலர்களுக்குக் கீழேயே இருப்பது ஆகிய காரணங் களினாலும் ரூபாயின் மதிப்பு உயர்வதற்கு வாய்ப்புண்டு.

இப்போதுள்ள நிலையில், 64.20 என்கிற முக்கியமான நிலையைக் கடந்தால் 63.90 என்கிற நிலையை அடையும். உலக அளவில் மிகப் பெரிய நிகழ்வுகள் ஏதும் நடக்கவில்லை எனில், ஒரு ஆண்டு காலத்தில் ரூபாயின் மதிப்பு 62.50-லிருந்து 67-க்குள் இருக்கும்.

ரூபாய் மதிப்பு, பெரிய அளவில் உடனடியாக இறங்குவதற்கு வாய்ப்பில்லை என்பதே தற்போதுள்ள நிலைமை.

எனினும், அமெரிக்க ஃபெட் வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்த முடிவெடுப்பது, ஐரோப்பிய யூனியனும், ஜப்பானும் எடுக்கும் சில தொழில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளால் டாலர் மதிப்பு உயர்வது, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் நடக்கவிருக்கும் தேர்தல், சிரியா அல்லது வட கொரியா மீது அமெரிக்கா தொடுக்கும் போர், நம் நாட்டில் மழை போதிய அளவு இல்லாதது, சீனா மற்றும் உலக நாடுகளுடன் உடனான வர்த்தகம் குறித்த அமெரிக்காவின் நிலைப்பாடு போன்ற பல காரணங்களாலும் ரூபாயின் மதிப்புக் குறையலாம்’’ என்று முடித்தார் அரவிந்த்.

இனிவரும் நாள்களில் ரூபாய் மதிப்பின் போக்கினை ஏற்றுமதியாளர்கள்உன்னிப்பாகக் கவனிப்பது அவசியம் என்பது நன்றாகவே தெரிகிறது.