Published:Updated:

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 19

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 19
பிரீமியம் ஸ்டோரி
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 19

அதலபாதாளத்தில் தள்ளிய மரண பயம்!

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 19

அதலபாதாளத்தில் தள்ளிய மரண பயம்!

Published:Updated:
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 19
பிரீமியம் ஸ்டோரி
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 19
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 19

சுரேஷ் பார்த்தசாரதி
Founder,
Myassetsconsolidation.com Registered Investment Advisor, INA200000878


ரவிந்த் குமார், விழுப்புரத்தைச் சேர்ந்தவர். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். அரவிந்தின் மனைவி கிருத்திகா, வீட்டுப் பொறுப்பைக் கவனித்துவருகிறார்.

அரவிந்த் தம்பதிக்கு 2000-ம் ஆண்டு, முதல் குழந்தை பிரகாஷ் பிறந்தான். மகன் பிறந்த மகிழ்ச்சியில் இருந்த அரவிந்துக்கு அடுத்த இரண்டே வருடங்களில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்தது.

ஆனால், உள்ளுக்குள் இனம்புரியாத ஏதோ ஒரு பயம் அழுத்திக்கொண்டே இருந்தது. “கைநிறைய சம்பாதிக்கிறீர்கள். எந்தவிதமான வசதிக் குறைவும் இல்லை. பிறகு, ஏன் எதிர்காலத்தை நினைத்துக் கவலைப்படுகிறீர்கள்” என்று உறவினர்களும், நண்பர்களும் ஆறுதல் கூறினாலும் அரவிந்துக்குப் பயமும் பதற்றமும் போகவில்லை.

தன் மனைவியை அழைத்துக்கொண்டு பிரபல ஜோதிடர் ஒருவரைப் பார்க்கப் போனார். “ஐயா, எங்கள் குடும்பத்தில் ஒரு சாபக்கேடு. எங்கள் பரம்பரையில் எந்த ஆணும் 60 வயதுக்கு மேல் வாழ்ந்தது கிடையாது. எனவே, எனக்கும் அறுபது வயதுக்குள் ஆயுள் முடிந்துவிடுமா...” என ஜோதிடரிடம் தன் கவலையை நேரடியாகவே எடுத்துவைத்தார் அரவிந்த் குமார்.

இந்தக் கேள்வியை எதிர்பாராத ஜோதிடர் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு, பொறுமையாக ராசிக் கட்டங்களை அலசினார். புருவத்தைச் சுருக்கிக்கொண்டு கொஞ்ச நேரம் யோசனையில் ஆழ்ந்தார்.

அரவிந்தின் சந்தேகம் அதிகமாகவே, “ஐயா, நான் சொன்னது சரிதானே. என் ஆயுள் பலம் அறுபதுக்குள்தானே...” என்று பரபரத்தார்.

தன் முன்பு மேசை மீது வைத்துள்ள சிவபெருமானை வணங்கிவிட்டு சொல்ல ஆரம்பித்தார் ஜோதிடர். “நீங்கள் தேவையில்லாமல் பயப்பட வேண்டாம். வருடத்துக்கு ஒருமுறை உங்கள் பிறந்த நாளில் உங்களின் குலதெய்வத்தைப் பூஜித்து வாருங்கள். எந்தச் சாபமும் உங்களை எதுவும் செய்யாது” எனச் சொல்லி அனுப்பினார். அரைமனதாக வீட்டுக்கு வந்த அரவிந்த், தன் மனைவியிடம் கவலைப்பட்டுச் சொன்னார்.

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 19

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“எப்படியாவது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் சீக்கிரம் சொத்து சேர்த்து வைத்துவிட வேண்டும். பையன் எப்படியாவது பிழைத்துக்கொள்வான்’’ என்று சொல்லி, மனைவியைக்  கலவரப்படுத்தினார்.

‘வயது 31 ஆயிடுச்சு. சீக்கிரம் பணம் சேர்க்கணும்’ என்ற சிந்தனை அரவிந்தின் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அப்போது லாட்டரிச் சீட்டு தடை செய்யப்படாத காலம். எனவே, லாட்டரி சீட்டின் மூலம் தனக்கு யோகம் வரும் என்ற நம்பிக்கையில் பல ஆயிரம் ரூபாய் அளவுக்கு லாட்டரிச் சீட்டுகளை வாங்கித் தள்ளினார். பின்னர் லாட்டரிச் சீட்டு தடை செய்யப்பட்டபிறகும் ஆன்லைன் மூலம் லாட்டரி வாங்கிப் பணத்தைப் பறிகொடுத்து வந்தார்.

பிறகு, நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி, நடைபாதை வியாபாரிகளுக்கு நாள் வட்டிக் கணக்கில் பணம் கொடுத்து வாங்கினார். இதில் ஓரளவு வருமானம் வர ஆரம்பித்தது. உடனே அரவிந்துக்கு ஆசை அதிகமாகவே, வட்டித் தொழிலை விரிவாகச் செய்ய எண்ணினார். கையில் இருந்த பணத்தோடு கொஞ்சம் கடனையும் வாங்கி வட்டித் தொழிலில் போட்டார். தொழில் விரிவுப்படுத்தப்பட்டதும் உள்ளூர் பிரமுகர் ஒருவரின் மிரட்டலுக்கு ஆளானார் அரவிந்த்.

ஏற்கெனவே வட்டித் தொழிலைச் செய்துவந்த அந்த பிரமுகர் சில வியாபாரிகளைச் சந்தித்து, “அரவிந்திடம் வாங்கிய கடன் பணத்தைத்  திரும்பத் தரவேண்டாம். பிரச்னை வந்தால் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்லவே, பலரும் கடன் பணத்தை திரும்பக் கொடுக்க மறுத்தார்கள். இதனால் கணிசமான பணம்  முடங்கிப் போனது.

இந்தச் சூழலில்தான் அரவிந்த், தன் மனைவியுடன் என்னைத் தேடி வந்தார். அப்போது அவருக்கு வயது 42. எல்லா விவரங்களையும் ஒன்றுவிடாமல் என்னிடம் சொன்னார். நான் அவருடைய பிரச்னையை முழுமையாகப் புரிந்து கொண்டேன். அரவிந்துக்குத் தேவையில்லாத பதற்றம் வந்ததன் விளைவே எல்லா சிக்கல்களுக்கும் காரணம். மரணம் என்பது யாராலும் தீர்மானிக்க முடியாது என்பதே நிஜம்.

‘சாகற நாள் தெரிஞ்சா, வாழ்ற நாள் நரகமாயிடும்’னு ஏதோ ஒரு படத்தில் ரஜினி சொல்வார். அது அரவிந்த் விஷயத்தில் உண்மையாகிவிட்டிருந்ததைப் புரிந்துகொண்ட நான், அதுகுறித்து அவர் மனதில் பதிந்திருக்கும் தவறான புரிதலைச் சுட்டிக்காட்டினேன்.

நான் சொன்ன விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொண்ட அரவிந்த், மரணம் குறித்த பயத்திலிருந்து முதலில் வெளியே வந்தார். மரண பயமின்றி, தன் வாழ்க்கையை இனி வாழலாம் என்கிற நம்பிக்கை முதலில் அவரிடம் உருவானது.
சொத்துச் சேர்க்க வேண்டும் என்று தெரிந்த பின்னும் அதை எப்படிச் சேர்ப்பது என்று  தீர்மானிக்காமல்விட்டதே அரவிந்த் செய்த பெரிய தவறு. அப்படித் தீர்மானித்திருந்தால், அவருக்கு  எந்தச் சிக்கலும் வந்திருக்காது. மகன் பிறந்தபோது அரவிந்துக்கு வயது 29. இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தபோது வயது 31. அரவிந்த் பயந்தபடியே அறுபது வயதில் மரணம் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும், குழந்தைகளுக்கு சேர்த்து வைக்க ஏறக்குறைய 30 வருடங்கள் இருந்துள்ளன. முறையாக இலக்குகளை நிர்ணயம் செய்துகொண்டு பணம் சேர்த்திருந்தால்கூட இந்த 30 ஆண்டுகளில், ஒருவர் மிகச் சுலபமாக பணம் சேர்க்க முடியும். 2003-ம் ஆண்டிலேயே மாதம் ரூ.70 ஆயிரம் சம்பாதித்துள்ளார் அவர். மீதமாகும் தொகை மட்டுமே ரூ.30 - 35 ஆயிரம் இருந்துள்ளது.

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 19

மூன்று குழந்தைகளின் மேற்படிப்புக்கு ஆளுக்கு ரூ.15 லட்சம் என்றாலும், ஒவ்வொருவருக்கும்     2003-ம் ஆண்டு முதல் ரூ.2,600 முதலீடு செய்திருந்தாலே போதும். அதேபோல், இரண்டு பெண் குழந்தைகளின் திருமணத்துக்கும் தலா ரூ.15 லட்சம் என்றாலும், ஆளுக்கு ரூ.2,600 முதலீடு செய்திருந்தாலே போதும். மொத்தமே சுமார் ரூ.13 ஆயிரம் வரை மாத முதலீடாக செய்திருந்தாலே குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை எளிதாக நிறைவேற்றி இருக்கலாம். தேவையில்லாத சிக்கலில் தானாகவே வலியச் சென்று மாட்டிக் கொண்டுள்ளார் அரவிந்த்.

‘போனது போகட்டும், இனிமேலாவது முதலீட்டை ஆரம்பியுங்கள்’ என அரவிந்துக்கு ஆலோசனை வழங்கினேன். தற்போது அரவிந்த் மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வாங்குகிறார். மாதம் ரூ.75 ஆயிரம் சேர்க்க முடியும் என்கிறார். அதனால் இப்போதிருந்து முறையாக முதலீடு செய்தால்கூட சுலபமாக இலக்குகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என எடுத்துச் சொன்னேன். புதிய நம்பிக்கையுடன் புறப்பட்டுச் சென்றார்.

வேகமாகச் செல்ல வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல், நிதானமாக பயணித்தால்தான் பயணம் இனிமையாக அமையும். பயணம் மட்டுமல்ல, வாழ்க்கையும்தான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism