Published:Updated:

லாபகரமான ஏற்றுமதிக்கு அவசியமான 5 விஷயங்கள்! - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 20

லாபகரமான ஏற்றுமதிக்கு அவசியமான 5 விஷயங்கள்! - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 20
பிரீமியம் ஸ்டோரி
லாபகரமான ஏற்றுமதிக்கு அவசியமான 5 விஷயங்கள்! - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 20

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன் மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

லாபகரமான ஏற்றுமதிக்கு அவசியமான 5 விஷயங்கள்! - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 20

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன் மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

Published:Updated:
லாபகரமான ஏற்றுமதிக்கு அவசியமான 5 விஷயங்கள்! - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 20
பிரீமியம் ஸ்டோரி
லாபகரமான ஏற்றுமதிக்கு அவசியமான 5 விஷயங்கள்! - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 20

ற்றுமதித் தொழிலைத் தொடங்கும்முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங் களையும், ஏற்றுமதித் தொழில் செய்வதற்குத் தேவையான ரிஜிஸ்ட்ரேஷன் நடைமுறை களையும்,  ஏற்றுமதி செய்யப்போகிற பொருளைத் தேர்ந்தெடுப்பது குறித்தும் கடந்த அத்தியாயங்களில் பார்த்தோம். இப்போது உங்களிடம் ஐஇ கோட் இருக்கிறது, ஏற்றுமதி செய்யப்போகும் பொருளையும் தேர்வு செய்து விட்டீர்கள். அடுத்து என்ன?

பொருள்களுக்கான ஆர்டரைப் பெறுவது, அவற்றை பேக்கிங் செய்து வெளிநாட்டுக்கு அனுப்புவது (Shipment), அனுப்பிய பொருள்களுக்கான பணத்தைப் பெறுவது ஆகியவைதான்.

என்ன இவ்வளவு சாதாரணமாக சொல்லிவீட்டீர்கள் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் நினைப்பது சரிதான். ஆர்டர் எடுப்பதும், பொருள்களுக்கான பணத்தைப் பெறுவதும் சாதாரண காரியம் இல்லைதான். ஆனால், முயன்றால் முடியாதது எதுவுமில்லை. முறையாகச் செய்தால் அனைத்தும் சாதிக்கக் கூடியதுதான். எறும்பு ஊற கல்லும் தேயும்போது, நாம் தொடர்ந்து எடுத்துவைக்கும் சிறு அடிகள், நம்மை இமயமலையின் உச்சிக்குக் கொண்டு செல்லாதா?

பொருள்களுக்கான ஆர்டரைப் பெறுவது குறித்தும், பொருள்களை அனுப்பி அதற்கானப் பணத்தைப் பெறுவது குறித்தும் இனிவரும் அத்தியாயங்களில் தனித்தனியாக, விரிவாகப் பார்ப்போம். அதற்குமுன், ஏற்றுமதிச் சந்தையில் இருக்கும் நடைமுறைகள் மற்றும் பயன்படுத்த வேண்டிய வார்த்தைகள் பற்றி முதலில் பார்ப்போம். இந்த வார்த்தைகளைத் தெரிந்துகொண்டால் மட்டுமே, நாம் நமது பொருளை இறக்குமதியாளரிடம் விற்கும்போது, அவர் கேட்கும் கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளித்து அவரை ‘இம்ப்ரஸ்’ செய்து ஆர்டர் பெற முடியும். அவை என்னென்ன என்று பார்ப்போம்.

லாபகரமான ஏற்றுமதிக்கு அவசியமான 5 விஷயங்கள்! - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 20

   பிசினஸ் வகை (Mode of Business)

முதலில், உங்களுடைய பிசினஸ் எப்படிப்பட்ட வகையைச் சார்ந்தது என்பதை முடிவுசெய்ய வேண்டும். அதாவது, நீங்கள் பொருளை ஏற்றுமதி செய்யப் போகிறீர்களா, இறக்குமதி செய்யப் போகிறீர்களா என்பதை முடிவு செய்ய வேண்டும். அதனைப் பொறுத்து நம்முடைய பிசினஸ் நடைமுறைகள் மாறும்.

நாம் ஏற்றுமதி செய்வதாக இருந்தால், முதலில் இறக்குமதியாளரைக் கண்டுபிடித்து அவரிடம் பேசி ஆர்டர் எடுத்து, பொருளை ஏற்றுமதி செய்ய வேண்டும். இறக்குமதி செய்வதாக இருந்தால், நமக்குத் தேவையான பொருள், நமக்குத் தேவையான அளவில், தரத்தில் மற்றும் விலையில் யாரிடம் இருக்கிறதோ, அவரைத் தேடிப் பிடித்து பொருளை வாங்கவேண்டும்.

இதில் இறக்குமதி பிசினஸ் செய்வதைக் காட்டிலும், ஏற்றுமதி பிசினஸ் செய்வது நமக்கும், நாட்டுக்கும் நல்லது. ஏனெனில் ஏற்றுமதி பிசினஸ் மூலம் அந்நிய செலாவணி நாட்டுக்குள் வருவதால் நம்முடைய அந்நிய செலாவணி இருப்பு அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் ஏற்றுமதி தொழிலுக்கு மானியங்களும், ஊக்கத்தொகைகளும் வழங்கப்படுகின்றன. எனவே, ஏற்றுமதியாளராக இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

   பொருளின் வகை (Selection of Product)

பொருளைத் தேர்ந்தெடுக்கும்போது முன்பே சொன்னதுபோல எந்த நாட்டுக்கு எந்தப் பொருளை அனுப்பப் போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். பொருளைத் தேர்ந்தெடுப்பதற்கு பின்வரும் காரணிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பொருளுக்கான தேவை அந்த நாட்டில் இருக்க வேண்டும். அது பற்றாக்குறையின் காரணமாகவோ, உற்பத்திச் செலவின் காரணமாகவோ இருக்கலாம். மேலும், பொருள்கள் அந்த நாட்டின் கலாசாரம், விழாக்கள் போன்றவற்றோடு தொடர்புடையதாக இருக்கலாம். மற்றொரு காரணம், சீசன். அதாவது, பருவநிலையின் காரணமாக பொருள்களின் தேவை இருக்கும். இவற்றை அடிப்படையாக வைத்து நாம் ஏற்றுமதி செய்யப் போகிற பொருளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

  இறக்குமதியாளரைத் தேர்ந்தெடுத்தல் (Selection of Buyer) 

ஏற்றுமதி செய்யும் நீங்கள் எக்ஸ்போர்ட்டர் (Exporter), உங்களிடம் இருந்து பொருளை இறக்குமதி செய்யும் வெளிநாட்டினர் இறக்குமதியாளர் (Importer) அல்லது பையர் (Buyer) என அழைக்கப்படுவார். பொருளை உங்களுக்குக் கொடுப்பவர் சப்ளையர்.  உங்களுடைய பையரை இரண்டு வழிகளில் தேர்வு செய்யலாம். ஒன்று, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஏற்கெனவே ஏற்றுமதிச் சந்தையில் இருப்பவர்கள் மூலமாக இறக்குமதியாளரைத் தேர்ந்தெடுப்பது. இரண்டாவது, இணைய தளங்களில் தேடிக் கண்டுபிடிப்பது. இந்த இரண்டு வழிகளிலும் தேர்வு செய்யப்படும் இறக்குமதியாளர்களின் நம்பகத்தன்மையைத் தெரிந்துகொண்ட பிறகே அவர்களிடம் பிசினஸ் பற்றி பேச வேண்டும். எப்படி இறக்குமதியாளரின் நம்பகத்தன்மையைத் தெரிந்துகொள்வது என்பதைப்பற்றி பின்னர் பார்க்க இருக்கிறோம்.

   ஷிப்மென்ட் முறைகள் (Mode of shipment)

இறக்குமதியாளரிடமிருந்து ஆர்டர் கிடைத்த பிறகு நமது பொருளை அனுப்ப வேண்டும். பொருளை அனுப்பும் ஷிப்மென்ட் முறைகள் மூன்று வழிகளில் உள்ளன. ஒன்று, விமான வழி, இரண்டு, கடல் வழி, மூன்றாவது சாலை வழி. நம்முடைய பொருளின் தன்மை, சென்று சேர வேண்டிய கால அளவு, ஆகும் செலவு ஆகியவற்றைப் பொறுத்து இதனை முடிவு செய்ய வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லாபகரமான ஏற்றுமதிக்கு அவசியமான 5 விஷயங்கள்! - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 20



பெரும்பாலும், விரைவாக அழுகக்கூடிய பொருள்களான, காய்கறிகள், பழங்கள், மீன் மற்றும் மாமிசம், பூக்கள் போன்றவை; இறக்குமதி யாளருக்கு உடனடியாகத் தேவைப்படக்கூடிய இயந்திரங்கள், கருவிகள் போன்றவை; தங்கம், வைரம் போன்ற விலைமதிப்புமிக்க பொருள்கள் போன்றவை விமான வழி ஷிப்மென்ட் முறையில் அனுப்பப்படும்.

பெரும்பாலும் துணி வகைகள், பிளாஸ்டிக் பொருள்கள் போன்ற அழுகாத பொருள்கள், அதிக விலைமதிப்பில்லாத பொருள்கள், உடனடியாக அனுப்பும் அவசியம் இல்லாத பொருள்கள், கப்பல் வழி மூலம் அனுப்பப்படும்.  நம் நாட்டுக்கு அருகில் உள்ள, சாலை வழித்தடங்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ள நாடுகளுக்குச் சாலை வழியாகவே எடுத்துச்செல்லலாம்.

   பேமென்ட் முறைகள் (Mode of Payment)

ஏற்றுமதி பிசினஸில் பேமென்ட் முறைகள் மிக முக்கியமானது. இவற்றை முறையாக அறிந்துகொண்டு செயல்படுத்துவதன் மூலம் பெரும்பாலும் நஷ்டத்தைத் தவிர்த்து, ஏற்றுமதியில் ஜெயிக்க முடியும்.  ஐந்து வகையான பேமென்ட் முறைகள் ஏற்றுமதி/இறக்குமதி பிசினஸில் உள்ளன.

1. அட்வான்ஸ் பேமென்ட் (Advance payment)2. லெட்டர் ஆஃப் கிரெடிட் (Letter of Credit) 3. டாக்குமென்ட் அகெய்ன்ஸ்ட் பேமென்ட் (Document Against Payment) 4. டாக்குமென்ட் அகெய்ன்ஸ்ட் அக்சப்டென்ஸ் (Document Against Acceptance) 5. ஓப்பன் அக்கவுன்ட் (Open Account)

பேமென்ட் முறையைப் பொருளை விற்பவர் தான் முடிவு செய்ய வேண்டும். பெரும்பாலும் அட்வான்ஸ் பேமென்ட், லெட்டர் ஆஃப் கிரெடிட் மூலம் பணத்தைப் பெற முயற்சி செய்யுங்கள். ஏனெனில் எங்கோ இருக்கும் இறக்குமதியாளர் எப்படிப்பட்டவர் என்பது நமக்கு தெரியாதல்லவா? ஆனால், சில நேரங்களில் ஏற்றுமதி செய்யும் உங் களுக்கும், இறக்குமதியாளருக்கும் சரியாக இருக்கும் பேமென்ட் முறையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள தயாராகவும் இருக்க வேண்டும்.

பேமென்ட் முறைகளில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ரிசர்வ் வங்கியின் ஃபெமா (FEMA) சட்டம். ஏற்றுமதி/இறக்குமதி பிசினஸில் பணப் பரிவர்த்தனை, ஐஇ கோட் விண்ணப்பிக்கும் போது கொடுத்த வங்கிக் கணக்கு வழியாகத்தான் நடைபெற வேண்டும். ரொக்கமாக ஒருபோதும் வாங்கக்கூடாது. ஏனெனில் ஏற்றுமதி செய்யப்பட்டுவிட்ட பொருளுக்கு அதிகபட்சம் ஒன்பது மாதங்கள் அதாவது 270 நாள்களுக்குள் பணம் வாங்கியிருக்க வேண்டும். அதேபோல், அட்வான்ஸாகப் பணம் வாங்கியிருந்தால் 270 நாட்களுக்குள் பொருள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். 

இதில் ஏதேனும் ஒன்று நடக்காமல் இருந்தாலும் ஒன்பது மாதம் கழித்து, அதற்கான விளக்கம் கேட்டு ரிசர்வ் வங்கியிலிருந்து கடிதம் வரும். கூடவே சைரன் வைத்த வண்டியும் வரும். எனவே, பேமென்ட் முறைகளில் உஷாராக இருக்கவும். பேமென்ட் முறைகளைப் பற்றி மேலும் விரிவாகப் பின்னர் பேசலாம்.

 (ஜெயிப்போம்)

மீண்டு வந்த ஆபரணங்கள் ஏற்றுமதி!

ஆபரணங்கள் மற்றும் ஆபரணக் கற்கள் ஏற்றுமதி 2011-12-ல் 43.21 பில்லியன் டாலராக இருந்தது. பிறகு, சர்வதேச பொருளாதார மந்தநிலை காரணமாகத் தொடர்ந்து குறைய ஆரம்பித்தது. 2015-16-ல் 31.98 பில்லியன் டாலர் என்ற அளவுக்குக் குறைந்துவிட்டது. ஆனால், 2016-17-ம் நிதியாண்டில் மீண்டும் பழைய நிலைக்கு ஆபரணங்கள் மற்றும் கற்கள் ஏற்றுமதி மீண்டு வந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி அடுத்த ஐந்து ஆண்டுகளில் 60 பில்லியன் டாலர் இலக்கு நிர்ணயித்து அதற்கான உத்திகளைக் கண்டுபிடித்து செயல்படுத்துமாறு ஏற்றுமதியாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். பிரதமரின் வலியுறுத்தலின்பேரில் ஆபரணத் தயாரிப்பாளர்கள் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism