Published:Updated:

பெண்களுக்கான சொத்துரிமை... - நகை, சீர்வரிசை தந்தபின் சொத்து தரத் தேவையில்லையா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பெண்களுக்கான சொத்துரிமை... - நகை, சீர்வரிசை தந்தபின்  சொத்து தரத் தேவையில்லையா?
பெண்களுக்கான சொத்துரிமை... - நகை, சீர்வரிசை தந்தபின் சொத்து தரத் தேவையில்லையா?

ஷோபனா ரூபகுமார்

பிரீமியம் ஸ்டோரி

ந்தி நடிகர் அமிதாப்பச்சன், பெண்களுக்கானச் சொத்து உரிமையை வலியுறுத்தும் விதமாக, சமீபத்தில் சமூக வலைதளத்தில் “என் இறப்புக்குப் பின், என் சொத்துகளை என் மகனும் மகளும் சரிசமமாகப் பங்கிட்டுக் கொள்வார்கள்” என்று சொல்லி, பலரது பாராட்டைப் பெற்றார்.

நாகரிகம் எவ்வளவோ மாறி விட்ட இந்த காலத்திலும், பெண் களுக்கான உரிமை பற்றிப் பேசி னாலே இந்தச் சமுதாயம் அக்கறை இல்லாமல் நடந்து கொள்கிறது. பணம், நிலம், நகை போன்ற அசையும், அசையா குடும்பச் சொத்துகளில் ஒரு பெண் உரிமை கோரினால் மறுக்கப்படுகிறது. அதையும் கடந்து போராடினால், நிராகரிப்பு ஒன்றே பரிசாகக் கிடைக்கிறது.  

பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை என்று சொன்னாலும், நடைமுறை வேறாக இருக்கிறது. ‘‘பிறந்த வீட்டிலிருந்து நகை, சீர்வரிசை கொடுத்து திருமணம் செய்துகொடுக்கிறோமே. பிறகு சொத்திலும் எப்படிப் பங்கு கேட்கலாம்? மேலும், திருமணத்துக்குப் பிறகும்கூட காதுகுத்து, சடங்கு என பிறந்த வீட்டுச் செய்முறை செய்யவேண்டிய சமூகத்தில் வாழ்கிறோம். அதற்கெல்லாம் ஆதாரமாகவே ஆண்களுக்குச் சொத்து தரப் படுகிறது’’ என்கிறார்கள் பெரும்பாலான ஆண்கள். ஆனால் பெண்களோ, ‘‘குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பில், இந்தச் செய்முறை கணக்குகள் எல்லாம் நான்கில் ஒரு பங்குதான். இது எப்படி சரிசமமானப் பங்கீடாக இருக்கும்?” என்கிறார்கள்.

பெண்களுக்கான சொத்துரிமை... - நகை, சீர்வரிசை தந்தபின்  சொத்து தரத் தேவையில்லையா?

இந்த வாதப் பிரதிவாதங்கள் இருக்கட்டும், பெண்களுக்கானச் சொத்துரிமை பற்றிய சட்டம் என்ன சொல்கிறது என்பதை சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் குணசேகரனிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார். 

‘‘1956-ம் ஆண்டுக்கு முன்பு வரை, இந்தியச் சட்டத்தில் பெண்களுக்கானச் சொத்துரிமை குறித்து எந்த இடமும் இல்லாமல் இருந்தது. திருமணத்துக்குப் பின், பெண்கள், தங்களின் பிறந்த வீட்டில் தங்குவதற்கு மட்டுமே உரிமை இருந்தது. ஆனால், கணவனை இழந்த பெண்களுக்கு, தந்தையின் தனிச் சொத்தில் உரிமை இருந்தது. பிறகு, பெண்களுக்கான வாரி சுரிமைச் சட்டம் முதன் முதலாக 1956-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இதன்படி, பிறந்த வீட்டின் சொத்துகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை இருக்கிறது என்று உறுதி செய்யப்பட்டது. உதாரணமாக, ஒரு வீட்டில் ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்களின் தந்தை இறக்கும் பட்சத்தில், அவரின் மனைவி மற்றும் அவரின் மூன்று பிள்ளைகளுக்கும் சரி சமமாக சொத்துகள் பிரித்துத் தரப்பட வேண்டும் என்று அந்தச் சட்டம் சொல்கிறது.

பெண்களுக்கான சொத்துரிமை... - நகை, சீர்வரிசை தந்தபின்  சொத்து தரத் தேவையில்லையா?


மேலும், ஒரு பெண் தன் சீதனமாக தனது புகுந்த வீட்டுக்குக் கொண்டு செல்லும் நகைகளோ, பொருள்களோ, பணமோ எதுவாக இருந்தாலும், அவையெல்லாம் அவளின் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். தந்தை - மகளுக்கு இடையே நடக்கும் இந்தப் பொருள் பரிமாற்றத்தில், அவள் கணவரோ, கணவர் வீட்டினரோ உரிமை கோர முடியாது. மேலும், இது சொத்துரிமை பங்கீட்டின் கீழும் வராது. 

உதாரணமாக, ஒரு தந்தைக்கு ஒரு மகன் - மகள் இருக்கிறார்கள். தந்தை அவரின் மகளுக்கு, சீர்வரிசையாக நகைகளையும் பணத்தையும் கொடுக்கிறார். அவரின் மறைவுக்குப்பின், அவரின் மகன் தனது சகோதரியிடம், ‘‘அப்பா உனக்கு ஏற்கெனவே நகைகள், பணம் கொடுத்திருக்கிறார். அதனால், உனக்கு மீதமிருக்கும் சொத்துகளிலும் பங்கு தரமுடியாது’’ எனக் கூறமுடியாது. தந்தை தன் மகளுக்குத் திருமணத்தை முன்னிறுத்தி கூடுதலாகவோ, குறைவாகவோ கொடுத்திருந்தாலும், அவருக்குப்பின், அவருடைய சொத்துகள் இருவருக்கும் சமமாகவே பிரிக்கப்பட வேண்டும்.

1989-ம் ஆண்டு, ‘பெண்களுக்குச் சொத்துரிமை இருக்கிறது’ என தமிழகத்தில் சட்டம் இயற்றப் பட்டது. மேலும், 2005-ம் ஆண்டு, இந்து சொத்துரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப் பட்டது. இதன்படி, 25.3.89-க்கு முன் திருமணம் செய்து கொண்ட பெண்கள், தங்கள் தந்தையின் பூர்விக சொத்தில் உரிமை கோர முடி யாது. ஆனால், இந்த தேதிக்குப் பின் திருமணம் செய்து கொண்ட பெண்கள், தங்கள் தந்தையின் பூர்வீக சொத்தில் சட்டத்தின் துணையுடன் உரிமை கோரலாம்” என்று விளக்கினார் குணசேகரன்.

பெண்களுக்கான இந்தச் சட்டம், அவர்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுத் தரட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு