Published:Updated:

மணி மேனேஜ்மென்ட்! - 19 - ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்... ரிஸ்க்குக்கு ஏற்ற ரிவார்ட்!

மணி மேனேஜ்மென்ட்! - 19 - ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்... ரிஸ்க்குக்கு ஏற்ற ரிவார்ட்!
பிரீமியம் ஸ்டோரி
மணி மேனேஜ்மென்ட்! - 19 - ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்... ரிஸ்க்குக்கு ஏற்ற ரிவார்ட்!

உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கட்டும்...சி.சரவணன்

மணி மேனேஜ்மென்ட்! - 19 - ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்... ரிஸ்க்குக்கு ஏற்ற ரிவார்ட்!

உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கட்டும்...சி.சரவணன்

Published:Updated:
மணி மேனேஜ்மென்ட்! - 19 - ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்... ரிஸ்க்குக்கு ஏற்ற ரிவார்ட்!
பிரீமியம் ஸ்டோரி
மணி மேனேஜ்மென்ட்! - 19 - ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்... ரிஸ்க்குக்கு ஏற்ற ரிவார்ட்!

டந்த இதழில் மியூச்சுவல் ஃபண்டில் அதிக ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்வதற்கும், முதல் முறையாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்பவர்களுக்கும் ஏற்றதான பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகள் பற்றி விரிவாகப் பார்த்தோம்.

இதனைப் படித்துவிட்டு, ‘எங்களுக்கு அதிக வருமானம் வேண்டும்; நாங்கள் எவ்வளவு வேண்டுமானலும் ரிஸ்க் எடுக்க தயாராக உள்ளோம், அதற்கேற்ற முதலீட்டுத் திட்டங்களைச் சொல்லுங்கள்’ எனப் பல வாசகர்கள் முனைப்புடன் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கான பதில்,  ‘ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறனுகேற்ற வருமானத்தைப் பெற முயற்சி செய்யுங்கள்’ என்பதுதான்.  

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில், திரட்டப்படும் தொகை முழுக்க நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படு வதால் ரிஸ்க் என்பது அதிகமாக இருக்கும் என்பதை முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதேநேரத்தில், நீண்ட கால காலத்துக்கு இந்த முதலீட்டைத் தொடர்ந்து வைத்திருப்பதன் மூலம் இந்த ரிஸ்க் பரவலாக்கப்பட்டுவிடும். மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் என்பது பங்குச் சந்தையைவிட அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.  

மணி மேனேஜ்மென்ட்! - 19 - ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்... ரிஸ்க்குக்கு ஏற்ற ரிவார்ட்!

பங்குச் சந்தையைவிட அதிக வருமானம்

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் பல வகைகள் உள்ளன. லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப், மல்டி கேப், டைவர்சிஃபைடு, செக்டார், தீம் என பல வகைகள் உள்ளன. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வதாக இருந்தால், மேலே குறிப்பிட்ட ஃபண்டு வகைகளில் முதலீட்டைப் பிரித்து மேற்கொள்வது நல்லது.

அப்படி இல்லையெனில், ஈக்விட்டி டைவர்சிஃபைடு ஃபண்ட் திட்டங்களில்  முதலீடு செய்வது நல்லது. இந்த ஃபண்ட் பிரிவின் போர்ட்ஃபோலியோவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் இடம்பெற்றிருப்பதால், ரிஸ்க் பரவலாக்கப்பட்டிருக்கும். அந்த வகையில், மற்ற வகை ஈக்விட்டி ஃபண்டுகளைவிட இது அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும் என்பது எல்லா நிதி நிபுணர்களின் ஒருமித்த கருத்து.

இந்த ஈக்விட்டி ஃபண்டுகள் நீண்ட காலத்தில் (10, 15 ஆண்டுகளில்), பங்குச் சந்தையைவிட அதிக வருமானம் தந்திருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம், இந்தத் திட்டங்களை நிர்வகித்து வரும் ஃபண்ட் மேனேஜர்கள் என்று சொல்லலாம். 

இந்த ஃபண்ட் மேனேஜர்கள் கண்கொத்திப் பாம்பாக, பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தை முன்கூட்டியே கணித்து, அதற்கேற்ப பங்குகளை வாங்கி விற்று, விற்று வாங்கி ஃபண்டின் லாபத்தை அதிகரிக்க செய்வார்கள்.

மணி மேனேஜ்மென்ட்! - 19 - ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்... ரிஸ்க்குக்கு ஏற்ற ரிவார்ட்!

உதாரணத்துக்கு, ஈக்விட்டி மல்டி கேப் ஃபண்ட் பிரிவில் டாப் 10 ஃபண்டுகள், கடந்த ஐந்து ஆண்டுகளில் 20% முதல் 24% வரை வருமானம் தந்திருக்கின்றன. இதுவே மூன்று ஆண்டுகளில் 24% முதல் 26%, ஓராண்டில் 35% முதல் 45% வரை வருமானம் கொடுத்திருக்கின்றன.  இந்த வருமானம் அனைத்தும் வரி இல்லாத வருமானம் என்பது குறிப்பிடத்தக்கது.

 வரிச் சலுகைகள்

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் முக்கிய கவர்ச்சி அம்சமே அதன் வருமானம் மீதான வரிச் சலுகைதான். அதாவது, இந்த ஃபண்டுகளில் ஓராண்டுக்கு மேல் யூனிட்களை விற்றுக் கிடைக்கும் ஆதாயத்துக்கு வரி எதுவும் கட்ட வேண்டாம். மேலும், இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் டிவிடெண்டுக்கும் வரி எதுவும் கட்ட வேண்டியதில்லை.  

இதெல்லாம் சரிதான். வருமானத்துக்கு வரி கிடையாது என்பது நல்ல அம்சமே. வருமானத்துக்கு வரி அளிப்பதுடன், முதலீட்டுக்கும் வரிச் சலுகை அளிக்கக்கூடிய ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் இருக்கிறதா என்று நீங்கள் கேட்கலாம். ஏன் இல்லை, நிச்சயம் இருக்கிறது என்பதே உங்கள் கேள்விகளுக்கான பதில். 

மணி மேனேஜ்மென்ட்! - 19 - ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்... ரிஸ்க்குக்கு ஏற்ற ரிவார்ட்!

நீங்கள் செய்கிற முதலீட்டுக்கு வரிச் சலுகை வேண்டும் என்றால், நீங்கள் பங்குச் சந்தை சார்ந்த சேமிப்புத் திட்டத்தில் (ELSS - Equity Linked Savings Scheme) முதலீடு செய்யலாம். இந்த இஎல்எஸ்எஸ் ஃபண்டில், குறைந்தபட்சமாக ரூ.500கூட முதலீடு செய்யலாம்.  ஒரு நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு, ரூ.1.5 லட்சம் வரை முதலீடுசெய்து,  80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை பெறமுடியும்.

இஎல்எஸ்எஸ் ஃபண்ட், அடிப்படையில் ஒரு ஈக்விட்டி டைவர்சிஃபைடு ஃபண்ட் ஆகும். மேலும், இந்த ஃபண்டில் முதலீட்டை மூன்று ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது என்பதால், ரிஸ்க் குறைகிறது.

மேலும், முதல் முறையாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்களும் இந்த இஎல்எஸ்எஸ்  ஃபண்டைத் தேர்வு செய்யலாம். காரணம், மூன்று ஆண்டுகளுக்கு முதலீட்டைத் திரும்ப எடுக்க முடியாது என்பதால், இடையில் சந்தை இறங்கினால் முதலீடு வெளியேறுவது தடுக்கப்படுகிறது. 

ஈக்விட்டி டைவர்சிஃபைடு மியூச்சுவல் ஃபண்ட் அதிக வருமானம் மற்றும் அதிக வரிச் சலுகை தரக்கூடியதுதான். ஆனால், அதில் இருக்கும் ரிஸ்க்-ஐயும் கவனத்தில் கொள்வது அவசியம்.

(முதலீடு பெருகும்)