Published:Updated:

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 20

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 20
பிரீமியம் ஸ்டோரி
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 20

கஷ்டகாலம் ஆன கடைசிக் காலம்!ஓவியம்: கோ.ராமமூர்த்தி

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 20

கஷ்டகாலம் ஆன கடைசிக் காலம்!ஓவியம்: கோ.ராமமூர்த்தி

Published:Updated:
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 20
பிரீமியம் ஸ்டோரி
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 20

ருணாகரன், பொதுத்துறை வங்கியொன்றில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். 2015-ம் ஆண்டில் அவர் ஓய்வு பெறும்போது, செட்டில்மென்ட் தொகையாக அவருக்கு ரூ.30 லட்சம் கிடைத்தது. அந்தப் பணத்தை டெபாசிட் செய்து வைத்துள்ளார். அதன்மூலமாக மாதம் ரூ.20 ஆயிரம் வரை வட்டி கிடைக்கிறது. பென்ஷனாக மாதம் ரூ.17 ஆயிரம் கிடைக்கிறது.

கருணாகரன் மட்டுமல்ல, அவரின் மனைவி வரலட்சுமிக்கும் நிறைய உடல் உபாதைகள் உண்டு. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் என மருந்து மாத்திரை வாங்குவதற்கே பெரிய அளவில் செலவாகிறது. இருவருக்கும் சேர்த்து குடும்பச் செலவுகள் (மருந்து மாத்திரைச் செலவுகள் உள்பட) மாதத்துக்கு ரூ.40 ஆயிரத்தைத் தாண்டியது. இதனால் மாதமொன்றுக்கு ரூ.3,000 வரை பற்றாக்குறையில்தான் குடும்பத்தை ஓட்டிவந்தார் கருணாகரன்.

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 20

அவர் குடியிருக்கும் வீடு, அவர் பணிபுரியும் காலத்திலேயே வீட்டுக் கடன் வாங்கி கட்டப் பட்டது. கீழ்தளம், மேல் தளம் என இரண்டு போர்ஷன்களைக்கொண்ட பெரிய வீடு அது. கீழ்தளத்தில் அவரும், அவர் மனைவியும் வசிக்கிறார்கள். மேல் தளத்தில் கருணாகரனின் இரண்டாவது மகன் சுரேஷ், தன் குடும்பத்துடன் வசிக்கிறார்.

கருணாகரனுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் தினேஷ், அமெரிக்காவில் இருக்கிறான். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அவனுடனான தொடர்பை கருணாகரன் துண்டித்துக் கொண்டார். தினேஷ், அமெரிக்காவில் தன்னுடன் பணியாற்றிய அமெரிக்கப் பெண் ஒருத்தியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டான். சாதி, மதம் விட்டு வெளிநாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதால் மகனை, தன் குடும்பத்தைவிட்டு ஒதுக்கிவிட்டார் கருணாகரன். தினேஷும் தன் மனைவியுடன் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 20இளையவன் சுரேஷுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தன் உறவு வட்டாரத்தில் பெண் பார்த்து திருமணத்தை நடத்திவைத்தார் கருணாகரன். ஒரு வருட காலம் கூட்டுக் குடும்பமாக இருந்த சுரேஷ், பிறகு மனைவியின் வற்புறுத்தலால் மேல் போர்ஷனுக்குத் தனிக்குடித்தனம் சென்றுவிட்டார்.

சுரேஷ் தனிக்குடித்தனம் சென்றது முதலே கருணாகரன், மாதச் செலவுகளுக்குப் பணம் போதாமல் தடுமாறி வந்தார். சுரேஷிடம் நிலைமையைச் சொல்லி உதவுமாறு கேட்க, அவர் மறுத்துவிட்டார். இந்த நிலையில்தான், என்னைச் சந்தித்தார் கருணாகரன். தன் கதை முழுவதையும் விளக்கமாகச் சொன்னார். அவர் பிரச்னை என்ன என்பதை நானும் தெளிவாகப் புரிந்துகொண்டேன்.

“தற்போது ரூ.3,000 மட்டும்தான் பற்றாக்குறை உள்ளது. ஆனால், எதிர்காலத்தில் விலைவாசி (பணவீக்கம்) உயரும்போது 70-வது வயதில் மாதம் ரூ.78 ஆயிரம் தேவைப்படும். 80-வது வயதில் ரூ.1.50 லட்சம் தேவையாக இருக்கும். எனவே, பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகலாம். உங்கள் மகனை அழைத்து வாருங்கள்” எனச் சொல்லி அனுப்பினேன்.

சில தினங்களில் சுரேஷை அழைத்து வந்தார் கருணாகரன். அவரிடம் மேல் போர்ஷனில் குடியிருக்கும் வீட்டுக்கு, வாடகையாக கொஞ்சம் பணம் கொடுக்கும்படி சொன்னேன். நான் சொன்னதை சுரேஷ் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். தன் பெற்றோர் தேவையில்லாமல் அதிகமாகச் செலவு செய்கிறார்கள் என, சில பல குறைகளையும்  சொன்னார். வேறு வழியில்லாததால், ‘மகன் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுங்கள்’ எனச் சொன்னேன்.

கருணாகரன் தன் மகனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். சுரேஷ் தன் மனைவி, குழந்தைகளுடன் வீட்டைக் காலி செய்தார். கருணாகரனின் மாடி போர்ஷன் ரூ.80 லட்சம் மதிப்புக்கொண்டது. சுரேஷ் அதுபோன்ற ஒரு வீட்டை வாங்கவேண்டுமானாலும், கருணாகரன் பற்றாக்குறையைச் சமாளிக்கக் கேட்ட தொகையை விட பல மடங்கு தொகையை இ.எம்.ஐ-ஆகச் செலுத்த வேண்டும். வெளியில் அதுபோன்ற வீட்டினை வாடகைக்கு எடுத்தாலும் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரைச் செலுத்த வேண்டும். அதற்குப் பதில் அப்பாவுக்குப் பணம் கொடுத்தால், அந்தப் புண்ணியமாவது சுரேஷுக்குக் கிடைத்திருக்கும். சுரேஷிடம் இதையெல்லாம் எடுத்துச் சொல்லியும் புரிந்துகொள்ளவில்லை.

பேரக் குழந்தைகளையும் வீட்டை விட்டு துரத்துகிறோமே என மன சஞ்சலப்பட்டார் கருணாகரன். “இந்த விஷயத்தில் சென்டிமென்ட்டுக்கு இடம் தராதீர்கள். உங்கள் மகன் பிடிவாதமாக இருக்கும் நிலையில், நீங்கள் செய்தது தவறு என நினைக்காதீர்கள்’’ என்று  கருணாகரனுக்குப் புரியவைத்தேன்.

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 20

மாடி போர்ஷனை ரூ.15 ஆயிரத்துக்கு வாடகைக்கு விட்டார். வாடகை வருமானத்தில் ஐந்தாயிம் ரூபாயைப் பற்றாக்குறை செலவைச் சமாளிக்கப் பயன்படுத்திக்கொள்ளுமாறு சொன்னேன். மீதம் உள்ள பத்தாயிரம் ரூபாயில் ஐந்தாயிரம் ரூபாயை பேலன்ஸ்டு ஃபண்டிலும், இன்னொரு ஐந்தாயிரம் ரூபாயை ஆர்.டி-யில் அவசர கால நிதியாகவும் முதலீடு செய்யச் சொன்னேன். எதிர்பாரதவிதமாக ஏதாவது பெரிய மருத்துவச் செலவுகள் வந்தால், அந்தப் பணம் சமாளிக்க உதவும் எனச் சொன்னேன்.

கருணாகரனின் பொருளாதாரப் பிரச்னைக்கு  இப்போதைக்கு ஒரு தீர்வு கிடைத்தாலும் இன்னொரு ஆலோசனையும் அவருக்குத் தந்தேன்.  ‘‘உங்கள் மூத்தமகன் காதல் திருமணம் செய்து கொண்டான் என்பதற்காக அவனை ஒதுக்கி வைத்திருக்க வேண்டியதில்லை. அவனை ஏற்றுக் கொண்டிருந்தால், அவனும் உங்களுக்கு ஆதரவாக இருந்திருக்க வாய்ப்பு அதிகம்’’ என்று அவருக்கு விஷயத்தை எடுத்துச்சொல்லி, உறவின் அவசியத்தைப் புரிய வைத்தேன். இரண்டாவது  மகனுக்குத் திருமணம் முடித்ததும் தனிக்குடித்தனம் செல்லும் சூழலை உருவாகவிடாமல் அனுசரித்துச் சென்றிருக்கலாம் என்பதையும் சொன்னேன். அப்படியே அவன் தனிக்குடித்தனம் செல்ல விரும்பியிருந்தால், ஆரம்பத்திலேயே வெளியில் வீடு பார்த்து தனிக்குடித்தனம் வைத்திருக்கலாம் என்றும் சொன்னேன். ஏதோ ஒரு ‘ஈகோ’வில் தான் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டதுடன், இந்தத் தவறுகளைச் சரிசெய்வதற்கான வழிகளைத் தேடவே அவர் விரும்பினார்.

“ஆயிரம்தான் பிள்ளைகள் மீது மனக்கசப்பு இருந்தாலும், என் வீடு, எனக்குப் பிறகு என் இரண்டு மகன்களுக்கும் சேரவேண்டும் என்பதே என் விருப்பம்; அதுபோலத்தான் உயில் எழுதிவைக்கப் போகிறேன்” எனச் சொன்னபோது அவருடைய கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன.

இன்றைக்கு இருக்கும் பல பெற்றோர்கள், சம்பாதித்த சொத்துகள் முழுவதையும் கண்மூடித்தனமான பாசத்தில் பிள்ளைகளுக்கு எழுதி வைத்துவிட்டு, கடைசிக் காலத்தில் அவர்கள் தரும் பணத்தை எதிர்பார்த்து நிற்க வேண்டிய நிலைமைக்கு வந்துவிடுகிறார்கள். கருணாகரன், தான் சம்பாதித்த வீட்டை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால், பெரிய சிக்கலில் சிக்காமல் தப்பித்தார். இல்லாவிட்டால் அவர் கதி..?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism