Published:Updated:

ஐ.டி துறைப் பங்குகளில் முதலீடு செய்யலாமா?

ஐ.டி துறைப் பங்குகளில் முதலீடு செய்யலாமா?
பிரீமியம் ஸ்டோரி
ஐ.டி துறைப் பங்குகளில் முதலீடு செய்யலாமா?

கேள்வி - பதில்

ஐ.டி துறைப் பங்குகளில் முதலீடு செய்யலாமா?

கேள்வி - பதில்

Published:Updated:
ஐ.டி துறைப் பங்குகளில் முதலீடு செய்யலாமா?
பிரீமியம் ஸ்டோரி
ஐ.டி துறைப் பங்குகளில் முதலீடு செய்யலாமா?
ஐ.டி துறைப் பங்குகளில் முதலீடு செய்யலாமா?

? ஐ.டி நிறுவனங்களான இன்ஃபோசிஸ், டிசிஎஸ் மற்றும் விப்ரோ நிறுவனப் பங்குகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதந்தோறும் 4,000 ரூபாய் முதலீடு மேற்கொண்டு வருகிறேன். இப்போது ஐ.டி துறையில் நிச்சயமற்ற சூழ்நிலை நிலவுவதாகச் சொல்கிறார்கள். எனவே, இந்தத் துறைப் பங்குகளில் தொடர்ந்து அடுத்த எட்டு அல்லது பத்து ஆண்டுகளுக்கு முதலீடு மேற்கொள்வது சரியான முடிவாக இருக்குமா, அல்லது நான் முதலீடுகளை மாற்றி அமைக்க வேண்டுமா?

ஐ.டி துறைப் பங்குகளில் முதலீடு செய்யலாமா?


பத்மநாபன், குடியாத்தம்
விவேக் கர்வா, நிதி ஆலோசகர்


“ஒரு காலத்தில் ஐ.டி துறை மிகப் பெரிய வளர்ச்சியைச் சந்தித்தது. ஆனால், இன்றைய தேதியில் ஐ.டி துறையின் வளர்ச்சி, வெறும் 7 அல்லது 8 சதவிகிதம் என்கிற அளவிலேயே இருக்கிறது. இப்போது ஐ.டி துறையின் வளர்ச்சி சிறப்பாக இல்லை. எதிர்காலத்தில்கூட, ஐ.டி துறையின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. வளர்ச்சி ஓரளவுக்குத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகையால், ஐ.டி துறையில் இனியும் முதலீடு செய்யாமல், வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள நுகர்வோர் சாதனங்கள், ஹெல்த்கேர் மற்றும் வங்கி போன்ற துறைகளில் முதலீட்டை மேற்கொண்டு வருமானத்தை ஈட்டலாம்.”

? அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு மேற்கொள்ளலாம் என நான் நினைக்கிறேன். இந்தத் திட்டங்களில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 10 சதவிகிதம் வருமானம் கிடைக்குமா?

ஐ.டி துறைப் பங்குகளில் முதலீடு செய்யலாமா?



சண்முகம், நாமக்கல்
கா.முகைதின் மாலிக், நிதி ஆலோசகர்


“கடன் சார்ந்த திட்டங்களில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 10 சதவிகிதம் வருமானம் கிடைப்பது கடினம். 8.5 சதவிகிதம் முதல் 9 சதவிகிதம் வரை வருமானத்தை எதிர்பார்க்கலாம்.

10 சதவிகிதம் வருமானம் தேவையென நினைத்தால் குறைந்த அளவிலான ரிஸ்க் உடைய ரிலையன்ஸ் எம்ஐபி அல்லது ஹெச்டிஎஃப்சி எம்ஐபி திட்டங்களில் முதலீடு செய்யலாம்.”

? அதிக டிவிடெண்ட் வழங்கும் நிறுவனப் பங்குகளில் மாதந்தோறும் ரூ.5,000 வரை அடுத்த 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு மேற்கொள்ளலாம் எனத் திட்டமிட்டுள்ளேன். அதிக டிவிடெண்ட் வழங்கும் நல்ல நிறுவனப் பங்குகளைத் தேர்வுசெய்வது எப்படி?

ஐ.டி துறைப் பங்குகளில் முதலீடு செய்யலாமா?



ரமேஷ், தேனி
ரெஜி தாமஸ், நிதி ஆலோசகர்


“அதிக டிவிடெண்ட் வழங்கும் நிறுவனப் பங்குகளை தேர்வுசெய்வது அல்லது அத்தகைய பங்குகளில் தொடர்ந்து முதலீடு செய்வதைப் பொறுத்தவரை மிக எளிதான வழி ஒன்று உள்ளது.

நிஃப்டி ஆல்பா 50 இண்டெக்ஸ் மற்றும் நிஃப்டி டிவிடெண்ட் ஆப்பர்ச்சூனிட்டீஸ் இண்டெக்ஸில் முதலீடு மேற்கொள்ளலாம். இவை இரண்டும் அதிக டிவிடெண்ட் வழங்கும் பங்குகளை உள்ளடக்கியிருக்கின்றன.”

? நான் மியூச்சுவல் ஃபண்டில் கடந்த சில ஆண்டுகளாக முதலீடு செய்து வருகிறேன். நான் முதலீடு செய்துள்ள ஃபண்டுகள் சிறப்பாகச் செயல்படுகிறதா, இல்லையா என்பதை எதன் அடிப்படையில் தெரிந்துகொள்வது, எப்படி அளவிடுவது?

ஐ.டி துறைப் பங்குகளில் முதலீடு செய்யலாமா?



வெங்கடேஷ், கோவை
ச.ராமலிங்கம், நிதி ஆலோசகர்


“ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளருக்கும் சில வருட முதலீட்டுக்குப்பின் எழும் கேள்விதான் இது. இலக்கு நோக்கிய முதலீடு, நிதி ஒழுக்கம் (முதலீட்டைத் தொடர்ந்து சீராக செய்துவருவது, எந்த நோக்கத்துக்காக முதலீட்டை ஆரம்பித்தோமோ, அதுவரை நிதி வைத்திருப்பு, பொறுமை, சந்தையின் ஏற்ற  இறக்கப் போக்குகளை எதிர்கொள்ளும் திறன்) மிகவும் அவசியம். மேற்கூறியவாறு செய்தபிறகு, மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நாம் தேர்ந்தெடுத்த ஃபண்டுகள் சரியான வருமானத்தை ஈட்டித் தந்துள்ளதா எனப் பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு ஃபண்ட் திட்டமும் தனக்கென ஒரு பெஞ்ச்மார்க் எனப்படும் ஒரு அளவுகோலை வைத்துக் களத்தில் இறங்கும். ஒரு ஃபண்டின் வருமானத்தை அதன் பெஞ்ச் மார்க்கோடு (அளவு கோலோடு) ஆண்டுதோறும் ஒப்பிட்டுப் பார்த்து, சிறந்த வருமானத்தை ஈட்டுமேயானால் அந்த முதலீட்டைத் தொடரலாம்.

மேலும், அந்த ஃபண்டின் வகையைச் சார்ந்த மற்ற ஃபண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அவ்வகையில் சிறந்து விளங்கும் திட்டங்களில் ஒன்றாக இருக்குமேயானால் முதலீட்டைத் தொடரலாம்.

அதோடு, போர்ட்ஃபோலியோ எனப்படும் பங்குகளின் தொகுப்பை சற்றுக் கூர்ந்து கவனிக்க வேண்டும். பங்குகளின் தொகுப்பு நீங்கள் எதிர்கொள்ள விழைந்த ரிஸ்க்குடன் ஒத்துப்போகிறதா என்று கவனிக்க வேண்டும். மேற்கூறியவற்றை கணக்கில்கொண்டு நீங்கள் தேர்ந்தெடுத்த ஃபண்டுகள் சராசரி வருமானத்தைவிடக் குறைவாக ஈட்டுமேயானால், அப்போது மட்டும் முதலீட்டை மாற்ற முயலவேண்டும்.”

? நான் எனது சம்பளத்திலிருந்து திருமணம் ஆகாத என் சகோதரிக்கு மாதம் ரூ.25,000 வழங்க திட்டமிட்டுள்ளேன். என் தங்கை இந்தத் தொகையை எஃப்.டி-யில் போடுகிறார். அந்த வருமானத்துக்கு யார் வரி கட்ட வேண்டும்?

ஐ.டி துறைப் பங்குகளில் முதலீடு செய்யலாமா?



மோகன், பெருமாநல்லூர்
ஈ.எஸ்.முருகானந்தம், ஆடிட்டர்


“நீங்கள் உங்கள் சகோதரிக்கு வழங்கவிருக்கும் தொகை வருமான வரிச் சட்டப்படி தானமாகக் கருதப்படும். இதற்கு நீங்கள் வரி எதுவும் செலுத்த வேண்டியதில்லை. உங்கள் சகோதரி, வங்கியில் போடும் வைப்புத் தொகையின் வட்டி அவரது இதர வருமானத்துடன் சேர்க்கப்பட்டு வரி கணக்கிடப்படும்.

அவருக்கு இதர வருமானம் எதுவும் இல்லையெனில், வங்கியில் படிவம் 15G தாக்கல்செய்து வரிப் பிடித்தத்தைத் தவிர்க்கலாம். நீங்கள் வழங்கும் தொகையை செக் அல்லது மின் பரிவர்த்தனை மூலம் உங்கள் சகோதரியின் கணக்குக்கு மாற்றுவது தேவையில்லாத பிரச்னைகளைத் தவிர்க்க உதவும்.”

தொகுப்பு : சோ.கார்த்திகேயன்

போன் மூலமாகவும்  கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளைப் பதிவு செய்யலாம். அதற்கு 044- 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளைப் பதிவு செய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

உங்கள் எண்ணங்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்!

facebook.com/naanayamvikatan

twitter.com/nanayamvikatan

எவ்வித கட்டணமும் இல்லாமல் ஏராளமான தகவல்களைப் படித்து பயன்பெறுங்கள்!

nanayam.vikatan.com

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.