Published:Updated:

கம்பெனி ஸ்கேனிங்

கம்பெனி ஸ்கேனிங்
பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி ஸ்கேனிங்

டாக்டர் லால் பாத் லேப்ஸ் லிமிடெட்!(NSE SYMBOL : LALPATHLAB)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

கம்பெனி ஸ்கேனிங்

டாக்டர் லால் பாத் லேப்ஸ் லிமிடெட்!(NSE SYMBOL : LALPATHLAB)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

Published:Updated:
கம்பெனி ஸ்கேனிங்
பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி ஸ்கேனிங்
கம்பெனி ஸ்கேனிங்

டாக்டர் லால் பாத் லேப்ஸ் லிமிடெட், டெல்லியைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம். இது நோய்கள் மற்றும் நோய்களின் காரண, காரியங்களைக் கண்டறியும் நிறுவனமாகும்.

 டாக்டர் மேஜர் எஸ்.கே. லால் என்பவரால் 1949-ம் ஆண்டில், செம்ட்ரல் கிளினிக்கல் லேபாரட்டரீஸ் மற்றும் பிளட் பேங்க் டிரான்ஸ் ஃப்யூஷன் சென்டர் என்ற இரண்டு தனிநபர் உரிமை (Proprietorship) நிறுவனங்களாக நிறுவப்பட்ட மருத்துவம் சார்ந்த சேவை மையங்களின் தொடர்ச்சிதான் இன்றைய லால் பாத் லேப் நிறுவனமாகும்.

 நிறுவனத்தின் சேவைகள்

இந்த நிறுவனம், நோய் நாடலியல் மற்றும் அது சம்பந்தப்பட்ட ஏனைய சேவைகளை வழங்கி வருகிறது. இன்றைக்கு இந்தியாவின் சிறந்த மற்றும் மிகப் பெரிய நோயியல் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது லால் பாத் லேப்ஸ்.  

கம்பெனி ஸ்கேனிங்

பிரமாண்டமாக இருக்கிற அதேநேரத்தில் துறை சார்ந்த முன்னோக்கிய சிந்தனைகளைக் கொண்டதுமாகவும் இருக்கிறது இந்த நிறுவனம்  எனச் சொல்லலாம்.

மருத்துவம் சார்ந்த சேவை நிறுவனமான லால் பாத் லேப் நிறுவனத்தில், 3,000 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். அதில் கிட்டத்தட்ட 55 சதவிகித அளவிலான பணியாளர்கள், ஆய்வகப் பணியாளர்கள் ஆவார்கள். குறிப்பிடத்தக்க அளவில் பார்த்தால், 147 நோயியல் வல்லுநர்கள் (Pathologists), எட்டு கதிரியக்க வல்லுநர்கள் (Radiologist), 13நுண்ணுயிரியல் வல்லுநர்கள் (Microbiologist), ஐந்து உயிர் வேதியியலாளர்கள் (Biochemist) மற்றும் ஏனைய மருத்துவம்சார் துறைகளில் முனைவர் பட்டம் பெற்ற 11 பேரைப் பணியில் அமர்த்தி, தன்னுடைய ேவைகளை வழங்கி வருகிறது இந்த நிறுவனம்.

இது தவிர, நிர்வாக மேலாண்மைப் பணிக்காக ஐஐஎம், ஐஐடி, எக்ஸ்எல்ஆர்ஐ, எஸ்பி ஜெயின் போன்ற நிர்வாகவியல் கல்லூரிகளில் படித்த பணியாளர்களைக் கொண்டும் திறம்பட இயங்கி வருகிறது இந்த நிறுவனம்.

கம்பெனி ஸ்கேனிங்

அகில இந்திய ரீதியாக, டெல்லியில் இருக்கும்  தேசிய அளவிலான தலைமைப் பரிந்துரை ஆய்வகத்தையும் (National Reference Lab) சேர்த்து  172 மருத்துவ ஆய்வகங்கள், நோயாளிகளுக்கான1,559 சேவை மையங்கள், நோயாளிகளின்  மாதிரிகளைப் (ரத்தம் போன்ற) பெற்றுக்கொள்ளும் 4,967 இடங்கள் (pickup points) எனப் பெரிய நெட்வொர்க்குடன் இயங்கிவருகிறது இந்த நிறுவனம்.

இந்த நெட்வொர்க்கினைக் கொண்டு 1,110 சோதனைக் குழுக்கள், 1,934 வகையிலான நோயியல் சோதனைகள்,  1,561 வகையான கதிரியக்க மற்றும் இதய சம்பந்தப்பட்ட சோதனைகள் போன்ற சேவைகளை நோயாளிகளுக்கு வழங்கிவருகிறது.

முழுவதும் கணினி மயமாக்கப்பட்ட சேவைகளும், நோயாளிகள் மற்றும் சேவை மையங்களின் எண்ணிக்கையை சுலபத்தில் அதிகரித்துக் கொள்ளும் வண்ணம் நிறுவப்பட்டு நிர்வகிக்கப்படும் கணினி சேவைகளும் இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கின்றன. இவை அனைத்தையும் ஒருங்கே கொண்டிருப்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒரு நம்பகத்தன்மை மிகுந்த, நோயியல் சார்ந்த சேவையை வழங்கும் நிறுவனமாக இந்த நிறுவனம் திகழ்கிறது. 

கம்பெனி ஸ்கேனிங்

வளர்ச்சிக்கான முனைவுகள்

தற்சமயம் இருக்கும் செயல்பாடுகளைப் பலப்படுத்துதல், தேவையான விரிவாக்கங்களைச் செய்தல், மருத்துவ மனை சார்ந்த நோயியல் மேலாண்மை சேவைகளை விரிவாக்கம் செய்தல், நாடு தழுவிய அளவில் விரிவாக்கங்களைச் செய்தல் போன்றவற்றையே மனதில் கொண்டு செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம்.

கம்பெனி ஸ்கேனிங்



தற்சமயம் தந்துவரும் சேவைகளை  விரைவாக வழங்குதல், வழங்கிவரும் சேவைகளின் தரம் மற்றும் நம்பகத் தன்மையை அதிகரித்தல், இணையதளம் மற்றும் டேட்டா அனலிடிக்ஸ் மூலம் சேவைகளை வழங்குதல், பிராண்டை வளர்த்தெடுப்பதற்கான முதலீடுகளைச் செய்தல் என வளர்ச்சிக்கான பல விஷயங்களைச் செய்துவருகிறது.

புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்தல், நோயியல் தொடர்பான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், நோய் வருமுன் கண்டறிதல் தொடர்பான சேவைகளை வழங்குதல், நாள்பட்ட  மற்றும் ஆயுள்காலம் முழுவதும் தொடர்கிற நோய்கள் மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த நோய்களின் மேலாண்மைக்கு உதவுதல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் அதன் பணியாளர்களுக்கும் சேவையைப் பரவலாக்குதல் போன்றவற்றை, விரிவாக்கங்கள் பிரிவில் தன்னுடைய எண்ணங்களாகக் கொண்டுள்ளது இந்த நிறுவனம்.

கம்பெனி ஸ்கேனிங்

மருத்துவமனைகளுக்கான சேவைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வழங்குதல், பாலிகிளினிக்குகளுக்கான சேவைகளை வழங்க முற்படுதல் போன்றவற்றை மருத்துவமனை சார்ந்த  நோயியல் மேலாண்மை சேவைகள் பிரிவில் திட்டமிட்டு வருகிறது.

புவியியல் சார்ந்த விரிவாக்கத் திட்டத்தில் பெரிய நகரங்களில் தனது விரிவாக்கத்தை மருத்துவ ஆய்வகங்களை நிறுவுவதன் மூலம் செய்தல்,  லக்னோ மற்றும் கொல்கத்தாவில் பிராந்திய அளவிலான பரிந்துரைக்கும் நோயியல் ஆய்வகங் களை நிறுவுதல் (Reference Lab) போன்றவற்றில் முனைப்புடன் செயல்பட்டுவருகிறது இந்த நிறுவனம். 

மேலும், கூட்டணி  மற்றும் கையகப்படுத்துதல் போன்ற செயல்களின் மூலம் செய்யக் கூடிய விரிவாக்கங்களையும், எதிர்காலத்தில் நடைமுறைப் படுத்துவதற்கான சிந்தனை களையும் கொண்டுள்ளது இந்த நிறுவனம்.

கம்பெனி ஸ்கேனிங்

ரிஸ்க்குகள் ஏதும் உண்டா?

மருத்துவம் சார்ந்த துறை என்பதால், போட்டி மற்றும் நம்பகத்தன்மை சார்ந்த ரிஸ்க்குகள் சற்று அதிகளவில் இருக்கும் எனலாம். இருப்பினும், தொழில் ரீதியாக நீண்ட அனுபவத்தையும் பெரிய நெட்வொர்க்கையும் கொண்டிருக்கும் இந்த நிறுவனத்துக்கு, இதுபோன்ற இடர்பாடுகளைச் சமாளிப்பதில் சிரமம் சற்றுக் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ரிஸ்க்குகள் பல இருக்கிறபோதிலும் மருத்துவம் சார்ந்த சேவைகளை வழங்கிவரும் இந்த நிறுவனத்தின் பங்குகளை, ஏதாவது ஒரு காரணத்தால் கடுமையான விலை இறக்கம் வரும்  போது வாங்குவதற்காக மட்டும் சற்று அதிக அளவிலான ரிஸ்க் எடுக்கும் திறன்கொண்ட வாசகர்கள் ட்ராக் செய்துவரலாம்.

அப்படி சந்தை ஏதாவது ஒரு காரணத்தால் வீழ்ச்சியைச் சந்தித்து, இந்தப் பங்கின் விலையும் நன்கு இறங்கினால், இரண்டு ஆண்டுகால முதலீட்டுக்காக இருக்கும் போர்ட் ஃபோலியோவில், குறைந்த எண்ணிக்கையில் வாங்கி சேர்த்துக்கொள்ள  வாசகர்கள் முயற்சி செய்யலாம்.

 ஏற்கெனவே, மருந்துகள் மற்றும் மருத்துவம் சார்ந்த பங்குகளை அதிகம் கொண்டிருக்கும் போர்ட் ஃபோலியோவை வைத்திருக்கும் வாசகர்கள், இந்தப் பங்கைத் தவிர்ப்பதே நல்லது எனலாம்.

பங்கை வாங்கிய பின்னர் தொழில் சார்ந்த விஷயங்களை ட்ராக் செய்ய முடியாத வாசகர்கள் இந்தப் பங்கைத் தவிர்ப்பதே நல்லது.

This section is not a buy/sell recommendation at the current price levels, but only a compilation of information about the company and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analyst’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analysts) Regulations, 2014 with registration number INH200001384.

Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exist no conflict of interest that can bias his views in this report. The Analyst do not hold any share(s) in the company/ies discussed.

Disclosure of Interest Statement

1.Whether Research analyst’s or relatives’ have any financial interest in the subject company/ies and nature of such financial interest? – No; 2. Whether Research analyst or relatives have actual / beneficial ownership of 1% or more in securities of the subject company/ies at the end of the month immediately preceding the date of  the document? – No; 3. Whether the research analyst or his relatives has any other material conflict of interest? – No;  4. Whether research analyst has received any compensation from the subject company/ies in the past  12 months and nature of products / services for which such compensation is received? – No;  5. Whether the Research Analyst has received any compensation or any other benefits from the subject company/ies or third party in connection with the research report? – No; 6.Whether Research Analyst has served as an officer, director or employee of the subject company/ies? – No ;7. Whether the Research Analyst has been engaged in market making activity of the subject company/ies? – No.

General terms and conditions of the research report

For a detailed disclaimer and disclosure please visit http://nanayam.vikatan.com/index.php?aid=9985. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this report is available at http://www.nseindia.com/products/content/equities/equities/eq_security.htm (Choose symbol: LALPATHLAB)/name of company/time duration)