பிசினஸ் குடும்பத்தில் பிறந்தாலும், தனக்கென தனிக் கனவுகளை வைத்திருந்தவர்; குடும்ப பிசினஸை விட்டு வெளியேறி, தான் பெற்ற கல்வி, அனுபவத்தின் மூலம் தன் கனவுகளைத் துரத்திச் சென்று வென்றெடுத்தவர்; தலையில் தேய்க்கும் தேங்காய் எண்ணெய்யை வைத்தே பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியானவர்; அவர்தான் ஹர்ஷ் மாரிவாலா. அவருடைய பிசினஸ் பயணம் பல்வேறு சுவாரஸ்யங்களையும் படிப்பினை களையும் கொண்டது.

குடும்ப பிசினஸிலிருந்து சொந்த பிசினஸ்

மும்பை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் படித்தவர். கல்லூரியில் படித்து முடித்து வந்தவருக்கு வயது 20. அவரது குடும்பம் செய்த கமாடிட்டி பிசினஸில் நேரடியாக ஈடுபட்டார். அவர்களது குடும்ப பிசினஸ் நிறுவனமான ‘பாம்பே ஆயில் இண்டஸ்ட்ரீஸ்’ சமையல் எண்ணெய், தேங்காய் எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டு வந்தது.

இந்த நிறுவனத்தில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோதே பிசினஸ் குறித்த தனது வித்தியாசமான அணுகுமுறைகளைச் செயல்படுத்தத் தொடங்கினார். அதுவரை அங்கு பிராண்டிங் என்கிற பிரிவே இல்லை. பிராண்டிங் பிரிவை உருவாக்கி, முன்பிருந்த எண்ணெய் பேக்கேஜ் முறைகளையும் மாற்றிப் புதுமையைப் புகுத்தி பிசினஸில் புரட்சி ஏற்படுத்தினார்.

ஆனால், அவர் தனக்கென தனிக் கனவுகள், திட்டங்கள் இருப்பதை நாளடைவில் உணர ஆரம்பித்தார். தான் செய்ய நினைத்த விஷயங்களை அவர்களுடைய குடும்ப பிசினஸில் அவரால் முழுமையாகச் செய்ய இயலவில்லை. இதனால் தனியாக பிசினஸ் செய்யலாம் என்கிற முடிவுக்கு வந்தார். குடும்ப பிசினஸிலிருந்து வெளியேறி, 1990-ல் மாரிக்கோ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அவர் ஏற்கெனவே செய்துவந்த அதே தேங்காய் எண்ணெய் பிசினஸைத் தொடங்கினார்.

சொந்தத் தொழில் தொடங்கிய உடனே திறமையானவர்களை வேலைக்கு அமர்த்துவதில் பெரும் சிரமத்தைச் சந்தித்தார். குடும்ப பிசினஸில் இருந்து வெளியேறியபிறகுதான் தொழில் பற்றிய பல விஷயங்கள் அவருக்குப் புரிய ஆரம்பித்தது. பிசினஸ் தொடங்கி அதில் காலூன்றி நிற்பது மற்ற பணிகளைக் காட்டிலும் சிரமமானது என்று உணர்ந்தார். தன்னுடைய நிறுவனத்தின் பெயர், தன்னுடைய தயாரிப்பு இவையெல்லாம் மக்களுக்குத் தெரியாது. இனிமேல்தான் அவற்றை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

ஆனால், இந்த பிசினஸில் பல்வேறு குடும்ப நிறுவனங்களும், பிராண்டுகளும் ஏற்கெனவே இருக்கின்றன. இவற்றையெல்லாம் தாண்டி நிறுவனத்துக்கு ஆள்கள் சேர்க்க பெரும்பாடு பட்டார். ஒருமுறை அவரது அலுவலகத்துக்கு வந்து விட்டுச் செல்பவர்கள் மீண்டும் அந்தப் பக்கமே வருவதில்லை. ஆனாலும், மனம் தளராமல் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தார்.

கைகொடுத்த பிராண்டிங் மற்றும் பேக்கேஜிங்

எஃப்எம்சிஜி பொருள்களுக்கே உரிய சில பிசினஸ் உத்திகள் அவருடைய பிசினஸுக்குத் தேவைப்பட்டன. அனைத்து நகரங்களிலும் விநியோகம் செய்ய வேண்டும். அதற்கு சிறப்பான நெட்வொர்க் அவசியம். அந்த நெட்வொர்க்கை நிர்வகிக்க பிராந்திய அலுவலகங்கள் கட்டாயம் தேவை. அப்போதுதான் தடங்கல் இல்லாமல் மக்களை எளிதில் சென்றடைய முடியும். அதற்கான வேலைகளையும் மெள்ள அவர் திட்டமிட்டுச் செயல்படுத்தினார். எஃப்எம்சிஜி பொருள்களைப் பொறுத்தவரை, விநியோக நெட்வொர்க்கைப் போலவே மிகவும் முக்கியமானது பிராண்டிங்.

அதுவரை டின்களில் பேக்கிங் செய்து விற்பனை செய்யப்பட்ட பாராசூட் தேங்காய் எண்ணெய்யை நீல நிற பிளாஸ்டிக் டப்பாவில் பேக்கிங் செய்து விற்க ஆரம்பித்தார். அவருடைய இந்தப் புதுமையான பேக்கேஜிங் உத்தி அனைவரையும் கவரும்விதத்தில் இருந்ததால், மக்களிடம் எளிதில் சென்றடைந்தது.

அதுமட்டுமல்லாமல், லிட்டர் கணக்கில் எண்ணெய் விற்பனை செய்துவந்த நிலையில் சாஷேக்களில் விற்பனை செய்யலாம் என்ற யோசனை பலரையும் கவர்ந்தது. முக்கியமாக, பயண நேரங்களில் இந்த யோசனை மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றது.

படிப்படியாக தனது பிசினஸில் அடுத்தடுத்த நடவடிக்கைகளை அவர் எடுத்தார். அவருடைய மற்றொரு முக்கியமான தயாரிப்பு சஃபோலா சமையல் எண்ணெய். இதுவும் இந்தியக் குடும்பங்களின் சமையலறைகளை ஆக்கிரமித்தது. பாரசூட், சஃபோலா இரண்டும்தான் மாரிக்கோ நிறுவனத்தின் முக்கியமான பிராண்டாக மாறின. இந்தியாவில் மட்டுமல்லாமல், மத்தியக் கிழக்கு நாடுகள், ஆசிய நாடுகள் போன்றவற்றிலும் தன் சந்தையை விரிவுபடுத்தினார்.

போட்டியாளர்களால் கிடைத்த புதிய வாய்ப்பு

பின்னர் பிசினஸில் போட்டி அதிகமானதால் தயாரிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. அழகு சாதனங்கள் மற்றும் பராமரிப்பு சார்ந்த பொருள்களில் வாடிக்கையாளர்கள் விரும்பும் அனைத்தும் நம்முடைய தயாரிப்புகளில் இருக்க வேண்டும் என அவர் விரும்பினார். அப்போதுதான் எதிர்காலத்திலும் சந்தையில் நிலைத்து நிற்க முடியும். ஒரே ஒரு பொருளை மட்டுமே நம்பி இருக்க முடியாது என்பதால், பல்வேறு மதிப்புக் கூட்டுப் பொருள்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

உடல் பராமரிப்புக்கு வெறும் சோப்பு மட்டுமே என்றிருந்த நிலை மாறி, உலகமயமாக்கலினால் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் பாதுகாக்க ஒரு பொருள் எனச் சந்தைக்குள் நுழைந்தது. அந்த நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு தானும் கயா லிமிடெட் என்ற துணை நிறுவனத்தின் மூலம் டியோடரன்ட்ஸ், ஹேர்க்ரீம், ஹேர்ஜெல் என்று களம் இறக்கி, இளைஞர்களின் சந்தையைப் பிடித்தார்.

இப்போது பியர்டோ நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் அதன் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறார். கயா தற்போது ஆண்டுக்கு 400 கோடி மதிப்புக்கு விற்பனை செய்து வருகிறது. மேலும், கயா சார்பில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சேர்த்து 125 அழகுசார் கிளினிக்குகள் வைத்துள்ளன. இன்னும் புதுப்புதுச் சேவைகளை வழங்கத் திட்டமிட்டு வருகிறார்.

இந்த பிசினஸில் இருக்கும் சவாலே, ரீடெய்ல், ஹாஸ்பிட்டாலிட்டி, மெடிக்கல் ஆகிய மூன்றையும் ஒருசேர ஒருங்கிணைத்துச் செயல்படுத்த வேண்டும் என்பதுதான். அதை இதுவரை திறமையாகத் திட்டமிட்டுச் செயல்படுத்தி வந்திருக்கிறார்.

ஆரம்பத்தில் பாராசூட், சஃபோலா ஆகியவைமட்டுமே மாரிக்கோவின் 100 சதவிகித வருமானத்தைக் கொடுத்தது. இப்போது அவை 40 - 45% என்ற அளவில் உள்ளது. மாரிக்கோவின் மற்ற தயாரிப்புகளும் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

குழந்தைகளின் கனவுகளை மதிக்கும் தந்தை

சொல் ஒன்று, செயல் வேறு என்றுதான் பெரும் பாலானோர் இருக்கிறோம். ஆனால், அதற்கெல்லாம் அப்பாற்பட்டவராக ஹர்ஷ் மாரிவாலா இருக்கிறார். எப்படிக் குடும்ப பிசினஸில் இருந்து, தான் வெளியேறி தன் கனவுகளை வென்றாரோ அப்படியே தன்னுடைய குழந்தைகளை அவர் வளர்த்திருக்கிறார். அவருடைய மகள் ராஜ்வி மாரிவாலா மற்றும் மகன் ரிஷாப் மாரிவாலா இருவருக்குமே முழுச் சுதந்திரம் கொடுத்து வளர்த்திருக்கிறார். இவ்வளவு பிசினஸ் பிராண்டையும், இந்தியாவின் முன்னணி நிறுவனம் ஒன்றையும் உருவாக்கிய ஹர்ஷ் மாரிவாலா அதைப் பார்த்துக்கொள்ளுமாறு தனது மகன், மகளை வற்புறுத்தாமல் அவர்கள் விரும்பிய வழியில் வளர அனுமதித்திருக்கிறார்.

மாரிக்கோவின் மேலாண்மை இயக்குநராகக் குடும்பத்தைச் சேராத ஒருவரே இருக்கிறார். 35 வயதான ரிஷாப், சோப் ஓப்ரா அன் மோர் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். கூடவே குடும்பத்தின் முதலீடுகளையும் கவனித்துக்கொள்கிறார். மகள் கெனைன் பிராணிகளின் குணநலனை மாற்றும் நிபுணராக இருக்கிறார்.

வித்தியாசமான அணுகுமுறையுடன் தொழிலைச் சிரத்தையாகச் செய்தால், நிச்சயம் ஜெயிக்க முடியும் என்பதற்கு மாரிவாலா மிகச் சிறந்த உதாரணம்.

சக்சஸ் மந்திரம்!

ஒவ்வொரு தயாரிப்புகளின்போதும் போட்டியாளர்களைச் சாதாரணமாக எடைபோட்டு, நாம் அவர்களை முந்திவிடலாம் என்று நினைப்பது முட்டாள்தனமானது என்று கூறியிருக்கிறார் ஹர்ஷ் மாரிவாலா. ‘புதிதாக வரும் உங்களைவிட ஏற்கெனவே சந்தையில் இருக்கும் உங்கள் போட்டியாளர் அட்வான்ஸாக இருப்பார்’ என்ற கூற்றை அவர் எப்போதும் மறக்கவில்லை. ஹர்ஷ் மாரிவாலா எந்தத் தடைகள் வந்தாலும் அவற்றை ஒரு கை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர். தனது பிசினஸ் வாழ்க்கையிலும் அப்படித்தான். அதுமட்டுமல்லாமல் நாம் வளர, தங்கள் உழைப்பைத் தரும் ஊழியர்களுக்குச் சம்பளத்தோடு சேர்த்து அன்பு மற்றும் நல்ல மதிப்பையும் தரவேண்டும் என்பார்.

வேலையில் இருந்தாலும், பிசினஸில் இருந்தாலும் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். நாம் கற்றுக்கொள்ளும் விஷயம் என்றாவது ஒருநாள் நமக்குக் கைகொடுக்கும் என்பதில் தீர்க்கமான நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. மேலும், பிசினஸில் மிக முக்கியமாக மாற்றத்துக்கும் புதுமைக்கும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் காலத்தை வெல்லும் சக்தி அந்த பிசினஸுக்கு இருக்கும்.

அந்தச் சக்தி மாரிக்கோவுக்கு அதிகமாகவே இருக்கிறது. தற்போது 25 நாடுகளில் மாரிக்கோவின் தயாரிப்புகள் விற்பனை ஆகின்றன. ஒவ்வோர் ஆண்டும் அதன் விற்பனை வளர்ச்சி 7-9 சதவிகிதமாக இருக்கிறது. பாரசூட் தேங்காய் எண்ணெய், அதற்கான சந்தையில் 59 சதவிகிதத்தை வைத்திருக்கிறது. சஃபோலா சமையல் எண்ணெய், அதன் சந்தையில் 63 சதவிகிதத்தைத் தக்க வைத்திருக்கிறது. தற்போது அவருடைய சொத்து மதிப்பு 2.1 பில்லியன் டாலர். தன்னைப் போலவே பிசினஸ் செய்யும் ஆர்வமுள்ள ஸ்டார்ட் அப்-களை அடையாளம் கண்டு அவர்களை, ஷார்ப் வென்சர்ஸ் மூலம் ஊக்கப்படுத்தி வருகிறார் மாரிவாலா.

உங்கள் எண்ணங்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்!

facebook.com/naanayamvikatan

twitter.com/naanayamvikatan

எவ்வித கட்டணமும் இல்லாமல் ஏராளமான தகவல்களைப் படித்து பயன்பெறுங்கள்!

nanayam.vikatan.com