Published:Updated:

கம்பெனி ஸ்கேனிங்

கிரீவ்ஸ் காட்டன் லிமிடெட்!(NSE SYMBOL: GREAVESCOT)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி ஸ்கேனிங்

ந்த வாரம் நாம் ஸ்கேனிங் செய்ய எடுத்துக்கொண்டுள்ள நிறுவனம் கிரீவ்ஸ் காட்டன் லிமிடெட். 1859-ம் ஆண்டில் நிறுவப்பட்டு,  பல்வேறு விதமான டீசல்/பெட்ரோல் இன்ஜின்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் பம்ப்செட்கள் போன்றவற்றை முதன்மையாகவும், ஏனைய பல்வேறு வகையான இன்ஜினீயரிங் துறைக்கான தயாரிப்புகளையும் (Diversified) உற்பத்தி செய்து வரும் இன்ஜினீயரிங் நிறுவனம் இது.

வியாபாரப் பிரிவுகள் என்று பார்த்தால் விவசாயத்துக்கான உபகரணங்கள், ஆட்டோமொபைல்களுக்கான இன்ஜின்கள்,  துணை மின் உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கு உதவும் இன்ஜின்கள் என்ற நான்கு பெரும் தொழிற்பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம்.

சமீபத்திய வருடங்களில் கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம், தன்னை ஓர் உலகளாவிய தொழில் செய்யும் நிறுவனமாக மாற்றிக்கொள்வதில் தீவிரமாகச் செயல்பட்டு வருவதன் மூலம், தற்போது அதனுடைய தயாரிப்புகளை பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துவருகிறது. 

மேலும், அயல்நாடுகளில் விற்பனை செய்வதற்குத் தேவையான பொருள்களைத் தயாரிப்பதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், டான்ஸானியா மற்றும் சீனாவில் தன்னுடைய உற்பத்தி வசதிகளை நிறுவியுள்ளது கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம்.

கம்பெனி ஸ்கேனிங்

   விவசாயத்துக்கான உபகரணங்கள்

விவசாயத்தில் உபயோகப்படுத்தப்படும் வைப்ரேட்டர்கள், ஸ்ப்ரேயர்கள், புல்வெளி சமன்படுத்தும் இயந்திரங்கள், செல்ப் ப்ரைமிங் பம்புகள் போன்றவற்றில் உபயோகப்படுத்தப்படும் பெட்ரோல்/ டீசல் இன்ஜின்கள் (1 முதல் நான்கு குதிரைத்திறன் (HP) வரையிலானது), பெட்ரோல்/மண்ணெண்ணெய் [1.5 முதல் 4 குதிரைத்திறன் (HP) வரையிலானது) மற்றும் டீசல் பம்ப்செட்கள் (3.5 முதல் 10 குதிரைத்திறன் வரையிலானது) போன்றவற்றை உற்பத்தி செய்கிறது இந்த நிறுவனம். இதற்கான தொழிற்சாலையை, சென்னையை அடுத்துள்ள கும்மிடிப்பூண்டியில் நிறுவியுள்ளது இந்த நிறுவனம்.

கம்பெனி ஸ்கேனிங்



இந்த நிறுவனத்தின் இன்ஜின்கள், விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கும் ஸ்ப்ரேயர்கள், பம்ப்செட்கள், அறுவடை இயந்திரங்கள் போன்றவை விவசாயிகளிடையே வெகுவாக உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில், குறைந்த எடை கொண்ட  மற்றும் எளிதில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்லக்கூடிய போர்ட்டபிள் பம்ப்செட்களாக இந்த நிறுவனத்தின் இன்ஜின்  பொருத்தப்பட்ட பம்ப்செட்கள் இருப்பதால் அவை, விவசாயிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக திகழ்கின்றன.

சீனநிறுவனம்ஒன்றுடன்இணைந்து, இந்தியாவுக்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்ட, விவசாயத்துக்கு உதவும் மற்றொரு உபகரணமான பவர்டில்லர்கள் தயாரிப்பிலும் தற்சமயம் இந்த நிறுவனம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

   இண்டஸ்ட்ரியல் இன்ஜின்கள்

ஒன்று முதல் 700 குதிரைத்திறன் கொண்ட இன்ஜின்களை, தொழிற்சாலைகளுக்கு உதவும் வகையில் (பம்ப் செய்ய, குழிதோண்ட, நகர்த்த, எடுத்துச்செல்ல உதவும் உபகரணங்களுக்கானது) தயாரித்து வருகிறது இந்த நிறுவனம்.

கம்பெனி ஸ்கேனிங்

இந்த வகை இன்ஜின்கள் கடல் சார்ந்த வேலைகள், விவசாயம், தீயணைப்பு இயந்திரங்கள், சுரங்கம் தோண்டுதல் மற்றும் கட்டுமானம், மெட்டீரியல் ஹேண்ட்லிங் (கிரேன்கள் மற்றும் ஃபோர்க் லிப்ட்கள்), ரயில்கள் மற்றும் சாலைகள் சுத்தம் செய்யும் இயந்திரங்கள் போன்றவற்றில் உபயோகப்படுத்தப்படுகின்றன.

   ஆட்டோமோட்டிவ் இன்ஜின்கள்

4.4 குதிரைத்திறன் முதல் 20 குதிரைத்திறன் வரையிலான டீசல் மற்றும் பெட்ரோல் இன்ஜின்களை உற்பத்தி செய்துவருகிறது இந்த நிறுவனம். இந்த வகை இன்ஜின்கள், மோட்டார் வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது. அவுரங்காபாத்திலும், ராணிப்பேட்டையிலும் உற்பத்தி செய்யப்படும் இந்த வகை இன்ஜின்கள், மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்தப்படுகின்றன.  மேலும், போர்ட்டபிள் அக்ரிகல்ச்சுரல் பம்ப் செட்கள், ஜெனரேட்டர்கள், சிறிய வகை படகுகள், கட்டுமானத்துக்கு உதவும் இயந்திரங்கள் போன்றவற்றிலும் இந்த வகை இன்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    நூற்றுக்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள்

இந்த நிறுவனம் 10 கிலோவாட் முதல் 500 கிலோவாட் வரையிலான டீசல் ஜெனரேட்டர்களை உற்பத்தி செய்கிறது.இந்த ஜெனரேட்டர்கள், ‘கிரீவ்ஸ் பவர்’ என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நம்பகத்தன்மை கொண்டதாகவும், குறைந்த பராமரிப்புச் செலவில் இயங்குவதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஜெனரேட்டர்கள், மகாராஷ்ட்ரா மாநிலம், சக்கன் என்னும் இடத்தில் உள்ள உற்பத்தி பிரிவில் தயாரிக்கப்படுகின்றன.இந்த வகை ஜெனரேட்டர்களை விற்பனை செய்வதோடு, உபயோகத்தினால் ஏற்படும் பழுதை நீக்கித் தரவும், உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யவும் அகில இந்திய அளவில், நூற்றுக்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களைக்கொண்டு செயல்பட்டு வருகிறது இந்த  நிறுவனம்.

கம்பெனி ஸ்கேனிங்

   ஏற்றுமதி

இந்த நிறுவனம், தனது நான்கு தொழிற்பிரிவுகளிலும் (இன்ஜின், கட்டுமான உபகரணங்கள் மற்றும் ஏனைய தயாரிப்புகள்) உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விற்பனைக்குப் பிந்தைய தேய்மானத்தினால் மாற்றவேண்டிய உதிரிப்பாகங்கள் விற்பனைக்காக, கிட்டத்தட்ட 1,200 டீலர்களைக் கொண்ட நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது. 

இதுதவிர, ஏற்றுமதி வர்த்தகத்திலும் தன்னுடைய கவனத்தைச் சமீப காலத்தில் திருப்பிய இந்த நிறுவனம், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் போன்றவற்றுக்குத் தன்னுடைய தயாரிப்புகளை ஏற்றுமதி செய்துவருகிறது. இதில் மத்தியக் கிழக்கு மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பெறப்படும் வியாபாரமே பெருமளவில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும்.

  உலக அளவில் வர்த்தகம்

உலக அளவிலும் ஆட்டோமொபைல் (இலங்கை, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், ஏமன், சவுதி அரேபியா, நைஜீரியா, துருக்கி முதலிய நாடுகளுக்கு), மின்சார உற்பத்திக்கான ஜெனரேட்டர்கள் (இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், யுஏஇ, ஏமன், கத்தார், சவுதி அரேபியா, டான்ஸானியா, கென்யா போன்ற நாடுகளுக்கு), கட்டுமானத்துக்கு உதவும் உபகரணங்கள், விவசாயத்துக்கு உபயோகப்படும் உபகரணங்கள் (இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், சவுதி அரேபியா, டான்ஸானியா, கென்யா, நைஜீரியா முதலிய நாடுகளுக்கு) போன்ற துறைகளில் வர்த்தகம் செய்துவருகிறது இந்த நிறுவனம்.

கம்பெனி ஸ்கேனிங்

   ரிஸ்க்குகள் ஏதும் உண்டா?

பொருளாதார வளர்ச்சியையும், விவசாயத் துறையின் சீரான செயல்பாட்டையும் நம்பியிருக்கும் இரண்டு துறைகளில் தன்னுடைய வியாபாரத்தைச் செய்துவருகிறது இந்த நிறுவனம். பொருளாதார வளர்ச்சி சற்று மந்தமடைந்தாலோ, ஏதாவது ஒரு காரணத்தினால் விவசாயத் துறையின் செயல்பாடு சுணங்கினாலோ வரும் பாதிப்பு இந்த நிறுவனத்துக்கு இருக்கும்.

ஏற்றுமதி வர்த்தகத்தில் இருப்பதால், அந்நிய செலாவணி மதிப்பு மாறுபாடும், உலோகங்களே பெரும்பாலும் மூலப்பொருளாக இருப்பதால், அவற்றின் விலை ஏற்றங்களும் இந்த நிறுவனத்தின் லாபத்தினை ஓரளவு பாதிக்கவே செய்யும்.

மிகவும் நீண்ட அனுபவத்தையும், வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ள தயாரிப்புகளையும் கொண்டிருக்கும் நிறுவனம் இது. ரிஸ்க்குகள் பல இருக்கிறபோதிலும் இந்த நிறுவனத்தின் பங்குகளை, சந்தை ஏதாவது ஒரு காரணத்தினால் கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்கும்போது வரும் விலை இறக்கத்தில், மிகவும் சிறிய எண்ணிக்கையில் வாங்கி இரண்டு முதல் மூன்று ஆண்டுக் கால முதலீட்டுக்கான போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக் கொள்வதற்காக வாசகர்கள் ட்ராக் செய்துவரலாம்.

வாங்கிய பின்னர் இந்தத் துறையில் ஏற்படும் நிகழ்வுகள் மற்றும் மாறுதல்களை ட்ராக் செய்ய இயலாத வாசகர்கள், இந்தப் பங்கில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பதே நல்லது எனலாம்.

This section is not a buy/sell recommendation at the current price levels, but only a compilation of information about the company and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analyst’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analysts) Regulations, 2014 with registration number INH200001384.

Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exist no conflict of interest that can bias his views in this report. The Analyst do not hold any share(s) in the company/ies discussed.

Disclosure of Interest Statement

1.Whether Research analyst’s or relatives’ have any financial interest in the subject company/ies and nature of such financial interest? – No; 2. Whether Research analyst or relatives have actual / beneficial ownership of 1% or more in securities of the subject company/ies at the end of the month immediately preceding the date of  the document? – No; 3. Whether the research analyst or his relatives has any other material conflict of interest? – No;  4. Whether research analyst has received any compensation from the subject company/ies in the past  12 months and nature of products / services for which such compensation is received? – No;  5. Whether the Research Analyst has received any compensation or any other benefits from the subject company/ies or third party in connection with the research report? – No; 6.Whether Research Analyst has served as an officer, director or employee of the subject company/ies? – No ;7. Whether the Research Analyst has been engaged in market making activity of the subject company/ies? – No.

General terms and conditions of the research report

For a detailed disclaimer and disclosure please visit http://nanayam.vikatan.com/index.php?aid=9985. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this report is available at http://www.nseindia.com/products/content/equities/equities/eq_security.htm (Choose symbol: GREAVESCOT)/name of company/time duration)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு