நகரத்தார்களின் உலக வர்த்தக மூன்றாம் மாநாடு (IBCN2017) அண்மையில் துபாயில் மூன்று நாள்களுக்குச் சிறப்பாக நடந்தது. இந்த மாநாட்டில், பல்வேறு நாடுகளிலிருந்து சுமார் 700-க்கும் அதிகமான நகரத்தார் சமூகத்தைச் சார்ந்த தொழில்முனைவோர்களும், இளைஞர்களும் கலந்துகொண்டனர். நகரத்தார் சமூகத்தினரிடையே தொழில் வளர்ச்சியை வளர்த்தெடுக்கவே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

இந்த மாநாட்டினைத் தொடங்கி வைத்த முருகப்பா குழுமத்தின் நிர்வாகத் தலைவர் அ.வெள்ளையன், ஊக்கம் தரும் உரையாற்றினார். மேலும், நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த நிறைவுரையாற்றிய செட்டி நாடு குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.எம்.ஆர். முத்தையா மற்றும் அபிராமி திரையரங்கு உரிமையாளர் அபிராமி ராமனாதன், தொழில் முனைவோராக விருப்பப்படும் இளைஞர்களுக்கு பல நல்ல விஷயங்களைச் சொல்லி ஊக்கம் தந்தனர்.

இந்த மாநாட்டில் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த பெண் தொழிலதிபர்கள் கலந்துகொண்ட அமர்வு, ஆச்சிமார்களின் அமர்வாக அமர்க்களப் பட்டது. நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தொழில் தொடங்குவதற்குத் தேவையான மூலதன உதவி செய்வதற்காக, ரூ.500 கோடியில் ‘நகரத்தார் நிதியம்’ ஒன்றை உருவாக்க இந்த மாநாட்டில் முன்மொழியப்பட்ட கருத்துக்கு, நல்ல வரவேற்பு இருந்தது. நிறைவுரை ஆற்றிய எம்.ஏ.எம்.ஆர் முத்தையா, இந்தக் கருத்தினை வரவேற்றதுடன், தன்னால் முடிந்த உதவியைச் செய்வதாகவும் குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டில் ஒரு நிகழ்வாக, தொழில் தொடங்க விரும்பும் தொழில்முனைவோர்கள், தங்கள் விவரங்களைப் பதிவுசெய்து பயன்பெறும் வகையில், தனியாக இணையதளம் ஒன்றும் தொடங்கி வைக்கப்பட்டது. தொழில் முனைவு பற்றிய முறையான வழிகாட்டுதலுடன் வெற்றி பெறும் நோக்கத்தில், புதுக்கோட்டை ஜெஜெ கல்லூரியின் உதவியுடன் பட்டயப்படிப்பு தொடங்க ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

நகரத்தார்களின் அடுத்த உலக வர்த்தக மாநாடு 2019-ல் சென்னையில் நடக்குமாம்!