Published:Updated:

ஜிஎஸ்டி வருகை... “லாஜிஸ்டிக்ஸ் துறை நன்கு வளர்ச்சி அடையும்!”

ஜிஎஸ்டி வருகை... “லாஜிஸ்டிக்ஸ் துறை நன்கு வளர்ச்சி அடையும்!”
பிரீமியம் ஸ்டோரி
ஜிஎஸ்டி வருகை... “லாஜிஸ்டிக்ஸ் துறை நன்கு வளர்ச்சி அடையும்!”

ஏ.ஆர்.குமார்

ஜிஎஸ்டி வருகை... “லாஜிஸ்டிக்ஸ் துறை நன்கு வளர்ச்சி அடையும்!”

ஏ.ஆர்.குமார்

Published:Updated:
ஜிஎஸ்டி வருகை... “லாஜிஸ்டிக்ஸ் துறை நன்கு வளர்ச்சி அடையும்!”
பிரீமியம் ஸ்டோரி
ஜிஎஸ்டி வருகை... “லாஜிஸ்டிக்ஸ் துறை நன்கு வளர்ச்சி அடையும்!”

விரைவில் நடைமுறைக்கு வரப் போகிறது ஜிஎஸ்டி எனச் சுருக்கமாக அழைக்கப்படும் பொருள்கள் மற்றும் சேவை வரி. இந்தப் புதிய வரி விதிப்புமுறை நடைமுறைக்கு வந்தால், லாஜிஸ்டிக்ஸ்  துறையில் வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்படும். அதனால் அந்தத் துறை பெரிய அளவில் வளரும் என்கிறார் டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர்.தினேஷ். நாணயம் விகடனுக்கு அவர் அளித்த பேட்டி இனி...

  ஜிஎஸ்டி வரி விதிப்பானது லாஜிஸ்டிக்ஸ் துறையில் என்ன மாற்றங்களைக் கொண்டுவரும்?

‘‘இந்த வரி விதிப்பானது லாஜிஸ்டிக்ஸ் துறையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும். வெறுமனே பொருள்களைக் கொண்டுசெல்வது  அல்லது ஏதோ ஓரிடத்தில் பொருள்களை வைத்திருந்து (Warehousing) வேறு இடத்துக்குக் கொண்டு செல்வது என்கிற இரண்டு செயல்பாடுகளை மட்டுமே லாஜிஸ்டிக்ஸ் என நாம் பார்த்து வந்திருக்கிறோம்.

ஆனால், உலக அளவில் அப்படியில்லை. ரீடெய்ல் தொழிலாக இருந்தாலும் அல்லது பெரிய அளவில் செய்யப்படும் பிசினஸாக இருந்தாலும், லாஜிஸ்டிக்ஸ் துறையின் செயல்பாடுகள் இல்லாமல் எந்தத் தொழிலும் நடக்காது. ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்தபிறகு, நாமும் லாஜிஸ்டிக்ஸ்கை வெறும் போக்குவரத்து என்று பார்க்க வேண்டிய அவசியமிருக்காது.

ஜிஎஸ்டி வருகை... “லாஜிஸ்டிக்ஸ் துறை நன்கு வளர்ச்சி அடையும்!”

தற்போதுள்ள சட்டதிட்டங்கள்படி, ஒரு பொருள் டெல்லியிலிருந்து வருகிறது என்றால், அதன் பேக்கேஜிங் உள்பட எதையும் மாற்றாமல், அப்படியே விற்க வேண்டும். அந்தப் பொருளில்  ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமெனில், அதற்குத் தனியாக லைசென்ஸ் வாங்கியபின்பே அந்த வேலையைச் செய்ய வேண்டும். ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தபிறகு, இது மாதிரி மாற்றங்கள் எல்லாம் சேவை தொடர்பான நடவடிக்கைகளாகக்  கருதப்படும். இதற்குத் தனியாக லைசென்ஸ் வாங்க வேண்டியதில்லை. இதனால் பலரும் புதிதாகத் தொழில் செய்ய முன்வருவார்கள். இதனால் தொழில் வளர்ச்சி பெருகும்.

ஜிஎஸ்டி வந்தால் நமக்குப் பாதிப்புதான் எனப் பலரும் நினைத்தார்கள். ஆனால், இந்த வரி விதிப்பு வந்தபின் தங்களுக்குப் பலவிதமான சலுகைகள் கிடைக்கும் என்பதைப் புரிந்துகொண்டபின், சிறிய அளவில் தொழில் செய்பவர்கள்கூட  இப்போது அதை வரவேற்கத் தொடங்கிவிட்டார்கள்.

லாஜிஸ்டிக்ஸ்   மற்றும் ஆட்டோ செக்டாரைப் பொறுத்தவரை, அடிப்படையை மாற்றி அமைக்கக்கூடிய ஒரு முயற்சியாக (Game Changing Initiative) ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை இருக்கும்.

ஆனால், ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தவுடன் தொழில் துறையில் பெரிய மாற்றங்கள் வந்துவிடும் என்று  சொல்ல முடியாது. இதில் சொல்லப்பட்டுள்ள வரிகளை எல்லோரும் புரிந்துகொள்ளவும்,  அதிலுள்ள நெளிவுசுளிவுகளைத் தெரிந்து கொள்ளவும் சிறிது காலம் ஆகும். அதன்பிறகு லாஜிஸ்டிக் துறையில் மட்டுமல்ல, எல்லா  தொழில்களிலும் நம்மால் நல்ல வளர்ச்சியைக் காண முடியும்.’’

  ஜிஎஸ்டியால் லாஜிஸ்டிக் துறைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா?

‘‘பாதிப்பு எதுவும் இருக்காது. ஜிஎஸ்டி வந்தால் பெரிய நிறுவனங்கள் மட்டுமே இருக்கும். சிறிய நிறுவனங்கள் எல்லாம் அழிந்துவிடும் எனச் சிலர் சொல்கிறார்கள். அது தவறு, ஜிஎஸ்டி வந்தால், ஒரு லாரி வைத்திருக்கும் சிறிய முதலாளிக்கும் நன்மை கிடைக்கும். பெரிய நிறுவனங்களுக்கும் நன்மை கிடைக்கும். இப்போது தொழில் செய்பவர்கள் சட்டப்படியான விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றியிருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தபின் ஒரு தொழிலின் அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிப்புக்குள்ளாகும் என்பதால், யாரும் விதிமுறைகளை ஒரு சதவிகிதம்கூட மீறமுடியாது. இது, தொழிலில் இருப்பவர்களுக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் அதிர்ச்சியைத் தந்தாலும், காலப்போக்கில் அரசு சொல்லும் விதிமுறைகள் அனைத்தையும் கச்சிதமாக பின்பற்றத் தொடங்கி, அதன்படியே நடக்கத் தொடங்கிவிடுவார்கள்.’’

  ஜிஎஸ்டி வரி விதிப்பைப் பொறுத்தவரை உங்கள் கோரிக்கை என்ன?

‘‘பெரிய கோரிக்கை எதுவும் இல்லை. ஆனால், ஒரு முக்கியமான பிரச்னை இருக்கிறது. அது பொருள்களுக்கான இருப்பினை (Stock) எப்படி அறிவிப்பது என்று தெரியாமல், பலரும் குழம்பிப் போயிருக்கிறார்கள். தவிர, இந்த வரி தொடர்பான பல்வேறு டேட்டாக்களை எப்படி அப்லோட் செய்வது என்று தெரியாமலும் தவிக்கிறார்கள். பெரிய நிறுவனங்களுக்கோ,  விநியோகஸ்தர்களுக்கோ அல்லது டீலர்களுக்கோ இது  பெரிய பிரச்னையாக இருக்காது. ஆனால், சிறிய அளவில் தொழில் செய்பவர்களுக்கு இது ஒரு பெரிய பிரச்னையாக இருக்கும்.

ஜிஎஸ்டி வருகை... “லாஜிஸ்டிக்ஸ் துறை நன்கு வளர்ச்சி அடையும்!”

இதுதவிர, ‘இ- வே பில்’ (e-Way Bill) என்கிற ஒரு புதிய நடைமுறையையும் கொண்டு வந்திருக்கிறார்கள். இதுவும் நல்ல திட்டம்தான். ஆனால், இதை எப்படி நடைமுறைக்குக் கொண்டுவரப் போகிறார்கள், இதனால் என்ன பிரச்னை வரும் என்று தெரியவில்ல்லை.  இது குறித்த தெளிவு இனிமேல்தான் உண்டாக வேண்டும்.

இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு வந்தபிறகு எவ்வளவு தகவல்களை கம்ப்யூட்டரில் ஏற்ற முடியும் என்பது குறித்த சோதனை இப்போது நடந்துவருகிறது. எவ்வளவு தகவல்களை வேண்டுமானாலும் எளிதாக கம்ப்யூட்டரில் ஏற்ற முடிகிற மாதிரியான தொழில்நுட்பத்தை மத்திய அரசாங்கம் கொண்டு வந்துவிடும் என்பதால், இது குறித்து நாம் கவலைப்பட வேண்டியதில்லை.’’

  ஜிஎஸ்டியைப் பொறுத்தவரை உங்கள் எதிர்பார்ப்பு என்ன?

‘‘லாஜிஸ்டிக்ஸ் தொழிலில் உள்ளவர்களில் சிலர் தங்களை ‘டிரான்ஸ்போர்ட்டர்’ என்று சொல்லிக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் ‘லேபர் புரவடைர்’ (Labour provider) என்கிறார்கள். இன்னும் சிலர் ‘ரியல் எஸ்டேட் டெவலப்பர்’ என்று  சொல்கிறார்கள். இந்தத் துறையினர் இப்படிப் பல்வேறு விதமாகப் பிரிந்து கிடப்பதால், இதற்கு இண்டஸ்ட்ரி என்கிற அந்தஸ்து கிடைக்காமலே இருக்கிறது. இந்தத் துறைக்கு முதலில்  இண்டஸ்ட்ரி என்கிற அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் முக்கிய எதிர்பார்ப்பு.

இப்போது நாங்கள் மத்திய அரசின் மூன்று அமைச்சகங்களுடன் சம்பந்தப்பட்டு இருக்கிறோம். தரை, வான், கடல் வழியாக பொருள்களைக் கொண்டு செல்லும்போது ஒவ்வொரு விஷயத்துக்காகவும் ஒவ்வொரு அமைச்சகத்தைத் தொடர்புகொள்ள வேண்டியிருக்கிறது. இதில் ஏற்படும் சிக்கலைத் தவிர்க்க ஒரு ‘நோடல் (Nodal) ஏஜென்ஸி’யை உருவாக்கி, அதன் மூலம் எங்கள் தேவைகளை முன்வைக்கப் போகிறோம். லாஜிஸ்டிக்ஸ் துறையில் முதலீடு பெருகி, பெரிய அளவில் வளர இது நிச்சயம் நடக்க வேண்டும்.’’ 

  ஜிஎஸ்டி வருவதையொட்டி, உங்கள் டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் எந்தளவு வளர்ச்சி காணும்?


‘‘ஜிஎஸ்டி வருவதற்குமுன் எங்கள்  நிறுவனம் ஆண்டுதோறும் சுமார் 25% வளர்ச்சி கண்டது. இந்த வரி விதிப்பு வந்தபிறகு எங்கள் வளர்ச்சி இன்னும் அதிகமாகும். ஜிஎஸ்டி வந்தபின் எங்களால் பல விஷயங்களை ‘அவுட்சோர்ஸ்’ செய்ய முடியும் என்பதால், எங்களால் இன்னும் பெரிதாக வளர முடியும்.’’  

படங்கள்: பா.காளிமுத்து