Published:Updated:

எந்தெந்தப் பொருள்களை ஏற்றுமதி செய்தால் லாபம்? - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 24

எந்தெந்தப் பொருள்களை ஏற்றுமதி செய்தால் லாபம்? - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 24
பிரீமியம் ஸ்டோரி
எந்தெந்தப் பொருள்களை ஏற்றுமதி செய்தால் லாபம்? - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 24

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

எந்தெந்தப் பொருள்களை ஏற்றுமதி செய்தால் லாபம்? - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 24

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

Published:Updated:
எந்தெந்தப் பொருள்களை ஏற்றுமதி செய்தால் லாபம்? - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 24
பிரீமியம் ஸ்டோரி
எந்தெந்தப் பொருள்களை ஏற்றுமதி செய்தால் லாபம்? - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 24

ற்றுமதித் தொழில் செய்வதற்கான நடைமுறைகளை ஒவ்வொரு வாரமும் விரிவாகப் பார்த்து வருகிறோம். ஏற்றுமதித் தொழில் செய்ய விரும்புபவர்கள் முக்கியமாகக் கேட்கும் கேள்வி, எந்தப் பொருளை ஏற்றுமதி செய்தால் லாபம் கிடைக்கும் என்பதுதான். அந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ள முதலில் ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவிலிருந்து என்னென்ன பொருள்கள் ஏற்றுமதி செய்கிறோம், எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம், எதையெல்லாம் ஏற்றுமதி செய்யக்கூடாது என்பது போன்ற விஷயங்களை ஏற்றுமதியாளர் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

பொதுவாக, ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.  ஒன்று, மிக வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள், அதாவது குடும்பத்தினர் நுகரும் பொருள்கள். இரண்டாவது, தொழில் துறை சார்ந்த பொருள்கள்.  

எந்தெந்தப் பொருள்களை ஏற்றுமதி செய்தால் லாபம்? - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 24

  நுகர்வோர் பொருள்கள்

நுகர்வோர் பொருள்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். 1. உணவுப் பொருள்கள், 2. வீட்டு உபயோகப் பொருள்கள், 3. தோல் பொருள்கள், 4. டெக்ஸ்டைல்.

இவற்றில் உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்ய விரும்புபவர்கள், ஒரு நாளைக்கு ஒரு மனிதன் எத்தனை பொருள்களை நுகர்கிறான்  என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். 

உதாரணமாக, காலை டிபனுக்கு சாதாரண இட்லி, சட்னியையே எடுத்துக்கொள்வோம். அதில் என்னென்ன பொருள்கள் பயன்படுகின்றன? அரிசி, உளுந்து, உப்பு, வெங்காயம், தக்காளி, சர்க்கரை, இட்லி பொடி, சாப்பிடும் தட்டு, டம்ளர், தேங்காய், கடலை என பத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேநீர் என்றால், அதில் டீ, காபி, பால், சர்க்கரை, ஸ்பூன், காபி கப், க்ரீன் டீ ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எந்தெந்தப் பொருள்களை ஏற்றுமதி செய்தால் லாபம்? - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 24



இப்படி மதிய உணவு, இரவு உணவு என்று கணக்கிட்டால், பட்டியல் நீளும். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு,  குறைந்தபட்சம் உணவு சார்ந்து மட்டும் 25 பொருள்களை நுகர்கிறான். 

இவற்றில் ஏதாவது ஒரு பொருளையோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பொருளையோ  தேர்ந்தெடுத்து ஏற்றுமதி செய்யலாம். முக்கியமாக, உங்களுக்கு எந்தப் பொருளில் ஆர்வம் இருக்கிறது என்பதைப் பாருங்கள். ஆனால், சர்க்கரை மற்றும் பால் ஏற்றுமதியில் மிகுந்த கவனம் தேவைப்படுகிறது. நம் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு உளுந்து ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

உணவுப் பொருள்களைத் தவிர, வீட்டு உபயோகப் பொருள்களான பிளாஸ்டிக் பொருள்கள், தலையணை, தரைவிரிப்பு  ஆகியவற்றையும் ஏற்றுமதி செய்யலாம். தோல் பொருள்களான காலணிகள், பெல்ட் மற்றும் ஹேண்ட் பேக் போன்ற வற்றை ஏற்றுமதி செய்தாலும் நல்ல லாபம் கிடைக்கும். அதேபோல்தான், டெக்ஸ்டைல் பொருள்களும்.  இந்தியாவில் இருந்து டெக்ஸ்டைல் பொருள்களும், தோல் பொருள்களும் அதிக அளவில் ஏற்றுமதியாகின்றன.

  தொழில்துறை சார்ந்த பொருள்கள்

தொழில் துறை சார்ந்த பொருள்களில் நான்கு வகைகள் உள்ளன. 1. மூலப் பொருள்கள், 2. அலுவலக உபயோகப் பொருள்கள், 3. இயந்திரங்கள், 4. கருவிகள். 

பல்வேறுவிதமான தொழில்நிறுவனங்களின் உற்பத்திக்கு  மூலப் பொருள்கள் தேவைப்படுகின்றன. எந்த நிறுவனத்துக்கு எந்த மாதிரியான மூலப் பொருள்கள் தேவைப்படுகின்றன என்பதைப் பார்த்து, அவற்றை ஏற்றுமதி செய்யலாம்.

எந்தெந்தப் பொருள்களை ஏற்றுமதி செய்தால் லாபம்? - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 24

மூலப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் ஆர்வம் இல்லாதவர்கள், அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படக்கூடிய, முழுமையாக தயார்செய்து முடிக்கப்பட்ட பொருள்களை ஏற்றுமதி செய்யலாம். மேலும், தொழிற்சாலைகளுக்குத் தேவையான இயந்திரங்களையும், கருவிகளையும்கூட ஏற்றுமதி செய்யலாம். ஆனால், இவற்றுக்கான முதலீடு  பெரிய அளவில் இருக்கும். எனவே, இயந்திரங்கள் சார்ந்த விஷயங்களை அறிந்தவர்களும், அதற்கேற்ப நிதி வசதி இருப்பவர்களும் இதில் இறங்கலாம்.

  லாபம் தரும் எட்டு விஷயங்கள்


நீங்கள் ஏற்றுமதி செய்யப் போவது எந்தப் பொருளாக இருந்தாலும் சரி, அதற்குக் கீழ்காணும் எட்டு விஷயங்களைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

1. ஹெச்எஸ் கோட்
(HS Code- Harmonized System Code)


சர்வதேச சந்தையில் தொழில் செய்யும்போது, அத்தனை நாடுகளின் மொழியையும் தெரிந்து வைத்துக்கொள்வது கடினமான காரியம். எனவேதான், சர்வதேச வர்த்தகத்தை எளிமையாக்கும் வகையில் ஒவ்வொரு பொருளுக்கும் பொதுவான ஒரு பெயர் வைக்கப்பட்டு உள்ளது. அதுதான் ஹெச்எஸ் கோட். நமது பொருளைப் பற்றி இறக்குமதியாளர்களிடம் பேசும்போது மொழிப் பிரச்னை இருந்தால், இந்த ஹெச்எஸ் கோடினைக் குறிப்பிட்டுப் பேசலாம். இவை முழுக்க எண்களால் ஆனது. நம் பொருளுக்கான ஹெச்எஸ் கோட் எண்ணை நாம் தயாராக வைத்திருக்க வேண்டும். உதாரணமாக, பாஸ்மதி அல்லாத அரிசியின் ஹெச்எஸ் கோட் 10063010, பாஸ்மதி அரிசியின் ஹெச்எஸ் கோட் 10063020.

2. பொருளின் வகை

நீங்கள் ஏற்றுமதி செய்ய தேர்வு செய்த பொருள் என்ன வகையானது என்று பாருங்கள். அவை மூலப்பொருளா, வாங்கி பேக்கிங் செய்த பொருளா, மதிப்புக் கூட்டப்பட்ட பொருளா அல்லது ஏற்கெனவே பிரபலமாக உள்ள பிராண்டட் பொருளா என்பதைப் பாருங்கள். ஏனெனில் இவற்றுக்கேற்ப லாப அளவு மாறும். மூலப் பொருள்களில் கணிசமான லாபம் உண்டு. ஆனால், அதைக் காட்டிலும் ரீபேக்கிங் செய்த பொருளுக்கும், மதிப்புக் கூட்டப்பட்ட பொருளுக்கும் லாபம் அதிகம். பிராண்டட் பொருள்களுக்கு லாபம் குறைவுதான்.

3. பொருளை எங்கே வாங்குவது?

நீங்கள் ஏற்றுமதி செய்யப்போகும் பொருளை எங்கே கொள்முதல் செய்கிறீர்கள் என்பது முக்கியம். பொருள், இறக்குமதியாளர் கேட்கும் தரத்தில் இருக்க வேண்டும். அதேநேரத்தில் விலையானது குறைவாகவும் இருந்தால் நல்ல லாபம் கிடைக்கும். 

எந்தெந்தப் பொருள்களை ஏற்றுமதி செய்தால் லாபம்? - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 24

4. எங்கெல்லாம் அனுப்பலாம்?

 நீங்கள் தேர்வு செய்த பொருளை எங்கெல்லாம் அனுப்ப முடியும் என்பதைத் தெரிந்துகொள்ள, ஏற்கெனவே அந்தப் பொருள் எந்தெந்த நாட்டுக்கு  அதிகமாக அனுப்பப்படுகிறது என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

5. விலை நிர்ணயம்


 உங்களுடைய பொருளுக்கு நீங்கள்தான் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். கொள்முதல் செய்வது முதல், பொருள்கள் போய் இறக்குமதியாளரைச் சேரும் வரை ஆகும் செலவுகளைக் கணக்கிட்டு, அதன்மேல் குறிப்பிட்ட சதவிகித லாபத்தை வைத்து விலை நிர்ணயம் செய்யவும். மற்றவர்களைக் காட்டிலும் குறைவாக விற்றால், அதிக ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.  அதேசமயம் நமக்கான லாபத்தைத் தீர்மானம் செய்து விலையை நிர்ணயிக்க வேண்டும்.

6. லாபம் எவ்வளவு?

நீங்கள் ஏற்றுமதி செய்யும் பொருளின் லாபம் எவ்வளவு இருக்கும் என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். அந்தப் பொருளை ஏற்றுமதி செய்வதினால் உங்களுக்குக் கிடைக்கும் லாபம், உங்களுடைய உழைப்புக்கும் செலவிடும் நேரத்துக்கும் ஊதியமாக இருக்க வேண்டும். நஷ்டத்துக்குத் தொழில் செய்வது கூடாது.  

7. அரசின் திட்டங்கள்


நீங்கள் தேர்வு செய்யும் பொருளுக்கு அரசு தரப்பில் வழங்கப்படும் மானியங்கள், சலுகைகள் மற்றும் ஊக்குவிப்புத் திட்டங்கள் இருக்கின்றனவா என்பதைப் பார்க்கவும்.

8. புரமோஷனல் ஆர்கனைசேஷன்

நீங்கள் தேர்வுசெய்யும் பொருள் எந்த ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பை (புரமோஷனல் ஆர்கனைசேஷன்) சேர்ந்தது என்பதைப் பார்க்கவும். அந்தக் குறிப்பிட்ட ஆர்கனைசேஷனில் பதிவு செய்துகொள்ளவும்.

எந்தப் பொருளை எங்கே வாங்குவது, எங்கே விற்பது போன்ற விஷயங்களை அடுத்து பார்க்கலாம்.

(ஜெயிப்போம்)