Published:Updated:

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 24

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 24
பிரீமியம் ஸ்டோரி
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 24

காசு பணத்தை இழக்க வைத்த காதல் தோல்வி!சுரேஷ் பார்த்தசாரதி, Founder, Myassetsconsolidation.com Registered Investment Advisor, INA200000878

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 24

காசு பணத்தை இழக்க வைத்த காதல் தோல்வி!சுரேஷ் பார்த்தசாரதி, Founder, Myassetsconsolidation.com Registered Investment Advisor, INA200000878

Published:Updated:
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 24
பிரீமியம் ஸ்டோரி
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 24

த்திய அரசு ஊழியராக கோவையில் பணியாற்றி வந்தார் கணேஷ். திருப்பூரைச் சேர்ந்த சுதா, கணேஷ் பணிபுரியும் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.

நட்பாகப் பழகிய அவர்களிடம் ஒரு சந்தர்ப்பத்தில் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்த தருணத்தில் எதிர்பாராத திருப்பம் நடந்தது. கணேஷுக்கு டெல்லிக்குப் பணிமாற்றம் வந்தது. வேறு வழியில்லாத நிலையில், டெல்லிக்குச் சென்றார் கணேஷ்.
மீண்டும் கோவைக்கு மாற்றம் செய்து வந்துவிட முயற்சி செய்து வந்தார் கணேஷ். கோவைக்கு வந்தபிறகு  திருமணம் செய்துகொள்ளலாம் என இருவரும் திட்டமிட்டார்கள். ஆனால், விதி வேறு விதமாக திட்டமிட்டது.

சுதாவின் வீட்டில் உறவு வட்டாரத்தில் மாப்பிள்ளை பார்த்துப் பேசி முடித்தார்கள். சுதா தன் காதலைச் சொல்லி எவ்வளவோ மன்றாடிக் கேட்டும் சுதாவின் பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை. தங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்றால், உயிரை விட்டுவிடுவோம் என மிரட்டவே சுதாவால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

சுதாவின் திருமணப் பத்திரிகையை, கணேஷ் படித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் சுதாவின் கழுத்தில் தாலி ஏறியது.

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 24

“என்னைப் பார்க்க முயல வேண்டாம். மன்னித்துவிடுங்கள்” என சுதா எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டுக் கசக்கிக் குப்பைத் தொட்டியில் வீசினார் கணேஷ்.

அதற்குப் பிறகு பல வருடங்கள் ஆகியும், பலரும் வற்புறுத்தியும்கூட கணேஷ் திருமணம் செய்துகொள்ளவே இல்லை. கணேஷ் ஒற்றை ஆள்தானே என்று பணம் கேட்டு உறவினர்கள், உடன்பிறந்தவர்கள் நச்சரிக்க ஆரம்பித்தனர். தம்பியின் படிப்புக்காகவும், திருமணத்துக்காகவும் உதவினார் கணேஷ். சம்பாதிக்கும் பணத்தை மற்றவர்களுக்காகவே செலவு செய்து வந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 24


சில ஆண்டுகளுக்குப்பிறகு, டெல்லியில் இருக்க கணேஷுக்குப் பிடிக்கவில்லை. வேலையை உதறிவிட்டுச் சென்னைக்கு வந்துவிட்டார் கணேஷ். சென்னையில் 40 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

அப்போது கணேஷுக்கு 40 வயது. திடீரென அவருக்கு ஏற்பட்ட வயிற்று வலி பெரிய பிரச்னையாகி, அறுவைச் சிகிச்சை வரை கொண்டு போய்விட்டது. ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்காததால், அவருடைய பி.எஃப் பணம் முழுக்க மருத்துவச் செலவில் கரைந்துபோனது. இடையில், தன் வயதான பெற்றோர்களைக் கவனிக்கும் பொறுப்பும் கணேஷுக்கு வந்து சேரவே, பணமில்லாமல் தடுமாறிப் போனார். இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான் கணேஷ் என்னைச் சந்தித்தார்.

கணேஷ் அவரைப் பற்றி விலாவாரியாகச் சொன்னார். கணேஷ் செய்த முதல் தவறு என்றால், காதலில் தோல்வி ஏற்பட்டவுடன் வாழ்க்கையில் பிடிமானத்தை இழந்ததுதான். எதிர்காலத்தில் நம்பிக்கை இல்லாமல் போனதால்தான் கேட்பவர்களுக்கெல்லாம் பணத்தை வாரி வழங்கியிருக்கிறார். நம்பிக்கை இல்லாத நிலையில், தனக்குள் இருக்கும் திறமையை அடையாளம் காணாமல் விட்டுவிட்டது அடுத்த தவறு. பி.எஃப் தொகை உள்பட எல்லாச் சேமிப்பும் கரைந்து போகக் காரணம், கணேஷ் மருத்துவக் காப்பீடு எடுக்காமல்விட்டதுதான்.

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 24

ஆரக்கிள் சாஃப்ட்வேரில் கணேஷ் கில்லாடியாக இருந்ததை அவரே சொன்னார். கோவையில் பணிபுரியும் காலத்திலேயே அலுவலக ஊழியர்களுக்கு பக்கா டிரெயினராக இருந்து கலக்கியிருக்கிறார். அவருடைய திறமையைத் தெரிந்துகொண்ட நான், ஆரக்கிள் சாஃப்ட்வேர் டிரெயினராக ஆகும்படி சொன்னேன். அடுத்த ஆறே மாதத்தில் அசத்தலான வளர்ச்சியை எட்டினார். பிசியான டிரெயினராக மாறினார்.

மீண்டும் புதிய வாழ்க்கையைத் தொடங்கி வாழ ஆரம்பித்த கணேஷ், என்னை மகிழ்ச்சியுடன் சந்தித்தார். ‘‘எனக்குச் சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும். தவிர, ஓய்வுக்காலத்துக்காக பணம் சேர்க்க வேண்டும். இப்போதைய கணக்குப்படி, மாதமொன்றுக்குத் தனக்கு ரூ.25,000 தேவைப்படும்” என்றார் கணேஷ்.

‘‘அப்படியானால் ஓய்வுக்காலத்துக்கு ரூ.1.8 கோடி சேர்க்க வேண்டும்’’ என்று நான் சொன்னேன். ‘‘15 வருடங்களில் இவ்வளவு பெரிய தொகையைச் சேர்க்க முடியுமா’’ என்று வியந்தார் கணேஷ். ‘‘மாதம் ரூ.36 ஆயிரம் சேர்த்தால் முடியும்’’ என்றேன். ‘‘வீடு வாங்க வேண்டும் எனில், அதற்கும் தனியாக சேர்க்க வேண்டும்’’ என்றேன்.

ஆரக்கிள் டிரெய்னராக நல்ல வாய்ப்புகளைப் பெற்று மாதம் ரூ.1.25 லட்சம் சம்பாதிக்க ஆரம்பித்தார். மீண்டும் என்னைச் சந்தித்த அவர், “என்னால் இப்போது மாதம் ரூ.80 ஆயிரம் வரை சேர்க்க முடியும்’’ என நம்பிக்கையோடு சொன்னார்.

‘‘ஓய்வுக்காலத்துக்கு ரூ.36 ஆயிரம் முதலீடு செய்யுங்கள். ரூ.50 லட்சம் மதிப்பில் அடுத்த ஐந்து வருடங்களில் வீடு வாங்கிக்கொள்ளுங்கள்; இப்போதிருந்து மாதம் ரூ.35 ஆயிரம் முதலீடு செய்தால், ரூ.30 லட்சம் சேர்த்துவிட முடியும். மீதம் ரூ.20 லட்சத்துக்கு லோன் போட்டுக்கொள்ளுங்கள்” என்று சொன்னேன்.

கணேஷிடம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு ப்ளஸ் என்னவென்றால், வாழ்க்கையை மீட்டெடுக்க உதவியது அவருடைய தனித் திறமைதான். பேலன்ஸ்டு, லார்ஜ் கேப், மல்டி கேப், ஈக்விட்டி, டெப்ட் ஃபண்டுகள் என அஸெட் அலோகேஷன் முறைப்படி முதலீட்டை மேற்கொள்ள திட்டமிட்டுக் கொடுத்தேன்.

வாழ்க்கையில் தடுமாற்றம் வரலாம்; அதற்காக தடம் மாறக் கூடாது. தடம் மாறாதவர்கள் மட்டுமே தப்பிப் பிழைக்க முடியும் என்பதற்குக் கணேஷ் மிகச் சிறந்த உதாரணம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism