Published:Updated:

ஜிஎஸ்டி... வீட்டு வாடகை வருமானத்துக்கு வரி உண்டா?

ஜிஎஸ்டி... வீட்டு வாடகை வருமானத்துக்கு வரி உண்டா?
பிரீமியம் ஸ்டோரி
ஜிஎஸ்டி... வீட்டு வாடகை வருமானத்துக்கு வரி உண்டா?

கோபால் கிருஷ்ண ராஜு, ஆடிட்டர்

ரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் (Goods and Services Tax - GST) விரைவில் அமலுக்கு வரவிருக்கிறது. இதில் வாடகை வருமானத்துக்கு வரி விதிக்கப்படுமா, அப்படி விதிக்கப்பட்டால் அது எத்தனை சதவிகிதமாக இருக்கும் என்பது வீட்டை வாடகைக்கு விடும் பலரும் கேட்கும் கேள்வியாக இருக்கிறது.

ஜிஎஸ்டி... வீட்டு வாடகை வருமானத்துக்கு வரி உண்டா?

பொதுவாக, எல்லாவிதமான வாடகை வருமானத்துக்கும் வரி விதிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. தற்போதைய சட்டத்தில் வாடகை வருமானத்துக்குச் சேவை வரி உண்டு. இந்தச் சேவை வரி, வணிக சொத்து (Commercial Property) வாடகைக்கு மட்டுமே பொருந்தும். ஆனால், தனிநபர் கொடுக்கும் வாடகைத் தொகை மீது ஜிஎஸ்டி விதிக்க வாய்ப்புகள் குறைவுதான்.

ஜிஎஸ்டி... வீட்டு வாடகை வருமானத்துக்கு வரி உண்டா?

தற்போதைய சட்டத்தில், குடியிருப்புச் சொத்தின் மூலம் கிடைக்கும் வாடகைக்குச் சேவை வரி கிடையாது. ஜிஎஸ்டி அமலுக்கு வரும்போது வணிக சொத்தின் மூலம் கிடைக்கும் வாடகைக்கான வரி விதிப்பு தொடரும். தனிநபர் குடியிருப்பு வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி-யில் வரி வராது. பழைய சட்டம் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

வீட்டு வாடகைக்குச் சேவை வரி இல்லாதது போல, ஜிஎஸ்டி-யிலும் தொடரவேண்டுமானால், அந்தச் சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட வேண்டும். ரூ.20 லட்சத்துக்கு மேல் வருவாய் இருந்தால் மட்டுமே ஜிஎஸ்டி சட்டம் பொருந்தும். ரூ.20 லட்சத்துக்கு மேல் வீட்டு வாடகை, தனிநபர்களில் சிலருக்கு மட்டுமே பொருந்தும். ஆகையால், தனிநபர் வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி வராது எனலாம். தற்போது  தனிநபர்கள் பெறும் வீட்டு வாடகைக்கு வருமான வரி உண்டு. வீட்டு வாடகை மீது ஜிஎஸ்டி விதிக்கப்பட்டால், வீட்டு வாடகை அதிகரிக்க வாய்ப்புண்டு. வணிக சொத்து மீதான வருமானத்துக்கு ஜிஎஸ்டி வரி சுமார் 18% என இருக்கலாம்.